Monday, October 1, 2012
அம்பரீசனை காத்த பெருமாளின் சுதர்சன சக்கரம்
சகல செல்வத்தை எல்லாம் பெற்று தரும் ஏகாதசி விரதத்தை அம்பரீசன் மன்னன் பல_ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். இவன் ஏகாதசியில் விரதமிருந்து மறு நாள் துவாதசியில் நல்லநேரத்தில் பிரசாதம் உண்டு விரதத்தை முடிப்பார் .
இவரது நூறாவது விரதநாளில் சிறப்பான ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தது. நாட்டுமக்கள் அனைவரும் மிகசந்தோஷமாக இருந்தனர். இருப்பினும் தேவலோகத்திலோ அனைவரும் வருத்தமாக இருந்தனர். அம்பரீசன் நூறாவது விரதத்தை முடித்துவிட்டால் தேவலோக பதவிகூட கிடைத்துவிடும்.
மானிடனுக்கு இந்த தேவலோக பதவி கிடைத்துவிட்டால் தேவர்களின் மரியாதை குறைந்துவிடும் என்று பயந்தனர். எனவே தேவர்கள் துர்வாச முனிவரின் உதவியை நாடினர் . துர்வாச முனிவரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்து விட்டு, மன்னனின் விரதத்தைதடுக்க பூமிக்குவந்தார். அவர் வருவதற்க்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தார் . அவர் ஏகாதசி விரதத்தை முடித்திருந்தாலும் துவாதசிநேரம் முடிவதற்குள் அவர் உணவை அருந்தியிருக்கவேண்டும். அப்போதுதான் ஏகாதசியின் முழுப்பயனையும் பெறலாம் .
துவாதசி நேரம் முடிந்துவிட்டால் பயனில்லை. துவாதசி ஆரம்பிக்க_மன்னன் உணவு உண்ண தயாரானார் . அதற்க்குள் துர்வாசர் வந்துவிட்டார். தன்விரதத்தை தடுக்கத்தான் துர்வாசர் வந்துள்ளார் என்பது மன்னனுக்குதெரியாது.
முனிவரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மன்னன்,"" என்னுடன் தாங்களும் உணவருந்தினால், எனக்கு மிகுந்தசந்தோஷம் உண்டாகும் 'என தெரிவித்தார் . முனிவரும் சம்மதித்தார்,
நதியில் நீராடி விட்டு வருகிறேன். அதன் பின் உணவருந்தலாம் என கூறி சென்றார். முனிவரின் திட்டமோ வேறு , தான் தாமதமாக நீராடி விட்டு வந்தால் அதற்குள் துவாதசிநேரம் முடிந்துவிடும். மன்னன் நம்மை எதிர்பார்த்து காத்திருந்தால் அவனது விரதம் தடைபடும் என்பதுதான். துவாதசி முடிவதற்கு சில மணி_நேரங்களே இருந்தன . துர்வாச முனிவர் வருவதற்குள் சாப்பிட்டுவிட்டால் அவரது கோபத்துக்கு ஆளாக நேரிடும். இன்னும் ஒரு சில நிமிடங்களே இருந்தன .
வேதபண்டிதர்களிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தினார் . உடனே தலைமை பண்டிதர, உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று_முறை குடித்தால் விரதம் முடிந்துவிடும் ஏகாதசியின் முழு பயனும் கிடைத்து விடும்,' என தெரிவித்தார். அதை போன்று பெருமாளை நினைத்து தீர்த்தத்தை மூன்று முறை குடித்து தன்விரதத்தை பூர்த்தி செய்துவிட்டு, முனிவருடன் சேர்ந்து சாப்பிட காத்திருந்தார் .
இதனை தனது ஞான திருஷ்டியினால் அறிந்த துர்வாச முனிவர் மிகுந்த கோபம் கொண்டார் . உடனே ஒரு பூதத்தை அம்பரீசனின் மீது ஏவி அவரை கொல்லுமாறு ஆணையிட்டார். இதை கண்டு பயந்த அம்பரீசன் பரிமளரங்கநாதரிடம் சென்று, பெருமாளே! உனக்காக ஏகாதசிவிரதம் இருக்ககூடாது என்பதற்க்காக ஏவப்பட்டுள்ள பூதத்திடமிருந்து என்னை காப்பாற்று என பெருமாளின் பாதத்தில் சரணடைந்தார்.
தனது பக்த்தனை கொள்ள வந்த பூதத்தை கண்ட பெருமாள் கோபம் அடைந்தார் தனது சுதர்சன சக்கரத்தால் அந்த பூதத்தை அழித்தார் .ஆனால் சுதர்சன சக்கரமோ ஏவிவிட்ட துர்வாசரையும் தாக்கவருகிறது. சிவன் பிரம்மா, ஆகியோரும் தங்களால் உதவ_இயலாது என்று கூறுகின்றனர். திருமாலிடமே துர்வாசர் தஞ்சம் அடைய அவரும் கை விரிக்கிறார்.பிறகு அம்பரீசனிடமே சென்று மன்னிப்புகேட்க அவரும் திருமாலை சுதர்சன சக்கரத்தை திரும்பபெற வேண்டி அவரை காப்பாற்றுகிறார். துர்வாசர் கர்வம் அடக்கியது .
நூறு ஏகாதசி விரதங்கள் இருந்து மன்னனிடம், வேண்டியதை கேள்' என பெருமாள் கேட்டார் . அதற்கு மன்னன், தாங்கள் இத்தலத்திலேயே வீற்றிருந்து பக்தர்களின் குறை கேட்டு அருள் புரிய வேண்டும்,'என வேண்டினார் . பெருமாளும் மன்னன் விருப்பப்படி இத்தலத்தில் அருள் புரிந்து வருகிறார். இத்தளம் மயிலாடுதுறையில் இருக்கிறது இந்த திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருத்தலம். சென்னையி லிருந்து சுமார் 260 km தொலைவில்_அமைந்துள்ளது
மகாலக்ஷ்மி கடாட்சம் பெற
ஒரு ஊரில் தர்மவாணன் என்றொரு பெரும் செல்வந்தர் இருந்தார். பணத்தை என்னுவதர்க்கே காலம் போதாது என்று கூறும் அளவிற்கு செல்வம் கொட்டியது, பணத்தை மூட்டை மூட்டையாக கட்டிவைத்து எட்டி நின்று பார்த்தார் ஏனென்றால் கிட்டேசென்றால் தன் மூச்சு காற்று பணத்தில் பட்டு பணம் தேய்ந்துவிடும் என்று நினைக்கும் அளவிற்கு மகா கருமி. ஆகமொத்தத்தில் தர்மவாணன் கருமிவாணன்கவே இருந்தான் இவனிடம் இருந்த செல்வம்
யாருக்கும் உதவாத வெறும் காகிதமாகவே இருந்தது , ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும அவன் ஒரு பணம் படைத்த பரதேசி.
அவனிடமோ பணம் கொட்டோ கொட்டேன்று கொட்டியது , இருப்பினும் எத்தனை காலத்துக்குதான் "மகாலட்சுமி" ஒருவருக்கும் உதவாமல் ஓரிடத்திலேயே முடங்கி கிடப்பாள்!
தர்மவாணன் வேண்டுமானால் பணத்தை அனுபவிக்காமல் எட்டிநின்று வேடிக்கை பார்க்கலாம் ஆனால் அவன் மனைவி மக்கள் எத்தனை காலத்துக்குதான் பொறுமையாக வேடிக்கை பார்ப்பார்கள், ஒருநாள் அவனுக்கே தெரியாமல் பணத்தில் பதியை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டார்கள் .
அடுத்த ஒருசில மாதங்களிலேயே நாட்டில் பெரும் பஞ்சம் எனவே வியாபாரமும் படுத்துவிட்டது, அரசன் பஞ்சத்தை சமாளிக்க பெரும் செல்வந்தர்களின் வீட்டில் சோதனையிட்டு வரி விதித்து வாரி கொண்டான். மொத்தத்தில் அவன் ஒரு ஏழை ஆனான்
ஏழ்மை அவனை வாட்டியது , ஆறுதல் கூறக்கூட ஆளில்லை துடித்தான் பலனில்லை! ஒரு நாள் தர்மவாணன் பசியுடன் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்தான் , அப்போது அவருக்கு எதிரே அவனது இல்லத்து புரோகிதரைக் கண்டான். தலைக்கனம் கர்வம் ஆகியவற்றை இயல்பிலேயே பெற்ற அவன் அன்றுதான் பணிந்தான் வணங்கினான் . ""ஐயா! எனது நிலையைஏன் எனக்கு இந்த நிலை '' என்று புலம்பினான் .
அந்த புரோகிதர் தர்மவாணனுக்கு ஆறுதல் சொன்னார். வணிகரே! உங்களுக்கு தெரியாததா? திருமகள் எப்போதுமே ஒரே இடத்தில் நிலையாக தங்குவதில்லை. "இது ஏன்?' என அந்த கண்ணபிரானே லட்சுமியிடம் கேட்டதுண்டு.
அதற்கு அவள், "எனக்கு தர்மம் செய்யாத கருமிகள் , மிருகங்களை வதைத்து உண்பவர்கள், சூதாடிகள், பரத்தை வீட்டுக்குப் போகிறவர்கள், குடிகாரர்களை கண்டால் எனக்கு பிடிக்காது .
அதிகமாக கோபபடுபவர்கள் , பொய் சொல்பவர்கள், பொறாமைக்காரர்கள் , தற்புகழ்ச்சி செய்து கொள்பவர்கள், தன்னிடம் பணம் உள்ளது என கர்வபடுகிறவர்கள், ஏழைகளை கண்டு இரக்கப்படாதவர்கள் போன்றோருக்கு எனது அருள் கிடைக்காது; கிடைத்திருந்தாலும் அது நிலைக்காது என்றாள்.
இதை கேட்டு மகிழ்ந்த கண்ணன், "இந்த அவ நடத்தைகள் இல்லாதவர்களின் வீட்டில் மகாலக்ஷ்மி கடாட்சம் எப்போதுமே இருக்கும்' என்பதை உலகுக்கு உணர்த்தினான்'' என்று கூறினார் புரோகிதர்.
இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த தர்மவாணன் மீண்டும் புது பொலிவுடன் தனது தொழிலை மீண்டும் தொடங்கினான் , ஓரளவு வருமானம் கிடைத்தது அதில் குறிப்பிட்ட அளவை ஏழைகளுக்கு ஒதுக்கி அவர்களுக்கு உதவினான் , அவனது சேவை உள்ளமும் , தலை வணங்கும் குணமும் மகாலட்சிமியின் அருளை பெற்று தந்தது.
இந்நிலையில் தர்மவாணனின் குணத்தை கேள்விப்பட்டு அவனது மனைவியும், மகனும் அவனிடமே திரும்பிவந்தனர் , நாட்டில் பஞ்சம் ஒளிந்து செல்வம் பெருகியதால் அரசன் தான் பிடுங்கிய பணத்தில் குறிப்பிட்ட அளவை திருப்பி கொடுத்தான் , தர்மவாணன் மீண்டும் பெரும் செல்வந்தர் ஆனான் , பெயருக்கு ஏற்றார் போல் தர்மவாணனாகவே வாழ்ந்தான் .
பொதுவாக் துளஸியோ, வில்வமோ எந்த வீட்டில் உண்டோ அங்கே லட்சுமி வாசம் செய்வாள். கோலமிடப்பட்ட, காலை-மாலை வேளைகளில் தீபம் ஏற்றுகிற வழக்கமுடைய வீடுகளும் திருமகளுக்குப் பிடித்த திவ்ய தேசங்கள். பொறாமை, கோபம் இவற்றால் தீண்டப்படாத மனிதர்கள் மேல், திருமகளுக்கு அன்பு அதிகம். தெய்வங்களை தினந்தோறும் வழிபடுபவர்களின் வீட்டை அவள் தேடி வருவது சத்தியம். இவையெல்லாம் அந்த லட்சுமியே கூறியிருப்பவை.
ஆன்மீகவாதிகள் இதைத்தான் "லட்சுமி கடாட்சம்' என்று வர்ணிக்கிறார்கள். அந்தத் தாயின் திருவருள், குப்பையிலிருப்பவனை குபேரனாக ஆக்கும்; அவள் அகன்றுவிட்டால் மாளிகைகள் மண் மேடாகிவிடும்
கிரஹங்கள் தரும் துன்பங்களிலிருந்து விடுபட
ஆளுடைய பிள்ளையாரான திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் புண்ணியத் தலங்களை வழிபட்டபடி பயணம் சென்று கொண்டிருந்த நேரம்...
மதுரை மாநகரில் அப்போது கூன் பாண்டியனின் ஆட்சி. அவன் சமண மதத்தை தழுவியிருந்ததால் அங்கே சமணர்களின் அட்டகாசம் அளவு கடந்திருந்தது. "சைவத்தை ஒழித்துக் கட்டினால்தான் தங்களுடைய அதிகாரம் நிலைக்கும்' என்று கணக்குப் போட்டு அவர்கள் காய் நகர்த்திக் கொண்டிருந்தனர்.
ஆனால் மன்னனின் துணைவியாரான மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையும் சிவபெருமானிடம் நீங்காத பேரன்பு உடையவர்கள். "திருஞான சம்பந்தர் மதுரைக்கு ஒருமுறை வந்துவிட்டால் போதும்! சமண இருள் அகலும்; சைவ ஒளி துலங்கும்' என்று அவர்கள் எண்ணினார்கள். இதை சம்பந்தரிடம் தெரியப்படுத்த தூதுவர்களை அனுப்பினார்கள்.
சம்பந்தரும் மதுரைக்கு புறப்பட சம்மதித்தார். ஆனால் சமணர்களின் கொடுமைகளை ஏற்கனவே கண்டிருக்கும் திருநாவுக்கரசருக்கு, சம்பந்தர் அங்கே செல்வதில் விருப்பமில்லை. ""நீங்களோ வயதில் இளையவர்; சமணர்களோ சூழ்ச்சிகளே வடிவானவர்கள். போதாக்குறைக்கு நாளும், கோளும் கூட இப்போது சாதகமாக இல்லை'' என்று ஆளுடைய பிள்ளையாரிடம் அப்பர் பெருமானாகிய நாவுக்கரசர் மன்றாடினார்.
சம்பந்தர் அவரை சமாதானப்படுத்தி, ""நாளும், கோளும் நாயகனாகிய சிவபெருமானின் அடியார்களைத் துன்புறுத்தாது. நீங்கள் கவலைப்பட வேண்டாம். மதுரையம்பதியில் சைவக் கொடி பறக்க வைப்பேன்'' என்று உறுதியளித்து, "கோளறு திருப்பதிகம்' பாடினார்; சொன்னபடியே வென்று காட்டினார்.
கிரஹங்கள் தரும் துன்பங்களிலிருந்து விடுபட விரும்புகிறவர்கள் தினம்தோறும் இந்தப் பதிகத்தை, ஒருமுறையாவது பாராயணம் செய்வது அவசியம்.
பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளுக்கு இந்தப் பதிகத்தைப் போதித்து, தினசரி இதைப் படிக்கச் சொல்ல வேண்டும்.
அதீதமான காமம், லஞ்சம், ஊழல் போன்ற தீமைகள் மலிந்து இருள் சூழ்ந்திருக்கும் இன்றைய வாழ்வில், "கோளறு திருப்பதிகம்' என்னும் தீப்பந்தத்தை தங்களுடைய வாரிசுகளின் கையில் ஒப்படைப்பது பெற்றோர்களின் முக்கியக் கடமை. இந்தப் பதிகத்தைப் பாடுவோரை கிரஹங்கள் தாக்காது. இதை நாம் சொல்லவில்லை; ஞானசம்பந்தரே சொல்லியிருக்கிறார். பாக்கியம் இருப்பவர்கள் படித்துப் பயன் பெறலாம்.
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன் என்பது பற்றி புராணங்களில் ஒருகதை தெரிவிக்கபட்டுள்ளது . பெருமானுடன் போரிட்டு, அவரின் அருளை பெற்ற மதுகைடவர்கள் எனும் அரக்கர்கள் இரண்டுபேர் , தாம்பெற்ற வைகுண்ட சுகத்தை உலகில் இருக்கும் அனைவரும் பெறவேண்டும் என விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி அன்று திருவரங்க வடக்குவாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளியே வரும் போது தங்களை தரிசிப்பவர்களுக்கும் , தங்களை பின் தொடர்ந்து வருபவர்களுக்கும் அவர்கள் எத்தகைய பாவங்களை செய்திருந்தாலும் அவர்களுக்கு முக்தி தந்து அருள் புரிய வேண்டும் என கேட்டுகொண்டனர்.
பெருமான் அவர்களின் வேண்டு கோளை ஏற்றுகொண்டார். எனவே தான் " வைகுண்ட ஏகாதசி" அன்று சொர்க்கவாசல் திறக்கபட்டு சாமி பவனிவரும் நிகழ்ச்சி உருவானது
தேவி பாரதியின் தீர்ப்பு அனைவருக்கும் திருப்தியளித்தது.
ஆதசங்கரருக்கும் மண்டனமிஸ்ரருக்கும் இடையில், பதினாறு நாட்கள் வரை சாஸ்திரப் போட்டி நடைபெற்றது. நடுவர் அக மண்டனமிஸ்ரரின் மனைவி பாரதி இருந்தார்.
இதற்கிடையில் ஏதோ முக்கிய வேலையாக பாரதி எங்கோ செல்ல வேண்டியிருந்தது. பாரதி, அவர்களிருவரது கழுத்திலும் ஒவ்வொரு பூமாலையை அணிவித்துக் கூறினார். "நீங்கள் வாதத்தைத்
தொடருங்கள், நான் இல்லாத போது என் பணியை இந்தப் பூமாலைகள் செய்யும்," திரும்பி வந்த பிறகு தேவி பாரதி இருவரது பூமாலைகளையும் பார்த்து விட்டு, ஆதிசங்கரரின் வெற்றியையும் தனது கணவர் மண்டனமிஸ்ராது
தோல்வியையும் தீர்ப்பாக அறிவித்தார். மக்கள் வியப்பில் ஆழ்ந்து விட்டனர்.
அவர்களது ஆவலைத் தணிக்கும் வகையில் தேவி பாரதி கூறினார். "அறிஞர் ஒருவர் வாதத்தில் தோற்கத் தொடங்கினால் அவருக்கக் கோபம் வருகிறது. என் கணவர் சங்கரரிடம் பின்னடைவு அடைந்ததனால், தன்னைப் பலவீனமாகக் கருதத் தொடங்கினார். அதனால் அவர் கழுத்தில் உள்ள பூ மாலை சினத்தீயினால் வாடி விட்டது. ஆனால் ஆதிசங்கரர் கழுத்தில் உள்ள மாலையோ, முன் போலவே புதியதாக இருக்கிறது. அவை, சங்கரரின் வெற்றியை நிரூபிக்கின்றன."
தேவி பாரதியின் தீர்ப்பு அனைவருக்கும் திருப்தியளித்தது.
உங்களின் எந்தப் பிரச்சனைக்கும் சுந்தரகாண்டத்தில் தீர்வு உண்டு
ஸ்ரீ ராமாயண சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் நேரில் வந்துஅடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்நியாசத்தை பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சகல சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கி பேரருள் புரிகிறார் .இதானால் துளசிதாசர் ஸ்ரீ ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை பிரதட்சதனமாக வருவார் .அந்த பக்தர்களுடன் பக்தராக மாருதியும் எழுந்தருளிருப்பார் என்பது அவருக்குத் தெரியும் .
துன்பம் வருவது இன்பத்திற்கே
கஷ்டங்கள் வந்து மனம் குழம்பும் போது நாமும் கடவுளை நினைக்கிறோம் அப்போது நம்முடைய மனமும் கடவுள் என்னுடைய கோரிக்கைக்கு செவி சாயப்பாரா ? அவர் என்மீது அன்பு காட்டுவாரா என்னுடைய பக்தியை அவர் ஏற்றுகொள்வாரா ?'என்றெல்லாம் எண்ணி கவலைப்படுகிறோம்.
ஒரு சந்தர்ப்பத்தில் இதோ குழப்பமான மனநிலை அனுமனுக்கும் வந்தது .
பலவானும் ,பராக்கிரமசாளியும் , மிகுந்த தன்னம்பிக்கையும் கொண்ட ஆஞ்சநேயரே இலங்கையில் சீதையைத் தேடித் தேடி காணாமல் மனம் துவண்டு கிஷ்கிந்தை செல்வதைவிட அங்கேயே உயிரை விட்டு விடும் மனநிலைக்கு வந்து விடுகிறார் . பிறகு ஆலோசித்து ஒரு வேலை சீதாப்பிராட்டி உயிருடனிருந்து , அவர்களுக்கும் இதே மனநிலையில் இருந்தால், அதைத் தடுப்பதற்காகவாது நான் உயிருடன் இருந்தேயாக வேண்டும் என்று நினைத்து தன் முடிவை மாற்றிக் கொள்கிறார் .நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு தெய்வம் எப்படியாவது வழிகாட்டிவிடும் .சகல தெய்வங்களும் தன் கார்யம் கைகூட ஆசீர்வதிக்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு நாலாபுறமும் தேடினார் .அனுமனின் கண்களில் கடைசியில் அசோகவனம் தென்பட்டது.அன்னையைக் கண்டார். ஆனந்தம் கொண்டார் . ராமர் அனுப்பிய மோதிரத்தைப் பார்த்ததும் ,தேவிக்கு மகிழ்ச்சியும் ,மனநிறைவும் உண்டாகிறது .
"என்னுடைய ஸ்வாமி எப்படிருக்கிறார் ? அவரை என்னால் திரும்ப அடைய முடியுமா ?"
என்றெல்லாம் பலவாறு கேள்விகள் கேட்ட சீதையை அனுமன் சமாதானப்படுத்துகிறார் .
காத்திருந்தால் நிச்சயம் நல்ல காலம் பிறக்கும் .சோதனைகள் அதிகமாக ஆக வேதனைகள் தீரும் காலம் நெருங்கிவிட்டது என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.துன்பங்கள் அதிகமாகிக் கொண்டே போனால் இன்பங்களை அனுபவிக்கும் வேலை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மனம் குழப்பத்திலும் ,கஷ்டத்திலும் உள்ளவைகள் சுண்டரகாண்டத்திலுள்ள 12 ,13 , ஆவது ஸ்லோகங்களை படித்தால் நிச்சயம் மனம் அமைதி பெறுவார்கள் .
உங்களின் எந்தப் பிரச்சனைக்கும் சுந்தரகாண்டத்தில் தீர்வு உண்டு .ஆகவே நம்பிக்கையுடன் படியுங்கள்
பிறர் சொல்லைக் கேட்டு சுய புத்தியை இழக்காதே
ஒரு பணக்காரக் கணவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்ஒரு குழந்தைகள் பிறந்தன. மூத்தவள் குழந்தையைப் பெற்று விட்டதும் மரணம் அடைந்து விட இளையவள் மீது குடும்ப பாரம் விழுந்தது. தன் இரு மகன்களையும் இரு கண்கள் போலவே காத்து வந்தாள். அவர்கள் வளர்ந்து பள்ளிக்கு செல்லும்வரை இரண்டு குழந்தைகளின் மீதும் ஒரே மாதிரியாகவே அன்பு செலுத்தி வந்தாள்.
குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். பெரிய மனைவியின் மகன் நன்கு படித்து புத்திசாலியாக விளங்க இளையவனின் மகனோ சோம்பேறியாக திரிந்து படிக்காமல் இருந்தான். மூத்தவள் இறந்து விட்டதினால் அவன் மூலம் பிறந்த மகனிடம் தந்தைக்கு பாசம் அதிகம். தினமும் அவனை தனியே அழைத்து பேசிய பின்தான் தூங்குவார்.
ஒரு முறை பக்கத்து வீட்டுப் பெண்மணி அவளிடம் கேட்டாள், 'முட்டாள்தனமாக இருவரையும் ஒன்றாகப் பார்க்கிறாயே, பெரியவளின் மகன் நன்கு படித்து அறிவாளி ஆகி விட்டால் புத்திசாலியான அவன் குடும்பத்தைக் காப்பாற்றட்டும் என எண்ணி உன் புருஷனிடம் அத்தனை சொத்தையும் அவன் மீது எழுதி வைத்து விட்டால் என்ன செய்வாய்? நீ அவனுக்கு அடிமையாகி விடுவாயே. அவன் உன் மகனை துரத்தி விட்டால் என்ன ஆகும் ?; என்றெல்லாம் கூறி பயமுறுத்தினாள். மனதில் விஷம் இறங்க இளையவள் அன்று முதல் தன் மூத்தவளின் மகனை கொடுமைப்படுத்தத் துவங்கினாள். அந்த சிறுவன் பாவம் என்ன செய்வான்?.
அந்த ஊரில் ஒரு சன்யாசியான குரு தங்கி இருந்தார். எவருக்கேனும் பிரச்சனை என்றால் அவரிடம்தான் சென்று தீர்வு கேட்பார்கள். ஆகவே அந்த சிறுவனும் குருவிடம் சென்று அழுதான். குரு அவனுக்கு ஒரு உபாயம் சொன்னார். அதன்படி அன்று இரவு எப்போதும் போல 'இன்று எப்படி இருக்கிறாய்," என தந்தை கேட்க பேச்சு வாக்கில் மூத்தவன் மகன் கூறினான் ' இரண்டு தந்தைகள் உள்ள எனக்கு இந்த வீட்டில் எனக்கு பிரச்சனைதான். என்ன செய்வது?. இரண்டு தந்தைகளா?....என்னடா உளறுகிறாய் எனக் கேட்க மகன் கூறினான், ' நான் ஏன் அப்பா உளற வேண்டும்;? நான் உண்மையைத்தான் கூறுகிறேன்" எனக் கூறிவிட்டு உள்ளே சென்று விட்டான்.
அதைக் கேட்ட தந்தை துணுக்குற்றான். மேலும் என்ன கேட்பது? மனைவி மீது சந்தேகம் வந்தது. இரண்டாவது தந்தையா? யார் அவர்? மனைவி கள்ளத் தொடர்பு வைத்து உள்ளாளா? மகனிடம் அதை எப்படி நேரில் கேட்பது? இரண்டாவது மகனிடம் மெல்ல , இன்று போஸ்மேன் வந்தானா, இன்று அந்த நண்பர் வந்தாரா, அவன் வந்து எதுவும் தந்தானா என மறைமுகமாக யார் யார் வந்தனர் எனக் கேட்டான். அவன் தான் வீட்டில் இருந்தால்தானே தனக்கு யார் வருகிறார்கள் ,போகிறார்கள் எனத் தெரியும் என்று கூறிவிட்டான். ;இது தினமும் தொடர்ந்தது.
தினமும் எந்த விதத்திலாவது தனது மூத்த மகனிடமும் அவன் தன் மனைவியின் நடத்தைப் பற்றி கேள்வியை மாற்றி மாற்றிக் கேட்டாலும் மகன் தந்தது ஒரே பதில்தான். அதனால் வீட்டில் குழப்பம் ஏற்பட்டது. கணவன் மனைவிக்கு இடையே தகறாறு ஏற்பட, அதன் காரணத்தை தெரிந்து கொள்ள முடியாமல் போனவள் அந்த ஊரில் தங்கி இருந்த குருவிடமே சென்று அழுதாள்.
அவர் அவளுடைய குடுப்பத்தைப் பற்றி விஜாரிப்பது போல நடித்துவிட்டு உனக்கு ஒரு தோஷம் உள்ளது. உன்னுடைய இராசிப்படி உன்னுடைய மூத்தவளின் மகன் மனம் மகிழ்வோடு இருக்குமாறு இருந்தால்தான் அந்த தோஷம் விலகி உன் குடும்பத்தில் அமைதி ஏற்படும். இல்லை எனில் மூத்தவளின் ஆவி உன்னை சபித்துக் கொண்டே இருக்கும், உனக்கு அமைதி இருக்காது என்றார். அவளும் மறுநாள் தனது மூத்தவளின் மகனை அழைத்து வந்து அவன் தன் பின்ளை எனவும், அவனுக்கு எந்த விதமான கஷ்டமும் இன்றி பாதுகாப்பேன் எனவும் சத்தியம் செய்து கொடுத்து விட்டுச் சென்றாள்.
மறுநாள் முதல் மூத்தவளின் மகன் அவளால் எந்த துன்பத்தையும் அனுபவிக்கவில்லை. ஆகவே இரண்டொரு நாளில் மீண்டும் மகனிடம் வேறு மாதிரியாக அதே கேள்வியை தந்தைக் கேட்க மகன் எரிச்சல் அடைந்தது போல தன்னைக் காட்டிக் கொண்டு கூறினான் ' என்ன அப்பா, தினம் தினம் இதையே கேட்கிறீர்கள். நான்தான் கூறி விட்டேன் அல்லவா. இந்த வீட்டில் இரண்டு தந்தை உள்ளனர் என. என் அம்மாவின் கணவன் சாந்தமானவர்;. சித்தியின் கணவரோ கோபக்காரர். இருவருக்கும் இடையே நான் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுகிறேன்' எனக் கூற புத்தியில் அடித்தது போல உணர்ந்த தந்தையின் சந்தேகம் தீர்ந்தது. வீட்டில் அமைதி நிலவியது.
நீதி:- பிறர் சொல்லைக் கேட்டு சுய புத்தியை இழக்காதே. எதையும் நன்கு சிந்தித்தே முடிவு செய். துன்பம் வராது.
கீதையின் சாரம்
வாழ்க்கை நிச்சியமற்றது ஆகவே ஏதாவது நல்ல காரியங்களை செய் அதையும் அன்றே செய்து விடுவது நல்லது. தெய்வத்தின் துணையை நாடு ஆண்டவனை நினைத்து வழிபடு தியானம் செய் தியானத்தின் மூலமே ஆண்டவனை அடைய முடியும்.
நாட்களை வீணாக்க வேண்டாம் ஆசை - ஆகங்காரம் மனிதனை
அழிக்கவல்லவை இவைகளை ஒழிக்க வேண்டும். மனதில் சாந்தியும் அமைதியும் ஏற்படுத்திக் கொண்டால் மனித வாழ்க்கை சுகமாக அமையும்.உன்னுடைய மனதை என்னிடம் வை எனக்கு கைங்கர்யம் செய் .
என்னையே வணங்கு நீ என்னை கண்டிப்பாக அடைவாய் நீ எனக்கு பிரியமுள்ள வனாவாய் என பகவான் அர்ஜுனனிடம் கூறுகிறார். நாமும் அதையே பின்பற்றுவோம் கண்ணனை நம்புங்கள் கவலைகள் குறைந்து விடும் .
கலைமகள் சரஸ்வதியின் வீணை கலைகளின் குறியீடாக இருக்கிறது
ஆயகலைகள் அறுபத்துநான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்பவள் கலைமகள் சரஸ்வதி . எல்லாக்கலைகளுக்கும் இருப்பிடம் என நாம் கூறினாலும் , கண்ணுக்கு பளிச்சென்று தெரிவது வீணை தான்.
கலைமகள் சரஸ்வதியின் வீணை கலைகளின் குறியீடாக இருக்கிறது . சரஸ்வதி தேவி வீணையை எப்போதும் சரஸ்வதி தேவி இசைத்தபடியிருப்பது உலகில் கலைகள் தினமும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மையை நமக்குதெரிவிப்பதாக உள்ளது.
வீணையின் தந்திகள் மிகவும் இழுத்து கட்டபட்டிருந்தால் அவை அறுந்துவிடும். அறுந்துவிடும் என்று தொய்வாக கட்டினால் நல்ல இசை வெளிப்படாது. எனவே எது சரியான நிலையோ அந்த நிலையில் நரம்புகள் கட்டபட்டிருந்தால் மட்டுமே சுருதி_சுத்தமாக வீணையில் நாதம்வெளிப்படும்.
நம் உடலும் வீணை போலத்தான். அதில் ஐம்புலன்கள் மனம், போன்ற அகக் கருவிகள் எல்லாம் தந்திகலே . அந்த அகக் கருவிகலாகிய தந்திகள் சரியானநிலையில் கட்டபட்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஞானம் என்னும் இனிமையான ஸ்வரம் வெளிப்படும்.
இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் "இவ் உலக வாழ்வு பொய்யானது, இறைவனின் நிழலே என்றும் அடைக்கலம்தரும்' என்னும் உயர்ந்த மேலான ஞானத்தைப்பெற நம்மைத் தகுதிப்படுத்தி கொள்வோம்
குண்டலினி யோகா
யோகம் - யோகா : ஆன்மா இறைவனோடு சேர்வது குண்டலி: குண்டு + ஒளி என்பதே குண்டலி, தாவரங்கள் வெளிசக்தி, ஈர உணர்ச்சியுடன் வளர்ந்து பருவத்தில்வித்தாக வந்து முடிகிறது. அது போன்று எல்லா உயிரினங்களும் அனேக வித நிறமுடைய இரத்த உணர்ச்சியாக_வளர்ந்து முடிவில் விந்துவாக ஆகிறது. மனித உடம்பில் இரத்தநாடிகள் இருக்கும் இடத்தில் எல்லாம் விந்து வியாபித்திருகிறது.
விந்துவின் புறமும், உள்ளும், இருக்கும் சத்தியே 'குண்டலினி' என்று சிலர் கூறுகின்றனர்
சமீபகாலமாக குண்டலினி யோகப் பயிற்சியைப் பற்றிய நூல்கள் உலகின் பல மொழிகளில் வெளியாகி உள்ளது. இது விஞ்ஞான பூர்வமான முறையிலும் விளக்கம் செய்யப் பட்டு வருகிறது.
நம் நாட்டில் உள்ள யோகாசிரியர் பலரிடம் இப்பயிற்சியை கற்று கொள்ளும் ஆர்வத்தில் வெளிநாட்டினர் பலரும் வந்து தங்கி பயின்று வருகிறார்கள். யோகாசிரியர்கள் குண்டலினி என்னும் சக்தி முதுகந்தண்டின் கீழே உறக்கத்தில் இருக்கிறது அதை விழிப்படைய செய்து மேலே கொண்டு வந்து புருவ நடுவில் நிறுத்திவிட்டாலே யோகசித்தி!? என்று தவறான முறையில் பயிற்சி அளிக்கின்றனர்!?. உண்மை யாதென்று சித்திர்களின் முறையை காண்போம்.
திருமூலர்: என்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்கிறார்.குண்டலி இறைவனின் இருப்பிடம் என்றால் அது மலம் மூத்திரப்பைக்கு இடையில் மாட்டி அவதிப் படவேண்டுமா சிந்தியுங்கள் ! குண்டலியின் இருப்பிடம் பற்றி திருமூலர் திருமந்திரம் - 580 பாடலில் மூலத்திருவிரல் மேலுக்கு முன் நின்ற பாலித்த யோனிக் கிருவிரற் கீழ் நின்ற கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நால் விரற் கீழே மூலாதாரத்திற்கு இருவிரல் அளவு மேலுள்ளதும் (மூலாதாரம் என்பது திருமூலரின் குறிப்பின் படி சிரசில் உள்ளதாகும்)
முன்பக்க பார்வை உடையதும் வெளிப்படுத்தும் தன்மையுடைய குறித் தானத்துக்கு இரண்டு விரலளவு கீழே உள்ளது மான இடத்தில் வட்டமிட்டுக் கொண்டுள்ள குண்டலினியுள் எழுஞ்சுடர் உடம்பில் உந்திக் கமலத்துக்கு (உன்+தீஸ்ரீஉந்தி) நான்கு விரலளவு கீழேயுள்ளது. ஓளவையார் விநாயகர் அகவலில் இடை பிங்கலையின் எழுத்தறிவித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலினி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பு கருத்தறிவித்தே. தாயுமானவப் பெருந்தகை குண்டலியின் பெருமையையும் அமிர்தம் பெறும் வழியையும் கூறுகின்றார்.
நெடிது உணர்ந்து இதய பத்ம பீடம்மிசை நின்று இலங்கும் அசபாநலத்து இயல் அறிந்துவளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவன் அருளினால் எல்லை அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோனமனு முறையிலே வயம் மிகுத்துவரும் அமிர்த மண்டல மதிக்குளே மதியை வைத்து நான் வாய் மடுத்து அமிர்த வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் செயம் மிகுந்துவரும் சித்த யோகநிலை பெற்று ஞான நெறி அடைவனோ..... என்கிறார்.
இதய பத்ம பீடம்மிசை என்பது குண்டலி இருப்பிடம்.ஆதலால் ஞானமடைந்து இறவா நெறியை கற்று உணர்ந்து கொள்ள தகுதி வாய்ந்த குரு பிரானின் துணையை நாடி அவர் காட்டியருளும் ஞான நெறியை அடைய வேண்டும்.சித்தர்கள் குண்டலியை பரிபாசையில் பின் வருமாறு கூறியுள்ளனர்
சில வற்றைக் காண்போம். திருவடி காய கற்பம் சந்திர புஷ்கரணி எட்டிரண்டு மூல அனல் திருச்சிற்றம்பலம் முப்பூ , இருதயம் , புருவ மத்தி, விந்து, சுழுமுனை நெற்றிக் கண் கருநெல்லி வைகுண்டம் வேகாத்தலை சாகாக்கால் வெட்டாத சக்கரம் முக்கோணம் அருத்தடைத்த வாசல்.
இவை அனைத்தும் குறிப்பது ஒன்றையே இதை ஞான குருவால் மட்டுமே தீட்சையாக உபதேசிக்க முடியும் மற்றவர்களால் இதனை விளக்க இயலாது
கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு
கம்பர், ஒளவையார், வள்ளுவர், பாரதியார், இளங்கோ, போன்ற காலத்தால் அழியாத காவியங்களைசெய்த கவி பெருமக்களை பற்றி நாம் அறிவோம். கவி பெருமக்களிலே ஒருவர்தான் காளமேகப் புலவர். பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த அவர் மதுரகவி, ஆசுகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்றெல்லாம் போற்றப்பட்டவர் . நினைத்தவுடன் எதைபற்றியும் கவிபாடுவதில் வல்லவர்களே ஆசுகவி என அழைக்கபடுவார்கள். ஆசு கவிகவிகளிலே காளமேக புலவர் தன்னிகரற்றபேராற்றல் படைத்தவராய் விளங்கினார்.
காளமேக புலவர் பாண்டி நாட்டிலே திருமோகூர் என்ற திருதலத்திலே கோயில் பணியாளராயிருந்த ஒருவருக்கு மகனாகபிறந்தார் வரதன் என்பதே அவரின் இயற்பெயர்,
இளமைபருவத்தில் ஸ்ரீரங்கம் திருமால்கோயிலிலே வரதன் கோயிற்பணியாளாக வேலைபார்த்து கொண்டிருந்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து சில மைல் தூரத்தில திருவானைக்கா என்ற சிவத்தலம் உள்ளது . திருவானைக்கா சிவத்தலத்திலே நடனக்கலை மூலமாக இறை பணி செய்யும் தேவரடியார்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவரான மோகனாங்கி மிக அழகானவள். மோகனாங்கிக்கும் வரதனுக்கும் காதல் மலர்ந்தது.
மோகனாங்கி சிவன்கோயிலில் நடனமாடுபவள். வரதன் திருமால்கோயிலில் கோயிற்பணியாளாக வேலைபார்ப்பவர். சைவ சமயத்தவர்களுக்கும், வைணவசமயத்தவர்களுக்கும் இடையே சண்டை சச்சரவு நிறைந்திருந்தகாலம் அது. தன் காதலுக்கு சமயம்தடையாக இருப்பதை உணர்ந்த வரதன், திருவானைக்கா சென்றார். சைவ சமயத்தில் இணைந்தார் . சிவதீட்சைபெற்றார். மோகனாங்கியை மணந்தார் . திருவானைக்கா தலத்திலேயே அவருக்கு வேலையும் கிடைத்தது.
அன்று முதல் திருவானைக்கா சிவனோடு இருக்கும் தேவியை தினமும் வழிபட்டு வந்தார். தேவியின் மீது தீராத அன்பு கொண்ட பக்தனாகவாழ்ந்தார். வரதனின் அன்பில் குளிர்ந்த கலைமகள் சரஸ்வதி கனவிலே ஒருநாள் காட்சி கொடுத்தாள். தேவியின் திரு அருளால் வரதனுக்கு அறிவுகண் திறந்தது. கவிப்புனையும் ஆற்றல் பிறந்தது. அன்று முதல் கடல் மடை திறந்தது போல் கவிமழை பொழிந்து காளமேக புலவராய் திகழ்ந்தார்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள திருமலைராயன் பட்டினத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த சிற்றரசன் திருமலைராயன். தமிழ்மொழியில் தணியாத ஆர்வம்கொண்டு தமிழ்ப்புலவர்களை போற்றி ஆதரித்தான். அறுபத்து நான்கு புலவர்களுக்கு தனது அரச வையிலே இடம் கொடுத்தான். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தான்.
தண்டிகைபுலவர்கள் என அழைக்கபட்ட அவர்கள் மிகவும் செருக்கு உடையவர்களாக இருந்தார்கள். வறுமையால்வாடி மன்னனை நாடிவரும் ஏழைப்புலவர்களை இகழ்ந்தார்கள். இது பற்றி கேள்வியுற்ற காளமேகபுலவர் திருமலை ராயனின் தமிழ் ஆர்வத்தை நேரில் கண்டறியவும், தண்டிகைபுலவர்களின் செருக்கை அடக்கவும் ஆசை கொண்டார்.
திருமலைராயன்பட்டினத்தில் அவர் கால் வைத்த போது தெருவழியே வாத்திய இசை முழங்க, மக்களின் வாழ்த் தொலிகள் எழும்ப அலங்கரிக்கப்பட்ட பல்லக்கொன்றிலே, அதிமதுர கவிராயர் என்ற புலவர் சென்று கொண்டிருந்தார். தண்டிகைப்புலவர்களின் தலைமைபுலவரான அவருக்கு கிடைக்கும் மரியாதைகளை கண்ட காளமேகபுலவர் தமிழ் மீது திருமலைராயனின் பேரார்வத்தை உணர்ந்தார். மனதால் அவனைப்புகழ்ந்தார்.
அதிமதுரக்கவிராயரை வீதியில் மக்கள் எல்லோரும் வாயாரப்புகழ்ந்து வாழ்த்துக்கோசம் செய்யும் போது காளமேக புலவர் மட்டும் அமைதியாக பார்த்து கொண்டிருப்பதை காவலன் ஒருவன் கண்டான் . அவரிடத்தில் வநது கவிராயரைபுகழ்ந்து கோசம் எழுப்பு என கட்டளை யிட்டான். காளமேக புலவர் கடுங் கோபமுற்றார். உடனே,
அதிமதுரம் என்றே அகிலம் அறியத்
துதிமதுர மாயெடுத்துச் சொல்லும் - புதுமையென்ன
காட்டுச் சரக்குலகிற் காரமில்லாச் சரக்குக்
கூட்டுச் சரக்கதனைக் கூறு
என்று பாடினார். காவலன் இது பற்றி அதிமதுரக்கவிராயரிடம் எடுத்துரைதான். கவிராயர் கடும் சினமடைந்தார். அரசனிடம் இதைபற்றி கோள்மூட்டினார். உடனே அரசன் காளமேகப்புலவரைக் கைது செய்து வருமாறு காவலர்களுக்கு கட்டளை பிறப்பித்தான்.
காளமேகபுலவர் அரசவைக்கு அழைத்து வரபட்டார். அரசனை கண்டதும் அவனை வாழ்த்தினார். ஆனால் அரசனோ புலவரை_மதிக்காமல், இருக்கையும் கொடுக்காமல் ஏழனம்செய்தான். அதிமதுரகவிராயரின் சூழ்ச்சிக்கு அரசன் அடிமை ஆகிவிட்டான் என்பதை உணர்ந்தார். உடனே, காளமேகபுலவர் சரஸ்வதியை தியானித்து பாடல்பாடினார். அரசனின் சிம்மாசனத்திற்கு இணையான உயரியஆசனம் ஒன்று அவையில்தோன்றியது. அதில் ஒய்யாரமாக அமர்ந்தார் காளமேக புலவர், கலைமகளின் அருள்பெற்ற காளமேகப்புலவரின் செயலைகண்டு, அஞ்சிய அதிமதுரமும், மன்னன் திருமலை ராயனும் தங்களது குற்றத்தை மன்னிக்க வேண்டும் என வேண்டினர். கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பதை சரஸ்வதி, இந்தநிகழ்வின் மூலம் எடுத்து காட்டினாள்.
நமது வெற்றிக்கோ, தோல்விக்கோ வேறு எவரும் காரணமாக இருக்க முடியாது.
உயர்ந்த தவ வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு மகான் ஒரு ஊருக்கு வந்தார். அவரது முகத்தில் தெய்வீக ஒளி வீசியது. தூய்மையான தவ சீலரான அவர் நடப்பதை, நடக்கப் போவதை துல்லியமாகக் கணிக்கக் கூடியவர். அவரது புகழைப் பற்றிக் கேள்விப்பட்ட மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்து ஆசி வாங்கிச் சென்றனர்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இளைஞன் ஒருவன், அவரைக் கலாட்டா செய்ய முடிவெடுத்தான். அவரை நேரில் சந்திக்க வந்தான்.
ஒரு பட்டாம் பூச்சியைத் தனது உள்ளங்கையில் வைத்து, கையை மூடி, தான் அணிந்திருந்த உடையில் உள்ள பாக்கெட்டில் வைத்து மறைத்துக் கொண்டான்.
அந்த மகானைப் பார்த்து, "நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.
"சரி.... தம்பி உனது கேள்வி தான் என்ன? கேள்" என்றார் அந்த மகான்.
"ஐயா, எனது கையில் ஒரு பூச்சி உள்ளது... அது உயிருடன் உள்ளதா அல்லது செத்து விட்டதா என்று உங்கள் ஞான திருஷ்டியால் சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.
உயிருடன் இருக்கிறது என்று சொன்னால் கையில் உள்ள பூச்சியை நசுக்கிக் கொன்று விடுவது..... அல்லது செத்து விட்டது என்று சொன்னால் உயிருடன் காட்டுவது என்று நினைத்தான்.
எப்படியாவது அவரை மட்டம் தட்டி விட வேண்டும் என்று விரும்பினான். மகானோ, "அது உயிருடன் இருப்பதும், இல்லாததும் உன் கையில் இருக்கிறது" என்றார்.
நம் வாழ்க்கை கூட அந்த வண்ணத்துப் பூச்சி நிலையில் தான் உள்ளது.
நமது வாழ்க்கையில்
வெற்றியா...... தோல்வியா.....
உயர்வா....... தாழ்வா........
இன்பமா ........ துன்பமா .......
ஏற்றமா ....... இறக்கமா .......
புகழா....... அவமானமா .......
இவையெல்லாம் நம் கையில் தான் இருக்கிறது
பகவத் கீதை "நமக்கு நாமே நண்பன், நமக்கு நாமே எதிரி" என்று சொல்கிறது.
நமது வெற்றிக்கோ, தோல்விக்கோ வேறு எவரும் காரணமாக இருக்க முடியாது.
நாமே தான் காரணமாக இருக்க முடியும்.
"தீதும், நன்றும் பிறர் தர வாரா" என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
குருவருளால் மட்டுமே திருவருள் கிடைக்கும்
நம்முடைய ஜனனம் மாதா, பிதாவால் நிகழ்கிறது. இந்த பிறப்பை அர்த்தம உள்ளதாக செய்பவர்கள் நம்முடைய ஆசிரியர்களே! குருவருளால் மட்டுமே திருவருள் கிடைக்கும் – இறைவனினுடைய அருள் கிடைத்து நிம்மதியாக நாம் வாழ முடியும்.
ஒரு குழந்தையை , “அ’வில் துவங்கி, உயர்கல்வி வரை கற்று தந்து
அவர்களை மிக சிறந்த மனிதர்களாக சேதுக்கும் சிற்பிகளே ஆசிரியர்கள்! ஆசிரியர்களின் சொல்லை கேட்டு எந்த ஒரு மாணவன் தன்னை சீர்படுத்தி கொள்கிறானோ, அவன் பிற்காலத்தில் வழமாகவும், சிறந்த மனிதனாகவும் இருப்பான்.
பகவான் கிருஷ்ணரும், குசேலரும் குருகுல நண்பர்கள். அந்த காலத்தில் குருகுலத்தில் கல்வி பயிலும் மாணவர்கள், குருகுலத்திலேயே தங்கி படிக்க வேண்டும்;
கல்வி பயிலும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் குருவின் கட்டளைகளை செய்ய வேண்டும். ஒருநாள் இவர்கலுடைய குரு சாந்தீபனி முனிவரிர் மனைவி குசேலரையும், கிருஷ்ணரையும், உணவு சமைப்பதற்க்காக விறகு பொறுக்கி வரச்சொல்லி காட்டிற்கு அனுப்பி விட்டாள்.
குருவின் மனைவியி இட்ட கட்டளையை ஏற்ற குசேலரும் , கிருஷ்ணரும், காட்டிற்கு சென்று விறகு பொறுக்கி கொண்டு இருந்தனர் . அப்பொழுது பெரும் மழை வந்துவிட்டது. விறகு நனையாமல் இருக்க ஒரு மரப்பொந்தில் விறகை வைத்துவிட்டு, மழையில் நனைந்தபடி நின்றனர். இருட்டி விட்டது. குழந்தைகளை காணாத குரு, மனைவியை கடிந்து கொண்டு குழந்தைகளை தேடி சென்றார்.
குருவின் மனைவியி இட்ட கட்டளையை நிறைவேற்ற விறகை மறைத்து விட்டு, மழையில் அவர்கள் நனைந்தது கண்டு கண்ணீர் வடித்தார். “நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள் என்று ஆசிர்வதித்தார். குருவின் ஆசிர்வாதம் பலித்தது. கிருஷ்ணர் துவாரகையின் மன்னரானார்; ஏழையான குசேலர், கிருஷ்ணனின் உதவியால் பெரும் செல்வந்தரானார்.
குருவின் சொல்லை இளமையில் கேட்டு நடப்பவர்கள் எதிர்காலத்தில் செல்வந்தர்களாக விளங்குவர்.
மேலும் ஒருவன் தான் கற்ற கல்விக்காக குருவிற்கு தட்சணை வழங்க வேண்டும், இல்லாவிடில் தான் கற்ற கல்வி பயன் அற்றதாக போகி விடும்
கர்மாவுக்கு தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்
வசிஷ்ட முனிவர் மகாமேரு மலையினில் ஆசிரமத்தை அமைத்து வாழ்ந்துவந்தார். ஆசிரமத்தின் சுற்று புறம் இயற்கை அழுகுடன் விளங்கியது . இங்கு தேவலோகத்தில் இருந்து அஷ்டவசுக்கள் தங்களது மனைவியருடன் வந்தனர். மலையெங்கும் சுற்றி விளாயாடினர் மகிழ்ந்தனர்; ஒவ்வோர் இடமாய் சுற்றி பார்த்துகொண்டு வந்தனர்.
அப்போது வசிஷ்டரின் ஆசிரமத்தில் தெய்விக தன்மை கொண்ட அழகிய பசு மேய்ந்து கொண்டிருந்தது. அதை_அஷ்டவசுக்களில் கடைசியாக இருந்த பிரபாசன் மனைவி கேட்க பிரபாசன் தன் மனைவியின் மீது கொண்ட காதலினால் திருடி சென்று விட்டான்
ஆசிரமத்தில் இருந்த பசுவை "அஷ்டவசுக்கள்" திருடி சென்று விட்டதை கண்டு வசிஷ்ட முனிவர் கடும் கோபம் கொண்டார், அஷ்டவசுக்கள் மண்ணுலகில் மனிதர்களாய் பிறக்க சாபமிட்டார்.
அஷ்டவசுக்கள் தேவலோகதிலிருந்து பயந்துநடுங்கி ஓடோடி_வந்து வசிஷ்டரின் காலில் விழுந்தனர் . மன்னிப்புகேட்டனர். சாப விமோசனம் தருமாறு கெஞ்சினர். கோபம் குறைந்த , வசிஷ்டர் அவர்களைநோக்கி, "பிரபாசனை தவிர நீங்கள் அனைவரும் பூமியில் ஒவ்வொருவராக பிறப்பீர்கள்; ஓராண்டுக்கு பிறகு சாபவிமோசனம் அடைவீர்கள். ஆனால் பிரபாசன்_மட்டும் உங்களுக்கு பிறகு பிறப்பான். நீண்டகாலம் வாழ்வான்; சாஸ்திரங்ககள் அனைத்தையும் கற்று வல்ல வனாவான்; பெண்ணாசை கொள்ளமாட்டான்; தர்மாத்மாவாக வாழ்வான்; தந்தையினுடைய விருப்பத்தை நிறைவேற்றுவனாக வாழ்வான் " என கூறினார்.
அஷ்டவசுக்கள் தங்களுக்கு "கங்கையே" தாயாகவேண்டும் என விரும்பினர். கங்கை அஷ்டவசுக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக கூறினாள். அதற்க்குரிய காலம் வந்தது.
சில காலம் பொறுத்து பூமியில் பிரதீபா என்ற மன்னனின் மகனாகப் பிறந்து இருந்த சந்தனுவுக்கு கங்கை மனைவியானால் . அவர்களுக்கு அஷ்டவசுக்கள் மகன்களாக பிறந்து இருந்தனர். அந்த திருமணம் நடக்கும் முன் கங்கை சந்தனுவிடம் ஒரு சத்தியம் பெற்று இருந்தாள்.
பிறக்கும் குழந்தையை தான் என்ன செய்தாலும் அதை அவன் தடுக்கக் கூடாது என்பது . பிறகு குழந்தை பிறந்தது , ஆனால் ஒன்றன் பின் ஒன்றாக முதலில் பிறந்த ஏழு குழந்தைகளையும் அவள் நதியில் வீசி எறிந்துவிட்டு அவர்களின் சாபத்தை அழித்தாள். அதைப் பார்த்துக் கொண்டே இருந்த சந்தனு மன வேதனை அடைந்தார்.
எட்டாவது குழந்தை பிறந்தது. அதை நதியில் போட கங்கை போனபோது அவளை தடுத்து நிறுத்தினார் சந்தனு. அவ்வளவுதான் கங்கை மறைந்தாள். குழந்தையை சந்தனுவே வளர்க்க வேண்டியதாயிற்று. அந்தக் குழந்தை யார் தெரியுமா? அதுவே பீஷ்மர். முன் பிறவியில் வஷிஷ்ட முனிவரின் காமதேனுப் பசுவை தன் மனைவியின் ஆசைக்காகத் திருடி வெகு காலம் பூமியில் பிறவி எடுத்து சங்கடங்களை அனுபவித்தே மரணம் அடைய வேண்டும் என சாபம் பெற்று இருந்த அஷ்டவசுக்களில் ஒருவர்
பிள்ளையார் நடத்திய நாடகம்
பர்தஹாரி என்பவர் மகாப் பெரிய கவிஞர், சமிஸ்கிருத வல்லுனர். நிதி சாகரா, ஸ்ரிங்கார சாதகா, வைராக்ய சாதகா மற்றும் சுபாசிதஸ் போன்ற நூல்களை இயற்றியவர். பாடலிபுரத்தை சேர்ந்த வித்யாசாகரா என்ற அறிஞரின் மகன். வித்யாசாகரா என்ற அறிஞ்சர் பாடலிபுரத்தை ஆண்டு வந்த மன்னனின் அரச சபையில் இருந்தவர். அந்த மன்னன் மரணம் அடைந்தப் பின் வித்யாசாகரா அந்த நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.
வித்யாசாகராவின் மரணத்திற்குப் பிறகு அவருடைய மகனான பத்ரஹரி மன்னனாக பதவி ஏற்றார் (பத்ரஹரியை மன்னன் விக்ரமாதித்தனின் சகோதரர் என்பார்கள்) . மரணம் அடைய இருந்த தந்தைக்கு பத்ரஹரி திருமணம் ஆனாலும் தான் எந்த சந்ததியையும் உருவாக்க மாட்டேன் என ஒரு சத்தியம் செய்து கொடுத்தார். அதற்கேற்ப அவர் மூன்று மனைவிகளுடன் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் எந்த வாரிசும் அவர் மூலம் உருவாகவில்லை. அதே நேரத்தில் பத்ரஹரியும் ஆன்மீக மனம் கொண்டவர். ஆகவே அவர் சாதுக்கள் சன்யாசிகளுடன் தனது பெரும்பாலான நேரத்தை அவர்களுடன் விவாதம் செய்து செலவழித்தவர் .
ஒரு முறை அவருக்கு ஒரு பெரிய மகான் மகிமை வாய்ந்த மாம்பழத்தைக் கொண்டு வந்து தந்து 'அப்பனே இந்தப் பழம் மிகவும் விசேஷமானது. இதை உண்டால் மூப்பு (வயதான தோற்றம்) வரவே வராது. என்றுமே நீ இளமையாக இருப்பாய். ஆகவே குளித்து விட்டு இன்று இதை நீ உண்ணலாம்'' என்று கூறிவிட்டுச் சென்றார். அதன் பின் அவரைக் காணவில்லை. பர்தஹரி நினைத்தார் '' இந்தப் பழத்தை உண்டு விட்டு நான் இளமையாக இருந்து என்னப் பயன்?. என் மனைவி வயதாகி இறந்து விடுவாள். அவள் இறந்தப் பின் நான் உயிருடன் இருந்து என்னப் பயன்? ஆகவே நான் இதை உன்னுவதைவிட எனக்கு துணையாக இருக்கும் அவள் இதை உண்டு விட்டு வெகுக் காலம் வாழட்டும்''.
மனைவி வந்தவுடன் அந்தப் பழத்தின் மகிமையைக் குறித்து அவளிடம் கூறி விட்டு அதை அவளை உண்ணுமாறு அதை அவளுக்குக் கொடுத்தார். 'சரி குளித்தப் பின் அதை நான் சாப்பிடுகிறேன்' என பழத்தை எடுத்துச் சென்றவள் நினைத்தாள், 'அடடா...இதை என்னுடைய காதலனுக்குக் கொடுத்தால் அவன் இளமையாக இருந்து நம்மை இன்னமும் இன்பமாக அல்லவா வைத்து இருப்பான்'. அவளுக்கு அந்த அரண்மனையில் குதிரை லாயத்தில் இருந்த ஆஜானுபாகுவான வேலைக்காரனுடன் கள்ளத் தொடர்ப்பு இருந்தது. அதற்குக் காரணம் பத்ரஹரி அவர் தந்தையிடம் ஒரு வாரிசை தான் உருவாக்க மாட்டேன் என வாக்குக் கொடுத்து இருந்ததினால் இல்லற சுகங்களில் அதிகம் ஈடுபடாமல் இருந்தார். அதனால் இளமைக் காலத்தில் இருந்த ராணி தனது உடல் சுகத்திற்க்காக அரசனுக்குத் தெரியாமல் கள்ளத் தொடர்ப்பை வைத்து இருந்தாள். ஆகவே அந்தப் பழத்தை எடுத்துச் சென்றவள் கள்ளத் தொடர்ப்பை வைத்து இருந்த வேலைக்காரனை அழைத்து அந்தப் பழத்தின் மகிமையைக் கூறி அதை உண்ணுமாறுக் கூறினாள்.
அரண்மனையில் வேலை செய்வதினால் தன் உடல் மீது வெறி கொண்டு அலைந்த ராணி உல்லாசத்திற்கு கூப்பிடும்போது வேறு வழி இல்லாமல் அவளிடம் மறுக்க முடியாத நிலையில் அவன் இருந்தாலும் தன்னுடைய மனைவியிடம் அதிக ஆசை வைத்து இருந்தவன் 'சரி அதை நான் சாப்பிடுகிறேன்' என எடுத்துச் சென்றான். அதை கொண்டு சென்றவன் நினைத்தான் , 'அடடா...இதை என் மனைவிக்குக் கொடுத்தால் அவள் என்றும் இளமையாக இருந்து என்னை மகிழ்விப்பாளே '. ஆகவே குதிரை லாயத்துக்கு உணவு எடுத்து வந்த தன மனைவியிடம் அந்தப் பழத்தின் மகிமையை பற்றிக் கூறி குளித்து விட்டு அவளை உண்ணுமாறுக் கூறி அனுப்பினான் .
இப்படியாக ஒருவர்மாரி இன்னொருவர் என கைமாறி வேலைக்காரியிடம் சென்ற அந்த மகிமை வாய்ந்தப் பழத்தை பத்திரமாக எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது வழியில் மாறு வேடத்தில் நகர் வலம் வந்து கொண்டு இருந்த மன்னன் பத்ரஹரி அவள் கையில் இருந்த பழத்தை அடையாளம் கண்டு கொண்டு ஒன்றும் தெரியாதவர் போல அவளிடம் சென்று அது என்ன என்றும், அவளுக்கு எப்படி அது கிடைத்தது என்பதையும் கேட்டறிந்தவுடன், கோபம் அடைந்து அரண்மனைக்குச் சென்றான்.
குதிரை லாயத்தில் வேலை செய்து கொண்டு இருந்த வேலைக்காரனை அழைத்து அந்தப் பழத்தை அவனுக்குத் தந்தது யார் எனக் கோபத்துடன் கேட்க அந்த வேலைக்காரனும் ராணியுடன் தனக்கு இருந்த கள்ளத் தொடர்ப்பைக் குறித்துக் கூறாமல் அதை மறைத்துவிட்டு, அந்தப் பழத்தை அவருடைய மனைவியான மகாராணியே தனக்கு தந்ததாக சத்தியம் செய்து கூறினான்.
ஆகவே மன்னன் தனது மனைவியையும் அழைத்து அது பற்றி பேச விரும்பினான். ஆனால் வேலைக்காரனை அழைத்து மன்னன் விசாரித்ததை ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருந்த ராணியும் எங்கே தன்னுடைய கள்ளக் காதல் தெரிந்து விடுமோ என பயந்து கொண்டு அவனுக்கு விஷம் கலந்த சப்பாத்தியை செய்து அதைக் கொண்டு போய் அவனிடம் கொடுத்து ' நாதா.....இன்று உணவு தயாரிக்க அதிக நேரம் ஆகும் என்கிறார்கள். ஆகவே இதை தற்காலிகமாக உண்டுவிட்டு படுத்துக் கொள்ளுங்கள். பட்டினியுடன் இருப்பது வயிற்றுக்கு நல்லது அல்ல' என இனிமையாகப் பேசி விட்டு அவன் மேலே எதையும் கேட்கும் முன்னரே விடுக்கென வெளியில் சென்று விட்டாள். ஆனால் பர்தஹரிக்கு அவள் மீது சந்தேகம் எழுந்தது. அவள் ஏன் வேலைக்காரனுக்கு அந்த மகிமை வாய்ந்த பழத்தைக் கொடுக்க வேண்டும்? அவனுக்கும் இவளுக்கும் என்ன தொடர்ப்பு இருக்க முடியும் , மேலும் என்றும் இல்லாமல் இன்று ஏன் அவசரம் அவசரமாக ரொட்டியை தந்து விட்டுச் சென்றாள்?
யோசனை செய்தவன் கண்களை மூடியபடி பிரார்த்தனை செய்தபோது அது விஷம் கலந்த ரொட்டியே என்பது அவன் மனக் கண்ணில் தெரிந்தது. ஆகவே இனியும் தகாத மனைவியுடன் இருந்து கொண்டு உயிர் வாழ்வதை விட வாழ்கையின் நான்கு அம்சங்களில் ஒன்றான சன்யாச வாழ்கையை ஏற்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். யாருக்கும் தெரியாமல் அந்த ரொட்டியை அறையின் மேல் பகுதியில் வைத்து விட்டு அரண்மனை வேலைக்காரனைப் போல மாறு வேடம் அணிந்து கொண்டு ஒரு பிட்ஷைப் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி விட்டான். போகும் முன் இந்த ''ஓட்டப்பம் இந்த வீட்டை சுடட்டும்'' என்று சபித்து விட்டுச் சென்று விட, அவன் அரண்மனையை விட்டு வெளியேறியதுதான் தாமதம் அரண்மனை பற்றி எறிந்து விட அதில் இருந்த அவனுடைய மனைவி மற்றும் கள்ளக் காதலன் போன்ற அனைவரும் இறந்து விட்டார்கள்.
அரண்மனையில் இருந்து வெளியேறிய பத்ரஹரி சன்யாசக் கோலம் பூண்டு இனி பிட்ஷை எடுத்துதான் உண்ண வேண்டும் என்ற வைரகியத்துடன் தென் இந்தியப் பகுதியை நோக்கிச் சென்றார். அங்கு சென்றவர் பிள்ளையார் கோவில் வாயிலில் ( எந்த ஊர் என்பது தெரியவில்லை. ஆனால் அது பிள்ளையார் பட்டி என்கிறார்கள் ) அமர்ந்து கொண்டு பிட்ஷை எடுத்து உண்டவண்ணம் வாழ்கையைக் கழித்தார்.
அந்த ஆலயத்துக்கு இரண்டு நுழை வாயில்கள் உண்டு. அப்போது ஒரு நாள் ஒரு பிச்சைக்காரன் பர்தஹரி அமர்ந்து இருந்த வாயிலுக்கு அடுத்த வாயிலில் சென்று பிச்சை எடுக்கலானான். அப்போது அவன் எதிரில் வந்த ஒருவர் பர்தஹரியிடம் சென்று தானம் கேட்குமாறு கூறி அவனை அங்கு அனுப்பினார். அந்த பிச்சைக்காரனும் சன்யாசிக் கோலத்தில் இருந்த பர்தஹரியிடம் சென்று ''வயதான ஒருவர் என்று என்னிடம் வந்து உங்களிடம் தானம் கேட்குமாறு அனுப்பினார்'' என்று சொன்னதும் பர்தஹாரி ஒருகணம் யோசனை செய்தார் 'நானே பிட்ஷை எடுத்து உண்ணுகையில் இவனுக்கு என்ன தானம் செய்ய முடியும்?' அடுத்த கணம் அவர் மனதில் தோன்றியது 'ஓஹோ...அரண்மனையில் இருந்து எடுத்து வந்துள்ள இந்த பிட்ஷைப் பாத்திரத்தையும் துறக்க வேண்டிய அவசியம் உள்ளதோ' என்று எண்ணியவர் 'அப்பனே, என்னிடம் தானம் தர இது ஒன்றுதான் உள்ளது. இந்தா எதை எடுத்துக் கொள் ' எனக் கூறி விட்டு அந்த பாத்திரத்தையும் கொடுத்து விட்டார்.
அந்த பிச்சைக்காரன் சிரித்துக் கொண்டே அதை வாங்கிக் கொண்டு சென்றான். அவன் சென்றப் பின்தான் அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டது, அனைத்து நாடகத்தையும் அங்குள்ள பிள்ளையார் மனித உருவில் வந்து நிகழ்த்தி உள்ளார். ஒரு சன்யாசிக்கு சொந்தமாக எதுவுமே இருக்கக் கூடாது. அதாவது உலகப் பொருட்கள் அனைத்தையும் துறந்து மனதை நிர்வாணமாக வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் எனும்போது அரண்மனையில் இருந்து கொண்டு வந்திருந்த பிட்ஷை பாத்திரத்தை வைத்திருக்கலாமா? . அதனால்தான் அந்த தத்துவத்தைப் புரிய வைக்கவே பிள்ளையார் அந்த நாடகத்தை நடத்தி உள்ளார். அன்று முதல் பர்தஹாரி கையேந்தி பிட்ஷைப் பெற்றுக் கொண்டு கிடைத்ததை உண்டவண்ணம் அங்கேயே வாழ்ந்து கொண்டு இருந்தார். அங்கு இருந்தபோதுதான் அவர் மேலே குறிப்பிட்டுள்ள நூல்களை இயற்றினார் என்கிறார்கள்.
நல்லோர் கூட்டுறவு நல்ல பண்புகளையும் தருகிறது
வேடன் ஒருவன் பறவைகளை வேட்டையாடுவதற்காக, ஒருநாள் காட்டுக்குச் சென்றான். ஒரு மரக்கிளையில், கூட்டில் இருக்கும் இரு கிளிகளைப் பார்த்ததும், அவை இரண்டையும் உயிருடன் பிடித்து எடுத்துச் செல்லும்போது, அவற்றுள் ஒரு கிளி எப்படியோ தப்பித்துப் பறந்துவிட்டது. கையிலிருந்த அந்த ஒற்றைக் கிளியோடு வீடு திரும்பிய வேடன், அதைப் பேசப் பழக்கினான். ஒருசில நாட்களிலேயே, வேடன் பேசும் அனைத்தையும் அந்தக் கிளி கற்றுக்கொண்டுவிட்டது. தப்பித்துச் சென்ற மற்றொரு கிளி, ஒரு முனிவரின் கையில் கிடத்தது. தனது ஆஸ்ரமத்திற்கு அதனை எடுத்துச் சென்று, வேத மந்திரங்களையும், நல்ல வார்த்தைகளையும் அதற்குப் பழக்கினார் அந்த முனிவர். இவ்வாறு அவ்விரு கிளிகளும் தனித்தனியே அந்தக் காட்டின் இரு மூலைகளில் வாழ்ந்துகொண்டிருந்தன.
ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் ஒரு அரசன் வேட்டைக்கென ஒரு குதிரை மீது அமர்ந்து அந்தக் காட்டுப் பக்கம் வந்தான். வேடனின் குடிசைக்கு அருகில் அவன் வந்தபோது, அவனைப் பார்த்த அந்தக் கிளி, "ஓடு, ஓடு, யாரோ ஒருவன் குதிரையின் மீது வந்துகொண்டிருக்கிறான். அவனைப் பிடி; கொல்" எனக் கூச்சலிட்டது.
அதைக் கேட்ட அரசன் உடனடியாக அங்கிருந்து அகன்று, முனிவரின் ஆஸ்ரம இருந்த காட்டின் மறு கோடிக்குச் சென்றான். அங்கேயும் ஒரு கிளி கூண்டில் அமர்ந்திருந்தது. அரசன் வருவதைப் பார்த்ததும், அந்தக் கிளி, "வாருங்கள், அரசே! வந்து இளைப்பாறுஙள். குளிர்ந்த நீர் பருகி, இனிய பழங்களை உண்டு, சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்" என இதமாகச் சொன்னது. "வணக்கத்துக்குரிய முனிவரே! வந்து அரசனை வரவேற்று உபசரியுங்கள். அவர் நமது ஆஸ்ரமத்துக்கு வருகை தந்திருக்கிறார்' என முனிவரை அழைத்தது.
இந்தச் சொற்களைக் கேட்ட அரசன் வியப்படைந்தான். வேடனின் கிளி மரியாதை இல்லாமலும், இந்தக் கிளி அன்புடனும் பேசியதைக் கேட்ட அந்த அரசன், ஒருவர் வளரும் சூழ்நிலையும், அவர் கூடியிருக்கும் இடத்தில் வசிப்பவர் கற்றுக்கொடுக்கும் போதனைகளுமே ஒருவரது குணத்தைத் தீர்மானிக்கிறது என்பதை உணர்ந்தான். தீய சகவாசம் தீய குணங்களையும், நல்லோர் கூட்டுறவு நல்ல பண்புகளையும் தருகிறது என்னும் பாடத்தை இவ்விரு கிளிகளின் மூலம் அவன் தெரிந்து கொண்டான்
விஷ்ணு பெற்ற சாபம்
முன்பு ஒரு முறை சூரிய வம்சத்தைச் சார்ந்த அம்பாரிஷா என்ற மன்னன் ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீமான் நாராயணன் என்கின்ற விஷ்ணுவின் பக்தன். பெளர்ணமியின் பதினோறாவது தினங்களில் கடுமையான ஏகாதசி விரதம் அனுஷ்டித்து வந்தவன். அன்று முழுவதும் ஹரியைக்குறித்த பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டு பொழுதைக்கழித்தப் பின் அடுத்த நாளான துவாதசி அன்று விரதத்தை முடித்துக் கொள்வான். அந்த கடுமையான விரத முறையை எந்தக் காரணம் கொண்டும் மாற்றிக் கொண்டது இல்லை.
அப்படி இருக்கையில் ஒரு முறை துவாதசி தினத்தன்று அம்பாரிஷின் அரண்மனைக்கு முனிவர்களில் மாமுனியான துர்வாசர் வந்து இருந்தார்.அவர் சற்று முன்கோபக்காரர். அன்று மன்னன் ஏகாதசி விரதத்தில் இருந்தான். மாமுனிவரை கண்டவன் பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். அர்க்கிய பாத்யம் கொடுத்ததுடன் (கைகால்களை அலம்பிக் கொள்ள தண்ணீர் தருவது ) மாமுனிவரிடம் தான் ஏகாதசி விரதத்தை துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்திற்கு முன் முடிக்க வேண்டி இருப்பதால் விரைவாக காலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வந்து விடுமாறு அவரிடம் மிகவும் பணிவாக வேண்டிக்கொண்டான் . அவன் வேண்டுகோளை ஏற்ற மாமுனிவரும் நதிக்கரைக்குசென்று தன்னுடைய ஆசார அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பி வரத் துவங்கினார். ஆனால் துரதிஷ்டவசமாக அனுஷ்டானங்களை முடித்துக் கொள்ள நேரம் ஆகிவிட்டது. துவாதசி கால நேரம் முடிந்து விடும் என்பதை மறந்து விட்டார். குறிப்பிட்டநேரத்திற்குள் முனிவரும் வரவில்லை என்பதைக் கண்ட அரசன் தவிக்கலானான்.
தன்னுடைய வாழ்க்கையில் அத்தனைக் காலமும் துவாதசி கால நேரம் முடிவதற்கு முன்னரே தவறாமல் தன் விரதத்தை முடித்துக்கொண்டு வந்திருந்தான் .சோதனையாக அன்று மாமுனிவர் வரவில்லை. வந்த விருந்தாளி சாப்பிடுவதற்கு முன்தான் சாப்பிடுவது தவறு என்பதால் மன்னன் தவித்தான். அதே சமயத்தில் விரதத்தையும் துவாதசி காலநேரம் கடக்கும் முன் முடிக்க வேண்டும். மாமுனிவரையும் அவமானப்படுத்துவது போல அவர் வரும் முன்னர் சாப்பிடக் கூடாது. என்ன செய்வது என புரியாமல் குழம்பி நின்றவன் யோசனை செய்தான். என்ன செய்வது என யோசித்தவன் தண்ணீர் அருந்துவது உணவு அருந்தியதற்கு சமானம் அல்ல என்பதினால் சிறிது தணிணீர் மட்டும் பருகிவிட்டு விரதத்தை முடித்துக் கொண்டான். வேறு வழி இல்லை, தணிணீர் கூட அருந்தாமல் இருந்தால் விரதம் முடிந்து போனதாக கருத முடியாது என்பதினால் அதை செய்த பின் முனிவர் வரும் வரை காத்திருந்தான்.
தனது காலைக் கடமைகளை முடித்துக் கொண்ட துர்வாச முனிவர் வந்தார். அரண்மனைக்கு வந்தவர் மன்னன் விரதத்தைமுடித்துக் கொண்டு விட்டதைப் பார்த்தார். தன்னுடைய முக்காலமும் உணரும் சக்தியினால் நடந்து முடிந்திருந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். துவாதசி காலநேரம் முடியும் முன் தண்ணீர் அருந்தி விரதத்தை முடித்துக் கொண்டதோ உணவு அருந்தியதற்கு இணை ஆகாது என்ற சாஸ்திரம் அவருக்கும் நன்கே தெரியும். ஆனாலும் முன் கோபம் அவரை மீறிக் கொண்டது. மன்னனை ‘நான் வரும் முன்னரே உணவை அருந்தி பாபம்செய்து விட்டாய்’ எனக் கோபித்துக்கொண்டு சாபம் கொடுக்கத் தயார் ஆனார் ;. மன்னன் பார்த்தான். அந்த சாபத்தினால் ஏற்பட இருக்கும் அழிவைத் நாராயணன் மூலமே தடுக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்தான். ஆகவே மாமுனிவர் சாபம் தரத் துவங்கும் முன்னரே நாராயணனைத் துதித்து தியானம் செய்யத் துவங்கினார். அவர் தியானம் செய்யத் துவங்கியதுமே நாராயணன் அவர்களுக்கு இடையில் வந்து நின்று கொண்டு விட்டார். துர்வாச முனிவர் சாபம் தரும் முன் தன்னை காப்பாற்றுமாறு விஷ்ணுவின் கால்களைப் பிடித்துக்கொண்டு அம்பாரிச மன்னன் கெஞ்சினான். அதனால் துர்வாச முனிவர் நோக்கி ஸ்ரீமான் நாராயணண் கூறினார் ‘மகரிஷியே இந்த அம்பாரிச மன்னன் என்னுடைய உண்மையான பக்தன். நீ எந்த சாபத்தைக் கொடுத்தாலும் அது அவனிடம் பொய் சேராது , என்னையே அது வந்து அடையும். ஏன் எனில் என்னிடம் தஞ்சம் அடைந்து விட்டவர்களைக் காப்பதுவது என் கடமை. நிங்கள் என்ன சாபம் தந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்’
அதைக் கேட்ட துர்வாச முனிவருக்குத் தெரிந்தது உலகத்தின் நன்மையைக் கருதித்தான் இப்படி ஒரு நிலைமை வந்திருக்கின்றது. பூமியில் உள்ள மக்களின் நன்மையைக் கருதித்தான் கடவுள் பூமியில் அவதரிப்பார் என்பது தெரிந்திருந்ததாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக நாடகம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்டதினாலும் தன்னைப் பொன்ற மற்ற முனிவர்களின் நலனை மனதில் வைத்துக்கொண்டு ஸ்ரீமன் நாராயணனுக்கு தான்கொடுக்க உள்ள சாபமும் நன்மைக்காகவே இருக்கட்டும் என எண்ணிய துர்வாசர் கூறினார் ‘சரி, நான் கொடுக்க உள்ள சாபமும் ஸ்ரீ ஹரி ஆகிய உங்கள் மீதே விழட்டும். அதன்படி நீங்கள் பூமியில் பல பிறவிகள் எடுக்க வேண்டும்’ அப்படி பொது நன்மையை மனதில் கொண்ட வணிணம் துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தின் விளைவாகவே விஷ்ணு பூமியில் பல அவதாரங்களை எடுக்க வேண்டி இருந்தது. அதில் ஒரு அவதாரம் நரசிம்ம அவதாரம்.
ஒரு முறை ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை மகாவிஷ்ணு கொல்ல வேண்டி இருந்தது. அதனால் ஹிரண்யாக்ஷனின் சகோதரனான ஹிரண்யகசிபு விஷ்ணு மீது கடும் கோபமுற்று அவரை கொல்ல தருணம் பார்திருந்தான். அதற்காக பிரும்மாவிடம் பெரும் வரம்பெற்றான் . அந்த வரத்தின்படி உலகில் அவனுக்கு எவராலும் மரணம் ஏற்படாது. காலையிலோ, மாலையிலோ, இரவிலோ எந்த சமயமும் அவன்பூமியின் மீதோ, ஆகாயத்திலோ, நீரிலோ,பூ மிக்கு அடியிலோ இருந்தாலும், எந்த ஆயுதத்தினாலும், தாய் வயிற்றில் பிறக்கும் எந்த மனிதனோ , மீருகமோ, கடவுளோ கொல்ல முடியாது. அந்த வரத்தைப் பெற்றிட அவன் தவத்தில் இருந்த பொழுது, அவனுடைய நாட்டை இந்திரனும் மற்ற தேவர்களும் சூறையாடிவிட்டனர். அந்த நேரத்தில் ஹிரண்யகசிபுவின் கர்பிணி மனைவியை நாரதர் காப்பாற்றி, அவளுடைய கருவில் வளர்ந்து வந்த பிரகலாதனுக்கு விஷ்ணு மீது பக்தி ஏற்படக் காரணமாகிறார். பிரகலாதனுடைய விஷ்ணு பக்தியினால் கோபமுற்று அவரை அவமானப்படுத்த எணிணிய ஹிரண்யகசிபு, விஷ்ணு இருப்பதாக பிரகலாதன் கூறிய ஒரு தூணை எட்டி உதைக்க, அந்த தூணில் இருந்து பாதி மனிதனும், பாதி மிருகமுமான உடலைக்கொண்ட நரசிம்மர் தோன்றி தன்னுடைய நகத்தினால் அவன் உடலைக் கீறி அவனை அழித்தார். அந்த அவதாரம் மூலம், ஹிரண்யகசிபு பெற்றிருந்த வரத்தை மிறாத வகையில் மனிதனும், மிருகமும் அல்லாத, தூணில் இருந்து பிறந்த , ஆயுதம் இல்லாமல் நகத்தினால், காலையும், மாலையும் இரவும் அற்ற அவற்றின் இடையிலான காலத்தில் அவனை வதம்செய்தார். அதன் பின்னும் அவருடைய கோபம் அடங்காமல் பொக லஷ்மி தேவியும், சிவபெருமானும் அவரிடம் வேண்டிக் கொண்டு அவருடைய கோபத்தை அடக்குகின்றனர். விஷ்ணுவின் வாகனமான கருடன் தன்னுடைய ஆசானை நரசிம்ம உருவில் தரிசிக்க விரும்பினார் . அதை ஏற்று அவருக்கு நரசிம்ம-லஷ்மி சமேதமாக அஹோபலத்தில் காட்சி தருவதாக ஐதீகம் உள்ளதினால் அங்கு அவருக்கு ஆலயம் அமைந்தது.
ஜனக மகராஜாவின் நேர்மை
முன் ஒரு காலத்தில் விதர்ப தேசத்தில் நிர்மால்ய ரிஷி என்றொரு ரிஷி இருந்தார். அவர் வனத்தில் தங்கி இருந்தார். அந்த கால ராஜா மகாராஜாக்கள் அவரிடம் தமது பிள்ளைகளை அனுப்பி குருகுல வாசம் செய்ய வைத்து அதன் பின்னரே ஆட்சி பீடத்தில் அவர்களை அமர்த்துவார்களாம். அதற்குக் காரணம் ஆச்சாரங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பது அல்ல, அந்த குருகுலத்தில் வளரும் பிள்ளைகள் மனதில் ஒழுக்கமும் பக்தி நெறியும் நிறைந்து இருக்கும்போது அவர்கள் மனதில் தூய்மையான எண்ணங்கள் மட்டுமே நிறைந்து இருக்கும்.
அதனால் அவர்கள் நாட்டு மக்கள் நலனையே தம் நலமாகக் கருதி நெறி தவறாமல் ஆட்சி செய்வார்கள் என்ற எண்ணம் இருந்தது. நிர்மால்ய ரிஷி தன் குருகுலத்தில் நான்கு அல்லது ஐந்து மாணவர்களைத் தவிர அதிகமாக யாரையும் சேர்த்தது இல்லை. ஒருவிதத்தில் பார்த்தால் அந்த குருகுலம் ராஜ பரம்பரையை உருவாக்கும் இடமாகவே அமைந்து இருந்தது. தினமும் காலையில் நிர்மால்ய ரிஷி ஒரு கதையைக் கூறுவார். அன்று மாலை அந்த கதைக்கான தாத்பர்யத்தை அவரவர் மனதில் எண்ணிய விதத்தில் கூற வேண்டும். அதைக் கொண்டே அவர்கள் மன நிலையை புரிந்து கொண்டு அடுத்த நாள் கதை அமையும்.
அன்றும் எப்போதும் போல தனது குருவிடம் சென்ற சிஷ்யர்கள் அவரைப் பணிந்து நிற்க குரு ஒரு கதையைக் கூறலானார்.''சீதையின் தந்தையான ஜனக மகராஜா நேர்மை தவறாமல் ஆட்சி புரிந்தவர்". நல்ல ஒழுக்கமும் பண்புகளும் நிறைந்தவர். அவருக்குத் தேவையான -செல்வம், சந்தானம், சூழ்நிலை மற்றும் சுகங்கள் என- அனைத்தும் இருந்தது. யோகக் கலையில் வல்லுனராக இருந்தார். ஆலயங்களுக்கு சென்றே வணங்க வேண்டும் என்ற நியதியை வைத்திருக்கவில்லை.
தான் இருந்த இடத்தில் அமர்ந்தவாறே கடவுட்களின் பெயரை உச்சரித்தவண்ணம் இருப்பார். அவரைப் பொறுத்தவரை மக்களுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கும் செய்யும் சேவை என நினைத்தவர். இத்தனை இருந்தும் அவருக்கு மனதில் அமைதி இல்லை. இராமாயண யுத்தமும் முடிந்து இருந்தது. ராமபிரானை தெய்வமாகவே அனைவரும் கருதினார்கள். அவர் நாமத்தை அனைவரும் உச்சரித்த வண்ணம் புண்ணியத்தை சேர்த்துக் கொண்டு இருந்தார்கள். இப்படியான சூழ்நிலையில் நாட்கள் செல்லச் செல்ல இது என்ன வாழ்க்கை என மனதில் எண்ணியவர் ஒருநாள் யாரும் எதிர்பாராத வகையில் தனது யோகக் கலையைக் கொண்டு தன் உயிரை நீக்கிக் கொண்டார்.
மரணம் அடைந்த அவரது ஆத்மாவை தேவலோகத்தில் இருந்து வந்த விமானம் தன்னுள் ஏற்றிக் கொண்டு மேலுலகத்துக்குச் செல்லத் துவங்கியது.அவர்கள் சென்ற வழியில் யமலோகம் வந்தது. ஜனக மகராஜா அங்கிருந்து வந்த பெரும் ஓலத்தைக் கேட்டு தனது தேரை நிறுத்து என்று கூறி விட்டு அதில் இருந்து இருந்து இறங்கி யம லோகத்தின் வாயிலை அடைந்தார். அவர் இறங்கிய இடமோ நரகம்.அவர் அந்த நரகத்தின் வாயிலை அடைந்ததுதான் தாமதம், அங்கிருந்து வந்து கொண்டு இருந்த அழுகையும் ஓலமும் நின்று விட்டது. என்ன வினோதம் இது, நான் இந்த வாயிலில் வந்த உடனேயே ஓலமும் அழுகையும் நின்று விட்டதே என எண்ணியவர் உள்ளே எட்டிப் பார்த்தார்.
அந்த நரகத்துக்குள் அவரால் யமராஜரின் அனுமதி இல்லாமல் நுழைய முடியாது என்பதினால் அங்கேயே நின்று கொண்டு இருந்தார். மெல்லியக் காற்று இதமாக வீசிக் கொண்டு இருக்க அவர் உடலைத் தொட்டபடி சென்ற காற்று உள்ளேயும் வீசியது. உள்ளே இருந்த ஆத்மாக்கள் வாயிலுக்கு வந்து வாயிலின் உள்ளே இருந்து அவரைக் கைகூப்பி வணங்கிக் கூறின 'ஐயா, நீங்கள் இந்த வாயிலை அடைந்த உடனேயே நாங்கள் படும் துயரங்கள் அனைத்தும் நீங்கி விட்டதை உணர்கின்றோம். எங்களுக்கு தரப்பட்டு உள்ள தண்டனை - சுட்டெரிக்கும் எண்ணைக் கொப்புரையில் எங்களை போட்டு இருந்தாலும், சாட்டை அடியை ஏற்றுக் கொண்டு இருந்தாலும், தலை கீழாக தொங்க வைத்து கீழே தணலை எரிய விட்டு இருந்தாலும் , அவை எதுவுமே எங்களுக்கு எந்த விதமான வலியையும் தரவில்லை. அதற்குக் காரணம் உங்கள் மீது பட்டுக் கொண்டே வரும் காற்று எங்களை தழுவும்போது அது சுகத்தை அல்லவா தருகிறது. ஐயா தயவு செய்து நீங்கள் எங்களுடைய இடத்தின் வாயிலிலேயே அமர்ந்து இருந்தால் போதும், எங்களுக்கு வேறு எதுவுமே தேவை இல்லை'.
அதைக் கேட்ட ஜனகரின் மனம் நெகிழ்ந்தது. அவர்கள் படும் துயரைக் கண்டவர் அப்படியே அவர் வாயிலிலேயே அமர்ந்து கொண்டார். சில மணி நேரம் கடந்ததும் யமராஜர் அங்கு வந்தார். வாயிலில் அமர்ந்து இருந்த ஜனக மகராஜவைக் கண்டு திகைத்துப் போய் அவரை மிக்க மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றார். அவர் அங்கு அமர்ந்து கொண்டு இருந்ததற்கான காரணத்தைக் கேட்டதும் யமதர்மராஜர் கூறினார் ' மரியாதைக்குறிய ஜனக மகராஜாவே, நீங்கள் இந்த ஜீவன்களுக்காக இரக்கப்படலாமா? இவர்கள் யார் தெரியுமா? சொந்த மனைவியையும், கட்டியக் கணவனையும் வஞ்சித்தவர்கள், நல்ல நட்புடன் இருந்த நண்பர்களின் மனைவிகளை கற்பழித்தவர்கள், செல்வத்திற்காக தமது குடும்பத்தினரை கொலை செய்தவர்கள், ஏழைகளையும் ஏமாற்றியவர்கள். வாழ்நாளில் ஒரு கணம் கூட கடவுளை துதிக்காதவர்கள். ஆகவேதான் நீதிக்கு ஏற்ப அவர்களுக்கு இந்த தண்டனை தரப்பட்டு உள்ளது. அவர்களுக்காக நீங்கள் வருந்தலாமா?' எனக் கேட்க ஜனகர் கூறினார் '
யமதர்மராஜாவே, நீங்கள் நீதியை நிலை நாட்ட செய்தவை போதும். இவர்களின் அழுகுரல் என் நெஞ்சத்தைப் பிளந்து விட்டது. ஆகவே இவர்களை எனக்காக விடுதலை செய்து அவர்கள் திருந்தி வாழ இன்னொரு முறை அவர்களுக்கு வாழ்க்கை தந்து பாருங்கள்'. அதைக் கேட்ட யமதர்மராஜா கூறினார் ' ஐயா இவர்கள் செய்த பாவத்துக்கு பரிகாரமாக இவர்களுக்கு ராம நாம புண்ணியப் பலன் கிடைத்தால் மட்டுமே இவர்களை நான் விடுவிக்க முடியும்' என்றார். ஜனகர் சற்றும் யோசனை செய்யவில்லை. அவர் மனம் எப்போதுமே மக்களின் நலனில் மட்டுமே இருந்ததினால் தான் அதுவரை செய்து இருந்த புண்ணியங்கள அனைத்தையும் அங்கேயே யமராஜனிடம் தந்து விட்டு அவர்களை விடுவித்து தம்முடன் சொர்கத்திற்கு அழைத்துச் சென்றார்'
நீதி
இதைக் கூறி விட்டு இதன் தாத்பர்யம் என்ன என்று கேட்டார். யாராலும் சரியான விடையை தர இயலவில்லை. ஆகவே அந்தக் கதையின் தாத்பர்யத்தை தனது சிஷ்யர்கள் சரிவர அறிந்து கொள்ளாததினால் நிர்மால்ய ரிஷி அந்தக் கதையின் தாத்பர்யத்தைக் கூறினார் "ஜனக மகராஜா தனது புண்ணியங்கள் அனைத்தையும் நரகவாசிகளுக்கு கொடுத்து அவர்களை சொர்கத்திற்கு அழைத்துச் சென்றதின் தாத்பர்யம் என்ன என்றால், ஜனக மகராஜா நரகத்தில் இருந்து மீட்டுச் சென்றவர்களில் சிலர் அவருடைய வம்சாவளியிலும் பிறப்பு எடுக்கலாம். ஜனக மகராஜா செய்துள்ள நல்ல காரியத்தின் பலனாக அப்படி பிறப்பு எடுப்பவர்கள் மனதில் நல்ல எண்ணமே நிறைந்து இருக்கும். அதனால் ஜனகரின் வம்சாவளியினரும் நல்லெண்ணம் படைத்தவர்களாகவே வாழ்ந்து இந்த பூமிக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆகவே நாம் ஒவ்வொருவரும் எந்த ஒரு நிலையில் இருந்தாலும் நல்லதையே செய்ய வேண்டும். அப்படி செய்பவர்கள் நிலத்தில் உள்ள மண்ணிற்கு சமம் ஆனவர்கள். அந்த நிலத்தை உழுது எதை பயிரிட்டாலும் அது விளைந்து நல்ல பலனை அல்லவா தரும்''.
மனிதராய்ப் பிறந்த அனைவருக்குமே வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் வருவது சகஜமே.
பணக்காரனோ அல்லது ஏழையோ, எவராயினும் சரி; மனிதராய்ப் பிறந்த அனைவருக்குமே வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் வருவது சகஜமே. அரசனாக இருந்தாலும்கூட, இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து தப்பிக்க இயலாது. விஜயநகர ராஜாவான கிருஷ்ண தேவராயருக்கும் இதுபோன்ற ஒரு நிலைமை ஒருநாள் ஏற்பட்டது!
இன்னிசையைக் கேட்டும், நர்த்தகிகள் ஆடலைக் கண்டும், அரசவை விதூஷகன் எவ்வளவோ வேடிக்கை காட்டியும்கூட அவரது மனப் பாரம் அன்று சற்றும் குறையவே இல்லை. அவர்கள் அனைவரும் பல வழிகளில் முயன்று பார்த்தும், அவரை மகிழ்ச்சியடையச் செய்ய முடியவில்லை. வேறு ஏதாவது கலை நிகழ்ச்சிகளைக் காணச் சொல்லி, சிலர் ஆலோசனை சொன்னார்கள். ராஜாங்க வேலைகளை சற்று ஒதுக்கிவிட்டு, வெளியில் எங்காவது சென்றுவரும்படி சிலர் அறிவுறுத்தினர். அவரைப் பீடித்திருக்கும் துர்த்தேவதைகளை விரட்ட ஒரு யாகம் செய்யலாமே எனச் சிலர் யோசனை கூறினர்.
இறுதியாக, தெனாலி ராமன் ஒரு யோசனை சொன்னான். "அரண்மனைக்கு வெளியே நான் சில வெகு அழகான மலர்களைப் பார்த்தேன், மஹாராஜா! நீங்கள் மட்டும் சம்மதம் தந்தால், நான் உங்களை அங்கே அழைத்துச் சென்று அவற்றை உங்களுக்குக் காட்டுவேன். அதனாலாவது உங்கள் மனக்கவலை குறைகிறதா எனப் பார்க்கலாமே' என அரசரைப் பார்த்துப் பணிவாகச் சொன்னான். சற்றே சலிப்புடன், வேண்டா வெறுப்பாக 'சரி, இதையும்தான் முயற்சி செய்து பார்ப்போமே' என தேவராயர் அதற்குச் சம்மதித்தார்.
மறுநாள் காலை, அரசரும், தெனாலி ராமனும் ஒரு ரதத்தில் ஏறி அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். நகரின் எல்லைப்புறத்தருகே சில சிறுவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சேற்றில் சில சிறுவர்கள் குதித்தனர்; சிலர் அதில் புரண்டு விழுந்து, எழுந்து ஆடிக் கொண்டிருந்தனர்; சிலர் சேற்றை ஒருவர் மீது ஒருவர் எறிந்து கும்மாளம் போட்டனர்; இன்னும் சில குழந்தைகள் அமைதியாக அமர்ந்து, சேற்றைக் குழைத்து, அவரவர்க்கு பிடித்தமான வடிவங்களைச் செய்துகொண்டிருந்தனர்.
.
இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ண தேவராயர் முகத்தில் கொஞ்சம்கொஞ்சமாக ஆனந்தம் மலரத் தொடங்கியது. ரதத்தை விட்டுக் கீழிறங்கி, அவர்களுடன் தாமும் கலந்து கொண்டார். அந்தச் சிறார்களுடன் சமமாக அமர்ந்துகொண்டு, தானும் சேற்றைக் குழைத்து, அழகழகான வடிவங்களைச் சமைத்து, அந்தக் குழந்தைகள் கைகளில் கொடுத்து மகிழ்ந்தார். அப்போதுதான் அவருக்கு 'அது' நினைவுக்கு வந்தது!
மலர்களைக் காட்டத்தானே தெனாலி ராமன் இங்கே என்னை அழைத்து வந்தான். ஆனால், இங்கேயோ ஒரு பூவைக் கூடக் காணோமே! குழப்பத்துடன் அவனைப் பார்த்து, எங்கே நீ காட்டுவதாகச் சொன்ன அழகிய மலர்கள்? இங்கே ஒண்ணுமே இல்லையே?' என்றார்.
"அரசே! இவ்வுலகைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், கள்ளமின்றி இப்படிச் சிரித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும், இந்தப் பச்சிளம் பாலகர்களைக் காட்டிலும் அழகான மலர்கள் இருக்க முடியுமா? எனக்கென்னவோ இவர்கள்தான் கடவுள் படைத்த மலர்களிலேயே மிகவும் அழகான மலர்களாகத் தோன்றுகிறது' எனத் தெனாலி ராமன் பதிலிறுத்தான்.
அதைக் கேட்ட தேவராயர், தெனாலி ராமன் கூற்றிலிருக்கும் உண்மையைப் புரிந்து கொண்டார். இனி, இதுபோல அடிக்கடி வெளியே வந்து, தனது கவலைகளை மறக்கவும் முடிவு செய்தார்.
அனுபவங்களே நல்வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
உதங்க முனிவர் என்பவர் பிருகு முனிவரின் பரம்பரையை சேர்ந்தவர். அவர் ஞானம் நிறைந்தவர். பெரும் புகழ் பெற்று இருந்தவர். தமது இளம் வயதிலேயே குருகுல வாசம் செய்து வேத கல்வியில் பாடம் பயின்றவர். ஒருமுறை அவர் குருகுலத்தில் பயின்றபோது அவர் காட்டிற்குச் சென்று சமையலுக்காக விறகு பொறுக்கிக் கொண்டு இருந்தார். தனது தலையில்
அதை வைத்துக் கொண்டு வந்து ஆஸ்ரமத்திற்கு வந்து அதை கீழே இறக்கியபோது அந்த விறகின் ஒரு சிறகு அவர் தலை முடி சடையுடன் தலை பகுதியில் இருந்த தோலைக் கிழித்து விட, கிழிந்த தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் தனது குருவிற்கு சமையலை செய்யப் போனவரை குரு அன்புடன் அழைத்து தலையை வருடிக் கொடுக்க ரத்தம் வருவது நின்றது. அது மட்டும் இல்லாமல் பிற காலத்தில் அவருக்கு தனது மகளையே மணம் செய்து கொடுத்தார்.
மகாபாரதப் போருக்குக் பின்னர் கிருஷ்ணர் உதங்க முனிவர் வசித்து வந்த வனத்தின் வழியே ஒருநாள் தனிமையில் நடந்து வந்து கொண்டு இருந்தார். உதங்க முனிவர் உண்மையில் கிருஷ்ணனே என்பதை அறிந்து கொள்ளாமல் அவரை பாண்டவர்களுக்கு உதவியவர், ஆயிரக்கணக்கான கௌரவர்களை அழித்தவர் என்று எண்ணிக் கொண்டு அவரைக் கண்ட மாத்திரத்திலேயே அவரை சபிக்க முயன்றதும், கிருஷ்ணர் அவருக்கு தான் யார், தான் எதற்காக அந்தப் பிறவியை எடுத்தேன் என்பதை எடுத்துக் கூறிய பின் தனது விஸ்வரூபத்தைக் காட்டினார். தனது தவறை உணர்ந்த உதாங்க முனிவர் அவரிடம் மன்னிப்புக் கேட்டார்.
அப்போது கிருஷ்ணர் அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அந்த முனிவரும், தாம் அங்கும் இங்கும் ஷேத்ராடனம் சென்று கொண்டே இருப்பதினால் பாலைவனப் பகுதிகளில் தான் பயணிக்கும்போது தமக்கு தாகமாக இருந்தால் உடனே அங்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தால் போதும் என்றார். கிருஷ்ணரும் அந்த வரத்தை அவருக்கு அருளினாலும், அவருடைய கர்வ பங்கத்தை அடக்க தக்க தருணம் வரட்டும் எனக் காத்து இருந்தார்.
ஒருமுறை உதங்க முனிவர் பாலைவனம் ஒன்றின் வழியே சென்று கொண்டு இருந்தார். வழிக்கு அவர் கொண்டு சென்று இருந்த கையில் இருந்த அனைத்து தண்ணீரும் செலவழிந்து விட்டது. தாகம் எடுத்தது. கிருஷ்ணரை நினைத்தார். கிருஷ்ணனும் உடனே இந்திரனை அவருக்கு தண்ணீர் தருவதற்கு அங்கு அனுப்பினார். இந்திரனிடம் அந்த முனிவருக்கு தாகமே அங்கு எடுக்காமல் இருக்க நீருடன் அமிருதத்தைக் கலந்து கொடுக்குமாறு கூறி அனுப்பினார். இந்திரனும் தன்னை ஒரு சண்டாளன் உருவில் மாற்றிக் கொண்டு அந்த பாலைவனத்தில் சென்று உதங்க முனிவர் கண்களில் படுமாறு அமர்ந்து கொண்டார். அவர் பக்கத்தில் ஒரு சுனையில் நிறைய தண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. அது இந்திரனால் மாயையாகப் படைக்கப்பட்ட நீர் சுனையாகும். அதில் அமிருதம் கலந்த நீரைக் கொட்டிக் கொண்டு இருந்தது .
தண்ணீரைத் தேடி அந்த சண்டாளரின் அருகில் சென்றதும், சண்டாளர் உருவில் இருந்த இந்திரன் இறைச்சிகளை பதப்படுத்திக் கொண்டு இருந்ததைக் கண்டு இந்த சண்டாளன் அருகில் உள்ள சுனையில் இருந்து தண்ணீர் குடிக்கக் கூடாது என எண்ணியவாறு, அங்கிருந்து நகர்ந்தார். சற்று தூரம் சென்றதும் மயக்கம் அடைந்து விழுந்தார். சிறிது நேரம் கழிந்தது. தன முகத்தில் யாரோ ஒருவர் தண்ணீர் அடிப்பதைக் கண்டு மயக்கம் தெளிந்து எழுந்தவர் முன்னால் கிருஷ்ணர் நின்று கொண்டு இருந்தார். அவரைக் கண்டதும் எழுந்து நின்று அவரை வணங்கிய உதங்க முனிவர் தனக்கு நேர்ந்த கதியைக் கூறினார். அதைக் கேட்டு சிரித்த கிருஷ்ணரும் அவருடைய அறியாமையை எடுத்துக் காட்டினார்.
''பல புனித நதிகளிலும் குளிக்கும்போது அதில் குளித்தவர்கள் யார் யார் என்று குல கோத்திரமா பார்க்கின்றாய்?. மழையினால் நிலத்தடிக்குச் செல்லும் நீர் எத்தனைபேர்களுடைய உடம்பில் பட்டு பூமிக்குள் இறங்குகின்றது. அந்த தண்ணீரை பருகும்போது அது யார் மீதெல்லாம் பட்டு பூமியில் இறங்கிற்று என்றெல்லாம் எண்ணிப் பார்க்கின்றாயா? இல்லை நிலத்தில் பயிரிடப்படும் உணவு தானியங்களுக்கு தண்ணீர் ஊற்றி யார் விளைவித்தார்கள் என்று பார்க்கின்றாயா? ஆபத்துக்கு உதவுபவர் யாராக இருந்தால் என்ன, மனித நேயத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர அவர்கள் சார்ந்துள்ள இனத்தைப் பார்ப்பது தவறு. அதனால்தான் அறியாமையினால் உனக்கு நான் இந்திரன் மூலம் அனுப்பிய அமிர்தத்தையும் உன்னால் அடைய முடியவில்லை. சரி, நடந்தது நடந்து விட்டது. இனி இந்த உண்மையை உணர்ந்து நடப்பாய் '' என்று அவரை ஆசிர்வதித்தார். அது முதல் அந்த முனிவர் தண்ணீர் வேண்டும் என நினைத்து வேண்டினால் அவர் உள்ள இடத்தில் மழை நீர் கொட்டும் என்று கூறிவிட்டுச் சென்றார். முனிவர் வெட்கி தலை குனிந்தார்.
ஒருமுறை அவர் தனது மனைவியுடன் கங்கையில் நீராடிக்கொண்டு இருந்த போது அவரது மனைவியை ஒருமுதலை இழுத்துக்கொண்டு போய் விட்டது. அப்போது தான் குரு குலத்தில் சேர்ந்த போது அவருடைய குரு முதன்முதலில் அவருக்கு உபதேசித்த போதனைகள் நினைவில் வந்தன. அவர் குரு கூறிஇருந்தார் '' வாழ்க்கையில் என்ன செய்தாலு ம், எங்கிருந்தாலு ம், எப்படி இருந்தாலும் நமக்கு என்ன முடிவு வரவேண்டும் என்ற விதி உள்ளதோ அதுவே நடக்கும். ஆகவே நம்முடைய கடமைகளை நாம் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கவேண்டும். மற்றதை நம்மை படைத்தவர் பார்த்து கொள்வார்''.
ஆனாலும் மனைவியை முதலை இழுத்துக்கொண்டு ஓடியப்பின்னர் மனத்துயரம் தாங்காமல் சிறிதுநேரம் அழுத போது, சற்று தூரத்தில் இறந்தவர் ஒரு வருடைய உடலை அவருடைய உறவினர்கள் மந்திரங்களை ஓதியவா ரே கங்கையில் வீசி விட்டுச் செல்வதைக்கண்டார். அப்போது தான் அவர் சுய உணர்வை அடைந்து உண்மையை புரிந்துகொண்டார். மோட்ஷம் தரும் கங்கையில்_அல்லவா தாம் தனது மனைவியை கங்கையில் முதலை_மூலம் அவளை படைத்தவரிடமே திருப்பி அனுப்பிவிட்டோம், அவளுக்கு ஏற்பட்டுள்ள விதிப்படியே தான் அவளுக்கு முடிவு_வந்துள்ளது. இல்லை என்றால் இந்த கங்கையில்_வந்து நான் ஏன் குளித்தேன்?
இந்த உண்மையை முனிவர் என கூறிக் கொள்ளும் நான் கூடப்புரிந்து கொள்ளவில்லையே என மனம் வருந்தினார். அதன்_பின்னர் உதங்க முனிவர் பல் வேறு இடங்களுக்கும் சென்று விட்டு தென்பகுதியை அடைந்தவர் உறையூரில் இருந்த பஞ்ச வர்ணேஸ்வரர் ஆலயத்துக்கு வந்து சிவனை_வழிபட்டார். அவர் தவத்தை மெச்சிய சிவ பெருமானும் காலை வழி பாட்டில் ரத்தின லிங்கமாகவும், உச்சிக்கால வழிபாட்டில் ஸ்படி லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன்லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்த ஜாமவழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் அவருக்கு காட்சியளித்தார்.
நீதி: புடம் போடப் போடத்தான் தங்கமும் மின்னும் என்பதைப் போல அனுபவங்களே நல்வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
போலி ஞானிகளிடமும் மக்கள் ஏமாந்து போகக் கூடாது
<இன்றைய நவீன உலகில் பதவி புகழ் ஆசை என அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கடின உழைப்பாற்ற வேண்டியுள்ளது காரணம் நவீன சாதனங்களை வாங்கி தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டியுள்ளது. இவ்வாறாக வாழ்க்கை சூழலில் தான் ஒருவாராக விடுபட எண்ணும் போது அவன் தேடுவது ஆன்மீகம்.
ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றி அறியும் ஞானமாகும், அது நம்மை ஞான மார்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் வழியேயன்றி வேறில்லை. ஆனால் இன்று உலகில் நடப்பதோ ஆன்மீகம் என்ற பெயரில் உடற்பயிற்சி, மனப்பயிற்சி, தியானப் பயிற்சி, குண்டலி யோகம், வாசிப் பயிற்சி என்று இன்னும் பலவும் கற்றுத் தருவதாக கூறி எங்கும் விளம்பரப்படுத்தி பல குழுக்களை ஊர்தோறும் அமைத்து போதிக்கப்படுகிறது.
இங்கு கற்றுத் தருபவைகள் பெரும்பாலும் இறைவனை அடையக்கூடிய ஞான மாhக்கமே அல்ல. இத்தகைய வேடதாரிகளை இனம் கண்டு கொள்ளவே சித்தர்கள் தங்கள் பாடல்களில் ஞான குரு யார்? என்று கேள்வியும் கேட்டு அவர்களே அதற்கான பதிலையும் கூறியுள்ளார்கள். சித்தர்கள் யோக ஞான ரகசியங்களை பரிபாசையில் கூறிவைத்தார்கள், இந்த பரிபாசை தெரியாதவர்கள் யோகமும், ஞானமும் அpறயாதவர்கள் என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
போலி குருமார்கள், யோக ஆசிரியர்கள், போலி ஞானிகளிடமும் மக்கள் ஏமாந்து போகக் கூடாது என்பதே சித்தர்களின் முக்கிய நோக்கமாகும். இனி சித்தர்கள் யாரை ஞானியர் என்று அறிய வழி கூறுகிறார்கள். முருகப் பெருமான் கூறுகிறார்.....
பாரப்பா ஜெகஜால ஞானியோர்கள்
பசி பொறுக்க மாட்டாமல் புரட்டுப் பேசி
ஆறப்பா வேடங்கள் தறித்துக்கொண்டு
அவன் காலில் குறடிட்டே அலைவான் பாவி....என்றும்...
காணடா வாசி நிலை காட்டச்சொல்லு
கங்கும் மதிரவியுடைய கருனை கேளு
தானடா கற்பநிலை காட்டச்சொல்லு
சாரனையும் தாரனையும் சாற்றச்சொல்லு
கோனடா குரு நிலையைக் தெரியக்கேளு குலதெய்வம் எஃதென்று குறித்துக் கேளு நூனடா நானிருக்கும் இடம்தான் கேளு
நவிலா விட்டால் பல் உதிர அடித்துத் தள்ளே என்கிறார்...
அகத்தியப் பெருமானும்
ஏகமெனும் ஒரெழுத்தின் பயனைப் பார்த்தே
எடுத்துறைக்க இவ்வுலகில் எவருமில்லை
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக்கொண்டே
அறிந்தவரென்பார் மவுனத்தை அவனை நீயும்
வேகாக்கால் சாகாத்தலை விரைந்து கேளாய்
விடுத்ததனை உறைப்பவனே ஆசானாகும்
தேகமதில் ஒரெழுத்தை காண்போன் ஞானி.
என்று ஒருவர் சற்குரு பெருமான இல்லையா என்று அறிய வழி கூறயுள்ளார். சித்தர்களின் பரிபாஷைக்கு முழு விளக்கம் அளிப்பவர்களே உண்மையான குருமார்கள். அவர்களிடம் உண்மையான ஞானத்தேடல் உள்ளவர்களை இறைவனே வழி நடத்திச் சென்று கனிகள் நிறைந்த மரங்களை நாடிச் செல்லும் பறவைகள் போல் கொண்டு
சேர்ப்பார்.
இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.
<ஒரு முனிவரின் மீது ஒருவர் எச்சிலை துப்பி விடுகிறார். கோபத்தில் அந்தமுனிவர் அவரை பார்த்து "அடேய் மூடனே! என்னை மதிக்காமல் என் மீது உமிழ்ந்து_விட்டாய். நீ பன்றியாக மாறி போவாய் என நான் உன்னை சபிக்கிறேன்" என சாபம் கொடுத்தார். சாபம்பெற்றவுடன் சந்நியாசியை உமிழ்ந்தவருக்கு ஒரு பயம் வந்தது.
அவர் தனது குழந்தைகளிடம் வந்தார். தனது மூத்த புதல்வனை பார்த்து சொன்னார், "மகனே! நான்செய்த ஒரு தவறால் பன்றியாக மாறும் சாபத்தை ஒருமுனிவர் எனக்கு தந்து விட்டார். பன்றியான பிறகு நான் எப்படி வாழப் போகிறேன் என்று எனக்கு தெரியலை. அதை நினைகும்போது பயமாக உள்ளது . அதனால் நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். நான் பன்றியாக மாறிய உடனே காட்டுக்கு சென்று விடுவேன். நான் எங்கேருந்தாலும் நீ தேடி வந்து என்னை கொன்று விடு! ஒரு பன்றியாக என்னால் வாழ முடியாது" என தெரிவித்தார் .
சிலநாட்களில் அவர் பன்றியாகி காட்டுக்குள் போய்விட்டார். தந்தையின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக மகன் தந்தையை தேடி காட்டுக்குள் குளம் குட்டைகளிலேல்லாம் தேடி அலைகிறான் . எங்கேயாவது பன்றி கூட்டங்களைப் பார்த்து விட்டால் உடனே அதன் அருகிலேபோய் "அப்பா" என அழைப்பான். அவைகள் மிரண்டு ஓடி விடும். இவனுக்கு தன் தந்தையை மனித ரூபத்தில் தெரியுமேதவிர பன்றி ரூபத்தில் தெரியாதே! எனவே தேடிக்கொண்டே இருந்தான்.
இப்படியாக இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடிவிட்டன. கடைசியாக ஒருகுளத்தங்கரை அருகிலே போய் நின்று அப்பா என கூப்பிட்டான். உடனே ஒருபன்றி வந்து நின்றது. அதன் பின்னாலேயே இன்னொரு பன்றியும் ஓடி வந்தது. குட்டிகளும் ஓடிவந்தன . பன்றி ரூபத்தில் இருந்த_தந்தை கேட்டார் "மகனே வந்து விட்டாயா?!" , "ஆமாம் தந்தையே, நீங்கள் பன்றியான உடனேயே உங்களை கொன்று விட சொன்னீர்களே! அதனால்தான் காடெல்லாம்தேடி உங்களை இப் பொழுது கண்டு பிடித்திருக்கிறேன். உங்களது கோரிக்கையை நிறைவேற்றட்டுமா?" என கேட்டான் மகன்.
அதற்கு தந்தை_அவசரமாக "வேண்டாம் மகனே வேண்டாம்! என்னை அவசரப்பட்டு கொன்றுவிடதே . நான் இங்கேயே_வாழ்ந்து இந்த இடத்திற்கேற்ப்ப ஒருதுணையையும் சேர்த்து 3 குட்டிகளையும் பெற்றாகிவிட்டது. இப்பொழுது இதுவே_எனக்கு போதுமானதாகி விட்டது. எனவேஇங்கேயே என்னை விட்டு விடு" என கேட்டுக்கொண்டார் .
இந்தக்கதை மூலமாக உபநிஷத்தில் சொல்லபடும் தர்மம் என்னவெனில் எங்கேபோய் இருக்கிறாயோ அதுவே போதுமானது என இருக்கும் இடத்திற்க் கேற்ப்ப வாழப்பழகி கொள்வது பலவிதமான துன்பங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் என்பதாகும்.
"ரோம் நாட்டில் வாழும் போது ரோமானியனாக இரு" என ஆங்கிலத்தில் ஒருவாசகம் உண்டு . இதுதான் அது. சிலருக்கு தலையனை_இல்லாமல் தூக்கம்வராது. யார் வீட்டுக்கு போனாலும் படுக்கும்போது நல்ல தலையனைவேண்டும் என பிடிவாதம் பிடிப்பார்கள். உறவு காரர்களிடம் ஒரு தலையனைக்காக முகம்சுளித்து சலித்து கொள்வார்கள். இப்படி இருக்கும் இடத்திற்க்கு தகுந்தார்போல் சின்ன சின்ன விஷயத்தைக்கூட மாற்றிக்கொள்ள மனம் இல்லாதவர்கள் யாருடனும் சகஜமாக ஒத்துப்போக மாட்டார்கள்.
இன்ன சுவையில்தான் சாப்பிடுவேன், இன்ன மாதிரி இடத்தில்தான் தங்குவேன் , இன்ன மாதிரி மனிதர்களை பார்த்தால்தான் சிரிப்பேன் என சின்ன சின்ன விஷயங்களில் பலவிதமாக மனிதர்கள் தங்களை தாங்களே ஒருவிலங்கில் பினைத்து கொள்கிறார்கள். இவர்கள் தங்கள்_வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்களாக இருப்பார்கள்.
இதுபோன்ற மன விலங்குகளை உடைத்து எரிந்துவிட்டு மிகவும் திறந்தமனதுடன் வாழ்பவர்கள் எப்போதும் நிம்மதியாக இருப்பார்கள். இதுவே உபநிஷத்தில் அழகான_கதையின் மூலம் இந்துதர்மத்தில் விளக்கப்படுகிறது.
நம்மவர்கள் இந்துதர்மத்தை கேலி செய்தும் பழித்தும் பேசி வரும் தருணத்தில் அமெரிக்காபோன்ற நாடுகளில் வெள்ளையர்கள் இந்து தர்மத்தை பற்றி நிறைய ஆராய்ச்சிசெய்து பல புத்தகங்களை வெளியிட்டுகிறார்கள். அவர்கள் உண்மையாக ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? எங்கள் நாட்டிலே மதரீதியாக சொல்லி கொடுக்கப்படாத சில விஷயங்கள் இந்துதர்மத்திலே மிக அழகாகவும் மிக ஆழமாகவும் மனதில்பதியும் வகையில் சொல்லி கொடுக்கப்படுகிறது.
அதாவது, மன கட்டுப்பாட்டுடன் வாழ்வது மற்றும் நிம்மதி என ஒருவிஷயத்தை இந்துதர்மம் அழகாக போதிக்கிறது. எப்படி வேண்டுமானாலு ம் வாழலாம் என எங்கள் கலாச்சாரத்தினால் இங்கே ஒவ்வொரு தனிமனிதரும் சுயநிம்மதி என்பதை வாழ்க்கையில் உணராமலே மரித்துப்போய் விடுகிறார்கள். இந்துவாக வாழும் ஒவ்வொருவரும் நிம்மதியாக_வாழ்வது என்பதை மிகஅருமையாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்.
இப்படி நமது மனதை மிக எளிமையாக பக்குவபடுத்த இந்து தர்மத்தை விட வெறெதுவும் இருக்கமுடியாது. மனிதன் ஒருசாபத்தால் பன்றியாக முடியுமா என கருப்புச் சட்டை முட்டாளை போல் கேள்வி கேட்காமல் இந்தக்கதை சொல்லி கொடுக்கும் ஆழ்ந்த நோக்கத்தை புரிந்து கொள்ளுவதே உண்மையான பகுத்தறிவாகும். வளரும் குழந்தைகளுக்கு இதைபோன்ற கதைகளை சொல்லிக்கொடுத்தால் அவர்கள் எதிர் காலத்தில் மிக பக்குவமான மனிதர்களாக வளர்வார்கள் என்பது மட்டும் நிச்சயம். அதனாலேயே சொல்கிறேன், இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.
மனத்தைக் கட்டி வைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
ஒரு குருவிடம் சென்ற சிஷ்யன், தனக்கு ஆத்ம ஞானம் வேண்டும் என்பதற்காக அவரிடம் வந்துள்ளதாகக் கூறினான். சிஷ்யன் மிகவும் பவ்யமாகவே நின்று கொண்டு இருந்தான். அவனை ஏற இறங்கப் பார்த்த குருவானவர் சரி என அவனை தனது குருகுலத்தில் சேர்த்துக் கொண்டார். முதலில் அவனை நதியில் குளித்து விட்டு வருமாறு கூறினார். அவன் வரும்போது ஆஸ்ரமத்து வேலைக்காரியை அவன் எதிரில் துடப்பத்தினால் பெருக்கிக் கொண்டு இருக்குமாறு கூறினார்.
குளித்து விட்டு வந்த சிஷ்யனும் தன் எதிரில் பெருக்கிக் கொண்டு இருந்த வேலைக்காரியின் முகத்தைப் பார்த்து விட்டு, 'சனியன் இத்தனை அழகாக இருந்தும் நல்ல காரியத்துக்குப் போகும்போது அபசகுனம் போல பொட்டு வைத்துக் கொள்ளாமல் எதிரில் வந்து விட்டாள்' என மனதில் திட்டிக் கொண்டே சென்றான். குருவின் முன்னால் போய் நின்றதும், அவர் அவனை ஒரு வருடம் மாட்டுத் தொழுவத்தை அலம்பும் வேலையை செய்து விட்டு வருமாறும், அதற்குப் பின்னரே ஞான மார்க்கத்தைப் போதிக்க முடியும் என்றும் கூறி அவனை மாட்டுத் தொழுவத்துக்கு அனுப்பினார். முகம் கோணாமல் சிஷ்யனும் மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டான். அது முதல் அவன் மனதில் மாடுகளைத் தவிர வேறு எதுவுமே அவன் கண்களுக்கு தெரியவில்லை என்ற அளவு மனம் பக்குவமாகியது.
ஒரு வருடம் கழிந்தது. அவனை அழைத்த குருவின் முன்னால் போனவனை மீண்டும் ஒருமுறை நதியில் குளித்து விட்டு தன்னிடம் வருமாறு அனுப்பினார். இந்த முறை அவன் குளித்து விட்டு வரும்போது அந்த வேலைக்காரியை நல்ல குங்குமத்தை இட்டுக் கொண்டு அவன் வரும் வழியில் ஒரு மூலையில் துடப்பத்துடன் நிற்குமாறு கூறினார். குளித்து விட்டு வந்த சிஷ்யனும் ஒரு மூலையில் துடப்பத்தை வைத்துக் கொண்டு கொண்டு நின்று இருந்த வேலைக்காரியின் முகத்தை பார்த்தான். 'இந்த முறை அழகாக குங்குமம் இட்டுக் கொண்டு இருக்கிறாளே, ஆனால் நல்ல சிவப்பு வண்ணத்தில் அதை இட்டுக் கொண்டு இருக்கலாம். அதற்கு மாறாக ஏன் பழுப்பு நிற சிவப்புக் கலரில் குங்குமத்தை இட்டுக் கொண்டு வந்துள்ளாள் ' என நினைத்தவாறே குருவின் முன்னால் போய் நின்றான்.
குருவின் முன்னால் போய் நின்றதும், அவர் அவனை ஒரு வருடம் ஆஸ்ரமத்துக்குத் தேவையான விறகுகளை பொறுக்கிக் கொண்டு வரும் பணியை செய்து விட்டு வருமாறும், அதற்குப் பின்னரே ஞான மார்க்கத்தைப் போதிக்க முடியும் என்றும் கூறி அவனை விறகு பொறுக்கும் வனத்துக்குள் அனுப்பினார். முகம் கோணாமல் சிஷ்யனும் அந்தப் பணியில் ஈடுபட்டான். அப்போது ஒருநாள் அவன் வனத்தில் இருந்த இன்னொரு முனிவரைக் கண்டான்.
அவர் முன்னிலையில் அமர்ந்து கொண்டு இருந்த சில சிஷ்யர்களுக்கு அவர் எதோ ஒரு கதையைக் கூறிக் கொண்டு இருந்ததைக் கண்டு, அந்தக் கதையை தானும் கேட்க எண்ணினான். தூரத்தில் மறைந்தவாறு அமர்ந்து கொண்டு அவர் கூறிக் கொண்டு இருந்தக் கதையைக் கேட்கத் துவங்கினான். அந்த முனிவர் கூறிக் கொண்டு இருந்தக் கதை இதுதான்.
''முன்னர் ஒரு காலத்தில் சௌபாரி முனிவர் (பாகவதம், விஷ்ணு புராணம், ஸ்கந்த புராணம் என அனைத்திலும் அவரைக் குறித்த பெருமையான செய்திகள் உள்ளன) என்பவர் இருந்தார். அவர் மிகவும் பிரபலமானவர். அவர் மீது அனைத்து ராஜா மகாராஜாக்களும் பெரும் மதிப்பு வைத்து இருந்தார்கள்.
ஒருமுறை அவர் தான் அதீத ஞானம் பெற வேண்டும் என்பதற்காக யமுனை நதிக் கரையில் சென்று தவத்தில் அமர்ந்து கொண்டார். தினமும் காலை யமுனையில் குளித்து விட்டு தவத்தில் அமர்வார். தினமும் அந்த நதியில் மீன்கள் ஓடியாடும். பலர் அங்கு வந்து குளிப்பார்கள். அருகில் வனம் இருந்ததினால் சில மிருகங்களும் அங்கு வரும். ஆனால் அவர் எதையும் பார்க்க மாட்டார். குளிப்பார், திரும்பிக் கூடப் பார்க்காமல் தவம் செய்யக் கிளம்பிச் சென்று விடுவார். பல காலம் அப்படி தவம் இருந்தவர் ஒருநாள் காலையில் நதியில் குளிக்கச் சென்றபோது, வழியில் அதில் இரண்டு மான்கள் சல்லாபித்துக் கொண்டு இருந்ததைக் கண்டார். அன்றுவரை எதையுமே ஒரு பொருட்டாகப் பார்க்காதவர், மான்கள் இரண்டு சல்லாபிப்பதைக் கண்டதும், ஒரு ஷணம் நின்று அவற்றைப் பார்த்தார்.
மீண்டும் குளிக்கக் கிளம்பியவரின் மனதில் அந்தக் காட்சி தொடர்ந்து கொண்டு இருக்க, நதியில் குளிக்க இறங்கியவர் எதேர்சையாக அங்கு குளிக்க வந்த மண்டாத்தா என்ற மன்னனின் ஐம்பது மகள்களையும் கண்டார். அவர்களைக் கண்டதும், மான்கள் நினைவுக்கு வந்தன. மேலாடை பாதியுடன் மட்டுமே குளித்துக் கொண்டு இருந்தவர்களின் உடல் அழகில் மனதை பறக்க விட்டார். அவர் மனதிலும் காமம் பற்றி எரிந்தது. தான் வந்த வேலையை மறந்தார். ஒரு ஷணச் சம்பவம், அவர் ஆயுளைப் பற்றிக் கொண்டு விட்டது.
அவசரம் அவசரமாக குளித்தவுடன் அந்த முனிவர் நேராக மன்னன் மண்டாத்தாவிடம் சென்று அவரது அனைத்து மகள்களையும் தான் மணக்க விரும்புவதாகக் கூற மன்னன் துணுக்குற்றான். அத்தனை உயர்ந்த முனிவரா திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்?. அதுவும் தன்னுடைய ஐம்பது பெண்களையுமே மணம் செய்து கொள்ள விரும்புகிறாரே, அது முறையா என திகைத்தான். ஆனால் வந்துள்ளவரோ மாபெரும் முனிவர். அவரிடம் என்ன கூறுவது? பெரும் முனிவருக்கு ஐம்பது பெண்களையும் மணமுடித்துக் கொடுப்பதா என்று யோசனை செய்தவன், வேறு வழியே இல்லாமல் தான் தனது அனைத்துப் பெண்களையும் அழைப்பதாகவும், அவர்களில் யார் அவரை எந்தக் குறையையுமே கூறாமல் விரும்புகிறார்களோ அவளை அவர் மணந்து கொள்ளலாம் என்றும் கூறி விட்டார். ஆனால் அவர்கள் ஏதாவது குறையைக் கூறினால் அதற்கு அவர் கோபம் அடைந்து சாபமிடக் கூடாது எனவும், அப்படி கோபத்தினால் சாபமிட்டால் , அந்த சாபம் அந்த முனிவரையே போய் சேரும் என்றும் சத்தியம் பெற்றுக் கொண்டு மறுநாள் காலை அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகக் கூறினார்.
அன்று இரவு மன்னன் தனது அனைத்து மகள்களிடமும் அந்த முனிவரின் ஆசையைக் கூறி விட்டு, அவர்கள் யாருமே அவரை ஏற்றுக் கொள்ளாமல் ஏதாவது குறையைக் கூற வேண்டும் என்றும், அப்போதுதான் அவருக்கு அவர்களை மணமுடித்துக் கொடுக்க மறுக்க முடியும் என்றும் அறிவுரைக் கொடுத்தார். மறுநாள் முனிவர் வந்தார். ஒவ்வொரு பெண்ணாக அவர் எதிரில் வந்தார்கள். முனிவராயிற்றே, அவருக்கா அவர்களின் மனதை புரிந்து கொள்ள முடியாது. வந்தவர்கள் தன்னிடம் உள்ளக் குறைகளைக் கூறும் முன்னரே வந்தவர்களின் எதிரில் தன்னை பேரழகு மிக்க இளைஞன் போல மாயையாகக் காட்ட ஒவ்வொருவரும், அவருடைய அதி சுந்தர வதனத்தைக் கண்டு அந்த உருவத்தின் மீது காமமுற்று, 'இவரை மணக்க சம்மதம்' என்று கூறிக் கொண்டே சென்று விட்டார்கள். ஆகவே வேறு வழி இன்றி மன்னன் அவருக்கு ஐம்பது பெண்களையும் மண முடித்துக் கொடுக்க வேண்டி இருந்தது.
அந்த முனிவரும் அவர்களுடன் பல ஆண்டுகள் உல்லாசமாக இருந்து நூறு பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொண்டார். அதன் பின் அவர் மனதில் மெல்ல மெல்ல காமம் அழியத் துவங்கியது. தான் செய்த பிழையை நினைத்து வருந்தினார். ஆனால் அதன் பின் அவருக்கு தவம் செய்யச் சக்தி இன்றி போய் விட்டது. ஆனாலும் அவர்கள் அனைவரையும் துறந்து விட்டு வனத்துக்குச் சென்று தனிமையில் அமர்ந்து கொண்டு தவம் செய்ய முனைந்து தோல்வி கண்டு மரணம் அடைந்தார். ஆகவே நாம் எந்த காரியத்திற்காக நம்ம அர்பணித்துக் கொண்டாலும், அதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டுமே தவிர, நம் மனதில் வேறு எந்த சிந்தனையுமே இருக்கலாகாது'' என்று அவர் கூறிய கதையைக் கேட்டதும் தான் செய்த தவறை சிஷ்யன் உணர்ந்தான்.
அது முதல் வனத்தில் இருந்து விறகுகளை பொறுக்கிக் கொண்டு ஆஸ்ரமத்துக்குச் சென்றவன் மனதில் எந்த பிற நினைவுகளுமே எழவில்லை. இப்படியாக ஒரு வருடம் கழிந்தது. அவனை அழைத்த குரு மீண்டும் ஒருமுறை அவனை நதியில் குளித்து விட்டு தன்னிடம் வருமாறு அனுப்பினார். இந்த முறை அவன் குளித்துவிட்டு வரும்போது அந்த வேலைக்காரி நல்ல குங்குமத்தை இட்டுக் கொண்டு, தன் உடம்பின் பல பாகங்கள் தெரியும் வகையில் அரைகுறை ஆடையுடன் அவன் வரும் வழியில் ஒரு மூலையில் நிற்குமாறு கூறினார். ( வேலைக்காரி என்பது அந்த குரு தன்னிடம் வந்திருந்த சிஷ்யனை சோதிக்க எண்ணி மாயையாகப் படைத்த உருவமே தவிர உண்மையில் மனித உருவில் அங்கு யாருமே இல்லை). சிஷ்யனும் குளித்து விட்டு வந்தான். வரும் வழியில் அவளை அந்தக் கோலத்தில் பார்த்தவன் மனதில் விறகுகள் மட்டுமே தெரிந்தன.குருவிடம் சென்று நின்றதும், உன்னை வேறு எதற்காகவோ வரச் சொன்னேன்.
சரி நாளைக்கு குளித்து விட்டு வா என்று மீண்டும் திருப்பி அனுப்பி விட்டார். இப்படியே சில நாட்கள் தொடர்ந்தன. குளித்து விட்டு வந்தவனின் கண்களில்படுமாறே தினமும், அந்த வேலைக்காரியும் அரைகுறை உடைகளுடன் நின்று கொண்டு இருந்தாள். ஆனால் அவனது மனதில் எந்த சலனமும் தோன்றவில்லை. அவன் மனது அத்தனை பக்குவமாகி இருந்தது. 'குரு அழைத்துள்ளார் என்ற நினைவு மட்டுமே இருந்தது'. சில நாட்கள் இப்படியே கழிய ஒரு நாள் குரு அவனைப் பார்த்துக் கூறினார் ' சிஷ்யா, உன் சேவையை எண்ணி மகிழ்ந்தேன். நீ ஏற்கனவே ஞானத்தில் பாதியைக் கடந்து விட்டாய். ஆகவே மீதி பாதியை இன்று முதல் உனக்கு போதனையைத் துவக்குகிறேன்' எனக் கூறி விட்டு அன்று முதல்அவனை தனது சீடனாக ஏற்றுக் கொண்டு ஞானோபதேசம் செய்தார்.
நீதி: அலை பாயும் மனது, சூறாவளியில் படபடக்கும் ஆடையைப் போன்றது. மனத்தைக் கட்டி வைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
ஆசை வைக்காதே! அவதிப் படாதே
ராஜா கிருஷ்ண தேவராயர் மிகுந்த மனக் கவலையுடன் அரியணையில் அமர்ந்திருந்தார். அவரது வாட்டத்தைக் கண்ட சபையினர் கவலையுற்றனர். தெனாலி ராமன் மட்டும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரருகில் சென்று, ' அரசே! ஏன் வாட்டமாயிருக்கிறீர்கள்? உங்களது மனக் கவலைக்கு என்னால் தீர்வு காண இயலுமா?' எனப் பணிவாகக் கேட்டான்.
'என் தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதவனாக ஆகிவிட்டேன் நான். சாகுந்தறுவாயில், அவருக்கு மிகவும் இஷ்டமான மாம்பழம் சாப்பிட வேண்டும் எனச் சொன்னார். என்ன விலை கொடுத்தாவது வாங்கலாம் என்றால்,அது மாம்பழம் விளையும் காலம் அல்ல என்பதால், என்னால் அவற்றை அவருக்குத் தர இயலவில்லை. இன்று அவரது திதி. இன்றாவது என்னால் அதை நிறைவேற்ற முடியுமா எனக் கவலையாக இருக்கிறது' என ராஜா சோகமாகக் கூறினார்.
இதற்கு என்ன வழி எனத் தெனாலி ராமன் யோசிக்கத் தொடங்கினான். அப்போது அருகிலிருந்த அரண்மனைப் புரோஹிதர், 'பணம் சம்பாதிக்க இது ஒரு நல்ல வழி' என எண்ணி, அரசரின் முன்னே வந்து, 'மஹாராஜா! உங்களது கவலையை நான் இப்போதே தீர்த்து வைக்கிறேன். தங்கத்தாலான மாங்கனிகளை ஒரு சில அந்தணர்களுக்குத் தானமாகத் தந்தால், அந்த ஆத்மா சாந்தி அடையும்' என விண்ணப்பித்தார்.
இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியுடன் உடனே தங்க மாங்கனிகளைச் செய்யச்சொல்லி உத்தரவிட்டார். அவை தயாரானதும், விமரிசையாக திதி கொடுத்து, தலைமைப் புரோஹிதர் உட்பட சில அந்தணர்களுக்கு ஆளுக்கொன்றாக தானமாகக் கொடுத்தார். நிலைமை இப்படியாக ஆனதில் தெனாலி ராமனுக்குத் துளிக்கூட இஷ்டமில்லை. பேராசை பிடித்த புரோஹிதருக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென முடிவு செய்தான்.
அந்த நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், தானும் தனது அன்னையின் இறுதி விருப்பமாக தானம் அளிக்க விரும்புவதாகவும், இந்த புரோஹிதர்களே அதற்கும் வந்து கௌரவிக்க வேண்டும் எனவும் அரசரிடம் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டியது போலவே செய்து தரும்படி தலைமைப் புரோஹிதருக்கும், மற்றவர்களுக்கும் ராஜா ஆணையிட்டார்.
அவர்களை அழைத்துக்கொண்டு தன் இல்லம் சென்ற தெனாலி ராமன், அவர்களை நடுக்கூடத்தில் பலகைகளில் அமரச் செய்தான். சற்று நேரம் ஆயிற்று. உணவு வரும் அறிகுறியே தெரியவில்லை. வந்திருந்த புரோஹிதர்கள் பொறுமையிழக்கத் தொடங்கும் சமயம், தெனாலி ராமன் ஒரு பெரிய ஹோம குண்டத்தை எடுத்து வந்து அவர்கள் முன் வைத்தான். அந்த நெருப்பில் ஒரு இரும்புக் கோலை நன்றாகப் பழுக்கக் காய்ச்சத் தொடங்கினான். அதைக் கண்டு வியப்படைந்த தலைமைப் புரோஹிதர், 'தெனாலி ராமா! என்ன செய்கிறாய்?' என வினவினார்.
'முடக்கு வாதத்தால் அவதிப்பட்ட என் தாய், தான் சாகும்போது, பழுக்கக் காய்ச்சின இரும்புக் கோலால் தனக்கு வலி கண்ட இடத்தில் சூடு வைக்கச் சொன்னாள். ஆனால், அப்படிச் செய்வதற்குள், அவரது உயிர் பறந்து விட்டது. என்ன செய்வது எனத் தெரியாமல் இதுவரை திகைத்திருந்தேன். இன்று நீங்கள் மன்னருக்குச் சொன்ன யோசனையைக் கேட்டதும், என் தாயின் ஆத்மாவுக்கும் ஒரு விடிவு பிறந்து விட்டது எனச் சந்தோஷம் அடைந்தேன். இன்னும் கொஞ்சம் பழுக்கட்டும். இதனால், உங்களனைவருக்கும் ஒரு சூடு வைத்தால், என் அன்னையின் ஆத்மா சாந்தி அடையும் அல்லவா?' எனப் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு தெனாலி ராமன் சொன்னான்.
அதைக் கேட்டதும், அனைத்து அந்தணர்களும் பதறிப்போய், கருணை காட்டுமறு தெனாலி ராமனை வேண்டினர். தலைமைப் புரோஹிதர், தெனாலி ராமனைப் பார்த்து, 'இதென்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது? எங்கள் மேல் சூடு வைத்தால், அதனால் எப்படி உன் அம்மாவின் ஆன்மா சந்தி அடையும்?' எனக் கோபமாகச் சொன்னார். 'அதெப்படி தொடர்பில்லாமல் போகும்? ராஜாவின் அன்னையின் ஆன்மா, உங்களுக்குக் கிடைத்த தங்க மாங்கனிகளால் சாந்தி அடையும்போது, இது மட்டும் ஏன் ஆகாது?' என மடக்கினான் தெனாலி ராமன். தெனாலி ராமன் புகட்டிய பாடத்தின் பொருள் புரோஹிதருக்கு நன்கு விளங்கியது. தங்கள் மீது இரக்கம் காட்டுமாறு வேண்டினார். தானமாகப் பெற்ற எல்லாத் தங்க மாங்கனிகளையும் திரும்பக் கொடுத்தால், அவர்களை விடுவிப்பதாக தெனாலி ராமன் கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். வேறு வழியின்றி, அவர்களும் அப்படியே செய்துவிட்டு, தப்பித்தோம், பிழைத்தோமென ஓடினர்.
சில தினங்கள் கழித்து மன்னரிடம் நடந்ததனைத்தையும் தெனாலி ராமன் விவரிக்க, தனது கவலைகள் அனைத்தையும் மறந்து, ராஜா பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினார். தெனாலி ராமனைப் பார்த்து, ' ஆனாலும் நீ அந்த எளிய அந்தணர்களை இப்படி மிரட்டி இருக்கக்கூடாது, தெனாலி ராமா. மற்றவர் கொடுக்கும் தானத்தில்தானே இவர்கள் வாழ்க்கை ஓடுகிறது' எனச் செல்லமாகக் கடிந்து கொள்ளவும் செய்தார்.
எப்போதும் பணிவாகவும்,அடக்கத்துடனும் இரு. வீண் பெருமை பேசாதே'
ஒருநாள் கிருஷ்ண தேவராயரின் அரசவைக்கு வந்த ஒரு மந்திரவாதி, தனது சாகசச் செயல்களைச் செய்துகாட்டி, அவையோரை மகிழ்விக்க அனுமதி வேண்டினான். முதலில் சற்றுத் தயங்கினாலும், சபையோரின் வேண்டுகோளுக்கிணங்கி, ராஜா அவனை அனுமதித்தார்.
ஒன்றன் பின் ஒன்றாகத் தனது சாகசங்களைக் காட்டி மந்திரவாதி அவையோரை
மகிழ்வித்தான். தங்களது தலைகளை ஆட்டியும், சந்தோஷமாகச் சிரித்தும்
தங்களது மகிழ்ச்சியை அவர்கள் தெரியப்படுத்தினர். இறுதியாக, அந்த
மந்திரவாதி ராஜாவை அணுகி, 'மஹாராஜா! இதோ எனது கையில் ஒரு கூழாங்கல்
இருக்கிறது, பார்த்தீர்களா? அதைத் தொட்டுப் பாருங்கள்' என வேண்டினான்.
'ஆம், இருக்கிறது. அதையென்ன தொட்டுப் பார்க்க வேண்டிய தேவை?' என தேவராயர்
பதிலிறுத்தார். உடனே அந்தக் கல்லைத் தன் கைக்குள் மூடி, அதன் மீது சற்று ஊதி, ஒரு சில
மந்திரங்களை உச்சாடனம் செய்து, பின்னர் வேறொரு கல்லை உருவாக்கி, அதை
மன்னரின் கையில் கொடுத்தான். அது ஒரு பளபளக்கும் வைரம்! அவையோர் அனைவரும்
ஆரவாரக் கூச்சலிட்டனர்.
அத்தோடு நிற்காமல், அந்த மந்திரவாதி, 'இதுபோலப் பல திறமைகள் என்னிடம்
இருக்கின்றன. இந்தச் சபையில் இருக்கும் எவரேனும் எனக்கு ஈடு கொடுக்க
இயலுமா?' எனப் பெருமை பேசினான். அவனது திறமையைக் கண்டு வியந்த சபையினர்,
அவனை ஆஸ்தான மந்திரவாதியாக நியமிக்க விரும்பினர்.
ஆனால், சற்றுத் தள்ளி நின்று இவையனைத்தையும் சந்தேகத்துடன் பார்த்துக்
கொண்டிருந்த தெனாலி ராமன், மந்திரவாதியின் திறமையைச் சோதிக்க எண்ணம்
கொண்டான். அரசரின் அனுமதியைப் பெற்றபின், தனது சேவகனின் காதுகளில் ஏதோ ரகசியமாகச் சொல்லிவிட்டு, 'நான் கண்ணை மூடிக்கொண்டு செய்யப்போகும் ஒரு செயலை நீ
கண்ணைத் திறந்து கொண்டே செய்ய முடியுமா?' எனச் சவால் விட்டான்.
அதைக் கேட்ட மந்திரவாதி, ஏளனமாக தெனாலி ராமனைப் பார்த்து,' நீ கண்ணை
மூடிக்கொண்டு செய்யும் ஒன்றை, கண்ணைத் திறந்து கொண்டு செய்வது கடினமா
என்ன?' என ஜம்பமாகச் சொன்னான்.
'ஓ, அப்படியா, சரி. நீ தோற்றால் உனது தலை உருளும், அதேபோல, நான் தோற்றால்
எனது தலையும் போகும். சம்மதமா?' எனத் தெனாலி ராமன் கேட்டான்.
இதற்குள்ளாக, அவனது சேவகன் ஒரு தட்டில் எதையோ வைத்து, துணியால் மூடி
எடுத்து வந்து நின்றான். அதை விலக்கிய தெனாலி ராமன், அதிலிருந்து
மிளகாய்த் தூளை கை நிறைய அள்ளி, மூடிய தன் இரு கண்களின் மீதும்
அப்பிவிட்டு, பிறகு ஒரு கைக்குட்டையை எடுத்து அதைத் துடைத்தான்.
கண்களைத் திறந்ததும், மந்திரவாதியைப் பார்த்து, 'இதோ நான் செய்தாகி
விட்டது. இப்போது உன் முறை! ......கண்களைத் திறந்து கொண்டு..!' எனச்
சொன்னான். வீண் பெருமை பேசியதால், வசமாகத் தான் மாட்டிக் கொண்டதை உணர்ந்த
மந்திரவாதி, தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, 'இப்போது என் தலையை
வெட்டுவாயா?' எனப் பரிதாபமாகக் கேட்டான்.
'அதெல்லாம் செய்ய மாட்டேன். ராஜ தரும் வெகுமானத்தை அப்படியே என் கைகளில்
கொடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்!' எனத் தெனாலி ராமன் அவனைத்
தேற்றினான்.
மந்திரவாதி சபையை விட்டுச் செல்லும்போது, அரசர் அவனைப் பார்த்து, 'உனது
திறமை குறித்து எப்போதுமே கர்வம் கொள்ளாதே. உன் வலையில் நீயே வீழ்ந்து
போவாய். எவ்வளவு திறமை இருந்தாலும், எப்போதும் பணிவாகவும்,
அடக்கத்துடனும் இரு. வீண் பெருமை பேசாதே' என அறிவுறுத்தி, சன்மானமும்
வழங்கி அனுப்பினார்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். [திருக்குறள்]
அன்ன தானம்
முன்னொரு காலத்தில் ஸ்வேது என்ற மன்னன் காசியை ஆண்டு வந்தான். அவன் காசியில் இருந்த ஒரு மன்னனின் பரம்பரையில் வந்தவன். அவனுடைய சகோதரரான சுதேவா என்பவர் பற்றிய செய்தி மகாபாரத அனுசாசன பர்வ காண்டத்தில் உள்ளது. ஸ்வேது நல்ல பண்புகளைக் கொண்டவர். தான தர்மங்களை நிறைய செய்தவர். யார் வந்து நின்றாலும் அவர்களுக்கு ஏதேனும்
கொடுத்து அனுப்புவார். ஆடை, அணிகலன்கள், பொருட்கள் என எதைக் கேட்டாலும் அவற்றை தருவார்.
அவர் கர்ணனை மிஞ்சியவர் தானத்தில். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் தனது ராஜ்ய காலத்தில் அன்ன தானம் செய்யவே இல்லை. ஒருமுறை பசியோடு வந்தவர்களுக்கு கை நிறைய பொற் காசுகளைக் கொடுத்து அனுப்பினார். இன்னொரு முறை பசியோடு வந்தவர்களுக்கு ஆடைகள், ஆபரணங்களை தந்து அனுப்பினார். இப்படியாக பசி என்று வந்தாலும் சரி, உதவி என்று வந்தாலும் சரி ஆடை, அணிகலன்கள், பொருட்கள் என பலவற்றையும் கொடுத்தாலும், வந்தவர்களுக்கு ஒரு கை அன்னமிட்டு அனுப்பியது இல்லை. அவருடைய மனதில் இருந்த எண்ணம் என்ன என்றால், பசி என்று வந்தால் அவர்களுக்கு உணவைக் கொடுத்து விட்டால் அதோடு அவர்கள் பசி அந்த நேரத்தில் மட்டுமே அடங்கும். அதன் பின் அவர்கள் சென்று விடுவார்கள். அடுத்த நாள் மீண்டும் வேறு எங்கும் சென்று பிச்சை எடுப்பார்கள். ஆகவே பொருளாகக் கொடுத்தால் அதை விற்று சில நாட்களுக்கேனும் உணவு உண்ண வழி செய்து கொள்வார்கள் என்றே எண்ணினார். ஆனால் அவருக்குப் புரியவில்லை, பசி வேலையில் சோறு கிடைக்காவிடில் பொருளையா சாப்பிட முடியும்? அமைச்சர்கள் எத்தனையோ கூறியும் மன்னன் தன்னுடைய அந்த குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.
காலபோக்கில் மன்னன் மரணம் அடைந்தான். அவன் செய்திருந்த தானங்களினால் சொர்க்க லோகத்துக்கு சென்றவன் பசியால் துடித்தான். அங்கு அவன் ஆத்மாவிற்கு உண்ண உணவு கிடைக்கவில்லை. பசியால் துடித்த ஆத்மா பிரும்மாவிடம் சென்று தான் வாழ்நாளில் செய்த தான தருமங்களைக் கூறி சொர்கலோகத்தில் உள்ள தனது நிலையைக் கூறி நியாயம் கேட்டது. பிரும்மா கூறினார் 'ஸ்வேது, நீ நிறைய தான தர்மங்களை செய்துள்ளாய். ஆனால் இந்த உலகிலேயே பெரும் தானமான அன்னதானத்தை நீ செய்யவில்லை. அதனால்தான் உனக்கு இந்த கதி வந்துள்ளது. நீ பூஉலகில் என்ன பொருட்களை தானம் செய்தாயோ, அந்தப் பொருட்கள்தான் உனக்கு இங்கும் கிடைக்கும். ஆகவே நீ செய்துள்ள புண்ணியத்தினால் உன் உடல் இன்னமும் கங்கை நதியில் மிதந்து கொண்டு இருக்கின்றது. அங்கு போய் உன் உடலை நீயே அறுத்து உண்ண வேண்டியதுதான். வேறு வழி இல்லை ' என்றார்.
தேவ ச்தூலத்தில், அதாவது உடலே இல்லாத ஒரு ஆத்மா பூமிக்குச் சென்று அங்குள்ள உடலை எப்படி உண்ண முடியும். பசி தாங்க முடியாமல் அவனை வருத்தியது. ஆகவே வேறு வழி இன்றி பூமிக்கு சென்றான். கங்கையும் பிரயாகையும் சேரும் இடத்தில் சென்று நதியில் மூழ்கி எழுந்தது. ஆனாலும் பசியும் அடங்கவில்லை, பசியைப் போக்கிக் கொள்ளும் வழி தெரியவில்லை. அந்த நதியில் குளித்தால் அனைத்து பாவங்களும் போகும் என்பதை அறிந்திருந்த ஆத்மா அதை செய்தும் பசி போகவில்லையே என வருத்தமுற்று, நதிக் கரையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கையில், நதிக் கரையில் சென்று கொண்டு இருந்த அகஸ்திய முனிவரைக் கண்டது. அகஸ்திய முனிவரிடம் ஓடோடிச் சென்ற ஆத்மா தனது நிலையைக் கூறி தனது பசியைத் தீர்த்துக் கொள்ள வழி கூறி உதவுமாறு அவரை வேண்டியது. அவரும் 'நீ பிரயாக நதிக்கரையில் அன்னதானம் செய்தால் உன் பசி அடங்கும்' என்றார். மரணம் அடைந்து தேவ சரீரத்தில் உள்ள தான் எப்படி அன்ன தானம் செய்வது என்ற கேள்வியை அது அகஸ்தியரிடம் எழுப்ப அவர் கூறினார், 'உன்னிடம் ஏதாவது பொருள் இருந்தால் அதை யாருக்காவது கொடுத்து அன்ன தானத்தை செய்யச் சொல்லி பசியைப் போக்கிக் கொள்' என்று மீண்டும் அறிவுறுத்தினார்.
மீண்டும் அதே பிரச்சனை, தேவ சரீரத்தில் உள்ளவனிடம் என்ன பொருள் இருக்க முடியும்? ஸ்தூல சரீரத்தில் இருந்தால் தன்னிடம் உள்ள பொருளைக் கயற்றிக் கொடுக்க முடியும். இப்போது எப்படி அதை செய்ய முடியும். உடலே இல்லாதவன் என்ன பொருளை வைத்திருக்க முடியும்? ஆனாலும் அவன் நம்பிக்கையை இழக்க விரும்பாமல் அகஸ்தியரிடம் தன்னுடையப் பசியைப் போக்கிக் கொள்ள தனக்கு எந்த விதத்திலாவது உதவுமாறு கேட்டு கதறினான்.
அகஸ்தியர் மனம் நெகிழ்ந்தது. ஒருகணம் யோசித்தார். அந்த மன்னன் வாழ்நாளில் பல தர்ம காரியங்களை செய்துள்ளான். யாரையும் துன்புறுத்தவில்லை. கொடுமைப் படுத்தவில்லை. அவன் செய்த ஒரே தவறு அன்ன தானம் செய்யவில்லையே தவிர அவன் செய்யாத தானமே இல்லை என்ற அளவிற்கு தானம் செய்துள்ளான். ஆகவே அவனுக்கு உதவுவது தன கடமை என்பதை உணர்ந்தார்.
'சரி அப்படி என்றால் உன் புண்ணியத்தில் ஒரு பகுதியைக் கொடு. நான் உனக்கு உதவுகிறேன்' என்றார். ஸ்வேதுவின் ஆத்மாவும் சற்றும் தயங்காமல் தனது புண்ணியத்தில் பாதியை அவரிடம் அங்கேயே கொடுப்பதாக சத்தியம் செய்து கொடுக்க, அகஸ்திய முனிவர் அந்த புண்ணியத்தை பெற்றுக் கொண்டு, தனது சக்தியினால் அதற்கு ஒரு உருவகம் கொடுத்தார். அதை ஒரு தங்க நகையாக்கி தன்னுடைய சீடரிடம் தந்தார்.
உடனே கடைவீதிக்குச் சென்று அதை விற்று, உணவுப் பொருட்களை வாங்கி வருமாறு கூறினார். அந்த சிஷ்யரும் தாமதிக்காமல் அந்த நகையை எடுத்துச் சென்று கடை வீதியில் விற்று விட்டு, அதற்க்கான பணத்தில் அரிசி, தானியங்கள், பருப்புக்களை வாங்கி உணவு தயாரித்துக் கொண்டு வந்து அகஸ்திய முனிவரிடம் கொடுக்க அவரும் அதை கங்கைக் கரையில் இருந்த அனைவருக்கும் அன்ன தானம் செய்யுமாறு கூறினார். அந்த அன்னதானத்தை செய்தவுடன் ஸ்வேதுவின் பசி உடனே ஒரு மின்னலைப் போல அகன்றது. அகஸ்திய முனிவருக்கு ஸ்வேதுவின் ஆத்மா நன்றி கூறி விட்டு, மீண்டும் மேலுலகம் சென்றுவிட்டது. அதன் பின் ஸ்வேதுவின் ஆத்மா பசி என்ற கொடுமையை அனுபவிக்கவே இல்லை.
நீதி: நம் வாழ்நாளில் நம்மால் முடிந்த அளவு மற்ற தானங்களுடன் அன்னதானமும் செய்ய வேண்டும். தானங்களின் மூலம் நமக்குக் கிடைக்கும் புண்ணியங்கள் நம்மை எந்த உலகிலும் நம்மைக் காத்து வரும். நாம் இறந்தப் பின் பொருளும், பொன்னும் நம்முடன் மேலுலகத்துக்கு வருவதில்லை. தானங்கள் பெற்றுத் தரும் புண்ணியங்களே நம்முடன் வருகின்றன. தானங்கள் பல வகை உண்டு. பொதுவாக அனைத்தையும் விட மேலான தானமான வஸ்த்ர தானத்தை மஹா தானம் என்பார்கள். ஆனால் தானங்களிலேயே சிறந்த தானம் வஸ்த்ர தானத்தை விட மேலான அன்ன தானமே. அன்ன தானத்தை மஹா தானம் என்றல்ல, மகேஸ்வர (சிவபெருமான்) என்பார்கள். அதாவது மஹேசனான சிவபெருமானின் சாட்சியாக செய்யும் தானம் என்பார்கள். ஆகவே அது பெற்றுத் தரும் புண்ணியத்திற்கு அளவே இல்லை.
ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன் அனைத்தையும் முதலில்ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்
ஒரு சிலர் எப்போதுமே எவர் மீதாவது பொறாமை கொண்டே வாழ்வர். இது நாம் அன்றாட வாழ்வில் காணும் ஒரு நிகழ்வே. தெனாலிராமன் விஷயத்திலும் இதுபோலவே நிகழ்ந்தது! அவன் மீது, ஒருவர் அல்ல; கிருஷ்ண தேவராயரின் அரசவையில் இருந்த பெரும்பாலானோர் அவனது திறமை கண்டு அவன் மீது பொறாமை கொண்டிருந்தனர்.
'தெனாலிராமன் வேண்டுமானால் புத்திசாலியாகவும், விஷய ஞானம் உள்ளவனாகவும்
இருக்கலாம்; ஆனால் அவனது எதையும் கூர்ந்து கவனிக்கும் அறிவு சற்றுக்
குறைவாக இருக்கிறது' என அவர்கள் மன்னரிடம் புகார் செய்தனர். அவனது திறமை
குறித்து மன்னருக்கு எந்தவித ஐயப்பாடும் இல்லையென்றாலும், இவர்களைச்
சமாதானம் செய்யவென, 'அப்படி ஒரு குறை இருக்கிறதென்றால், நீங்களே
பரிசோதியுங்களேன்' என அனுமதி தந்தார்.
அவர்கள் அனைவரும் தங்களுக்குள் கூடி ஆலோசித்து ஒரு திட்டம் தீட்டினர்.
அதன்படி, பொன்னாலான இரண்டு உருளைகளைக் கட்டித் தொங்கவிட்டு, அதைத்
தொடாமலேயே அவற்றுள் எது முழுத் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கிறது எனச்
சொல்ல வேண்டுமென தெனாலி ராமனைச் சோதிப்பது என முடிவெடுத்து அப்படியே
செய்தனர். ராஜாவும் தன் பங்குக்குத் தெனாலி ராமனைப் பார்த்து, 'நீ
மட்டும் சரியாகக் கண்டுபிடித்துவிட்டால், அவ்விரு உருளைகளையும் நீயே
வைத்துக் கொள்ளலாம். உனக்கு மேலும் 1000 பொற்காசுகளும் தரப்படும். ஆனல்,
அப்படிச் செய்யத் தவறினால், இவற்றைச் செய்ய எவ்வளவு தங்கம் ஆனதோ, அதை
கருவூலத்தில் கட்ட வேண்டும் அது மட்டுமல்ல, அபராதமாக நீ 1000
பொற்காசுகளைத் தர வேண்டும்' என நிபந்தனை விதித்தார். தன்னால் இதைச் செய்ய
முடியும் என உணர்ந்த தெனாலி ராமனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.
அந்தப் பந்துகளைப் பார்க்க அவன் அருகில் செல்ல முற்பட்டபோது, தூரத்தில்
இருந்தே, அதுவும் தொடாமலேயே நீ சொல்ல வேண்டும் என சபையோர் கொக்கரித்தனர்.
ஒப்புக்கொண்ட தெனாலி ராமன், குறைந்த பட்சம் அவற்றைத் தொடாமல் சற்று
அருகிலிருந்து கவனிக்க அனுமதி வேண்டினான். இது ஒப்புக்கொள்ளப் பட்டது.
அருகில் சென்ற தெனாலி ராமன் மிகக் கவனமாக அந்த இரு பந்துகளையும்
அவதானித்தான். தனது இந்த இக்கட்டான நிலையைக் குறித்து கவலைப்படுபவன்போல,
வேகமாகப் பெருமூச்சு விட்டான். அவனது தவிப்பைக் கண்ட அந்தப் பொறாமை
பிடித்தவர்களும் 'வசமாக இன்று மாட்டிக் கொண்டான் ' எனத் தங்களுக்குள்
மகிழ்ந்தனர்.
சற்றுப் பொறுத்து அங்கிருந்து நகர்ந்த தெனாலி ராமன், 'வலது பக்கத்தில்
தொங்கிக் கொண்டிருக்கும் உருளையே முழுவதும் சொக்கத்தங்கத்தால் செய்தது'
எனத் தன் முடிவைக் கூறினான். அவன் சொன்னதே உண்மையென அறிந்திருந்த
சபையினர் பேசமுடியாமல் திகைத்தனர். ராஜாவுக்கும் கூட, 'அதெப்படி தொட்டுப்
பார்க்காமலேயே உன்னால் சொல்ல முடிந்தது, ராமா? என ஆச்சரியத்துடன்
வினவினார்.
'அரசே! நான் அந்த உருளைகளை மிகக் கவனமாக நோக்கினேன். என்னால் அவற்றுள்
வேறுபாடே காண இயலவில்லை. அப்போது சட்டென என் பார்வை அவற்றைத்
தொங்கவிட்டிருந்த சங்கிலிகளின் மேல் பதிந்தது. உடனேயே எனக்குப் புரிந்து
போயிற்று. முழுவதும் தங்கத்தாலன உருளையைத் தாங்கிக் கொண்டிருந்த சங்கிலி,
மிக இறுக்கமாக இருந்தது. ஆனல், உள்ளே ஒன்றுமில்லாமல் வெளியில் மட்டும்
தங்கத்தால் செய்யப்பட்டிருந்த உருளையின் சங்கிலி நான் பெருமூச்சு
விட்டபோது லேசாக அசைந்ததைக் கவனித்தேன். எனவே, எது முழுத் தங்கத்தால்
செய்யப்பட்ட உருளை என என்னால் கண்டுபிடிக்க முடிந்தது' எனச் சொன்னான்.
அவனது இந்தப் பதிலைக் கேட்ட மஹாரஜா மிகவும் சந்தோஷம் அடைந்தார். அவனது
கவனக் கூர்மையால் தனது எதிரிகளை அவன் வெற்றி கொண்ட செயலைப் பாராட்டி,
நிபந்தனைப்படியே, அவனுக்குத் தக்க சன்மானம் அளித்தார். அவன் மீது பொறாமை
கொண்டோர் தோற்றுப்போன அவமானத்தால் தங்களது தலைகளைக் குனிந்தனர்.
அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி யிடத்தாற் செயின். - திருக்குறள்
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச்
செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.
முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். - திருக்குறள்
ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு
இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில்
ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்
தத்தாத்திரேயர்
ஜென்ம ஜென்மாந்திரங்களுக்கு முந்தைய காலம் அது. பிரபஞ்சத்தின் துவக்கமே இல்லாத காலம். புராணங்களின்படி உருவமற்று இருந்த பரமாத்மன் என்ற எதோ ஒரு சக்தி மட்டுமே இயங்கிக் கொண்டு இருந்த காலம் அது .பரமாத்மன் என்ற சக்தியே பராசக்தி எனப்படுபவள் என்றே சௌந்தர்யலஹரி, சக்தி புராணங்கள் போன்ற நூல்களில் இருந்து அறிகின்றோம். மூன்று தெய்வங்களான
பிரும்மா, விஷ்ணு , சிவன் மூவரையும் உள்ளடக்கி நின்றவள் அந்தபராசக்தி.
ஒரு முறை பரமாத்மன் என்ற அந்த உருவமற்ற சக்தி பதினான்கு உலகையும் படைக்க எண்ணி அதற்குத் தேவையானவர்களான பிரும்மா, விஷ்ணு, மகேஷ்வரர்களைப் முதலில் படைத்தாள். பிரபஞ்சத்தின் முதல் பகுதி துவங்கியது .படைக்கப்பட்ட அந்த மூவரில் படைக்கும் ஆற்றலைப் பெற்ற பிரும்மாவோ, சற்றும் தாமதிக்காமல் தான் தோற்றுவிக்கப்பட்ட உடனேயே பன்னிரண்டு உலகங்களையும்; அற்புதமான எண்ணற்ற ஜீவராசிகளையும்; படைக்கத் துவங்கினார். மனித குலம் உயிர் பெறத் துவங்கியது.
சிருஷ்டியை துவங்கிய பிரும்மாவோ அதன் ஆரம்பமாக ஏழு தேவரிஷி முனிவர்களான அங்கீரச, அத்ரி, வஷிஷ்டர், புலசா, புலத்தியா, மார்கசி, மற்றும் க்ராது என்பவர்களை படைத்தார். அப்படி படைக்கப்பட்ட பிரும்மாவின் மான சீகபுத்திரர்களில் அத்ரி முனிவர் இரண்டாமவர் ஆவார். அதைத் தொடர்ந்து பிரும்மாவின் உடலின் இருந்த அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்வேறு குணங்களைக் கொண்ட படைப்புக்கள் மெல்ல மெல்ல வெளிவரத் தோன்றிய வண்ணமே இருக்க, "முனிவர்களிலும் மேலான முனிவரான கர்த்த பிரஜா பதியும் பிரும்மாவின் ஒரு பக்கத்தில் இருந்து அவதரித்தார்".
இப்படியாக உலகம் தோன்றி சில காலம் உழன்றது. படைக்கப்பட்ட பலவுலகப் பிறவிகள் தங்கள் இஷ்டப்படி கட்டுக் கோப்பின்றி வாழத்துவங்கினர். தான்னhல் கஷ்டப்பட்டு படைக்கப்பட்ட பிறவிகள் கட்டுக்கோப்பின்றி வாழத் துவங்கினதினால் பல காலத்திற்குப் பிறகு உலக வாழ்கையினால் ஏற்பட இருந்த பின் விளைவுகளைப் பற்றி மனக் கண்ணால் கண்ட பிரம்மா கவலையுற்றார். வாழ்கையில் ஒழுக்கம் இன்றி உன்னதமான ஆன்மீக வாழ்கையை உருக்குலைத்த வண்ணம்; தான் தோன்றித்தனமாக பூவுலகப்பிறவிகள் வாழ்வதைக் கட்டுப்படுத்தி அவர்களை நல்ல நிலைக்கு வழி நடத்திச் செல்லும் ஒரு மார்கத்தைத் துவக்க எவரையாவது படைக்க வேண்டும் என்ற அவசியம் எழுந்து விட்டதை உணர்ந்தார்.
மனதில் நீண்ட நேரம் பல்வேறு நிலைமைகளையும் தீர ஆலோசித்தார். பிரகதியைப் படைத்த பொழுது அவர்களுடன் வெளி வந்திருந்த நியதிகளும் வேத மறைகளும் ஒரு உண்மையை வெளிப்படுத்தி இருந்தன. பூவுலகப் பிறவிகள் தான் தோன்றித்தனமாக வாழ்வதைக் கட்டுப்படுத்தி நல்ல நிலைக்கு அவர்களை வழி நடத்திச் செல்லும் மார்கத்தை காட்ட வேண்டும் எனில் ஆரம்பத்தில் அவர் படைத்திருந்த ஏழு தேவ ரிஷி முனிவர்களில் ஒருவரான அத்ரி முனிவருக்குப் பிறக்கும் பிள்ளையினால் மட்டுமே அதை செய்ய முடியும் என்பதே அந்த உண்மை. என்ன செய்யலாம் என நிதானமாக பல்வேறு பிரச்சனைகளையும்; ஆராய்ந்து யோசித்துப் பார்த்த பொழுது அவருக்குக் புரிந்தது அந்த உண்மை
அத்ரி முனிவர் திருமணமாகாதவர். நியதிகளின் விதிப்படி அத்ரிமுனிவர் மற்றும் அவருடைய மனைவிக்கு ஒரு உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும். அப்படி பிறக்கும் மகன் மூலமே உருக்குலைத்த வண்ணம் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆன்மீக வாழ்கையை சீர்படுத்த முடியும். அதை அவர் மூலம்; பிறக்கும் பிள்ளையினால் மட்டுமே செய்ய முடியும் என்று இருந்ததினால் திருமணமே ஆகாத அத்ரி முனிவர் மூலம் அந்த செயலை எப்படி செய்வது என்பது ஒரு பிரச்சனையாக இருந்தது.
அதற்கு முன்னோடியாக திருமணமாகாத "அத்ரிமுனிவரிடம்" சென்று திருமணம் செய்து கொள்ள அவரைசம்மதிக்க வைக்க வேண்டும்.அதற்கான காரணங்களை அவரிடம் விளக்கமாகக் கூற வேண்டும். இல்லை எனில் அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுவார். ஆகவே அவருக்கு எப்படித் திருமணத்தை நடத்தி வைப்பது , யாரை மனைவியாக அமைப்பது, இதற்கு என்ன செய்யலாம் என யோசனை செய்த பொழுது நல்ல வழி தெரிந்தது.
முனிவர்களைப் படைத்த பொழுது பிரம்மாவினால் படைக்கப் பட்டு இருந்த ஒரு மாமுனிவர்; "கர்த்த பிரஜா பதி" என்பவர் ஆவார். கர்த்த பிரஜா பதி பிறந்த பல காலத்திற்கு பின்னர் பிரம்மாவின் பேத்தியையே திருமணம் புரிந்து கொண்டு அவள் மூலம் ஒன்பது பெண்களைப் பெற்று எடுத்து இருந்தார். கர்த்த பிரஜா பதிக்குப் பிறந்திருந்த அந்த ஒன்பது பெண்களில் அதி உத்தமமானவளும் நற்குணங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்து இருந்தவள் அனுசூயா என்ற ஒரு பெண். அவளை எப்படியாவது சம்மதிக்க வைத்து அத்ரி முனிவருக்கு அவளையே திருமணம் செய்து கொடுத்து விட்டால் அவர்கள் மூலம் ஒரு பிள்ளையை பிறக்க வைத்து அந்தப் பிள்ளை மூலம் உருக்குலைத்த வண்ணம் மனிதர்கள் தொடர்ந்து கொண்டிருந்த வாழ்கையை கட்டுப்படுத்தி , அவர்களை நல் வழியில் கொண்டு செனறு உலகில் ஆன்மீக வாழ்கையை சிறப்பாக அமையவைக்கலாம் என்று நம்பி அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலானார்.
அதற்கேற்றபடி அரங்கேறி நடந்த பல் வேறு நிகழ்சிகளினால் அத்ரிமுனிவர் கர்த்த பிரஜா பதிக்குப் பிறந்திருந்த அனுசூயாவை மணந்து கொண்டார். ஆனால் விதிப்பயனாக அதிலும் பிரும்மா நினைத்தபடி நிகழ்சிகள் நடேந்தேரவில்லை திருமணம் ஆகி பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அந்தத் தம்பதியினருக்கு எந்த ஒரு மழலை செல்வமும் கிடைக்கவில்லை. மனதில் வருத்தத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்தனர். இன்னமும் தனக்கு ஒரு மழலை செல்வம் கிடைக்கவில்லையே என்று வருத்தமுற்ற அத்ரி முனிவர் தனக்கு ஒரு மழலைச் செல்வம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒற்றைக் காலில் நின்றபடி பல வருடங்கள் கடுமையான தவத்தில் இருக்கலானார்.
ஒற்றைக் காலில் நின்றபடி பல வருடங்கள் கடுமையான தவத்தில் இருந்த அவருடைய வைராக்கியததைக் கண்டு தேவர்கள் திகைத்து நின்றனர். அதுவே தக்க தருணம் என பிரும்மh நினைத்தார். மூன்று தனித் தெய்வங்களாக பிரும்மா, விஷ்ணு, சிவன் என்று தனித் தன்மைகளுடன் தாங்கள் படைக்கப் பட்டிருந்தாலும், தன் எண்ணம் ஈடேற வேண்டும் என்றால், கடுமையான தவத்தில் ஆழ்ந்து இருக்கும் அத்ரி முனிவரின் தவத்தை மெச்சும் வகையில் அவர் முன் மும்மூர்த்திகளாகச் சென்று காட்சி தரவேண்டும். அப்பொழுது தனக்கு ஒரு மழலைச் செல்வம் வேண்டும் என்று வேண்டியபடித் தவமிருக்கும் அத்ரி முனிவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர் விரும்பும் வளமான மழலைச் செல்வத்தை அளிக்க வேண்டும் அப்படிச் செய்வதின் மூலமே பிரச்சனைக்கு ஒரு வழி பிறக்கும்.
பிரும்மா நினைத்தபடியே அடுத்தடுத்து நிகழ்சிகள் நடை பெறலாயின. அத்ரி முனிவரின் தவத்தினை மெச்சி அவருக்கு மும்மூர்த்திகளும் காட்சி தந்தனர். விரைவிலேயே அவருக்கு தாங்கள் அம்சமாகவே ஒரு பிள்ளை தோன்றுவார் என்று ஆசி கூறிச் விட்டுச் சென்றனர் என்றாலும் உண்மையில் மும்மூர்த்திகளில் பகவான் விஷ்ணுவே பின்னர் அந்தப் பிள்ளையாக பிறக்க இருந்தார். அதற்க்கு ஒரு பின்னணிக் காரணம் இருந்தது. மும் மூர்த்திகளும் தாங்கள் அம்சமாகவே ஒரு பிள்ளை அவர்களுக்கு பிறப்பார் என்று ஆசி கூறிச் விட்டுச் சென்றதினால் அத்ரி முனிவர்-அனுசுயா தம்பதியினர் அடைந்த மகிழ்சிக்கு எல்iலயே இல்லை. அந்த அத்ரி முனிவரும் அனுசூயாவும் எப்படிப்பட்ட தம்பதியினர் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். கற்பின்சின்னம் அனுசூயா. தவ வலிமையின் சின்னம் அத்ரி முனிவர். நன்குசீவி முடித்ததலை, கழுத்தில் ருத்திராட்ச மாலைகள், ஒரு கையில் கமண்டலம், இன்னொரு கையில் ஒரு தண்டம்(கழி) இதுவே அத்ரி முனிவர் வைத்து இருந்தவை.
அத்ரிமுனிவரின் பெருமைகள்
அத்ரி முனிவரின் பெருமை எப்படிப்பட்டது தெரியுமா? ஒருமுறை வசிஷ்டருக்கும், விஸ்வாமித்திர முனிவருக்கும் தீராத அளவுக்குப் பகை உண்டாயிற்று. அந்த சமயத்தில் வஷிஷ்ட முனிவர் இருந்த நாட்டை ஆண்டு வந்த கல்மசபாதா என்ற மன்னன் ஒருநாள் காட்டில் வேட்டையாடச் சென்ற பொழுது அங்கு வஷிஷ்டரின் மகனைக் கண்டான். மன்னன் கல்மசபாதாவிற்கு வஷிஷ்டரின் மகன் யார் என்று தெரியாததினால், காட்டில் வேட்டையாடச் சென்ற பொழுது அங்கு இருந்த வஷிஷ்டரின் மகனைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டான். அதனால் தன்னை மரியாதைக் குறைவாக நடத்தி விட்டான் என்று வஷிஷ்டரின் மகனகளில் ஒருவரான சக்தி என்பவர் தவறாக எண்ணிக் கொண்டு கல்மாசபாதாவை ஒரு இராக்ஷசன் ஆகும்படி சாபமிட்டு விட்டார்.
அந்த சாபத்தினால் இராக்ஷசனாக மாறினான் கல்மபாதா. இராக்ஷசனாக மாறிய கல்மசபாதாவோ தெரியாமல் செய்த தன் தவறுக்கு இப்படி ஒரு தண்டனையை வஷிஷ்டரின் மகன் சக்தி தந்துவிட்டாரே என மனம் புழுங்கி; அதற்கு வஞ்சம் தீர்த்துக் கொள்ள எண்ணினான். வஷிஷ்டரின் பரம எதிரி போலசெயல்பட்டுக் கொண்டு இருந்த விஸ்வாமித்திர முனிவரிடம் சென்று தனக்கு உதவு மாறு வேண்டி நின்றான் . வஷிஷ்டருக்கு அப்படி ஒரு நிலைமை வராதா என்று எதிர் பார்த்துக் காத்திருந்த விஸ்வாமித்திர முனிவரும் உடனடியாக தன் முழு ஆதரவையும் கல்மபாதாவுக்குத் தர அதைப் பெற்றுக் கொண்டவன் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் வஷிஷ்டரின் அனைத்து மகன்களையும் பிடித்து கொன்று விழுங்கினான். மகன்கள் அனைவரையும் இழந்து நின்ற வஷிஷ்டர், மனம் துடித்துப் போய் வருத்தத்தில் ஆழ்ந்து, செய்வதறியாது அதற்கு ஒரு வழி தேடியவண்ணம் தவத்தில் அமர்ந்துவிட்டார்.
அந்த சமயத்தில் தான் வஷிஷ்டரின் மகன் சக்தியின் மனைவி கர்பமுற்று இருந்தாள்.கணவனைப் பறிகொடுத்த வருத்தத்தில் இருந்த அவளுக்கு சில மாதங்களுக்குப் பின்னர் ஒரு மகன் பிறந்தான். பிறந்த மகன் வளர்ந்து
பெரியவன் ஆனான். மெல்ல மெல்ல நடந்த முடிந்திருந்த அனைத்து நிகழ்சிகளையும் பற்றி அறிந்து கொண்டான். மனதில் கோபம் துளிர் விட்டது, அது கோபக் கனலாய் மாறியது. தன்னுடைய குடும்பத்திற்கு கல்மாசபாதா என்ற இராக்ஷசனால் ஏற்பட்ட கொடுமைக்கு பழி தீர்க்க முடிவு செய்து அனைத்து இராக்ஷசர்களையும் கூண்டோடு அழிக்க எண்ணி பெரிய யாகம் செய்யத் துவங்கினான். அந்த யாகம் வளரத் துவங்கி வெற்றி பெற்றால், வஷிஷ்டர் மற்றும் விஸ்வாமித்திர முனிவர்களுக்கு இடையிலான பகை இன்னமும் அதிகரிக்கும்;.அது உலகிற்கு நல்லது அல்ல என்பதை உணர்ந்து கொண்ட அத்ரி முனிவர், யாகம் நடந்து கொண்டிருந்த இடத்திற்குப் போய்; அந்த யாகத்தின் பலனால்; ஏற்படக் கூடிய பின் விளைவுகளைப் பற்றி வஷிஷ்டரின் பேரனிடம் விரிவாக எடுத்துக் கூறி அவன் மனதைத் தேற்றிய பின்னர் அவர் நடத்திக் கொண்டு இருந்த யாகத்தை தடுத்து நிறுத்தினார். அதன் விளைவாக வஷிஷ்டர் மற்றும் விஸ்வாமித்திர முனிவர்களுக்கு இடையே வளர இருந்த பகை குறையலாயிற்று.
அத்ரி முனிவரின் சக்திக்கு மற்றும் ஒரு சம்பவம். ஒருமுறை அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் கடுமையான போர் மூண்டதில் இரு பக்கத்தில் இருந்தும் பறந்து வந்த அம்புகளும், ஆயுதங்களும் தொடர்ந்து மழை பெய்வது போல வானில் பறந்து விழுந்த வண்ணம் இருக்க, அம்பு மழைகள் சூரிய-சந்திர ஒளிகளையே முழுவதுமாக மறைத்துக் கொண்டு நின்றன. அதனால் தேவர்கள் அந்த இருட்டில் யுத்தம் செய்ய முடியாமல் தடுமாறத் துவங்கினர். பயந்து போன தேவர்கள் அத்ரி முனிவரின் துணையை நாடி ஓட, இருட்டில் தடுமாறத் துவங்கிய தேவர்களைக் காப்பாற்ற தன் தவவலிமையினை உபயோகித்து அத்ரி முனிவர் தானே சூரிய-சந்திரனாக உதித்து ஒளிகொடுத்து யுத்தத்தில் தேவர்களுக்கு உதவி அவர்களைக் காத்தார்.
அத்ரி முனிவர் அப்படிப்பட்ட குணம் உடையவர் என்றாள் அவருடைய மனைவி அனுசூயா மட்டும் சளைத்தவராகவா இருப்பார்; ? மார்கண்டைய புராணத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் கதையை படித்தால் அவளுடைய பெருமைப்புரியும்
கோளறு பதிகம் – என்பொடு கொம்பொ(டு) ஆமை பொருள் / விளக்கம்
என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே!
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க - எலும்பு, கொம்பு, ஆமை ஓடு இவை போன்றவை மார்பில் இலங்கி நிற்க
எருதேறி ஏழையுடனே - அறவுருவாகிய எருதின் மேல் ஏறி அன்னையுடன்
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து - பொன்னால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய மாலையையும் புனலாகிய கங்கையையும் தலையில் சூடி வந்து
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு - கிருத்திகையை முதல் விண்மீனாய்க் கொண்டால் ஒன்பதாவது விண்மீனாய் வரும் பூரமும்
ஒன்றொடு - முதல் விண்மீனான கிருத்திகையும்
ஏழு - ஏழாவது விண்மீனான ஆயிலியமும்
பதினெட்டொடு - பதினெட்டாவது விண்மீனான பூராடமும்
ஆறும் - அதிலிருந்து ஆறாவது விண்மீனான பூரட்டாதியும்
உடனாய நாள்களவை தாம் - இவை போல் உள்ள பயணத்திற்கு ஆகாத நாட்கள் எல்லாமும்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே - ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.
என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே!
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க - எலும்பு, கொம்பு, ஆமை ஓடு இவை போன்றவை மார்பில் இலங்கி நிற்க
எருதேறி ஏழையுடனே - அறவுருவாகிய எருதின் மேல் ஏறி அன்னையுடன்
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து - பொன்னால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய மாலையையும் புனலாகிய கங்கையையும் தலையில் சூடி வந்து
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு - கிருத்திகையை முதல் விண்மீனாய்க் கொண்டால் ஒன்பதாவது விண்மீனாய் வரும் பூரமும்
ஒன்றொடு - முதல் விண்மீனான கிருத்திகையும்
ஏழு - ஏழாவது விண்மீனான ஆயிலியமும்
பதினெட்டொடு - பதினெட்டாவது விண்மீனான பூராடமும்
ஆறும் - அதிலிருந்து ஆறாவது விண்மீனான பூரட்டாதியும்
உடனாய நாள்களவை தாம் - இவை போல் உள்ள பயணத்திற்கு ஆகாத நாட்கள் எல்லாமும்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே - ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.
***
முதல் பாடலில் நவகோள்கள் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொன்னார். இந்தப் பாடலில் பயணத்திற்கு ஆகாத விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) என்று தள்ளப்பட்ட நாட்களும் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொல்கிறார்.
சிவபெருமான் எலும்பு மாலை, கொம்பு, ஆமை ஓடு போன்றவை அணிந்திருக்கும் காரணத்தை மற்றோரிடத்தில் காணலாம்.
ஏழையென்றது பெண் என்னும் பொருளில். இங்கு அது உமையன்னையைக் குறித்தது. ஏழைப்பங்காளன் என்று வள்ளல் தன்மையை உடையவரைக் குறிப்பது இன்று வழக்கில் உள்ளது. அது 'ஏழைப்பங்காளன்' என்னும் சொற்றொடரின் பொருள் உணராததால் வந்த வினை. ஏழைப்பங்காளன் என்று குறிப்பிடப் படும் முழுத் தகுதியும் சிவபெருமானுக்கே உண்டு. மற்றோருக்கு இல்லை. ஏழையை (பெண்ணை) தன் உடலில் ஒரு பங்காக உடையவன் என்று இதற்குப் பொருள். அப்படி மனைவிக்கு தன் உடலில் பாதியைத் தந்தவர் அண்ணலையன்றி வேறு யார்?
சோதிட நூல்களில் 27 விண்மீன்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. வார நாட்கள் ஏழும் கோள்களின் பெயர்களில் அமைந்தது போல ஒவ்வொரு மாதமும் இந்த 27 விண்மீன்களின் சுழற்சியில் வருமாறு அமைத்திருக்கின்றனர் நம் முன்னோர். நல்ல செயல் செய்யவோ எங்காவது பயணம் கிளம்பும் போதோ வார நாளைப் பார்த்தபின் அந்த நாளில் அமைந்த விண்மீனையும் பார்த்திருக்கிறார்கள். அந்த 27 விண்மீன்களில் 12 விண்மீன்களை பயணம் தொடங்க தகுதியில்லாத நாட்களாகத் தள்ளி வைத்துள்ளனர் - பூரம், பூரட்டாதி, பூராடம், மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், ஆதிரை, சித்திரை என்பவையே அவை. அவற்றில் சிலவற்றை இந்தப் பாடலில் சம்பந்தர் குறித்து அவையெல்லாமும் கூட அடியார்க்கு மிக நல்லவையே என்கிறார்.
சோதிட நூல்களில் அசுவினியில் தொடங்கி விண்மீன்களைச் சொன்னாலும் கிருத்திகையை முதல் விண்மீனாய் சொல்லும் மரபும் இருந்திருக்கிறது. மேஷம் முதல் ராசியானதால் அது அசுவினியில் தொடங்குவதால் அசுவினியை முதலாகக் கூறும் வழக்கமும் வந்தது. ஆனால் சம்பந்தரோ இங்கு கிருத்திகையை முதலாகக் கூறும் மரபைப் பாராட்டி அந்த விண்மீன்களை எண்களாகச் சொல்லியிருக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)