கடவுள் சர்வ வல்லமை பொருந்தியவர். நாம் எதை கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் கொடுக்கும் சக்தி படைத்தவர். நாம் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்ப கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம். நாம் வேண்டுவது அனைத்தையும் கடவுள் நமக்கு செய்து தருவார் என்று நம்புகிறோம். நமக்கு எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று நம்மை படைத்த கடவுளுக்கு மட்டுமே தெரியும். அவர் நாம் வேண்டியதை விட அதிகமாகவும், சிறந்ததாகவும் செய்து தருவார். அவர் எதைக்கொடுத்தாலும், எவ்வளவு கொடுத்தாலும் அதை ஏற்றும் கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இறைவழிபாடு என்பது, இறைவா! எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது எனக்கு தெரியாது. அனைத்தும் அறிந்தவன் நீ. எனக்கு எது நடந்தாலும், அது உன்னால் தான் நடக்கிறது. அதன் பலன் அனைத்தும் உனக்கே சமர்ப்பணம், என முழு மனதோடு ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து இறைவனிடம் சரணடைய வேண்டும். அவ்வாறு செய்தால் கடவுளின் அனுக்கிரகமும், அருளும் எப்பொழுதும் நமக்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment