Monday, March 7, 2011

கணவன் அல்லது மனைவிக்கு மோசமான தசை நடக்கும் போது குழந்தை பிறக்கலாமா?

கணவன் அல்லது மனைவிக்கு மோசமான தசை நடக்கும் போது குழந்தை பிறக்கலாமா?

எனக்கு ராகு தசை முடியப் போகிறது. ஆனால் என் கணவருக்கு விரைவில் ராகு திசை துவங்குகிறது. இப்போது குழந்தை பெற்றுக் கொண்டால் அதன் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என உறவினர்கள் கூறுகின்றனர்? இதில் உண்மை உள்ளதா?
பதில்: பொதுவாக, ‘ராகு கொடுப்பான் கேது கெடுப்பான்’ என ஜோதிடத்தில் கூறுவர். எனவே ராகு தசையில் குழந்தை பெற்றுக் கொள்வது தவறு எனக் கூற முடியாது.
என்னிடம் வந்த பலரது ஜாதகத்தை கணித்ததில், அதில் பலருக்கு நல்ல யோக தசைகளில் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போனதும், ராகு தசையில் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதும் எனக்கு தெரியவந்தது.
உலகில் உள்ள அனைத்து வகையான இன்பங்களையும் அனுபவிக்க வாய்ப்பளிக்கும் கிரகம் ராகு. அந்த வகையில் குழந்தை பாக்கியத்தையும் (மழழைச் செல்வம்) அது வழங்குகிறது. எனவே, ராகு தசையில் குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. பாதிப்புகளும் ஏற்படாது.
மனைவிக்கு ராகு தசை முடிந்து கணவருக்கு ராகு தசை துவங்கும் போது அந்தத் தம்பதிகள் தாராளமாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம். எனினும், கணவருக்கு 5ஆம் இடத்தில் ராகு இருந்து ராகு தசை நடந்தால் அவர்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்கள், தீய நிகழ்வுகள் நடக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: ராகு தசையில் குழந்தைப் பெற்றுக் கொள்வதால் பாதிப்பு ஏற்படும் என அந்தத் தம்பதிகள் கருதினால், மணமுறிவு பெற்றவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர்கள் உதவலாம். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதியுதவி, பணிவிடை செய்யலாம். வாழ்ந்து கெட்ட குடும்பங்களுக்கும் உதவலாம். திருக்கருகாவூர் கோயிலில் உள்ள கருகாக்கும் அம்பிகையை வழிபடலாம்.
ஜோதிடத்தைப் பொறுத்தவரை ராகு என்பது பிதுர் (தந்தை) பாட்டன் என்றும், கேது என்பது மாத்ரு (தாய்) வழிப் பாட்டன் என்றும் கூறப்படுகிறது. எனவே அவர்களுக்கு புத்தாடை வழங்கி ஆசி பெறுவதும் பலனளிக்கும். முடிந்தால் அவர்களை குடும்பத்துடன் வைத்துக் கொள்வது நல்லது.
ஒருவேளை அவர்கள் சொந்த ஊரில் தங்கியிருந்தால், அவர்களை இரு வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை சென்று சந்திப்பதும் அல்லது தங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதும் ராகு, கேதுவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பலனளிக்கும்

சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?

சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?

முந்தைய கேள்வி ஒன்றுக்கு “சிவன் சொத்து குலநாசம்” எனக் கூறியிருந்தீர்கள். இதனைப் படித்த வாசகர் தான் சிறிய வயதில் அறியாமல் செய்த தவறுக்கு பரிகாரம் கேட்டிருக்கிறார். அவரது கேள்வி என்னவென்றால், சிறு வயதில் சிவன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த நல்லெண்ணெய் பொட்டலத்தை வீட்டிற்கு திருடி வந்தாராம்? அதுபற்றிய எண்ணம் அடிக்கடி மனதில் தோன்றி அவரை கவலை கொள்ளச் செய்கிறது. சிவன் கோயிலில் இருந்து திருடிய குற்றத்திற்கு பரிகாரமாக என்ன செய்யலாம் எனக் கேட்டுள்ளார்அந்த வாசகர் எந்தக் கோயிலில் இருந்து அந்த எண்ணெய் பொட்டலத்தைத் திருடினாரோ, அதே கோயிலுக்கு எண்ணெய் வாங்கித் தரலாம். அந்த கோயில் மூலவருக்கு அர்ச்சனையும் செய்யலாம். அதனை அவரின் பிறந்த நட்சத்திர தினத்தில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பாக, செய்த தவறை உணர்ந்து மனம் உருகி இறைவனை பிரார்த்தித்தால் மட்டுமே அவரது பாவம் விலகும். மாறாக மேற்கூறிய பொருட்களை இறைவனுக்கு அளிப்பதால் மட்டும் பாவம் விலகாது என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்வது எப்படி? நடைமுறைப் பரிகாரங்கள் உள்ளதா?

ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்வது எப்படி? நடைமுறைப் பரிகாரங்கள் உள்ளதா?
திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய ராகு, கேது ஸ்தலங்களிலும், காளஹஸ்தி போன்ற சிறப்பு பெற்ற கோயில்களிலும் பரிகார பூஜைகள் நடத்தப்படுகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், ராகு, கேது தோஷம் அல்லது ஆதிக்கம் உள்ளவர்கள் நடைமுறைப் பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும்.
உதாரணமாக, ஒருவர் ராகு, கேதுவின் ஆதிக்கத்தில் இருந்தாலும் அல்லது அவரது ஜாதகத்தில் ராகு/கேது ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செய்தாலும், ஏற்கனவே மணமுறிவு பெற்றவர்களை (ராகு ஆதிக்கம்) திருமணம் செய்து கொள்ளுங்கள் என அறிவுறுத்துவேன். இதேபோல் ஊனமுற்றவர்களுக்கும் உதவுங்கள் என்று கூறுவேன்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிவன் உள்ளிட்ட (பாம்பு தொடர்பான) கோயில்களிலுக்கு சென்று வழிபாடும் மேற்கொள்ளலாம். நவகிரகத்தில் உள்ள ராகு/கேதுவுக்கும் விளக்கேற்றலாம்.
ஜோதிடத்தில் கேது ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது தோஷம் பெற்றவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், மனவளம் குன்றியவர்களுக்கு உதவலாம். பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு உதவலாம். பழைய பள்ளிக்கூடங்களைப் புதுப்பிக்க உதவலாம். பணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பொறுப்பேற்கலாம்.

தோல் நோய்கள் குணமாக என்ன பரிகாரம் செய்யலாம்?

தோல் நோய்கள் குணமாக என்ன பரிகாரம் செய்யலாம்?
தோல் நோய்களான குஷ்டம், சொறி, சிரங்கு உள்ளிட்டவற்றால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிப்பில் இருந்து நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்.

சிவனுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம். காராம்பசுவின் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் குஷ்டம் கூட குணமாகும் என்று சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது. காராம்பசு என்று குறிப்பிட்டு கூறுவதற்கு காரணம் உண்டு. மற்ற பசுவின் பாலுக்கும் காராம் பசுவின் பாலுக்கும் சுவையிலேயே நிறைய வித்தியாசம் இருக்கும். சாதாரண பசுவின் பாலைக் கொண்டு சிவனை வணங்குவதை விட, காராம்பசுவின் பாலைக் கொண்டு சிவனை வழிபட்டால்தான் முழுமையான பலன் கிடைக்கும்.

திருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?

திருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
அதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு திருமணம் தேவையில்லை.
ஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல்/கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.
இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?

ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்? மனிதர்கள் அனைவரும் 12 ராசிகளில் அடைபட்டாலும், அவரவர் ஜனன ஜாதகத்தில் குரு சிறப்பாக அல்லது மோசமாக இருக்கும்.
இதில் சிறப்பாக இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுகின்றனர். ஆனால் ஜாதகத்தில் குரு மோசமாக அமைந்தவர்கள் அதனால் ஏற்படும் கெடுதல்களில் இருந்து தப்பிக்க பொதுவான பரிகாரம் ஏதாவது உள்ளதா?
பதில்: குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்கள் பிறக்கும் போது நல்ல தசை இருந்தால் குரு சாதகமான பலன்களையே தருவார்.
அதனால் எந்தப் பெயர்ச்சியாக இருந்தாலும், அவரவர் தசா புக்தியை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். தசா புக்தி நன்றாக இருந்தால் தற்கால கிரக அமைப்புகளால் மொத்தமாக கெடுபலன்கள் ஏற்படாது.
பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள்/ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம். எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம்.
எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும். அகதிகளுக்கு உதவலாம். வேதங்கள், உபநிடதங்களைப் படிப்பது மட்டுமின்றி அந்த நூல்களைப் புதுப்பிக்கவும், மதநல்லிணக்கம் தொடர்பான நூல்கள் வெளிவர உதவுவதும் நல்ல பரிகாரமாகும்.
மேற்கூறியவற்றை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம். நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம்.

குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?

குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?

ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவரும் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால், பிரச்சனை ஏற்படுமா? அதனை தீர்க்க என்ன பரிகாரம் செய்யலாம்?பதில்: கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் எனக் கூறுகிறோம்.
ஆனால் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏக ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது. அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும்.
ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஏகராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும்.

செவ்வாய் நீச்சம், வக்கிரம் பெற்றிருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?

செவ்வாய் நீச்சம், வக்கிரம் பெற்றிருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?

சகோதரத்துவம், ரத்தம், நிலம், மன தைரியம் ஆகியவற்றிற்கு உரியவராக செவ்வாய் கருதப்படுகிறார். எனவே ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்து விட்டால் அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு, சகோதர சச்சரவு, தைரியமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் பொதுவாக ஏற்படாது.
ஆனால் ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலோ, வக்கிரம் அடைந்திருந்தாலோ அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இதேபோல் ராசிக்கு 8இல் இருந்தாலும் சிறு விபத்துகள் ஏற்படும். எனவே அதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்கள் ரத்ததானம் செய்வதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளைப் பெற முடியும். ஒரு சிலருக்கு ரத்த தானம் செய்ய உடல்நிலை ஒத்துழைக்காது. எனவே அவர்கள் ரத்த வங்கியில் இருந்து வாங்கி, ஏழை நோயாளிகளுக்கு ரத்ததானம் செய்யலாம். இதிலும் ஓரளவு பலன் கிடைக்கும்.
அதாவது விபத்து ஏற்பட்டு அதன் மூலம் ரத்தம் இழப்பதை விட, தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்து விட்டால், விபத்துகளில் சிக்குவதையும் தவிர்க்க முடியும் என்பதற்காகவே இந்த நடைமுறைப் பரிகாரத்தை (ரத்த தானம்) செவ்வாய் மோசமாக இருப்பவர்களுக்கு வலியுறுத்துகிறேன்.

மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன?

மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன?

40, 45 வயதைக் கடக்கும் போது, வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது நாம் யாரையாவது திட்டியிருக்கிறோம், அவமானப்படுத்தியிருக்கிறோம் என்ற சிந்தனை வருகிறது. அவரை அப்படி சொல்லியிருக்கக் கூடாது, அவரைப் போய் அப்படி திட்டிவிட்டோமோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த வயதில் நாம் கூட வளராமல் இருந்திருப்போம். இப்படிப்பட்ட சிந்தனை வரும்போது, மீண்டும் அவர்களிடம் போய் என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பும் இருக்காது. இப்படிப்பட்ட உள் உளைச்சல் இருக்கும்போது என்ன பரிகாரம் செய்யலாம். இந்த மாதிரியான பாதிப்புகளுக்கெல்லாம், ஜாதகப்படி பார்த்தீர்களென்றால் குல தெய்வக் கோயில், சிலர் இஷ்ட தெய்வம் என்று சொல்வார்கள் இல்லையா, என்னதான் குலதெய்வம் இருந்தாலும் இந்த கோயிலுக்கு வந்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ அங்கு வந்து உட்கார்ந்து சில ஜபம், தபம் இதெல்லாம் செய்யலாம். அவர்களை நினைத்து, அந்த நேரத்தில் இந்த மாதிரியான கேள்வி கேட்டுவிட்டேன். அவர்கள் மனது எவ்வளவு புண்பட்டிருக்கும். கடுமையாக திட்டினேன், வனமையாகக் கண்டித்தேன். சேர வேண்டிய பங்கு சேரவிடாமல் தடுத்தேன், அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பார்கள்.
இதை அவர்களுடைய உள் மனது வரை ஆராய்ந்து பாவத்தை நினைத்து வருத்தப்பட்டாலே போதும். இதற்கு பதிலாக அவர்களுடைய சந்ததிகளுக்கு இவர்கள் உதவலாம். நான் உங்கள் அண்ணனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். மிகவும் நெருக்கமாக இருந்தோம். ஒரு காலகட்டத்தில் இரண்டு பேருக்கும் பிரச்சனை வந்துவிட்டது. இருந்தாலும் நான் உன்னை மதிக்கிறேன். உனக்கு ஏதாவது உதவி வேண்மென்றால் சொல், ஏதாவது செய்கிறேன் என்று கூறலாம், இல்லையென்றால் நோகப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவலாம். இவைகே தக்க பரிகாரங்களாகும்.

கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் எ‌ன்ன?

கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் எ‌ன்ன?
 கால சர்ப தோஷத்திற்கு என்று குறிப்பிடும்படி எதுவும் கிடையாது. கால பைரவரை வழிபட்டாலே போதும். (நாயை வளர்த்தாலே போதும். கால பைரவர் வாகனம்). உலகிலேயே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு சன்னதி இருக்கிறது. அங்கு ஒரு சிவாலயம் இருக்கிறது. அந்த பைரவர் வாகனத்தோடு, நாயோடு இல்லாமல், அமர்ந்த நிலையில் தவக்கோலத்தில் இருப்பார் கால பைரவர். அவரை வழிபட்டால் இந்த கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும். பொதுவாக கால சர்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப தோஷத்திற்கு பலன் கிடைக்கும்.
கால சர்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கு வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கிவிடும். 26இல் இருந்து 38 வயது வரை ஓரளவிற்கு பரவாயில்லை, ஒரு சிலதெல்லாம் கிளியராகும். ஆனால், 39இல் இருந்து 46 வயது வரை அதிகப்படியான உயர்வைத் தரும்.
எனவே கால சர்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவது நல்லது.

கண் திருஷ்டிக்குப் பரிகாரம் என்ன?

கண் திருஷ்டிக்குப் பரிகாரம் என்ன?

கண் திருஷ்டியைப் பற்றி நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். சமீபத்தில் நான் பார்த்தேன், ஒருவர் ஒருவிதமான கல் வைத்துக் கட்டியது போன்ற ஜெயின் ஒன்றை போட்டுக் கொண்டால் கண் திருஷ்டியால் வரக்கூடிய பாதிப்புகளை போக்கிவிடும். அதாவது கண் திருஷ்டி பட்டதென்றால் சொத்தெல்லாம் கூட கரைந்து போய்விடும் என்ற அளவிற்குப் பேசினார். இதெல்லாம் உண்மையா? இதை தடுப்பதற்கு செயின் போன்றதெல்லாம் விற்கிறார்களே, இதெல்லாம் அதனை தடுத்திடுமா?
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.
சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது. சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

மனிதனின் குணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருக்கக் காரணம்?

