Thursday, July 21, 2011

கோலம்

கோலம் என்பதற்கு அழகு என்று பொருள். சூரியன் உதிப்பதற்கு முன்பே சாணம் தெளித்துக் கோலம் போடுகையில் அழகுடன் ஆரோக்கியமும் வருகின்றது. பசுமாட்டின் சாணம் சிறந்த கிருமி நாசினி என்பதால் அதைத் தெளித்து மெழுகிய தரையில் கோலம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இருட்டு நேரத்தில் துர்தேவதைகள் சுற்றிக் கொண்டிருக்கும் என்றும், இப்படி கோலம் போட்டு வைத்தால் அந்தத் தேவதைகள் கோலத்தைத் தாண்டி வராமல் கோலங்கள் வீட்டைப் பாதுகாக்கும் என்பது நம்பிக்கை. கோலக் கோடுகளைப் படிகளின் குறுக்காக வரையவே கூடாது. தலைவாசல் படிகள் தெய்வாம் சங்கள் நிறைந்தனவாகவே மதிக்கப்படுகின்றன. லக்ஷ்மி படிகள் ஏறி வீட்டில் நுழைவதை அந்தக் குறுக்குக் கோடுகள் தடுக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment