சனி பகவானுக்கு வசப்படாதவர் யாரும் இல்லை. எத்தகைய வல்லமையுடையவராக இருப்பினும் அவரைப் பற்றிக் கொண்டு பரிதவிக்கச் செய்பவன் சனி.
ஒருமுறை இராமபக்த அனுமனைப் பற்ற வேண்டிய நிலை சனிக்கு வந்தது.
மறைமுகமாக வந்து அனுமனைப் பற்ற முடியாது. இராம நாமம் உச்சரிப்பவர்களை அணுகினால் தனக்கே கேடு வரும் என்று எண்ணினான் சனி. எனவே அனுமனிடம் சென்று, தான் அவனைப் பற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதனைக் கூறி, அனுமனின் இசைவு பெற்றே பிடிக்கலாம் என்று திட்டம் போட்டு ஆஞ்சனேயனை அணுகினான் சனி.
""இன்று ஒருநாள் போகட்டும், நாளைக்கு வந்து என்னைப் பிடித்துக் கொள்'' என்றான் அனுமன்.
"இவ்வளவு எளிதாக அனுமன் இணங்கி விட்டானே' என்று வியப்பெய்திய சனி, ""சரி! நாளைக்கே வருகின்றேன்'' என்றான். அப்போது அனுமன் சனியைப் பார்த்து, ""நீயோ சர்வ வல்லமை படைத்தவன். நீ சொன்ன சொல்லை மீறிவிட்டால், உன்னைத் தட்டிக் கேட்க யார் உள்ளனர்? ஆதலால், "இன்று போய் நாளை வருகிறேன்' என்று நீ சொன்னதை எழுதிக் கொடுத்துவிட்டுச் செல். அப்போதுதான் என் மனம் அமைதி அடையும்'' என்றான்.
""சரி; எழுதித் தருகிறேன். எதில் எழுதுவது? ஏடு வைத்திருக்கிறாயா?'' என்றான் சனி.
""இப்போது ஏடு தேட நேரம் இல்லை. இதோ என் வால் உள்ளது. அதில் நீளமாக எழுதிக் கீழே கையெழுத்துப் போட்டு விடு; போதும்'' என்றான் அனுமன்.
""சரி; உன் வாலை நீட்டு. நான் எழுதிவிட்டுச் செல்கின்றேன்'' என்று கூறிய சனி, அனுமன் நீட்டிய வாலில் அவசர அவசரமாக, "நான் இன்று போய் நாளை வருவேன். நாளை மறுப்பு ஏதும் சொல்லலாகாது' என்று எழுதிக் கையெழுதிட்டுச் சென்று விட்டான்.
சொன்னபடி மறுநாள் வந்தான் சனி.
""ஐயா சனி பகவானே! நீ எழுதித் தந்ததை மறந்து விட்டாயா? நாளை வருகிறேன் என்றுதானே எழுதியுள்ளாய்? இதோ என் வாலைப் பார்'' என்று வாலைக் காட்டினான் அனுமன்.
சனி பகவான், தான் அனுமனிடம் ஏமாந்து போனதை அறிந்து தலைகுனிந்தான்.
""என்றைக்கு வந்தாலும், உன் வாலைக் காட்டுவாய்! அதில் "நாளைக்கு வருகின்றேன்' என்றுதான் எழுதியிருக்கும். ஆதலால் உன்னை என்னால் பிடிக்கவே முடியாது. அது மட்டு மல்ல; இராம பக்தனை நான் பற்றுவது கூடாது என்பதை மறந்து உன்னை அணுகியது தவறு. தவறு செய்து தண்டனை அடையாமல் என்னைக் காப்பாற்றிய உனக்கு அநேகம் நன்றி'' என்று கூறிக் கொண்டே சனி திரும்பி நடந்தான்.
இதுபோன்ற கதை பிள்ளையாரிடம் நடைபெற்றதாக ஒரு கதையும் உண்டு.
