Thursday, July 28, 2011

காவியங்கள் அரங்கேறிய தலம்!

பெருமைமிக்க பக்திக் காவியங்களும், நூல்களும் அரங்கேற்றப்பட்ட தலங்களும் புனிதமிக்கவையே. சில நூல்கள் அரங்கேற்றப்பட்ட தலங்கள் இதோ... ராம காவியத்தை எழுதிய கம்பர், அதனை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார். இன்றும் நரசிம்ம ஸ்வாமி சன்னதிக்கு முன் உள்ள நான்கு கால் மண்டபம் அதற்கு சாட்சியாக உள்ளது. கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை காஞ்சியில் உள்ள கந்தகோட்டத்தில் அரங்கேற்றினார். இக்காவியத்திற்கு முருகப்பெருமானே ஒப்புதல் அளித்தது சிறப்பாகும். சேக்கிழார் பெருமான் தான் இயற்றிய பெரியபுராணத்தை சிதம்பரம் (தில்லை மாநகர்) தலத்தில் நடராஜப் பெருமான் முன் அரங்கேற்றினார். ஸ்ரீபாலன் தேவராய சுவாமிகள் தாம் செய்வித்த கந்தசஷ்டி கவசத்தினை ஈரோடு அருகிலுள்ள சென்னிமலையில் முருகப் பெருமான் முன்னர் அரங்கேற்றினார்.விரைவில் விஜய விநாயகர் இங்கே புதிய சன்னதியில் கோயில் கொள்ளப்போவது தனிச்சிறப்பு.

No comments:

Post a Comment