Sunday, December 1, 2013

அரசன் புருஷனுக்கெல்லாம் மேலாக பகவான் கண்ணன்

பெருமையுடன் சொல்வேன் பகவான் கண்ணன் எனக்கும் "நண்பேண்டா"....

குருசேத்திரத்தில் சாத்யகிக்கும் பூரிசிரவசுக்கும் இடையே கத்தி சன்டை நடக்கிறது. சாத்யகி கீழே விழுகிறான். அவன் தலையை வெட்ட பூரிசிரவஸ் கத்தியை ஓங்குகிறான்....

சாத்யகி கிருஷ்ண பக்தன். பாண்டவர் சார்பாக போரிட்டவன். அவனை கொல்ல முனையும் பூரிசிரவஸ் துரியோதனாதியர் தரப்பை சார்ந்தவன்.

"பின்னால் இருந்து அம்பை விடுத்து பூரிசிரவஸ் கையை துண்டாக்கு" என அர்ஜுனனுக்கு ஆணை இடுகிறான் கண்ணன்

"இருவர் போர் புரிகையில் மூன்றாம் நபர் தலையிடுவது ஷத்திரிய தருமம் அல்ல" என மறுக்கிறான் அர்ஜுனன்,.

"கண் எதிரே உன் நண்பன் கொல்லபடுகையில் அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது தருமம் அல்ல, அதருமம். நீ வேண்டுமானால் சும்மா இருக்கலாம். ஆனால் என் நண்பன் என் கண் எதிரே கொல்லபடுவதை என்னால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது" என ஆயுதம் ஏந்த மாட்டேன் என அளித்த உறுதியை மீறி களத்தில் இறங்குகிறான் கண்ணன்...

கண்ணனுக்கு அந்த பழி வரவேண்டாம் என அம்பை விடுத்து பூரிசிரவஸ் கையை துண்டாக்குகிறான் அர்ஜுனன்...

நம்மில் ஒருவன் நம்மிலும் வேறுபட்டவன் நான் அவனில்லையே என்று ஏங்க வைத்தவன்

அரசன் புருஷனுக்கெல்லாம் மேலாக பகவான் கண்ணன் நல்ல நண்பேன்டா....

No comments:

Post a Comment