Friday, July 1, 2011

தேங்காயின் சிறப்பு


தேங்காய் என்பது முக்கண் முதல்வன் எனக் கருதப்படும் சிவனாகவே கருதப்படுகிறது.எல்லா பூஜைகளிலும் இது முதன்மைப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.இந்த தேங்காயை தெங்கம்பழம் எனவே பழந்தமிழர் அழைக்கிறார்கள்.''இதையே பழமொழி நானூறில் நாய் பெற்ற தெங்கம் பழம்'' என்ற பழமொழியோடு அழைக்கிறார்கள்.

இந்தத் தேங்காய் வளர்ந்து பலன் கொடுக்க ஐந்தாண்டுகள் ஆகிறது.அது போல குழந்தையும் பள்ளிக்கு அனுப்ப ஐந்தாண்டுகள் ஆகிறது.தென்னையையும் பிள்ளை என்று அழைக்கிறார்கள்.பிள்ளையும் தென்னையும் ஒன்று என்பதற்காகவே தென்னம் பிள்ளை என்றழைக்கிறார்கள்!
தேங்காயையும்,வாழைப் பழமும்தான் நாம் கடவுளுக்கு பிரசாதமாய்ப் படைக்கிறார்கள்.இந்தத் தேங்காயும் மிகவும் உயர்வான இடத்தில் காய்க்கிறது.தரைக்குக் கீழ் விளையும் உணவுப் பொருட்கள் அகந்த மூலம் எனப்படும். தரைக்கு மேல் விளையும் உணவுப் பொருட்கள் கந்த மூலம் எனப்படும்.
தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் பன்றிக்கானது.பன்றியே அகங்கார வடிவே.அதையே லிங்கோற்பவர் வடிவத்தில் உள்ள சிவனின் ஒளியுருவத்தின் கீழ் அடியைத் தொட்டதினால் சிவனே அவரது அகங்காரம் நீக்கி பன்றியுருவான  விஷ்ணுவைத் தூக்கி எடுக்கிறார்.
தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் அகங்காரத்தை உண்டாக்கும் என்பதால் அகந்த மூலம் என்றும்,தரைக்கு மேல் விளையும் பொருட்களில் உயரமான தென்னையில் விளையும் தேங்காய்,மற்றும் வாழையின் பழம் இரண்டும் கந்த மூலத்தில் சிறந்தது.
தேள் கொட்டிவிட்டாலோ, வேறு விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டாலோ ஒரு அரை மூடி தேங்காயைத் தின்றுவிட்டால் விஷம் முறிந்துவிடும். இதை இன்றும் பல கிராமங்களில் உயிரைக் காப்பாற்ற, வழக்கமாக வைத்துள்ளார்கள். 
அவ்வளவு விஷ முறிவு சக்தியுள்ளது தேங்காய்.இப்படிப்பட்ட தேங்காய் இயற்கையான வடிவத்திலேயே சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நஞ்சுக்கள் நீங்கி உடல் பல்லாண்டு காலம் நோயின்றி வாழும்.

No comments:

Post a Comment