Sunday, February 16, 2014

சிவபிரானுக்கு காமமும் இல்லை,இறப்பு பிறப்பும் இல்லை

முதலில் நாம் திருமணம் செய்வது மனைவியுடன் உடலுறவு கொள்வதற்கும்,பிள்ளை பெறுவதற்கும்...ஏன் பிள்ளை பெற வேண்டும் ?? ஏநெனில்,நாம் ஒரு நாள் இறப்போம்,ஆதலால்,நம் சன்னிதி தொடர,பிள்ளை பெற்றுக்கொள்கிறோம்...
.முதலில் சிவபிரானுக்கு காமமும் இல்லை,இறப்பு பிறப்பும் இல்லை...அப்படியாயின் அவர் சன்னதியை வளர்க்கவும் தேவையில்லை..வேதத்தில் ஆதாரத்தைப் பார்ப்போம் :

1."யோ..பஸ்மீசகார மந்மதம் ....தஸ்பை..ருத்ராய நமோ அஸ்து " ...( எவன் மன்மதனை சாம்பராக்கினான்,அந்த உருத்திரனுக்கு நமஸ்காரம் ஆகட்டும்)- சரபோபநிஷத்

2."அஜதா இத்யேவம் கச்சித் பீரு :பிரதிபத்யதே ! ருத்ரயத்தே தக்ஷிணம் முகம் தேநமாம் பாஹீநித்யம் " - சுவேதாசுவர உபநிஷத் (ஜனன மரண ஸம்ஸாரத்துக்கு பயந்த ஒருவன் ,நீ பிறக்காதவனென்றே உன்னை வழிபடுகிறான் ...ஏ ருத்ரா ! உனது தென்முகம்,அதனால் என்னை நித்யமும் காப்பாயாக )

ஆகையினால்,சிவபிரானுக்கு காமமும்,பிறப்பும் இறப்பு இல்லை...ஆக,அவர் எதற்கு திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் ?? காமத்துக்காக இல்லை,அவர் இறப்பதில்லை,ஆகையினால் சந்ததி தொடரவேண்டும் என்பதற்கும் இல்லை...ஆக,அவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை...சிவனும் பார்வதி அம்மையும் கணவன் மனைவி என்று கூறுவது இறைவனுக்கும் அவனது சக்திக்கும் உள்ள தொடர்பை தான்...புராணம் என்பது ஒரு விஷயத்தை கதா ரூபமாக கூறுவது...இறைவனது ஆணைக்கு கட்டுப்பட்டது தான் இறை சக்தி...ஆகையினால்,கணவன் மனைவி என்று கூறினர்...கணவன் கட்டளைக்கு கட்டுப்பட்டவள் மனைவி...ஆக சிவன் கணவன்..உமையம்மை மனைவி...அர்த்த நாரீஸ்வர வடிவை எடுத்துக்கொண்டால்,அவை வேறு விஷயத்தை உணர்த்துகிறது,அதாவது இறைவனும் அவன் சக்தியும் பிரிவு இல்லாதது என்று...

மேலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இவ்வாறு கூறுகிறார் :

"கந்தபுராணத்தில் விவரிக்கப்படுந் திருமணங்கள் மூன்றில் ஒன்றேனும் என்றேனும் குறித்த விவரணப்படி நிகழ்ந்த நிகச்சியாகா.பிரபஞ்ச சிருஷ்டி நேருங்காலத்தில் பரமசிவத்திடமிருந்து சக்தி வியாபிக்கும் நிலையே அவற்றில் அறிகுறி வகையால் உணர்த்தப்பட்டுள்ளது..அவ்வுணர்வின்றி இப்பகுதிக்கு இலக்கிய ஆய்வு மோடியில் உரை நிகழ்த்து வோருங் கேட்போரும் நரகத்தில் வீழ்வர்" ...

ஆக,இறைவனுக்கும் அவனது சக்திக்கும் உள்ள தொடர்பை,பாமர மக்களும் புரிந்துக்கொள்ளும் அளவுக்கு,சைவப்புராணங்கள் கதா ரூபமாக கூறின...

No comments:

Post a Comment