மனிதனின் குணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருக்கக் காரணம்?
 நமது ஜோதிடம் சந்திரனை அடிப்படையாக வைத்தது. சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை இடம் பெயர்வான். மேலும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நட்சத்திரம் என்று மாறுபடும்.எனவேதான் அன்றைய நாளின் நட்சத்திரத்திற்கு ஏற்றபடி நமது குணங்கள் மாறுபடும். சந்திரன்தான் மனோகாரகன்.எனவே அந்த நாளைய நட்சத்திரத்தின் படிதான் மனநிலை அமையும். எனவே அதன் போக்கில் சென்று அதனை காண வேண்டும்

பிறந்தநாளை தேதியில் கொண்டாடலாமா? நட்சத்திரத்தில் கொண்டாடலாமா?

பிறந்தநாளை தேதியில் கொண்டாடலாமா? நட்சத்திரத்தில் கொண்டாடலாமா? பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது சங்கக் காலத்தில் இருந்தே உள்ளது. மன்னர்கள் தங்கள் பிறந்த தினங்களில் மக்களுக்கு தங்கம், தானியம் எல்லாம் வாரி வழங்குவார்கள். தானியக் கிடங்குகளை திறப்பார்கள்.
ராஜ ராஜ சோழன், ஐப்பசி மாத சதய நாளில் பிறந்துள்ளார். அவர் பிறந்த நட்சத்திர நாட்களில்தான் சிறப்பான சேவைகைளை அவர் செய்துள்ளார். அதற்கு கல்வெட்டு சான்றுகளே உள்ளன.அந்த காலத்தில் பிறந்த தேதியை கொண்டாடுவதில்லை. நட்சத்திரத்தைத் தான் கொண்டாடியுள்ளார்கள்.ஒருவர் பிறந்த நட்சத்திரத்தன்று ஒரு பொருளை தானமாகக் கொடுத்தால் அவருக்கு அது அதிக சக்தியைக் கொடுக்கும்.தேதி என்பது முக்கியத்துவம் கிடையாது. நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டாடுவதுதான் சிறந்தது. நானும் எல்லோருக்கும் பிறந்த நட்சத்திரத்தன்று கோயில்களுக்குச் சென்று இறைவனை பூஜியுங்கள், இல்லாதவர்களுக்கு, அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம் போன்றவற்றிற்கு சென்று அவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை உதவுங்கள் என்று தான் கூறுகிறேன்.ஆடைகள் கொடுப்பது, தேவையானப் பொருட்களை வாங்கியும் கொடுக்கலாம்.தற்போது நட்சத்திர நாட்களில் கோயிலுக்குப் போய்விட்டு, இதுபோன்ற சேவைகளை செய்துவிட்டு, பிறந்த தேதியில் கேக் வெட்டிக் கொண்டாடுவது அதிகமாகிவிட்டது.
பிறந்த நட்சத்திர நாட்களில் நான்கு பேரை நமது வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவளித்து அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்வதெல்லாம் நமது ஆயுளை வளர்க்கும்

அமங்கலியானாலும் தாயாரை வைத்து நல்ல காரியம் துவக்குவது சரியா?

அமங்கலியானாலும் தாயாரை வைத்து நல்ல காரியம் துவக்குவது சரியா?
அதுதான் சரி. தாய்தான் அதை செய்ய வேண்டும். தாய் அமங்கலி என்பதால் அவர்களை செய்யக் கூடாது என்று சொல்வதெல்லாம் ரொம்பத் தவறு.
தாயைத்தான் குடியிருந்த கோயில் என்று சொல்வார்கள். கோயிலையே நாம் எப்படி நல்லது கெட்டது என்று பிரிப்போம்.தாய்க்கு உரிய கிரகம் சந்திரன். சந்திரன்தான் மனோகாரன். புத்திக்குரியவன். எனவே தாய்க்கும், புத்திக்கும் உரியது ஒரே கிரகம்தான்.அதனால்தான் தாயை தண்ணிக் கரையில் பார்த்தால் பிள்ளையை வீட்டில் போய் பார்க்க வேண்டாம் என்று சொல்வார்கள்.
தாயைப் போல பிள்ளை, நூலப் போல சேலை என்றெல்லாம் அதனால்தான் சொல்வார்கள். சந்திரன்தான் முக்கியம். ஒரு ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இருந்தால் அவர்கள் தாயை மதிப்பார்கள். தாயை மதிக்க மதிக்க அவர்கள் வளமையாவார்கள்.கணவனை இழந்த அம்மாவாக இருந்தாலும், எந்த ஒரு நல்ல நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர்களை வைத்துத்தான் அதனைத் துவக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் நிச்சயம் அந்த குடும்பத்தினர் நல்லபடியாக இருப்பார்கள். ஒரு மகன் எப்படி வந்தான். தாய் இல்லாமல் வந்துவிட்டானா? அவனது நல் வாழ்விற்காக தாய் எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்கள். அதற்காக அவர்களுக்குத்தான் எல்லா விஷயத்திலும் முதல் மரியாதைத் தர வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து வீடுகளிலும் வாஸ்து தொடர்பான பொருட்களை வைக்க வேண்டுமா?

