Wednesday, February 22, 2012

விரததினங்களில் வெங்காயம், பூண்டு இவற்றை தவிர்க்கிறார்களே ஏன்?

 விலங்கு முகத்தோடு இறைவனின் திருவடிவங்கள் இருப்பது சரியானது தானா?

சர்வ வியாபியான கடவுள் எல்லா இடங்களிலும், உயிர்களிலும் நிறைந்திருக்கிறார். மனிதன் மட்டுமல்லாமல் விலங்கு, பறவை அனைத்தும் இறையம்சமே. அந்த அடிப்படையில் யானை முக விநாயகர், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் என்ற நிலையில் திருமாலையும், குரங்கு முக ஆஞ்சநேயரையும் கடவுளாக வழிபடுகிறோம்.

* விரததினங்களில் வெங்காயம், பூண்டு இவற்றை தவிர்க்கிறார்களே ஏன்?

பூண்டு, வெங்காயம் போன்றவை நம் காம, குரோத உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் என்பதால் தவிர்க்க வேண்டும் என்று பெரியவர்கள் வரையறை செய்தனர். அப்போது தான் மனம் இறைசிந்தனையில் முழுமையாக ஈடுபடும்.

* கோயில்களில் விழா நடத்துவதன் நோக்கம் என்ன?

இறையருள் பெற வேண்டும் என்பது தான். "பெருங்கருணை பேராறே!'' என்று சிவனைப் போற்றுவார் மாணிக்கவாசகர். விழாக்காலத்தில் அவன் நம்மைத் தேடி வருகிறான். அதுவும் நமக்காகவே. பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

* கந்தசஷ்டி கவசத்தில் "ஒருநாள் முப்பத்தாறுருக் கொண்டு' என வருகிறதே. அதன் பொருள் என்ன?

ஒருநாளில் 36முறை பாராயணம் செய்யவேண்டும் என்று தேவராய சுவாமிகள் குறிப்பிடுகிறார். அண்மைக்காலத்தில் வாழ்ந்த பாம்பன் சுவாமிகள், இதனை தினமும் 36 முறை பாராயணம் செய்ததாகச் சொல்வர்.

* குத்துவிளக்கு எத்திசையில் ஏற்ற வேண்டும்?

விளக்கேற்ற கிழக்கு,மேற்கு, வடக்கு உகந்தவை. தெற்கு கூடாது.

** கடவுளை வழிபடும் போது அமைதியாக தியானிப்பது, பஜனை பாட்டு என்று ஆரவாரிப்பது எது பலன் தரும்?

"நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூசை செய்ய வாராய் பராபரமே'' என்று தாயுமானவர் பராபரக்கண்ணியில் மனக்கோயிலில் சிவனை பூஜிக்கிறார். ""கொட்டு ஆட்டு பாட்டாகி நின்றாய் போற்றி'' என்று திருமுறைகள் ஆட்டம் பாட்டமும் ஆண்டவனும் வேறு வேறல்ல என்று சிவனைக் குறிப்பிடுகிறது. இரண்டுமே பலன் தரும். உங்களின் விருப்பத்தைப் பொறுத்து வழிபடலாம். 

No comments:

Post a Comment