Thursday, June 30, 2016

குருமார்கள் பூஜையில் அப்படி என்ன சொல்கிறார்கள்..?

குருமார்கள் பூஜையில் அப்படி என்ன சொல்கிறார்கள்..?
முக்கியமாக பொருள் தெரியாமல் தவறாக விமர்சனம் செய்யும் அறிவாளிகளும் இதை படிக்கலாம்..
பஸ்மதாரணம்:
விபூதி சிவ சின்னங்களுள் ஒன்று. சைவர்கள் எந்நேரமும் விபூதி அணிந்திருத்தல் அவசியம். “ஆளடையாளத்திற்காகத் திருநீறு இட்டுக்கொள்என உபநிடதவாக்கியம் கூறுகிறது. நாம் எப்போதும் சிவ சிந்தனையிலிருந்து நீங்காதிருப்தற்கு விபூதி உதவுகின்றது. “வாழ்க்கை நிலையற்றது. நாம் என்றோ ஒரு நாள் சாபராகி விடுவோம்: என்ற எண்ணம் எங்கள் மனத்தில் இருப்பதற்கும் ஒருவகையில் உதவுகின்றது இந்தத் திருநீறு. இந்த எண்ணம் இருக்குமானால் நாம் தீயவற்றை நீக்கி நல்லவற்றைச் செய்ய முயற்சிப்போமல்லவ?
விபூதி பசுஞ் சாணத்தினை நீறாக்குவதால் பெறப்படுகின்றது. பசு சைவர்களின் போற்றுதலுக்குரியது. எல்லாத் தெய்வாம்சங்களும் பசுவில் இருப்பதால் கோமாதா என்றும், காமதேனு என்றும் போற்றி வணங்குகிறோம். அதன் சாணமே நீறாகி வருவதால் அதற்கு ஒரு தனித் தன்மை உண்டு. பசுஞ் சாணம் நல்ல ஒரு தொற்று நீக்கி என்றும் அதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்றும் மருத்துவ ரீதியிலும் நிரூபிக்கப் பெற்றுள்ளது. விபூதியிலும் அத்தகைய சிறப்பம்சங்கள் உண்டு. உடலில் உள்ள தேவையற்ற நீத்தன்மையை உறுஞ்சும் தன்மையும் விபூதிக்குண்டு. இவ்வாறு பல சிறப்பம்சங்கள் உள்ள விபூதியை நாம் ஒரு நற்கருமம் தொடங்குமுன் தரித்துக் கொள்வது அவசியமல்லவா? நெற்றியில் திருநீறு இன்றிச் செய்யும் எக்காரியமும் பலனளிக்காது. அதனால் எந்தக் கிரியையும் ஆரம்பிக்கும் போது விபூதி தரித்தல் அவசியம். அதுவும் மந்திர சகிதமாக தரிக்கும்போது இன்னும் சிறப்பல்லவா? அவ்வேளையில் சொல்லப்பெறும் சுலோகம்:
ஸ்ரீ கரம் பவித்திரம் ரோக தோஷ நிவாரணம்
லோக வஸ்யகரம் புண்ணியம் பஸ்மம் த்ரைலோக்ய சாதனம்
பவித்ரதாரணம் (தர்பை அணிதல்):
விபூதி தரித்து நம்மை ஈடுபடுத்தி, சிவசிந்தனையில் நம்மை ஆயத்தம் செய்து கொண்டோம். இனி அந்தக் காரியத்தில் ஈடுபடுவதற்கு நம்மைத் தயார்செய்ய வேண்டுமல்லவா? அதற்காக, தர்ப்பைப் புல்லினால் ஆன பவித்திரம் என்னும் ஒன்றை நமது மோதிர விரலில் அணிந்து கொள்கின்றோம். தற்னை புனிதமானது. நமது சமயக் கிரியைகள் யாவற்றிலும் அது முக்கிய இடம் பெறுகின்றது.
