Wednesday, May 7, 2014

லட்சுமி தாயாரே பூலோகத்தில் சீதையாக அவதரித்தது

சாந்தம், அன்பு, கருணை போன்ற நற்குணங்களின் உறைவிடம் லட்சுமி. அவளுக்கு கோபம் என்பதே தெரியாது. லட்சுமி தாயாரே, பூலோகத்தில் சீதையாக அவதரித்து, பொறுமையின் இலக்கணமாக வாழ்ந்து காட்டினாள். யார் தீங்கு இழைத்தாலும் பொறுத்துக் கொள்ளும் அவள், தன் அடியவர் களுக்கு அருள் புரிய தாமதிப்பதில்லை. சமர்த்த ராமதாசர் என்ற பக்தர், தான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் 14 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. காவலர்கள் அவரைக் கசையால் அடித்து துன்புறுத்தினர். வலி தாங்க முடியாமல் "ராமா' என்று கதறுவார். ஒருநாள் தாயாரை நினைத்து, ""அம்மா சீதா! நான் படும் துன்பத்தைப் பார். பெருமாளிடம் கூறி என் குறையைத் தீர்க்க மாட்டாயா?'' என வருந்தினார். தாயாரும் அவரைக் காக்கும்படி பெருமாளை வேண்டினாள். ராமரும், லட்சுமணரும் இரு வீரர்களைப் போல நேரில் சென்று, ராமதாசரின் கடனைச் செலுத்தி சிறையில் இருந்து அவரை விடுவித்தனர். பெருமாளின் அருள் பெறுவதற்கு, லட்சுமி தாயாரின் கருணை வேண்டும் என்பது இப்போது புரிந்திருக்குமே.

No comments:

Post a Comment