தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர் களின் ஆதிக்கம் மாறும்போதெல்லாம் தமிழ்மொழியும் மாறி மாறி வந்தது. சங்க காலத்தில் தமிழ் மொழி மன்னர் களால் போற்றி வளர்க்கப்பட்டது. சமயங்களிலும் மாற்றங்கள் உண்டாயின.
சமண சமயமானது சங்க காலத்தில் நுழைந்து, களப்பிரர்கள் காலத்தில் வேரூன்றி, பல்லவர் காலத்தில் ஆட்சி யைக் கைப்பற்றியது.
சமணரின் ஆதிக்கத்தால் தமிழகத் தில் வடமொழி இலக்கியங்கள் வளரலா யின. அப்போது தமிழகத்தில் ஒரு சமயப் புரட்சி தோன்றியது. சைவ, வைணவப் பெரியார்கள் தோன்றி, பிறமொழிகளை யும் பிற சமயங்களையும் பின்னுக்குத் தள்ளும் எண்ணத்துடன், ஆலயங்கள் தோறும் சென்று பக்தி இலக்கியங்களைப் பரப்பலாயினர். அதனால் தமிழும் வளர்ந்தது; சமயமும் வளர்ந்தது.
ஆழ்வார்கள் இசைத்தமிழ் பாடல்களை இயற்றி, கோவில்தோறும் சென்று பாடியதால், இசையோடு, ஆடல், பாடல், சிற்பம், ஓவியம் என பல்கலைகளும் வளர்ந்தன.
சங்க காலத்திற்குப் பின்னர் சமண, பௌத்த சமயங்களால் நலிவுற்றிருந்த திருமால் வழிபாடு மீண்டும் மறுமலர்ச்சி அடைந்தது.
இறைவனின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுப வர் என்ற பொருளில் வைணவ அடியார்களுக்கு "ஆழ்வார்' என்னும் பெயர் வழங்கி வந்தது.
வைணவத்தின் முக்கிய நோக்கங்களை தத்துவம், இதம், புருஷார்த்தம் என்றும்; அதைப் பரப்ப ஏற்பட்ட நெறிகளை பக்தி நெறி, பிரபக்தி நெறி எனவும் வைணவர்கள் வழங்கினர்.
ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் ஆரம்பத்தில் "அருளிச் செயல்கள்' என அழைக்கப்பட்டாலும், நாளடைவில் அது "நாலாயிரத் திவ்விய பிரபந்தம்' என தமிழும் வடமொழியும் கலந்த பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
அதுவே "இராமானுஜ நூற்றந்தாதி' சேர்ந்த நாலாயிரம், அது சேர்க்கப்படாத நாலாயிரம் என இரு பிரிவாகப் பிரிந்தது.
முதலாவது பிரிவு தென்கலை வைணவர் களுக்கு உரியது என்றும்; இரண்டாவது பிரிவு வடகலை வைணவர்களுக்கு உரியது எனவும் பகுக்கப்பட்டது.
தென்கலை வைணவர் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை வடமொழி வேதத்தைவிட உயர்வாக- வேதமாகவே மதிப்பர்.
வடகலை வைணவர் வடமொழி வேதத் திற்கே முன்னுரிமையும், நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை இரண்டாவதாகவும் கருதுவர்.
இராமானுஜர் விளக்குவது தென்கலை; வேதாந்த தேசிகர் விளக்குவது வடகலை.
திருமால் மட்டுமே முக்தியளிப்பார் என்பது தென்கலையினரின் கொள்கை.
திருமால்- லக்குமி இருவருமே முக்தியளிப் பார்கள் என்பது வடகலையினரின் கூற்று.
எவ்வாறாயினும் இருவருமே திருமாலின் பெருமையையும் மகிமையையும் வளர்க்கவே பாடுபடுகின்றனர்.
தென்னக ஆழ்வார்கள் பன்னிருவர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ் வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ் வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் என திருமால் பெருமை பாடிய பாவலர்கள்.
இதில் எட்டாவதாக அமைந்த ஆண்டாள், எட்டாவது குழந்தையாக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணரைத் தன் பதியாக நினைத்துப் பாடிய பாசுரங்கள் அவரை முக்தியடையச் செய்ததுடன், இன்றும் வைணவத் திருத்தலங்களில் பாடப்படுகின்றன.
பெரியாழ்வாரால் நந்தவனத்தில் கண்டெடுக் கப்பட்டு, கோதை என்ற பெயருடன் அவரிடம் வளர்ந்து, "திருமாலைத்தான் மணப்பேன்' எனக் கூறி பாசுரங்கள் இயற்றினாள் ஆண்டாள். திரு மால் அவளை ஸ்ரீரங்கத்தில் ஆட்கொண்டார்.
ஆண்டாள் அருளிய பாசுரங்களை "திருப்பாவை' என்று அழைக்கிறோம். ஆனால் ஆண்டாள் அதற்குச் சூட்டிய பெயர் "சங்கத் தமிழ் மாலை முப்பது' என்பதாகும்.
