Monday, February 2, 2015

வேத கால யாகமும் பயன்களும் ......................

வேத கால யாகமும் பயன்களும் ......................
பண்டைய காலந்தொட்டு யாகங்கள், யக்ஞங்கள், பூசைகள் போன்றவற்றை ஒரு நல்ல காரியத்தை முன்னிட்டு நமது முன்னோர்கள் செய்து வந்தனர். வியாதி தீர, எம பயம் அகல, சத்ருக்களின் உபாதைகளிலிருந்து விடுபட என, பற்பல காரியங்களை முன்னிட்டு, பரிகாரங்கள் என பெயர் சூட்டி ஹோமங்கள், யாகங்கள் போன்றவை நடைபெற்றன. இவற்றினால் என்ன பலன் என்பதனை விஞ்ஞான பூர்வமாக அறிவுப்பூர்வமாக ஆய்வோம்.
இராமாயணம் என்ற இதிகாசத்தில், தசரதச் சக்கரவர்த்தி தனக்கு வம்ச விருத்தி வேண்டி ஒரு யாகத்தைச் செய்தார். அதற்கு “புத்திர காமேஷ்டி யாகம்” என்று பெயர். சூதக முனிவர், தமது நாடியில்,
“சாபந்தன்னால் வம்சம் கருகி நிற்க
கண்டீராயின் புத்திர காமேட்டியாகஞ்
செய்தே யன்னதானஞ் செய்து பின் தம்பதியர்
கூட வம்சம் விருத்தியுண்டாம் த்யாதே”
என்றார். இதனைத் திருமூலர் விஞ்ஞான ரீதியில் விளக்குகின்றார்.
“அவில் பாதமீய உருவாக மொலியது
உயிரணுக் கொண்டு விந்துவொளி
யாமது முழமிரண்டுளுறை மங்கை கரு
அறை புகுந்து நஞ்சகற்றி கரு தங்க
வேதுவானதான விந்தை புரிய குறையிலை”
அக்கினியில் இடப்படும் அவிற்பாதமெனும் பட்டு, தேன் கனிகள் போன்றவை எரிகையில் வெளித்தோன்றும் புகை மண்டலத்திலிருந்து Molecular collision தன்னால் வெளித்தள்ளப்படும் நீஷீsனீவீநீ க்ஷீணீஹ் என்னும் விந்தொளி, கருப்பையை எட்டி அதனை சந்தித்து கரு தங்க வைக்கும் வண்ணம் செய்கிறது. ஹோம குண்டத்திலிருந்து ஒரு கஜ தூரத்தில் குழந்தை வேண்டும் பெண் அமர வேண்டும் என்று தெரிகின்றது.
“ஆயுஷ்மான் ஹோமம்” என்று ஒரு ஹோமம் உண்டு. இது குழந்தை பிறந்து ஒன்பது மாதங்களுக்குள் செய்ய வேண்டுவது. இதனை செய்யும் முறை நாடியில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஆயுஸ்மான் ஹோமம் செய்கையில் குழந்தையை, இருபத்தேழு அடி தூரத்தில் இந்த ஹோம குண்டம் துலங்கும் தலத்திலிருந்து எட்டக் கிடத்தி இருக்க வேண்டும். குழந்தை சிவப்பு, வெண்பட்டினால் அலங்கரிக்கப்பட பலன் பூரணம் என்கின்றார் குரங்கனிச் சித்தர்.
“மண்ணில் விழுஞ் சிசு பாலதுவேதா
யினு மூவாறு முழமடுத்தே கிடத்தி
பால் செம்மை வர்ணந்தீட்டிய
வத்திரத்து வாடையணிவித்தே சம்பத்து
யாகமாற்ற வருணனருளால் மாயோன்
மணியளி யுட்கலந்தே சீரொடு
சிறப்புஞ்சேர சிசு நீடு வாழ்வாமே’’
என்னும் இப்பாடல், பிறந்த குழந்தையின் ஆரோக்யம் மிகவும் சிறப்பொடு விளங்கும். ஆபத்து அதிகமான பிணிகளிலிருந்து குழந்தை விடுதலை பெறும். இதற்கு ஏதுவான மாயோன்மணி யளி எனும் லிணீக்ஷ்மீக்ஷீ கதிர் குழந்தையின் உடலில் உள்ள நாளங்கள், சுரப்பிகள் போன்றவற்றை உறுதி ஆக்கி, நோயின்றி குழந்தை நீடித்த ஆயுள் பெறும் என்பதாம்.