அனைத்து வீடுகளிலும் வாஸ்து தொடர்பான பொருட்களை வைக்க வேண்டுமா? வாஸ்து என்பது பிற்காலத்தில் தோன்றியதுதான். முற்காலத்தில் வாஸ்து தொடர்பான பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை. நமது மூதாதையர்கள் மனையை கட்டும் போதே சிறப்பாக அமைத்தனர்.
வீட்டின் நடுவில் முற்றம் இருப்பது பழங்காலத்தில் நடைமுறையில் இருந்துள்ளது. அது வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்டது என்று கூறுவதுதான் சரியாக இருக்க முடியும். ஏனென்றால் பஞ்ச பூதங்களும் வீட்டிற்குள் வரும் வண்ணம் அந்த முற்றம் அமைக்கப்படும்.
காற்று, நீர் (மழை), வெப்பம் (சூரிய ஒளி), ஆகாயம், நிலம் (முற்றத்திற்கு நடுவில் துளசிச் செடி வைக்க பயன்படும் சிறு இடத்தில் உள்ள மண்) ஆகியவை வீட்டில் இருக்கும் வகையில் கட்டி விட்டால், வாஸ்து பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமே இருக்காது.
மேலும், அதுபோன்ற வீட்டை அமைத்து, தென்மேற்கு பகுதியில் (நைருதி) பணம், பீரோ உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொண்டாலே அனைத்து விடயங்களும் சிறப்பாக இருக்கும்

ஒரு சிலர் படித்திருந்தாலும் அவர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லையே?

ஒரு சிலர்  படித்திருந்தாலும் அவர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லையே? ஒருவரது ஜாதக அமைப்பில் வாக்கு ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் 2வது இடம் ஆரம்பக் கல்வியும், 4ஆம் இடம் உயர்கல்வியும், 9வது இடம் மேல்நிலை (பல்கலை, கல்லூரி) கல்வியும் குறிப்பதால் இங்கே குறிப்பிட்ட மூன்று இடங்களும் செம்மையாக இருக்க வேண்டும்.

மேற்கூறிய வீடுகளுக்கு உரிய கிரகங்களைத் தாண்டி புதன், சந்திரன் நன்றாக இருக்க வேண்டும். தேக்கி வைப்பது (அறிவாற்றல்) சந்திரன் என்றால் அதனை தக்க சமயத்தில், தக்க முறையில் வெளிப்படுத்துவது புதன்.ஆரம்பத்தில் என்ன தசை நடக்கிறது. அடுத்து என்ன தசை வரப்போகிறது என்று ஜாதக ரீதியாக அறிந்து கொண்டு படிக்கும் துறையைத் தேர்வு செய்தால் மனதில் தடுமாற்றம் ஏற்படாது.
ணவர்கள் மீது பெற்றோர் தங்களின் விருப்பத்தை திணிக்கக் கூடாது. அதேபோல் மாணவர் ஒரு துறையில் சாதிக்க விரும்பினால் அத்துறையில் அவருக்கு இருக்கும் வாய்ப்புகளை ஜோதிட ரீதியாக அறிந்து கொண்டு செயல்படலாம்.




.குழந்தைகளைப் பொறுத்த வரை என்னென்ன தசை நடக்கிறதோ அப்போது குறிப்பிட்ட துறையில் சாதிப்பார்கள். ஆனால் அந்த தசை முடிந்தவுடன் அதில் அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.ஒரு சிலருக்கு மட்டுமே வேறு வேறு தசைகள் வந்தாலும் தொடர்ந்து ஒரே துறையில் சாதிக்கும் கிரக அமைப்பு இருக்கும். உதாரணமாக ஒரு ஜாதகருக்கு சுக்கிரன் தசை முடிந்து சூரிய தசை வரும் போது, சுக்கிரனின் நட்சத்திரமான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் அமர்ந்தால், சுக்கிரனின் சேர்க்கை அல்லது பார்வை சூரியன் மீது இருப்பதால் அவர்கள் கலை ஆர்வம் மேலும் தொடரும்.உதாரணமாக கலைத்துறையில் எடுத்துக் கொண்டால் ஒரு சில இசையமைப்பாளர்கள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை வாரி வழங்குவர். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அவர்கள் இருக்கும் இடம் தெரியாது. இதெல்லாம் தசா புக்திகளின் மாற்றம்தான்.

அழகு, படிப்பு, வசதி இருந்தும் திருமணம் நடப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது? இது ஏன்?