துரியோதனனின் தாய் காந்தாரி. அவள் காந்தார நாட்டு மன்னன் மகள். அவள் சகோத ரன் சகுனி. சகு னியை அறியாத வர் யாரும் இலர். பாண்டவர் களை சூதால் வென்று காட்டுக்கு அனுப்பிய அவனை அறியாதவர் யார்?
துரியோதன னின் உடன்பிறந் தோர் மொத்தம் நூறு பேர். ஆதலால் அவர்கள் ஈரைம்பதியர் என்றும் நூற்றுவர் என்றும் பெயர் பெற்றனர்.
இதைப்போலவே சகுனியின் உடன்பிறந்த வரும் நூற்றுவரே.
துரியோதனனுக்குத் தாய்மாமன்களாகிய நூற்றுவரும் ஏதோ ஒரு காரணத்தினால் அஸ்தினாபுரத்திலேயே தங்கியிருந்தனர்.
அரண்மனையில் எந்நேரமும் சகுனி சகோதரர்கள் இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருப்பர்.
தாய்மாமன் முதலிய பெரியோர் யாராயி ருப்பினும் மரியாதை செய்ய வேண்டிய வழக்கம் அந்நாளில் இருந்தது.
ஆதலால் இளவரசர்களாகிய துரியோதனன், துச்சாதனன் முதலியோர் உட்காரவே முடிவ தில்லை. அலுத்துப் போய் வந்து துரியோதனன் சற்று சோர்ந்து அமர்வான். அப்போது யாரோ ஒரு மாமன் அவ்வழியே வந்து விடுவான். மாம னாயிற்றே! மரியாதை தராமல் இருக்கலாமா? உடனே இருக்கைவிட்டு எழுந்து வணக்கம் செலுத்துவான். அந்த மாமன் சென்று விட் டானே என்று அமர்ந்தால் வேறு ஒரு மாமன் வந்து விடுவான். உடனே எழ வேண்டும்.
யாருக்கும் வணங்கி அறியாத துரியோதனனுக்கு மாமன்மாரால் பெரும் துன்பம் நேர்ந்தது.
ஒருநாள் மிகவும் சலித்துப்போன துரியோத னன் ஏதோ காரணம் சொல்லி சகுனி சகோதரர் நூற்றுவரையும் பிடித்து சிறையில் அடைத்து விட்டான். இப்போது அடிக்கடி எழுந்து மரியாதை செலுத்த வேண்டிய தொந்தரவு இல்லையல்லவா?
சிறைப்பட்ட மாமன்மார் நூற்று வரையும் ஒரேயடி யாக ஒழித்துக் கட்டிவிட வேண் டும் என்று தீர்மா னம் செய்தான் துரியோதனன்.
சிறையி லுள் ளோர்க்கு உணவும் நீரும் தர வேண்டுமே! ஆளுக்கு ஒரு பருக்கை சோறும், ஒரு சின்ன நத்தைக் கூட்டில் நீரும் வேளாவேளைக்குத் தரும்படி ஏற்பாடு செய்தான். யாரும் கேட்டால் சோறும் நீரும் தருகின்றேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அனைவரையும் கொன்றுவிடலாம் என்பது துரியோதனன் சாதுரியம்.
நூற்றுவரில் மூத்தவனாகிய சகுனி சாமர்த்திய சாலி. தம் தம்பியர் அனைவரையும் அழைத்து, ""துரியோதனன் நம் அனைவரையும் கொல்ல ஏற்பாடு செய்துவிட்டான். நாம் அவனை அடியோடு அழித்துப் பழிக்குப் பழி வாங்க வேண்டும். இதற்கு நாம் ஒரு தந்திரம் செய்ய வேண்டும்'' என்றான்.
""அண்ணா! நீயோ அறிவாளி! அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது உன் கடமை. நீ என்ன சொல்கின்றாயோ அதை நாங்கள் அப்படியே செய்கின்றோம்'' என்றனர் தம்பியர்.
