Monday, July 25, 2011

எம்பாவாய் என்பது

பாவைநோன்பு என்னும் கன்னியர் விரதம் தமிழகத்தின் மிகப்பழமையான விரதங்களில் ஒன்றாகும். இவ்விரதத்தின் அடிப்படை நோக்கங்கள், நாடு செழிக்க நல்ல மழை வேண்டும் என்பதும், நோன்பு நோற்கும் கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் வேண்டும் என்பதுமாகும். ஒரு காலத்தில் இந்த விரதத்தை தை நீராடல் என்ற பெயரில் தை மாதத்தில் அனுஷ்டிக்கப்பட்டதாகச் சொல்வர். பின்னாளில் இது மார்கழியில் கடைபிடிக்கப் பட்டது. தற்போது இந்த விரதம் தனுர்மாத விரதம் என்று மாறி விட்டது. இந்த விரத காலத்திற்காக உருவானவையே திருப்பாவையும், திருவெம்பாவையுமாகும். திருப்பாவை பெருமாளைக் குறித்தும், திருவெம்பாவை சிவனைக் குறித்தும் பாடப்பட்டது. தன் தோழியை எம் பாவாய் என்று வாசலில் நின்று கூவி அழைக்கும் நோக்கில் இப்பாடல்களின் இறுதிச் சொல் அமையும். இந்த உலக வாழ்க்கை நிலையானது என்னும் அறியாமையில் இருந்து (உறக்கத்தில் இருந்து) உயிர்களை எழுப்பி, வாழ்வின் முடிவு தெய்வத்தை அடைவதே, எனவே வாழும் காலத்தில் எந்த அநியாயமும் செய்ய வேண்டாம் என்னும் விழிப்பு (ஞான) நிலைக்கு வரும்படி அழைப்பு விடுப்பதே பாவைப் பாடல்களின் நோக்கம்.

No comments:

Post a Comment