திரு நீறு பூசும் திசை
"நீறில்லா நெற்றி பாழ்' என்கிறாள் அவ்வைப்பாட்டி. "மந்திரமாவது நீறு' என்று திருநீற்றின் மந்திரத்தன்மையைப் போற்றுகிறார் ஞானசம்பந்தர். திருநீறை நிறைய பூசிய நெற்றியை உடையவர் பக்திப்பழமாய் அழகாக இருப்பர். திருநீறுக்கு விபூதி என்ற பெயர் உண்டு. இதற்கு "மேலான செல்வம்' என்பது பொருள். குளித்தவுடன் தலையில் இருக்கும் நீரைப் போக்கி தலைவலி, ஜலதோஷத்தை தடுக்கும் தன்மை விபூதிக்கு உண்டு.
கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி நின்று திருநீறு பூசுவது உசிதம். காலை, மாலை, சாப்பாட்டிற்கு முன், கோயிலுக்குச் செல்லும்நேரங்களில் விபூதி பூசுவது அவசியம். கையில் எடுக்கும் போது, சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெற்றியை சற்று உயர்த்தி, "சிவசிவ' "முருகா' என்று மந்திரம் ஜெபித்தபடியே பூசவேண்டும். "நீறு நிறைஞ்சிருந்தா நெற்றிக்கழகு' என்பதை இளையதலைமுறையினர் உணர்வது அவசியம்.

No comments:
Post a Comment