Sunday, February 16, 2014

தேவதாசி









 தேவதாசி என்பவர்கள்,சைவத்தில் ருத்ர கன்னிகை என்று அழைக்கப்படுவார்கள்...தேவரடியார் என்றும் அழைக்கப்படுவார்கள்...தேவரடியார் மற்றும் தேவதாசி என்றால் இறைவனின் அடிமை என்று பொருள்...இன்று தேவரடியார் என்றால்,விபச்சாரம் செய்பவர் என்று எல்லோரும் எண்ணுகிறார்கள்.ஆனாலிது கிருத்துவப் பாதிரிகளின் பொய் பிரச்சாரமே..சிவாகமத்தில்,ருத்ர கன்னிகைகள்,சிவாலயத்தை சுத்தம் செய்வது,மாலை கட்டுவது போன்ற தூய வேலைகள...ை மட்டும் செய்து வருபவர் என்று தெரிகிறது..மேலும் கோவில்களில்,விபச்சாரம் செய்தால்,நரக தண்டனைக்குரியது... ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கூறுவதை சற்று பார்ப்போம் :

"வெறியாட்டாடிய பொதுமகளிருக்கு உருத்திராபிஷேகஞ் செய்து தீபாராதனை பண்ணி நமஸ்கரித்து,அவர்கள் கையினின்றும் விபூதீ வாங்க கூசாதென்னையோ !அம்மட்டோ,உருத்திர கணிகையருடைய இலக்கணங்கள் இவை இவையென சிவாகமங்கள் சொல்லவும்,பொதுப் பெண்களை உருத்திர கணிகையரெனக் கொண்டு ,கோவில்களில் வைத்து,அவர்கள் பொருட்டு சிவத்திரவியங்களை எடுத்து உபயோகிக்க கூசாதென்னையோ ! அம்மட்டோ,பிறர் மனைவியரை சகோதரிகளாகவும் உருத்திர கணிகையரை மாதாக்களாகவும் பாவித்தொழுதல் வேண்டும் என்று சிவாகமங்களுஞ் சிவபுராணங்களும் விதிக்கவும் ,அவ்விதி கடந்து தங்கள் மனசைத் தங்கள் பொறிபோன வழியே போகக் கூசாதென்னையோ ! "

( ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றி "யாழ்பாணத்து சமய நிலை " எனும் நூல்")

ஆக,பொதுமகளிரை,அதாவது விலைமாதர்களை தேவதாசி என்று தவறாக அழைக்கும் பழக்கம் நாவலர் காலத்துக்கு சற்று முன்னரே ஆரம்வித்துள்ளது...இப்பழக்கம்,நாவலர் காலத்தில் கடைபிடிக்கப்பட்டதால்,நாவலர் இதை கண்டித்துள்ளார்...பொதுமகளிர்,தங்களை ருத்ர கணிகையரென கூறிக் கொண்டு,கோவில் நிர்வாகத்தினரை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டனர்...இதனை,கந்தசாமிக் கோவில் நிர்வாகத்தினருக்கு,நாவலர் எழுதிய கடிதத்தில் நாம் பார்க்கலாம் :

" நல்லூர்க் கந்தசாமிக் கோவிலாளர்களே !

................... இப்படிச் செய்த நீங்கள்,நாம் இருபத்து நான்கு நாளும் நியமமெனக் கொண்டு தொடங்குவித்த தேவாரப் பாராயணத்தினாலே பொறாமை கொண்ட உங்கள் தாசிகள்,"நாங்கள் பணஞ் செலவிட்டு நெடுங்காலம் பிரயாசப்பட்டுக் கற்ற நடனம் சங்கீதங்களைக் கோவிலில்லல்லாமல் வேறெங்கே காட்டுவோம் ! நாங்கள் பெரும்பணத் தொகை கொடுத்துவாங்கிய ஆடையாபரணங்களை கோயிலில்லல்லாமல் வேறெங்கே காட்டுவோம் ! இனி எப்படி ஆடவர்களை மோகிபித்துப் பணம் பறிப்போம் !" என்று உங்களெதிரே செய்த முறையீட்டினாலே மயங்கி .................ஆடுவெட்டி இடபவாகனத் திருவிழாவுக்குத் தேவார பாராயணம் நடவாவண்ணஞ் செய்து,தாசிகளைப் பிரீதிப்படுதி விட்டீர்களே ! "

( ஆதாரம் : வே.கனகரத்தின உபாத்தியாயர் இயற்றிய "ஸ்ரீலஸ்ரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம் " )