சூழலில் இருக்கும் மாசுக்களை நீக்கித் தூய்ம செய்வதுடன் மந்திர ஒலிகளைக் கிரகித்துச் சேகரித்துப் படிப்படியாக் வெளிவிடுவதில் வல்லது. ஒரு கும்பத்தை உருவாக்கும்Bஓது கும்பத்தினுள்ளேயும் வெளியேயுமாக இரு கூர்ச்சங்களும் ஒரு பவித்திரமும் தர்ப்பையால் செய்யப்பட்டு அங்கு போடப்படுகின்றன. தெய்வ சக்தியைக் கும்பத்தில் தேக்கிவைக்க அவை உதவுகின்றன. அதேபோலக் கிரியைகளில் ஈடுபடும் நாம் நமக்கு மனத்தூய்மை, மனத்தெளிவு, மன ஒருமைப்பாடு என்பனவை ஏற்பட்டுக் கிரியைகளில் மனமொன்றி நிற்பதற்காகப் பவித்திரம் அணியப் பெறுகின்றது. அதிக சக்திச் செறிவும் சிறப்பான அதிர்வுகளும் தர்ப்பையில் இருப்பதாக விஞ்ஞான ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
நமது மோதிரவிரல் மிகச் சிறப்பான ஓரிடம். நமது உடலில் சில இடங்கள் நரம்புகளின் சந்திப்புகளாகவும், பல உணர்வுகளைத் தூண்டல் செய்யக்கூடிய இயல்புடையவைகளாகவும் உள்ளன. இந்த இடங்களில் அதற்குரிய ஊசிகளை முறைப்படி ஏற்றுவதன் மூலம் உடல் நோய்களை நீக்கி ஆரோக்கியம் ஏற்படுத்தும் சீன வைத்திய முறைகயாகியஅக்யூபன்சர்முறையை இப்போது பலரும் அறிவர். இதனை முன்னரே அறிந்திருந்த நம் முன்னோகள் இத்தகைய இடங்களில் துளையிட்டு தங்கம், வெள்ளி முதலிய உலோகங்களினால் ஆன நகைகளை அணிந்தும், பலன் பெற்று இருக்கின்றனர். செடில் காவடியும், இத்தகைய ஒன்றே. கழுத்திலும், மணிக்கட்டிலும் நகைகளை அணிவதன் மூலம் இத்தகைய நற்பலன்களைப் பெறமுடியும் என்பதை விஞ்ஞான ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
மோதிர விரலின் அடிப்பகுதி இத்தகைய சிறப்புப் பொருந்திய ஒரு இடமாகவும் தர்ப்பை நாம் முன்னரே பார்த்தபடி நல்ல உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் இருப்பதனால் சங்கல்பம் செய்வதன் ஓரங்கமாகப்ப் பவித்திரம் அணிதல் நடைபெறுகின்றது. இந்நேரத்தில் தர்பையினால் ஆன ஆசனத்தில் இருக்கும்படியும் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான வசதி குறைவுகள் காரணமாக பாவனையாக இரு தர்ப்பைகளைக் காலின் கீழ் போட்டுவிட்டு அமரும்படி கேட்கப்பெற்றுகிறார்க. அதேபோலக் கைவிரலில் பவித்திரம் அணிந்தபின் மலர்களுடன் சில ர்கர்ப்பைகளை உள்ளங்கைகளுக்குள்ளே இட்டுக்கொண்டுதான் சங்கல்பம் ஆரம்பமாகின்றது. தர்ப்பை அணியும் போது சொல்லப் பெறும் மந்திரம்:
ததேவ லக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்த்ர பலம் ததேவ
வித்யாபலம் தைவபலம் ததேவ கஊரீபதே தேங்க்ரீ யுகம் ஸ்மரராமி
கௌரீ பதியாகிய சிவபிரானே உனது பாதங்களிரண்டையும் நினைக்கின்றேன். அதனால் (இச்செயல் தொடங்கும் இந்த நேரத்திற்குரிய) நாள், லக்னம் என்பன சுலபமானவையாகவும் தாரை, சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலும் சுகம் செய்வனவாகவும் கல்வியறிவினாலும் தெய்வத்தின் துணையினாலும் அவை சிறந்து விளங்குகின்றன.
ப்ராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு):
யோகமார்க்கத்தில் ஓரம்சம் பிராணாயாமம். யோகம் என்பது உடலையும் மனதையும் நமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒருமுகப்படுத்தும் மார்க்கம். அதற்குதவும் சுவாசக் கட்டுப்பாட்டுப் பயிற்சியே பிராணாயாமம். உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் எமக்கு; அதுவும் இந்த இயந்திரமான இன்றைய வாழ்க்கையில் ஒரே நேரத்தில் எததனையோ பிரச்சினைகள் இருக்கும். அவை யாவும் நமது மனத்தைக் குடைந்து கொண்டிருக்கும். அலைபாயும் மனத்தினால் நாம் இறைவனை வழிபடுதல் இயலாது.
