Wednesday, December 11, 2013

விவேக சிந்தாமணி 18

விவேக சிந்தாமணி 18

சில நூல்களில் இந்த பாடல் இடம்பெறாது

சில நூல்களில் இந்த பாடல் இடம்பெறாது

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய் ...
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே
சகிக்க முடியாதினி என் சகியே மானே


(கணக்கினை விளக்கிய பின் )
கன்னியே கேளாய்
உண்மையாய் உன் செவ்வாயை கேட்டேன்
பதிலை சொல்லாய்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
வெற்றியை பெறுவாய் பெண்ணே
பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
காமத்தால தாலே
சகிக்க முடியாதினி என் சகியே மானே

(கணக்கு )

ஒரு நான்கும் ஈர் அறையும் ஒன்றே -

ஒரு நான்கோடு இரு அரையையும் ஒன்றையும் சேர்க்க (4+1/2+1/2=6) ஆறு கிடைக்கும் அந்த ஆறாவது இடத்தில இருக்கும் ராசி கன்னி ராசி

கன்னி என்ற பெயர் வருவதால்

கனியே கேளாய் என்று வரும்

பின்

உண்மையாய் அணிது அரைகலொடு ஒரு ராய் சேருவதால் உண்டாகும் (5 X 1/2 + 1/2 = 3) மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை(உன் சிவந்த வாயை) கேட்டேன்

இரண்டு நான்குடன் மூன்றுடனே ஒன்று சேர்ந்து (4+4+3+1 =12) உண்டாகும் நட்சிதிரமான உத்திரத்தை (அதாவது விடையை) கூறுவாயாக

நான் சொல்லியபடி உன் செவ்வாயை நீ கொடுத்தால் (ஈந்தால்)

நான்கோடு ஆறு நான்கு சேர்ந்து உருவாகும் (4+6X 4 = 28) இருபத்தி எட்டு என்னும் என் குறிக்கும் தமிழ் வருடமான ஜெயத்தை ( அதாவது வெற்றியை ) நீ பெறுவாய்

பெண்ணே இன்னும் நான் ஒரு வார்த்தை சொல்ல தேவை இல்லை அல்லவா

நான்கோடு பத்தும் ஒரு பண்டினைந்தும் சேர்வதால் உண்டாகும் (4+10+15=29) இருபத்து ஒன்பது என்னும் தமிழ் வருடம் (மன்மத வருடம்) மன்மதனால் (காமன் படுத்தும் பாட்டினால்) என் தோழியே என்னால் இனிமேல் காமவேதனையை தாங்கிக் கொண்டிருக்க முடியாது ..

No comments:

Post a Comment