எல்லா உயிர்களும் தொழும்..!
"உயிர் கொலையும் , புலை பொசிப்பும் உடையவர்கள் உறவினத்தார் அல்லர் !! அவர்கள் புற இனத்தார் " - (வள்ளலார்)
"உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒருதிரு பொதுவென அறிந்தேன் " - வள்ளலார் (அகவல்)...
"எவ்வுயிரும் பொதுஎனக் கண்டிரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன்" - வள்ளலார் (தனித் திருஅலங்கல்)
"கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம்உயிர்போல் கண்டு ஞானத் தெருள்நெறி"
"எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்உயிர்போல் எண்ணி
உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான்
சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன்" (தனித் திருஅலங்கல்)
"மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும் கண்ணுறப் பார்த்தும், செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன்"
வள்ளலார் தாம் எழுதிய சீவகாருணிய ஒழுக்கத்தில்,
அருளைப் பெறுவதற்குச் சீவகாருணியமே வழியாதலால், ஞான வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கம் என்றும், அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவ காருணிய ஒழுக்கமில்லாமை என்றும் அறியப்படும். சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளுந் தோன்றும். சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளுந் தோன்றும். ஆகலின் புண்ணிய மென்பது சீவகாருணியமொன்றே என்றும், பாவ மென்பது சீவகாருணிய மில்லாமையொன்றே என்றும் அறியப்படும்
சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும், சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே சீவன் முத்தரென்றும், அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் "சத்தியமாக" அறிய வேண்டும்.
ஒரு சீவனைக்கொன்று மற்றொரு சீவனுக்குப் பசியாற்றுவித்தல் கடவுளருளுக்குச் சம்மதமுமல்ல, சீவகாருணிய ஒழுக்கமுமல்ல என்று சத்தியமாக அறியவேண்டும்.
சீவகாருணிய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுளருளுக்குச் சிறிதும் பாத்திரமாகார்கள்.
வள்ளலார் , தன்னுடைய பேருபதேசத்தில், என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது என குறிப்பிடுகின்றார்.
திருக்குறளில் , "தன் ஊன் பெருக்கர்க்கு , பிறிது ஊன் உண்பான் எங்கனம் ஆளும் அருள்" மேலும் , "கொல்லான் , புலால் மறுத்தானை எல்லா உயிர்களும் தொழும்" என திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

No comments:
Post a Comment