Wednesday, December 9, 2015

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?
துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம்
என்ன?
சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம்
நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும்,
மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான்.
பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால்
அவர் இறந்து விட்டார் என்ற
முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான
காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க
சிலர் கண்டுபிடித்தது தான் பறை.
அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள்
இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. மேல
படிங்க.
பறையோசை என சொல்லப்படும்,
பறையிலிருந்து வரும்
ஓசைக்கு அசைவு கொடுக்காத
மனிதர்களே கிடையாதாம். அதிலிருந்து வரும்
சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள்
அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித
வைப்ரேஷனைக் கொடுக்குமாம்.
யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல்
அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர்
உயிர் இறந்து விட்டார் என்ற
முடிவிற்க்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள்.
இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும்
ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்..

No comments:

Post a Comment