ஆக,நாவலர் காலம்வரை,கோவில் நிர்வாகிகள் பலருக்கு ருத்ர கணிகையரது இலக்கணம் இது எனத் தெரியாமையால்,பொதுமகளிரை ருத்ர கணிகையென நினைத்திருக்கின்றனர்...அதாவது ஆடல் மகளிரை கோவிலுக்கழைத்து,தேவதாசி எனக் கொண்டிருக்கின்றனர்...ஆனால்,ருத்ர கணிகையர்,இறைவனது புகழை மட்டுமே பரதத்தில் நாட்டியம் ஆடுவர்...அதாவது சிவ ஸ்தோத்திரங்களான திருமுறைப் பாடல்களை,பரதம் ஆடி இறைவனைப் போற்றுவர்...ஆனால்,இந்த பொது மகளிரோ,தேவதாசி என்று தங்களை கூறிக்கொண்டு, கோவிலுக்கு வரும் ஆண்களை எல்லாம் வசீகரிக்க நடனம் புரிந்தனர்...இதையே நாவலர் கண்டித்தார்..

ஆகையினால்,சிவாகம அறிவு,பிற்காலத்தில்யரின் நம் சமூகமிடையே மிகவும் குறைநடியால்,ருத்ர கணிகையரின் இலகக்ணம் இவையென அறியாமல் போயினர்...இதனால்,ஆடல் கற்ற பொதுமகளிரை ருத்ர கணிகையரெனக் கொண்டு,ருத்ர கணிகையரெனால் பொதுமகளிர் என்ற இன்றைய தலைமுறையினர் எண்ணும் அளவுக்கு அந்த பெருமை வாய்ந்த ருத்ர கணிகையர் கூட்டத்துக்கு கலங்கம் உண்டு பண்ணி விட்டனர்...விபச்சாரிகளை ருத்ர கணிகையர் என்று மக்கள் கொள்கின்றனர் என்பதையும் ருத்ர கணிகையரின் இலக்கணத்தையும் நாவலர் இப்படி விவரிக்கிறார் :

"உருத்திரகணிகையர் வியபிசாரம் மதுமாமிசபக்ஷணம் முதலிய பாதகங்களின்றி, சிவவேடம் பூண்டு, சிவபத்தியிற் சிறந்தவர்களென்று சைவாகமங்கள் சொல்லுகின்றன. இதற்கு மாறாக இக்காலத்தார் கோயில்களெங்கும், மது மாமிச பக்ஷணமுடையவர்களாய் வரைவின்றி யாவரையும் புணரும் ஸ்திரீகளை உருத்திரகணிகையரென்று நியோகிக்கின்றார்கள் "

( ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய "சுப்ரபோதம்" எனும் கிருத்துவ கண்டன நூல்)


சிவாலயங்களில் புணர்ச்சி நடத்தக் கூடாதென்பதை நாவலர்,தாம் இயற்றிய சுப்ரபோதம் எனும் நூலில் தெளிவாக,தக்க ஆதாரத்துடன் கூறுகிறார் :

[ “ஈசர்திரு வாலயத்து மிடர்கடியும் புனற்றடத்தும்வாசமலர்த் திருநந்த வனத்திடையு மடத்தினுளுமாசுகளைந் தருந்தியன னமதுனமற் றையதொழிலுங்கூசமறப் புரிகின்ற கொடியாரை மிகக்கொதித்தே.”

“இக்கெனவே செக்கிடையிட் டியந்திரிப்பர் யமதூதர்துக்கமுற நரகவித மெனைத்தனைத்துந் தொகுத்தொறுப்பருக்கிரவா ரழனிரயத் தொடுக்கிடுவ ரொழுகிவிழத்தக்ககதிர் மதியளவு மவரதனிற் றவிப்பாரே.” -சிவதருமோத்தரம்: சுவர்க்கநரகவியல்.

எனவும் ஆலயங்களிற் புணர்வோர்க்கும், நரகவாதனை விதித்தருளிய கந்தசுவாமிக்கு இப்பாதகங்களை உவப்பென்று வேண்டியவாறே பிதற்றும் பாதிரிகளது மடமைக்கு யாமென் செய்வோம். ]


ஆகையினால், ருத்ர கணிகை என்பவர் சிவனடியார் கூட்டத்தில் ஒருவகையினர்,எனவும்,அவர்கள் விபச்சாரம் செய்பவர்கள் அல்லர் என்றும் பல சான்றுகளின்வழி பார்த்தோம்...சிவாகம உணர்ச்சி இல்லாத பிற்காலத்து கோவில் அதிகாரிகளின் தவற்றால்,பொது மகளிர்,ருத்ர கணிகையரென கொள்ளப்பட்டனர்...இது சிவாகம விரோதமே



No comments:

Post a Comment