அந்தாதி என்ற சொல்லைக் கேட்டதும் நம் நினைவுக்கு வருவது அபிராமிப்பட்டர் பாடிய அபிராமிஅந்தாதி. சிவபெருமானுக்கும் அந்தாதி பாடல்கள் தமிழில் இருக்கின்றன. சைவத்திருமுறையான பன்னிருதிருமுறைகளில் பதினோராம் திருமுறையில் சிவபெருமான் திருவந்தாதி இடம்பெற்றுள்ளது. இந்நூலை எழுதியவர் கபிலதேவர்.இதே போன்று ஈசனின் மீது பாடிய மற்றொரு அந்தாதிப்பாடல் அற்புதத்திருவந்தாதி. இந்நூலை எழுதிய காரைக்காலம்மையாரை சிவபெருமான் அம்மையே என்று அழைத்து மகிழ்ந்தார். அதனால், இவரை அப்பனைப்பாடிய அம்மை என்று சொன்னால் மிகையில்லை. தேவாரம், திருவாசகப் பாடல்களைப் பாராயணம் செய்வது போல அந்தாதிப்பாடல்களையும் படித்து இறையருள் பெறலாம்.
No comments:
Post a Comment