மகா மிருக்த்ஞ்ஞ ஹோமம்:
இது நீண்ட ஆயுளுடன், எந்தவிதமான விபத்துக்களும் ஏற்படாதபடி ஒருவன் உயிர் வாழ பெரியோர்கள் சொன்ன ஹோமப் பூசை ஆகும். இதனை முறைப்படி செய்தால் விபத்துக்கள் என்பது வாழுங்காலத்தில் தவிர்க்கவும், அகால மரணங்கள் நேராது காக்கவும் அடித்தளமாக அமையும் என்கின்றனர் சித்தர்கள். பதஞ்சலி என்னும் சித்தர் தமது பாடலில்,
“மேலான வாழ்வும் வாழலாகுமே சிவனாருக்
கமைந்த காலாக்கினி பூசா வழியே
வண்ணமிட்ட மட்ட பட்டோடு
பஞ்சதானிய வுலோகத்துடனே சாமமிரண்டு
கடைதனிலாற்றிடவே சென்மத்தும்
தேகமது வச்சிரமாக காயமது பிணியின்றி
நீடுவாழ மய்க்கதிராலாமிது சாத்தியமே”
என்று பேசுகின்றார். மெய்ஞானமும் விஞ்ஞானமும் கலந்தது இந்த பாடலின் வரிகள். காலாக்கினி என்பது மகாமிருக்த்ஞ்ஞ ஹோமம்
ஆகும். எட்டு வேறு வேறு வர்ணங்களில் ஆன வஸ்திரங்களை ஹோமத்தில் சேர்க்க வேண்டும். ஐந்து விதமான உலோகங் களுடன் ஐந்து வேறு தான்யங்களையும் தீயில் ஆகுதி செய்திடவேணும். ஐந்து சாமங்கள் என்பது ஒரு பகல், பகல் காலத்து இந்த ஹோமம் செய்தால், கடைசி இரண்டு சாமங்களில் இந்த பூரணாஹ§தி நடைபெற வேணும். ஙிறீணீநீளீ க்ஷீணீபீவீணீtவீஷீஸீ என்ற ஒருவித நுண்ணிய கதிர்கள் இந்த ஹோமத்தின் வாயிலாக எழுகின்றன. இது நாம் யாருக்காக இந்த ஹோமத்தைச் செய்கிறோமோ, யார் இந்த ஹோமத்தின் எஜமானோ அவனைச் சென்று இக்கதிர்கள் தாக்க, மூளையில் உள்ள நுண்ணிய அணுக்கள் சற்று துடிப்பை சீரிய முறையில் அடைந்து எண்ணற்ற நுணுக்கங்களைக் கற்றுத் தேறுகின்றன. எனவே விபத்துக் களிலிருந்து தப்பும் வழியை அனிச்சை யாகவே அறிந்து செயல்பட, பாதுகாப்பு பலமாகி நிற்க நோய்கள் எளிதில் தாக்காது. தாக்கிய சிறுபீடைகள் திரேகத்தை வாட்டாது விலகிப் போகின்றன என்கிறார் சித்தர்.
தந்வந்த்ரி ஹோமம்:
“ஆயுளை நீடித்து அருளைக்கூட்டும்
பாரு ஆவலை யணைபோட்டு
உண்டியை சுருக்கி நாட்டத்தை
யடைக்குமிப் பூசை தமையாற்று
வார் வாத பித்த சுரத்திருந்து விடு
படவார் திண்ணமே”
என்கிறது சிவவாக்கியர் பாடல். ஒரு மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் யாகம் இது. அதுமட்டுமல்லாமல் இறைவனின் அனுக்கிரகத்தை, அருளைக் கூட்டித் தரும். மனிதனின் மனதைக் கட்டுக்குள் அடக்கி, ஆசைக்கு அணை போடும் ஹோமம் இது. அதிகமாக உண்ணாது உடலுக்கு ஏற்ற தேவையான உணவை மட்டும் உண்ண வைக்கும் அதீத பூசை இது. முறையாக இப்பூசை புரிவார்க்கு மூளைக் கோளாறு, மூளை நரம்பினால் ஏற்படும் கோளாறு போன்ற கபால பீடை விலகும். வாத சம்பந்தப்பட்ட பீடை அகலும் என்ற பொருள்பட நிற்கும் செய்யுள் இது.
