Saturday, February 11, 2012

திரிவேணி சங்கமம்


திரிவேணி சங்கமம்
கங்கைக்கரையில் உள்ள புண்ணியதலங்களில் காசி, பிரயாகை, ஹரித்துவார் ஆகியவை புனித நீராடலுக்கும், பிதுர்வழிபாட்டுக்கும் உரியவை. பிரயாகை அலகாபாத் அருகில் உள்ளது. இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்றுநதிகளும் சங்கமிக்கின்றன. இதை "திரிவேணி சங்கமம்' என்றும், "தீர்த்தராஜா' என்றும் கூறுவர். பிரம்மா பல யாகங்களை இங்கு செய்ததால், "பிரயாகம்' என்று பெயர் ஏற்பட்டு "பிரயாகை' என மாறியது. கங்கையின் நிறம் வெண்மை. யமுனா கரியநிறமுடையது. திரிவேணிசங்கமத்தில் இருநிறங்களும் சங்கமிப்பதைக் காணலாம். சரஸ்வதி உள்முகமாக ஓடுவதால் கண்ணுக்குத் தெரிவதில்லை. பவித்ரமான திரிவேணி சங்கமத்தை கண்ணால் பார்த்தாலே ஒருவன் புனிதமடைந்து விடுவான் என்பர். காசியாத்திரை செல்வோர் திரிவேணி சங்கமம் செல்ல வேண்டியது அவசியம். இங்கு பசுதானம் கொடுத்தால் அதன் உடலில் உள்ள ரோமங்களின் எண்ணிக்கை எவ்வளவோ அவ்வளவு ஆண்டு காலம் ஒருவன் சுவர்க்கத்தில் வாழ்வான் என்பது ஐதீகம். 

No comments:

Post a Comment