Tuesday, September 16, 2014

விநாயகருக்கு "நக்த' விரதம்

விநாயகரின் உருவம் கண்டு கேலி செய்தான் சந்திரன். அவனை ஒளி இழந்து போகும்படி சபித்தார் விநாயகர். இதனால் வெளிச்சம் இன்றி, உலகமே தவித்தது. பிரம்மாவின் ஆலோசனைப்படி சந்திரன் "நக்த விரதம்' இருந்தான் பகலில் எதுவும் சாப்பிடாமல் வழிபாட்டில் ஈடுபடுவதும், இரவில் மட்டும் ஒருவேளை உணவு உண்பதுமே "நக்த விரதம்'. சந்திரனும் பகலில் விநாயகரை வணங்கி இரவில் மட்டும் உண்டு வந்தான். விநாயகர் மனம் இரங்கி சந்திரனை மன்னித்தார். அத்துடன் அவனது மூன்றாம் பிறையைத் தன் தலையில் சூடி நடனமாடி மகிழ்ந்தார். இவரையே நிருத்த கணபதி. கூத்தாடும் பிள்ளையார், நர்த்தன கணபதி என்று சொல்வார்கள். தன்னை பரிகாசித்தவருக்கும் பலன் தந்து, தன் கருணையை வெளிப்படுத்தினார் அந்த கருணாமூர்த்தி. நமக்கும் சோதனை வரும் சமயத்தில், இந்த விரதத்தை தொடர்ந்து மூன்று நாள் மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment