Sunday, March 4, 2012

வேலுக்கும் மந்திரமுண்டு

முருகப்பெருமானின் அடையாளமாக இருப்பது வேல். வடிவேல் அறிய வஞ்சகமில்லை (வடிவேல் மீது ஆணையாக நான் சொல்வதெல்லாம் உண்மை) என்று தன்பக்க நியாயங்களை எடுத்துச் செல்லும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. வேல் என்பதற்கு வெற்றி என்று பொருள். வேலினை ஆயுதமாக நினைக்கக்கூடாது. இறைவனின் ஞானசக்தியே முருகப்பெருமானிடம் வேலாக அமைந்துள்ளது. சூரபத்மன் தன் மாயாசக்தியால் மாமரமாக மாறினான். அப்போது முருகன் வேலை ஏவி இருகூறாகப் பிளந்து ஒருபகுதியை மயிலாகவும், மறுபகுதியை சேவலாகவும் மாற்றினார். மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியிலும் சேர்த்துக் கொண்டார். ஞானமே வடிவாகிய வேலால் அசுரனையும் ஆட்கொண்ட பெருமை முருகப்பெருமானுக்குரிய தனிச்சிறப்பு. வேலுக்குரிய மந்திரமாக வேலும்மயிலும் துணை என்று முருகனடியார்கள் ஜெபிப்பர். ஆனால்,வேலு மயிலும் துணை என்று உச்சரிப்பதே சரியானது.

No comments:

Post a Comment