Thursday, July 21, 2011

ஆலயத்தில் வீழ்ந்து வணங்கக்கூடிய - கூடாத இடங்கள்!

ஆலயத்தின் கொடிக் கம்பத்தின் (துவஸ்தம்பம்) முன்பு தான் வீழ்ந்து வணங்க வேண்டும். ஆலயத்தின் உள்ளே எந்த சன்னதிகளிலும் வீழ்ந்து வணங்கக் கூடாது.
கர்ப்பக் கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் அவருக்க எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் வணங்குதல் கூடாது. காரணம், ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னாள் உள்ள நந்தி மூக்கிலிருந்து விடும் மூச்சுக் காற்றினால் தான் கர்ப்பக் கிரகத்திலுள்ள மூலவருக்கு உயர்நிலை தருவதாகக் கருத்து. இதனால் தான் மூலவரின் வயிற்றுப் பகுதி கொப்பூழ் பாகத்தை உயர் நிலையாகக் கொண்டு அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு ஆலயங்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இம்மூச்சுக் காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவதும் இங்கு வீழ்ந்து வணங்குவதும் கூடாது என்றனர். கிழக்கு, மேற்கு நோக்கிய சன்னதிகளில் வடக்கே தலை வைத்தும், தெற்கு, வடக்கு நோக்கிய சன்னதிகளில் கிழக்கே தலை வைத்தும் வணங்க வேண்டும்.

No comments:

Post a Comment