அழகு, படிப்பு, வசதி இருந்தும் திருமணம் நடப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது? இது ஏன்?இதுபோன்ற அமைப்புள்ள ஜாதகங்கள் என்னிடம் வருவதுண்டு. சமீபத்தில் ஒரு பெற்றோர் தங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு என்னிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்தனர்.
பெண்ணைப் பார்த்தால் யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூற மாட்டார்கள். அப்படியொரு அழகு. நாட்டின் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் திட்ட மேலாளராக அப்பெண் பணியாற்றி வருகிறார். ஆண்டு சம்பளம் 6 இலக்கத்தைத் தாண்டும்.
தந்தையும் வசதியானவர் என்பதால் பெண்ணின் திருமணத்திற்குத் தேவையான நகைகளை கிலோக்கணக்கில் வாங்கி வைத்துள்ளார். ஆனால் வரும் வரன் எல்லாம் தட்டிச் சென்றதால் மனமுடைந்திருந்தனர்.
இதையடுத்து வேறு பிரிவைச் சேர்ந்த மணமகனாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஜாதகம் தேடினர். அதிலும் தோல்வியே கிடைத்தது. இதன் பின்னர் பையனைப் பிடித்திருந்தால் காதல் திருமணம் செய்து கொள்ளக் கூட பெண்ணுக்கு அனுமதி அளித்தனர். ஆனால் அப்பெண் காதல் தோல்வியைச் சந்தித்ததால் மீண்டும் காதலிக்கும் எண்ணம் எதுவும் இல்லை எனக் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இப்படி அழகு, படிப்பு, வசதி உள்ளிட்ட அனைத்தும் இருந்தும் அப்பெண்ணுக்கு திருமணம் நடைபெறததற்கு காரணம் கிரக அமைப்புகள்தான். 7,8ம் இடங்களில் அடுத்தடுத்து மோசமான கிரக அமைப்பு, கிரக நிலை காணப்பட்டது. 8வது வீட்டில் சனியும், கேதுவும் இருந்தனர்.
அப்பெண்ணுக்கு விருச்சிக லக்னம். அதற்கு 7ஆம் இடத்திற்கு உரிய கிரகமான சுக்கிரன், ராகுவுடன் இணைந்திருந்தார். மேலும், அடுத்தடுத்து வந்த தசைகள் அனைத்தும் மோசமாக இருந்தது. இப்படி படிப்பு, அழகு, செல்வம், வசதி வாய்ப்பு, அந்தஸ்து அனைத்தையும் கொடுத்து வாழ்க்கைத் துணையை மட்டும் அமையவிடாமல் கிரக அமைப்பு தடுத்து விட்டது.

இந்தச் சூழலில்தான் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்திருந்தார்கள். ஜாதகத்தைக் கணித்த நான் குறிப்பிட்ட காலகட்டத்தைக் கூறி, அதற்குள் ஒரு ஜாதகம் உங்கள் வீடு தேடி வரும். ஆனால் அந்த ஜாதகர் சிறிய ஊனத்துடன் இருப்பார்.
அந்தஸ்து, தகுதி, படிப்பு, அழகு ஆகியவற்றை கருதாமல் அவரை நீங்கள் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டால், உங்கள் மணவாழ்வு சிறப்பானதாக அமையும் என அப்பெண்ணிடம் கூறினேன்.
ஆனால் இந்தக் கருத்தை அந்தப் பெற்றொர் ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், என் மகளின் அழகிற்கும், அறிவுக்கும் ஏற்ற வரன் அமைய வாய்ப்பே இல்லையா என என்னிடம் கேட்டனர். எவ்வளவு அழகும், அறிவும் இருந்தாலும் வாழ்க்கையை வழிநடத்திச் செல்வது கிரக அமைப்புதான் என்பதால், உதித்த (பிறந்த) போது விதிக்கப்பட்டது என்ன என்பதை அறிந்து கொண்டு அதன்படி பெண்ணிற்கு மணவாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன்

திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்ததும் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்ததும் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன? பிள்ளைகளின் கிரக அமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இவர்களுக்கு காதல் திருமணமா, பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பிள்ளையின் ஜாதகத்தில் சுக்கிரன், புதன் வலுவாக இருந்தால் அவர் யாரை அழைத்து வருகிறாரோ அவர்களுக்கு அட்சதை போட்டுவிடுவது நல்லது.
ஜோதிடத்தில் நிறைய உட்கூறுகள் உள்ளன. வேறு ஜாதிப் பெண்ணை மணம் முடிப்பார், வயதில் மூத்தவர் என எத்தனையோ கூறப்பட்டுள்ளது. 7ஆம் இடத்தில் என்ன கிரகம் வலுவாக இருக்கிறதோ அதற்கு ஏற்றபடியான மணப்பெண்தான் அவருக்கு அமையும். அதோடு பூர்வ புண்ணிய ஸ்தானம் எப்படி இருக்கு என்பதையும் பார்க்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருந்தால் தனது இனத்திலேயே பெண் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பூர்வ புண்ணிய ஸ்தானம் கெட்டுப் போய், ஏழாம் இடமும் கெட்டுப் போயிருந்தால் புது உறவு, தூரத்து உறவு, வேறு மதத்தில் முடியக் கூடிய வாய்ப்பு உள்ளது. அடுத்து என்ன தசா புக்தி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். குரு பலன் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அது மிகவும் முக்கியமானது கிடையாது. நல்ல தசாபுக்தி நடந்தால் குரு பலன் இல்லாமல் கூட திருமணம் நடக்கும். திருமணம் செய்யலாம்.
ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடக்கும் போது திருமணத்தை தள்ளிப்போடலாம். அவசரமாக முடிக்காமல் நிதானமாக செய்யலாம்.
ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கும் போது, ஏழாம் இடத்தில் பாவ கிரகங்களின் தசா புக்தி நடந்தால் திருமணத்தை தள்ளிப்போடுவது நல்லது. அப்படி இல்லை என்றால் நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் அதிக இடைவெளி விடாமல் திருமணத்தை முடிப்பது நல்லது.

கணினி துறையில் சாதிக்கும் ஜாதக அமைப்பு யாருக்கெல்லாம் உண்டு?