அதைத்தவிர "நாச்சியார் திருமொழி' என்ற பாடல்களின் தொகுப்பையும் பாடினாள். இது இன்றும் வைணவர்களின் திருமணத்தின்போது பாடப்படுகிறது என்றால், நாச்சியார் திருமொழி யின் சிறப்பைச் சொல்லவா வேண்டும்?
இராமானுஜர் திருப்பாவையைப் பெரிதும் போற்றினார். அதனாலேயே அவர் "திருப்பாவை ஜீயர்' என்று இன்றும் அழைக்கப்படுகிறார்.
"மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!'
என்ற ஆண்டாளின் முதல் பாசுரமே வைணவத் திருத்தலங்களில் மார்கழியில் பாடப்படும் ஒப்பற்ற பாசுரமாகும்.
ஆண்டாளின் பாசுரங்கள் முப்பதும் அமுதம். இப்பாசுரங்கள் ஆண்டாளின் அன் பின் விரிவையும் திருமாலின் பெருமையையும் விளக்குவனவாகவே அமைந்துள்ளன.
"தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டனோ?
மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்'
என்னும் பாசுரத்தில், ஆண்டாள் திருமாலின் மேல் கொண்ட அதீதக் காதலால், அவ்விள மங்கையரைக் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைக்கிறாள்.
திருப்பாவையை குழுக்களாகச் சேர்ந்து ஓதிப் பாராயணம் செய்து பக்தியுடன் பாடி னால், திருமால் பக்தியில் திளைக்கலாம்; பரமானந்தம் பெறலாம்.
தினமும் விடியற்காலையில் எழுந்து திருப்பாவையில் உள்ள முப்பது பாசுரங்களையும் பக்தியுடன் சொன்னால் மழை பொழியும்; மக்கள் செழிப்புடன் வாழ்வார்கள் என்பது வைணவப் பெருமக்களின் நம்பிக்கை.
திருப்பாவையை முழுதும் படிக்க இயலாத வர்கள் ஆன்மிக ஆச்சாரியார் அபிராமி பட்டர் சொன்னவாறு,
"சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்ந்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்'
என்ற பாடலையாவது தினமும் சொல்லி வந்தால் திருமால் அருளைப் பெறலாம்.
ஆண்டாள் திருப்பாவையில் மார்கழி நோன்பு நோற்கும் காலத்தை முதல் பாசுரத்தி லும், நோன்பு செய்யும் முறையை இரண்டாம் பாசுரத்திலும், அந்த நோன்பால் மழை பெய்யும் என்று மூன்றாம் பாசுரத்திலும், அந்த மழை பெய்த விதத்தை நான்காம் பாசுரத்திலும், அதனால் நாம் செய்த பாவங்கள் தீயில் இட்ட பஞ்சுபோல பொசுங்கி மறைந்து போகும் என ஐந்தாம் பாசுரத்திலும் சொல்லி, மார்கழி மாத நோன்பின் சிறப்புகளை முதல் ஐந்து பாசுரங் களில் வெளிப்படுத்தியுள்ளாள்.
ஆறு முதல் பதினைந்து பாசுரங்கள் வரை பள்ளியெழுச்சிப் பாசுரங்களாக திருமால் அடியார்கள் எழுப்பப்படுகின்றனர். பதினேழா வது பாசுரம், வாயிற்காவலரின் உதவியுடன் கோபியர் பலராமனை எழுப்பும் பாசுரமாகும். பதினெட்டாவது பாசுரம் வைணவ முறைப்படி பலராமனை எழுப்பும்முன் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பி அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நியமத்தின்படி நப்பின்னைப் பிராட்டியை எழுப்பும் பாசுரமாகும்.
"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டி லின் மேல்' எனத் தொடங்கும் பத்தொன்பதாவது பாசுரம் கண்ணனையும் நப்பின்னையையும் ஒருசேர சேர்த்துத் துயில் எழுப்பும் பாசுரமாகும். அதன்பின் வருவன இருவரையும் பள்ளி யெழுப்பும் பாசுரங்களாகும். திருப்பாவையின் ஈற்றுப் பாசுரங்களான இருபத்தொன்பது மற்றும் முப்பதாவது பாசுரங்கள் "சாற்றுப் பாடல்கள்' எனப்படும்.
"வாரணம் ஆயிரம்' எனத் தொடங்கும் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணப் பாடல்களை பக்தியுடன் பாடும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை வைணவப் பெரியோரிடையே உண்டு.
ஆன்மாவான உயிர் இறைவன் திருவடிகளில் சரணடைவதையே பாசுரங்கள் விளக்குகின்றன. ஆழ்வார்களில் ஆண்டாள் மற்றும் திருப் பாணாழ்வார் ஆகிய இருவர் மட்டுமே திருவடிகளில் சரணமடைந்தனர்.
ஆண்டாள் பாசுரங்களின் மகிமை தெரிந் தால் மட்டும் போதாது; திருப்பாவையை தினமொருமுறை பாடினால் வைகுந்தம் போகும்வழி தானே புலப்படும்.
வைணவர் மட்டுமின்றி அனைவரும் படித்து இன்புற வேண்டியவை ஆண்டாள் அருளிய பாசுரங்கள்.

No comments:
Post a Comment