உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவளே விடியற்காலை நேரத்திற்குரியவள். இவள் சூரியனின் தேவியருள் ஒருவர். இவள் தோன்றிய பின்பே சூரியன் உதமயாகிறான். இக்காரணத்தினாலேயே விடியற் கால நேர உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப் பாய்வதால்தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இதனால் தான் அக்காலத்தில் நீரும் வெது வெதுப்பாக உள்ளது.
No comments:
Post a Comment