கணினி துறையில் சாதிக்கும் ஜாதக அமைப்பு யாருக்கெல்லாம் உண்டு? கணினி துறைக்கு உரிய கிரகம் சனி. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் சிறப்பாக இருந்தால் அவர் கணினித் துறையில் சாதிப்பார் என்று கொள்ளலாம்.
அதற்கடுத்தபடியாக சனியின் நட்பு கிரகங்களான சுக்கிரனும், புதனும் வலுவடைந்து இருந்தால் கணினித் துறையில் சிறப்பான முன்னேற்றத்தை பார்க்கலாம். குறிப்பாக 10ஆம் இடம் (உத்யோக ஸ்தானம்); 3வது இடத்தில் (முயற்சி ஸ்தானம்) ஆகியவற்றில் சனி, சுக்கிரன், புதன் இருந்தால் அல்லது 10ஆம் வீட்டிற்கு உரிய கிரகத்துடன் சுக்கிரன், சனி, புதன் நல்ல விதத்தில் தொடர்பு பெற்றிருந்தாலோ அவர்கள் கணினித் துறையில் சாதனை படைப்பர்.
இத்துடன், மின்னணு துறைக்கு உரிய கிரகமான ராகுவும் அவரது ஜாதகத்தில் சுபத்தன்மை பெற்றிருந்தால் கணினித் துறையில் அவர் நம்பர்-1 ஆக விளங்குவார். எத்தனை போட்டிகள், தொழில் ரீதியான எதிரிகள் இருந்தாலும் இவருக்கு என்று

பொருந்தக் கூடிய ஜாதகங்கள் எவைக்கு எவை? தொழில் செய்ய, பங்குதாரராக ஆகியவற்றுக்கு கூறுங்கள்.

பொருந்தக் கூடிய ஜாதகங்கள் எவைக்கு எவை? தொழில் செய்ய, பங்குதாரராக ஆகியவற்றுக்கு கூறுங்கள். எந்த ஒருவர் ஜாதகத்திலும் அந்த ஜாதகத்தில் எந்தக் கிரகம் பலம் பெற்றுள்ளது என்பதை அடையாளம் காண வேண்டும். அறிவியிலில் இயங்கு தசை, இயக்கு தசை என்று இருப்பது போல, கிரகங்களிலும் ஒருவருடைய ஜாதகத்தில் இயங்கும் கிரகம், இயக்கும் கிரகம் என இரு பிரிவுகள் காணப்படும்.உதாரணத்திற்கு ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். அதனை இயக்கும் உரிமையாளர் சுக்கிரன் அவருடைய ஜாதகத்தில் பலவீனமாக காணப்பட்டாலோ அல்லது சுக்கிரன் வலிமையாக இருந்து அதை விட வலிமையாக அதன் எதிர் கிரகமான குரு காணப்பட்டாலோ அவரிடம் ரிஷப ராசிக்கான குணங்கள் குறைவாகக் காணப்படும்.
இயக்கும் கிரகம் எந்த ராசிக்கு உரிமையானதோ அந்தக் குணம் அவரிடம் காணப்படும். எனவே பொருத்தங்களை மிக துல்லியமாகப் பார்க்க வேண்டும். மேலோட்டமாக மேஷத்திற்கு, கடகம் நட்பு, ரிஷபம் - கன்னி நட்பு, மிதுனம் - சிம்மம் நட்பு என்று பார்த்து பங்குதாரர்களையோ வாழ்க்கைத் துணையையோ அமைத்துக் கொள்ளாமல் அவரவர்கள் பிறந்த ராசிநாதனின் பலம், லக்னாதிபதியின் பலம் என ஆராய்ந்து வியாபார பங்குதாரர்களையோ, வாழ்க்கைத் துணையையோ அமைத்துக் கொண்டால் அது நீடித்து நிலைக்கும்.

அறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?



அறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?

அவசரத்திற்கு கால, நேரம் கிடையாது. அது விதி விலக்கு.
அவசரத்திற்கு கால, நேரம் கிடையாது. அது விதி விலக்கு.
அந்த காலத்தில் மருந்தை உட்கொள்ளத் துவங்குவது அமாவாசை அன்றுதான். அப்பொழுது ஆத்மகாரகன் சூரியனுடன், உடல்-மனோகாரகன் சந்திரன் ஒரு புள்ளியில் மையம் கொள்ளும், இணையும் நாள். நமது உடலும் இரு பாகமாகத்தான் இருக்கிறது. உலகே ஆண், பெண் என்றும், நாசியிலும் சூரிய நாடி, சந்திர நாடி என்று எல்லாமே இரண்டுதான். எனவே இந்த இரண்டும் இணையக் கூடிய நாள் அமாவாசை என்பதால் அந்த நாளில் சிகிச்சையை துவக்கினால் நோய் முற்றிலும் குணமடையும்.
பொதுவாக சிகிச்சைக்கு உகந்தது என்பதற்கு "காக்கையர் நாடி" என்ற நூல் என்ன கூறுகிறது என்றால், பெளர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை நாட்களில் சிகிச்சை மேற்கொண்டால் நோய் வளராமல் தேய்ந்துவிடும் என்கிறது.அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்க, அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப திதி, நட்சத்திரத்தை பார்த்து முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக லக்னாதிபதி, ராசிநாதன் இவர்கள் இருவரின் அஸ்தட்சம், வக்கிரம், பகைக்கோள் சேர்க்கை, பாவக் கோள் பார்வை இல்லாமல் இருக்கும் நாளை தேர்ந்தெடுக்க வேண்டும்.சந்திராஷ்டமம் குறிக்கிடாமல் இருப்பது மிக முக்கியம். ஜென்ம தாரை, விபத்துத் தாரை, பகைத் தாரை, வதைத் தாரை நட்சத்திரங்களை தவிர்க்க வேண்டும்.

