கேட்பதற்கு எதுவுமில்லை
மவுலங்கப் பட்டர் என்ற பண்டிதர் புத்தரிடம் சீடராகச் சேர்ந்தார். ""புத்தரே! நீரே எமக்கு ஞானத்தைத் தரவேண்டும்,'' என்று வேண்டிக்கொண்டார்.
""மவுலங்கா! இங்கே என்னுடன் ஒரு வருஷ காலம் தங்கியிரு. மவுனமாக இருப்பது ஒன்று தான் என்னுடைய போதனை. எந்த சந்தேகத்தைக் கேட்க விரும்பினாலும் ஒரு வருஷத்திற்குப் பிறகு தான் கேட்கவேண்டும்,'' என்று சொல்லி தன்னருகே இருக்க வைத்தார். புத்தரின் நிபந்தனையைக் கேட்ட பண்டிதரும் அமைதி காத்துவந்தார். ஒரு வருஷம் ஓடிவிட்டது. புத்தரே அவரை அழைத்து, ""நீ விரும்பியதை என்னிடம் கேட்கலாம்'' என்றார். மவுலங்கப் பட்டர் அவரை வணங்கி, ""என் மனதில் ஏற்பட்ட குழப் பத்தை எல்லாம் மவுனமே போக்கிவிட்டது. இப்போது நான் விழிப்புணர்வுடன் தெளிவாக இருக்கிறேன். தங்களிடம் கேட்பதற்கு எதுவுமில்லை,'' என்று கூறினார்.
விரும்பினால் கிடைக்கும் ஒரு நாள் புத்தரிடம் அவருடைய சீடர், ""எவர் வேண்டுமானாலும் முக்தி அடையலாம் என்று நாள்தோறும் உபதேசம் செய்கிறீர்கள். இது எப்படி சாத்தியம் ஆகும்?'' என்று கேட்டார்.
""நல்லது! நீ இந்த ஊரில் உள்ள ஒவ்வொருவரிடமும் சென்று அவர்களின் விருப்பம் என்ன என்பதை அறிந்து வா!'' என்று அனுப்பினார். சீடரும் ஆர்வத்துடன் ஊர்முழுக்க விசாரித்துவிட்டு புத்தரிடம் வந்தார்.
"குருவே! மக்கள் அனைவரின் விருப்பமும் சொத்து, சுகம், பதவி, பணம் என்று தான் இருக்கிறதே ஒழிய யாரும் முக்தியை விரும்புவதாய் தெரியவில்லை'' என்று சொன்னார்.
""பார்த்தாயா? எந்த விஷயத்திலும் முதலில் ஆர்வம் இருந்தால் தான் அதைப் பற்றிய தேடுதல் உண்டாகும். எதை விரும்புகிறோமோ அதைத் தான் அடைய முடியும். பொருளைத் தேடுபவன் பொருளை அடைகிறான். ஆனால், உலகில் உள்ள அனைவரும் முக்தியடையத் தகுதி பெற்றவர்கள் தான். ஆனால், யாரும் அதை மனதால் கூட விரும்பத் தயாராய் இல்லை. அவ்வளவு தான்!'' என்று பதில் அளித்தார்.
பேரழகியும் அடிபணிந்தாள்வைசாலி நகரத்தில் கணிகையர் குலத்தைச் சேர்ந்த அம்பபாலி என்றொரு பேரழகி இருந்தாள். பிம்பிசார மன்னர் மூலம் புத்தரைப் பற்றி முதன்முதலாக அறிந்த அவள், புத்தரைக் கண்டவுடன் மனமாற்றம் அடைந்தாள். புத்தரின் உபதேசங்களை ஆர்வத்துடன் கேட்டாள். ஒருமுறை புத்தரின் பாதங்களில் அடிபணிந்து தன் இல்லத்திற்கு வந்து பிச்சையேற்கும்படி வேண்டினாள். புத்தரும் சம்மதம் தெரிவித்தார்.
கணிகையர் வீட்டுக்கு புத்தர் பிச்சையேற்க வருவதை அறிந்த சிலர், அம்பபாலியை பிச்சை போடவிடாமல் தடுத்தனர். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நோக்கத்தில், புத்தர் அம்பபாலியிடமே பிச்சையை ஏற்றார். புத்தரின் திருவடிகள் தன் வீட்டில் பட்ட நாள்முதல், அம்பபாலி மனத் தூய்மை பெற்றாள். புத்த சங்கத்தில் சேர்ந்து கொண்டு பணியாற்றத் தொடங்கினாள்.
குருவை மறக்காத சீடர்
புத்தரின் சீடர்களில் காஷ்யபரும் ஒருவர். காஷ்யபரை நோக்கி புத்தர், ""உன்னிடம் இருக்கும் ஞானத்தை மக்களிடம் பரப்பு. நான் எப்போதும் உன்கூடவே இருக்கிறேன்,'' என்று ஆசி அளித்து அனுப்பி வைத்தார்.
புத்தரை விட்டுச் சென்ற காஷ்யபர், அவர் இருந்த திசை நோக்கி வணங்கத் தவறியதில்லை. காஷ்யபரின் செயலைக் கண்டவர்கள், ""தாங்களே ஒரு ஞான குருவாக இருந்து உபதேசம் செய்து கொண்டிருக்கும்போது ஏன் இப்படி செய்கிறீர்கள்?'' என்று கேட்டனர்.
""புத்தர் இருக்கும்வரை நான் அவருடைய சீடன் தான். சீடனுக்கு எப்போதும் குருவின் பாதுகாப்பு தேவை,'' என்றார். வாழ்வின் இறுதிநாள் நெருங்கியதை அறிந்த புத்தர், தன் சீடரான ஆனந்தனிடம் தகவல் தெரிவித்து காஷ்யபரை அழைத்துவரும்படி கூறினார். காஷ்யபரும் குருவைக் காண ஓடோடிவந்தார். சீடனைக் கண்ட புத்தரும் புன்முறுவல் செய்தார். காஷ்யபரின் மடியிலேயே புத்தரின் உயிர் பிரிந்தது.

No comments:
Post a Comment