""ஒரு பருக்கைச் சோறும் நத்தைக் கூட்டில் தரும் தண்ணீரும் உண்டு யாரும் சில நாள்கூட உயிர் வாழ இயலாது. அனைவரும் இவ்வாறு இறப்பதைவிட நம்மில் யாராவது ஒருவன் உயிர் பிழைத்தால் பழிக்குப் பழி வாங்கத் தோதாக இருக்குமே! ஆதலால் நான் ஓர் யோசனை சொல்கின்றேன். அதன்படி செய்தால் துரியோதனனை அடியோடு ஒழித்துவிடலாம்'' என்றான் சகுனி.
""நூறு பேருக்குத் தரும் சோற்றையும் தண்ணீரை யும் யாராவது ஒருவன் மட்டும் சாப்பிட வேண்டும். அப்போது ஒருவனாவது மேலும் சில நாட்கள் உயிரோடு இருப்பான். யார் சாப்பிடுவது என்று தீர்மானம் செய்யுங்கள்'' என்றான் சகுனி.
""அண்ணா! நீதான் புத்திசாலி. நீ உயிரோடிருந் தால்தான் துரியோதனனைப் பழிவாங்க முடியும். ஆகையால் நீயே சோறும் நீரும் உண்ணுதல் வேண்டும்'' என்று அனைவரும் ஒருமித்து உடன்பட்டனர்.
பட்டினியால் ஒவ்வொருவராகப் பட்டொ ழிந்தனர். சகுனி மட்டும் சோறும் நீரும் சிறிதள வாவது உண்டமையால் உயிர் தப்பினான்.
அனைவரும் மாண்டிருப்பர் எனக் கருதிய துரியோதனன் சிறைச்சாலையில் புகுந்து பார்த்தான்.
துரியோதனன்மேல் ஆத்திரம் பொங்கி னாலும் சகுனி அதனை அடக்கிக் கொண்டான். ""அன்பு மருமகனே! நீ எனக்கு எவ்வளவு உபகாரம் செய்தாய்? இந்தக் கயவர்கள் அனைவரும் சேர்ந்து பட்டத்துக்கு உரியவனாகிய என்னை ஒழிக்கத் திட்டம் போட்டிருந்தனர். நீ அதை உணர்ந்து சிறையிலிட்டு, இந்தக் கொடிய வர்களை ஒழித்து எனக்கு காந்தார நாடு முழுவதையும் உரிமையாக்கி விட்டாய்! இதற்கு உனக்கு எப்படி கைம்மாறு செய்வது?'' என்று தேன் ஒழுகப் பேசினான். அவன் பேச்சை அப்படியே நம்பிவிட்டான் துரியோதனன்.
அன்று முதல் சகுனிக்குத் தடபுடலான உபசாரம் நடந்தது. அரண்மனையே சகுனி சொன்னபடி இயங்கியது. துரியோதனனும் சகுனி போட்ட கோட்டை தாண்டுவதில்லை.
எவ்வளவு உபசாரம் கிடைத்தாலும் சகுனி தன் குரோதத்தை மறக்கவில்லை.
துரியோதனனுக்கு நல்லவன்போல் நடித்து அவனைப் படுகுழியில் தள்ள சமயம் எதிர் பார்த்திருந்தான்.
சகுனியின் யோசனைப்படியே அஸ்தினா புரத்தில் புதிய அரண்மனை உருவானது. அரண்மனை புகுவிழாவுக்கு பாண்டவர் வரவழைக்கப்பட்டனர். விருந்து முடிந்த பின்பு சகுனி தருமனைச் சூதாட அழைத்தான்; வென்றான். திரௌபதியை மானபங்கப்படுத்தச் செய்தான். அதனால் பாண்டவரின் பகையைக் கிளறி விட்டான்.
சகுனி மூட்டிய பகைத்தீ பாரதப் போராக மூண்டது. துரியோதனன் அடியோடு அழிந்தான். துரியோதனன் அழிவு கண்ட சகுனி, பழிக்குப் பழி வாங்கிய நிம்மதியோடு உயிர் துறந்தான்.

No comments:
Post a Comment