மனம் இறைவன் மீது லயித்து நமது சிந்தனை ஒருங்கு குவிக்கபடும் போதுதான் பிரார்த்தனைகள் பலனளிக்கும். அதற்கு வழிவகுப்பதே பிராணாயாமம். புறச்சிந்தனைகளை ஒதுக்கி மனத்தை அகவயப்படுத்தி இறைநினைவைக் கிளரவைத்து நாம் இப்போது மற்றெல்லாவற்றையும் மறந்து இக்கிரியைஅயில் ஒன்றுபடப் போகிறோம் என்ற உணர்வோடு இந்த சுவாசப் பயிற்சியில் ஈடுபடுகிறோம். இப்போது சாதாரணமாக நமக்காகக் கிரியைகளைச் செய்யப் போகின்ற அர்ச்ச்கரே பிராணாயாமத்தில் ஈடுபடுவது வழக்கம்.
ஓம்பூ: ஓம் புவ: ஓம் சுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் சத்யம்.
ஓம் த்த்சவிதுர்வரேண்யம். பர்க்கோ தேவஸ்ய தீமஹீ. தியோ யோ :: ப்ரசோததயாத்.
ஒமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரம்ம பூர்புவஸ்வரோம்.
சுவாசக் கட்டுப்பாடாகிய பிராணாயாமம் பிரணவ மந்திரமாகிய ஓங்காரத்தில் தொடங்கி பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் எனப்படும் ஏழுலகங்களையும் கூறி அதன் பின் காயத்திரி மந்திரத்தைச் சொல்லி நிறைவு பெறுகிறது.
காயத்திரி மந்திரத்தின் பொருள்; எந்த ஒளிக்கடவுள் நமது புத்தியைத் தூண்டுகிறாரோ அவரை மனதில் தியானிப்போமாக.
விநாயகரைத் துதித்தல்
எக்காரியமும் விநாயகர் வழிபாட்டோடு தொடங்குவது நமது பாரம்பரிய மரபுமுறைப்படி அமைவதாகும்.இது விக்கினங்கள் இன்றி நமது கருமம் நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு நெற்றியிலே குட்டுகின்றோம். ஏன் குட்டி வணங்க வேண்டும் என்பதற்குக் கயமுகாசுரன் கதையும், அகத்தியர் கதையும் காரண விளக்கங்களைத் தருகின்றன. என்றாலும் முன்னர் குறிப்பிட்டவாறு நமது உடலில் சில இடங்களில் சில முக்கிய இயல்புகள் இருக்கின்றன.
அவ்வையில் நெற்றியின் இரு மர்ங்கிலும் குட்டும் போது அமிர்த கலசங்கள் கலங்கி உடலை நனைக்கின்றன.என்று ஞானியர் கூறுவர். இவ்வாறான செயல்பாடுகளில் நமது உடலின் கருவிகள் (அங்கங்கள்) ஈடுபட; வாய் மந்திரங்களையோ திருமுறைகளையோ கூற மனம் இறைவனின் திருவுருவையும் அவரது கருணைச் செயல்களையு நினைக்க அவ்வேளையில் நமது ஆன்ம ஈடேற்றத்தின் முதல் நிலையாகிய ஒருமைப்பாடு சித்திக்கத் தொடங்குகிறது.
திரிகரணங்களாலும் அதாவது; மனம், வாக்கு, காயம் (நினைவு,சொல்,செயல்) இறைவனோடு ஒன்றிநிற்றல் எனப்படும் நிலை இதுவே. இவ்வேளயில் சொல்லப்பெறும் விநாயகர் வணக்க சுலோகமும் அதனைத் தொடர்ந்து சொல்லப் பெறும் சில மங்கள சுலோகங்களும் இவை:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாத்தயே
வெண்மநிற வஸதிரம் தரித்தவரும், எங்கும் நிறைந்தவரும், நான்கு கரங்களை உடையவரும், மலர்ந்த முகத்தை உடையவருமாகிய விநாயகரை எல்லா இடையூறுகளும் நீங்குதற் பொருட்டுத் தியானிப்போமாக.
மானசம் வாசிகம் பாபம் கர்மணா சமுபார்ஜிதம்
ஸ்ரீ சிவஸ்மரணேனைவ வ்யபோஹதி ஸம்ஸயஹ
மனதாலும், வாக்காலும், செயல்களாலும் நாம் செய்துகொண்ட பாவங்கள் சிவனை நினைப்பதால் ஐயமின்றி அழிந்துவிடுகின்றன.
திதிஸ் சிவஸ் ததாவாரோ நக்ஷ்த்ரம் சிவ ஏவச
யோகஸ்ச்ச கரணம் சைவ சர்வம் சிவமயம் ஜகத்
திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் என்னும் பஞ்சாங்க உறுப்புக்களாகிய இவ்வுலகிலுள்ள காலவரையறை எல்லாமே சிவமயமாக, மங்கலமாக இருக்கட்டும். என்பனவாம்.


No comments:

Post a Comment