Thursday, February 16, 2012

கொக்கரக்கோ'

கீழ்வானில் சூரியன் உதிக்கும் முன்னே சேவல் விடியலை நமக்கு அறிவிக்கிறது. இது, "வாழ்வு' என்னும் அறியாமை தூக்கத்தில் நாம் இருப்பதையும், அது தற்காலிகமானது என்பதையும், இந்த உலகம் வாடகை வீடு என்னும் விழிப்பு நிலையைப் பெற வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. முருகப்பெருமானும் சூரபத்மனும் போரிடும் போது, சூரன் மாயசக்தியினால் மாமரமாகி நின்றான். முருகன் தன் வேலினால் மரத்தை இரண்டு கூறாகப் பிளந்தார். ஒருபுறம் மயிலாகவும், மறுபுறம் சேவலாகவும் மாறியது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றார். "தான்' என்ற எண்ணம் தான் மாமரம். இந்த மாமரத்தை வேல் பிளந்தது போல், ஞானத்தால் நம்மை அறிந்தால் கடவுள் நிலையை அடையலாம். "கொக்கு' என்றால் "மாமரம்' என்றும் பொருளுண்டு. சேவல் "கொக்கரக்கோ' என்று கூவும். இதை கொக்கு+அறு+கோ என்று பிரிப்பர். "சூரனாகிய மாமரத்தை பிளந்த மன்னவனாகிய முருகனே!'' என்று சேவல் கூவுவதாகச் சொல்வர்

No comments:

Post a Comment