மனிதன் உயிர்வாழவும், அவனுடைய செயல்பாடுகளுக்கும், நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களே காரணங்களாக இருக்கின்றன. இவையன்றி உலகில் எதுவும் நிகழாது. இதனை உணர்த்தத்தான், சிவன் பஞ்சபூதங்களின் வடிவத்துடன் அருளுகிறார். இவற்றில் உலகில் முதன்முதலில் தோன்றியது ஆகாயம், அதிலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்னியும், அக்னியிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றின. எனவே, பஞ்சபூத சிவனை வணங்கும்போது இந்த வரிசைப்படி நினைத்து வணங்கினால் உலகவாழ்க்கையில் இருந்து விடுபட்டு முக்தியடையலாம் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment