Tuesday, May 12, 2015

பஞ்ச பூதங்களில் முக்கியமான ஒன்றான மண் சக்தி மூலம் இயங்கும் உறுப்புகளில் முக்கியமானவை

பஞ்ச பூதங்களில் முக்கியமான ஒன்றான மண் சக்தி மூலம் இயங்கும் உறுப்புகளில் முக்கியமானவை இரைப்பை, மன்ணீரல், உதடு போன்றவைகளாகும். மண் சக்தியை அதிகம் அளிக்கக்கூடிய சுவை இணிப்பு. இணிப்பு சுவையை சுவைப்பதன் மூலம் மேற்கண்ட உறுப்புகள் திறம்பட வேலை செய்து அதன் மூலம், நாம் சாப்பிட்ட உணவை நன்கு செரிமானம் செய்து உணவில் உள்ள சத்துப் பொருட்களை நல்ல சத்துக்களாக பிரித்து சிறுகுடல் மூலமாக இரத்தத்தில் கலக்கச்செய்கிறது. இப்படி நல்ல சத்துப்பொருட்கள் இரத்தம் மூலம் உடல் முழுவதும் உள்ள உறுப்புகளை சென்றடைவதால் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் நன்கு வேலை செய்ய ஏதுவாக இருக்கும். எனவேதான் இணிப்பு சுவை எல்லாவற்றையும்விட உயர்வாக கருதப்படுகிறது. அதனால்தான் எல்லா இடங்களிலும் எல்லா வேளைகளிலும் இணிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இணிப்பு சுவைதான் சிறந்த மருந்து. எவ்வாறு என்பதற்கு பின் வரும் நாட்களில் விரிவாகப்பார்க்கலாம். நாம் உண்ட உணவு நன்கு செரிமானமாக இரைப்பை நன்கு வேலை செய்வதனால் அவை இயங்குவதற்கு காரணமான மண் சக்தி விரைவில் தீர்ந்து போவதால் செரிமான வேலை சரியாக நடக்காமல் போவதால் உணவில் உட்கொண்ட சத்துப்பொருட்கள் உடல் உறுப்புகளுக்கு சரியானபடி சென்றடையாத காரணத்தால் நாம் பல வித நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அதனால்தான் நம் முண்னோர்கள் உணவு பரிமாறும்போது முதலில் இணிப்பு பச்சடி போன்றவற்றை சாப்பிட வைத்து செரிமான உறுப்பான இரைப்பையை நன்கு இயங்க வைத்து பின் மற்ற உணவு வகைகளை சாப்பிட வைத்து கடைசியாக மீண்டும் இணிப்பு வைத்து உணவை நிறைவு செய்வார்கள். சில சமூகத்தினர் மற்றும் உணவகத்தினர் அசைவ உணவுடன் இணிப்பும் வைத்து உணவு பரிமாறுவதும் இதற்காகத்தான். நம் உடலில் மண் சக்தி குறையும்போதெல்லாம் நம் நாக்கு இணிப்பு சுவைக்கு ஏங்குவதை உணர்கிறோம். அலுவலகத்தில் சப்பாடு சாப்பிட்டபின் கடலைமிட்டாய் அல்லது பழம் போன்றவைகளை சாப்பிடுவதும் இதன் காரணமாகத்தான். பஞ்ச பூதங்களின் சக்திகளில் எந்த சக்தி குறைந்தாலும் நம் நாக்கு மூலமாக தேவையான சுவையை கேட்டுப்பெறும் . இணிப்பு சுவையை சுவைப்பதன் மூலம் மண்சக்தி ரீ சார்ச் செய்யப்படுவதால் மண் சக்தி மூலம் இயங்கும் உறுப்புகள் சுலபமாக வேலை செய்து உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்களை உடல் முழுவதும் விநியோகம் செய்து உடலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதுபோல கவலை என்கிற உணர்ச்சி மொத்த மண் சக்தியையும் நொடிப்பொழுதில் காலி செய்துவிடும். அதனால்தான் கவலையாக இருப்பவர்களுக்கு பசி எடுக்காது, பசி இல்லாததால் சாப்பிடமாட்டார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள் இணிப்பு சுவையை சுவைத்தால் உடனே பசியை தூண்டும் பிறகு நன்றாக சாப்பிடுவார்கள். முன்பு கூறியதுபோல் இணிப்பு சாப்பிட தயங்குபவர்கள் சுவையை மட்டும் ருசித்து பின் கீழேதுப்பிவிடலாம், இதன் மூலம் இணிப்பு சுவை மூலம் இயங்கும் உறுப்புகளை நன்கு ரீ சார்ச் செய்து நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம். மீண்டும் சந்திப்போம்

No comments:

Post a Comment