சண்டி ஹோமம்:
“மேன்மைகள் பெற்றே மேலோனாய் 
நிற்கலாங் கண்டீர் -- இந்திர சந்திரா
யனுமடங்க கண்டோமே; கலை
யடு ஞான விருத்தியமடங்க விதுவே
வித்தாமென கொங்கணயாமுஞ் சத்தியஞ்
செய்வோமே”
கொங்கண சித்தரின் இப்பாடல் பொருள் புதைந்தது. ஒரு மனிதன் மிக உயர்ந்த நிலை அடையவும். கீர்த்தி மிகுந்து பெறவும், பெரிய பெரிய பதவிகளை எட்டவும் இந்த சண்டி ஹோமம் செய்யவேணும். அசுவமேத யாகத்திற்கு இணை இது என்பர் சித்தர். இந்திரன், சந்திரன், பிரமன் உள்ளிட்ட தேவர்களின் அருள் சேரும் என்றும், ஞானம், கல்வி, தேர்ச்சி கிடைக்கும் என்றும் பொருள் கொண்ட இந்தப் பாடலினால், இந்த ஹோமத்தின் மேன்மையை அறியலாம்.
கிருத்திய பரித்திரான ஹோமம்:
இதை யக்ஞமாகவும், யாகமாகவும் செய்யலாம். ஏவல், பில்லி, சூனியம், வசியம், மோனம், தம்பனம் போன்ற கொடிய தாக்கத்திலிருந்து விடுபட இந்த ஹோமம் வழிவகுக்கின்றது. இதனை அத்திரி முனிவர் சுகருக்கு உணர்த்துவதான பாடலிது.
“சுகனே யுமக்கோதுதுங் கேளீர்
ஏவலுஞ் சூனிய வாதமொடு
வசிய வித்தை தம்மாலவதி யுறுவோர்
தாமே தக்க உபாசனா தேவதை நிறுத்தி
க்ருத்திய பரிதராந பூசைபுரிய விமோசன
மாம் பித்தமொடு பெரும் பீடை சரியாக
விரயமே விலகி தோலால் கொண்ட தொழு
நோயுமகல விமோசனமான வாழ்வு வாழலாமே”
-என்ற பாடல் நமக்கு இன்பமயமான வாழ்வு வாழும் வழியை சாற்றுகின்றது.
“கொண்டதோர் துருக்கை கணபதி காய்த்ரி
குபேரபுரி நாத திலமங்கள சமசுகார
நவநாயக புந்நியகவச்சந சுதர்சந
சந்தான கோ பாலக ருத்திரவஸ்து
வித்திய விசுவசாந்தி வ்ரச வெந ஓராயிரத்
தட்ட ஹோமமிருக்க தக்க மகாவை தகவே
வைத்தாற்ற இயலாதேது இப் புவியிலியம்பு”
-என்கிறார் பரவாசுதேவ பாதரெனுஞ் சித்தர் இவரை பொய்யாமொழி என்பர். ஹோமத்தின் சிற்சில பெயர்களைக் குறித்து அதன் பயனையும் விளக்குகின்றார். உண்மையில் ஹோமப் பூசை யினால் பலன் உண்டா என்பவருக்கு ஒரு வரி.
டிசம்பர் 3, 1984 அன்று மத்தியப் பிரதேசம் போபால் என்ற ஊரில் நடந்த விஷ வாயு தாக்கத்தினால் எண்ணற்ற மாந்தர் உயிர் இழந்ததும், கூண், குருடு, செவிடு என உறுப்புக்களை இழந்து வாடியதும் உலகம் அறிந்த உண்மை. யூனியன் கார்பைடு என்ற ஒரு அந்நிய முதலீட்டாளரின் ஆலையில் ஏற்பட்ட விஷ வாயுக் கழிவு பற்பல மக்களின் உயிரை பறித்தது.
பத்து கி.மீ. தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் பாதிக்கப்பட இந்த ஆலையின் மிக அருகாமையில், சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்குள் உள்ள திரு. சோகன் லால், எஸ். குஷ்வாஹா மற்றும் எம்.எல். ரத்தோர் என்பவரின் குடும்பம் மட்டும் தப்பிப் பிழைத்தது. எப்படி? அன்று அவர்கள் அக்கினி ஹோத்திரம் மற்றும் மகா சுதர்சன யாகம் செய்து கொண்டிருந்தனர். மே மாதம் 4ந் தேதி 1985ம் தேதியிட்ட The Hindu நாளிதழில், “Vedic Way to beat pollution”
என்ற தலைப்பில் இச்செய்தி வெளிவந்தமை காண்க.
ஆக ஹோமம் என்பது மக்களின் மேன்மைக் காகவும் முன்னேற்றத்திற்கான காரணத்திற்காகவும் நமது சித்தர்கள் சொல்லிப் போந்தனர் என்பது உண்மை .......

No comments:

Post a Comment