க‌ல்‌வியை‌ப் பொறு‌த்தம‌ட்டி‌ல் ஜோ‌திட ‌ரீ‌தியாக எ‌வ்வாறு பா‌ர்‌‌க்‌கி‌றீ‌ர்க‌ள்?

க‌ல்‌வியை‌ப் பொறு‌த்தம‌ட்டி‌ல் ஜோ‌திட ‌ரீ‌தியாக எ‌வ்வாறு பா‌ர்‌‌க்‌கி‌றீ‌ர்க‌ள்?

த‌ங்களுடைய ‌பி‌ள்ளைகளை மரு‌த்துவராகவோ, பொ‌றியாளராகவோ மெ‌ன்பொரு‌ள் நெ‌றிஞராகவோதா‌ன் ஆக வே‌ண்டு‌ம் எ‌ன்று பெ‌ற்றோ‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர். அதாவது வருவாயை‌த் தர‌க் கூடிய க‌ல்‌வி‌க்கே மு‌க்‌கிய‌த்துவ‌ம் தர‌ப்படு‌கிறது.
பெ‌ற்றோ‌ர்க‌ள் த‌ங்களது ‌பி‌ள்ளைக‌ளி‌ன் க‌ல்‌வி ஆ‌ர்வ‌‌த்‌தி‌ன் ‌மீது கவன‌ம் செ‌லு‌த்த மறு‌க்‌கிறா‌ர்க‌ள். க‌ல்‌வியை‌ப் பொறு‌த்தம‌ட்டி‌ல் ஜோ‌திட ‌ரீ‌தியாக எ‌வ்வாறு பா‌ர்‌‌க்‌கி‌றீ‌ர்க‌ள்?கல்வி என்பது ஆய்விற்குட்பட்ட ஒரு விஷயம். சங்க காலத்தில் கல்வி‌யி‌ல் புத்திமானாவா‌ன், பண்டிதனாவான், கணிதத்தில் வல்லவனாவான், நிபுணனாவான் என்றெ‌ல்லால் சொல்வார்கள். இப்பொழுது கல்வி வானளாவ வளர்ந்துள்ளது.பொதுவாக புதன் ‌கிரகமே கல்விக்குரியவன். அதாவது வித்தைக்குரியவன். கற்றல் என்பது எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேற்கொண்டு க‌ற்க வே‌ண்டும் என்கின்ற எண்ணத்தைக் கொடுப்பதே புதனாவா‌ன்.லக்னத்தி‌ல் இரு‌ந்து 2வது வீட்டில் என்ன கிரகம் அமைந்துள்ளதோ அதைப் பொறுத்து குழந்தைக்கு ஆரம்பக் கல்வி அமையும். 4வது இடம் அ‌ல்லது ‌வீடு உய‌ர் கல்வியை கு‌றி‌க்க‌க் கூடியது. 9வது இடம் மே‌‌ற்படி‌ப்பை கு‌றி‌க்க‌க் கூடியது. இது ஆராய்ச்சிக் கல்வி (பி.ஹெச்டி.) வரை சொல்லலாம். ஆக 2, 4, 9 இட‌ங்களை‌ப் பொறுத்துதான் கிரகங்களின் செயல் இருக்கும். இந்த இடங்களுக்கான கிரகம் வந்து சுப கோள்களுடன் சேர்ந்திருப்பது அல்லது சுப ஆதிபத்யம் பெற்ற கிரகங்களுட‌ன் சே‌ர்‌ந்‌திரு‌ப்பது பொறு‌த்து க‌ல்‌வி வா‌ய்‌ப்பு அமையு‌ம். எனவே, என்னதான் தாய், தந்தையர் வற்புறுத்தினாலும், காலப்போக்கில் இவர்களுடைய கிரக அமைப்பிற்கு தகுந்தார் போலதான் யு.ஜி.ல எ‌ன்ன பண்ணியிருந்தாலும், பி.ஜி.ல கிரக அமைப்‌பு ஒ‌த்து வ‌ந்தா‌ல் ம‌ட்டுமே மே‌ற்படி‌ப்பு தொடரு‌ம். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்ச எவ்வளவோ பேர் எம்.பி.ஏ. படிச்சு துறை மாறியிருக்காங்க. நம்முடைய கிளைண்ட்ல நிறைய பேர் முதல்ல காசு வர்ற துறைனு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு, அப்புறம் ·பாரின் போய் எம்.பி.ஏ. படிச்சு மா‌றி‌யிரு‌க்கா‌ங்க. ஆகவே, துறையைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதுதான் ஒரு குழந்தையுடைய வெற்றின்னு நாம சொல்லலாம்.தாய் தந்தையர் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை சொல்லிக் கொடுப்பது போல, அவங்க எந்தத் துறையில ஷைன் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சு சேர்த்துவிட்டாங்கன்னா அதுதான் அவங்களுடைய பெரிய குறிக்கோளாக இருக்கும்.இதை எந்த இடத்தில் செய்ய வேண்டும்?

பால பருவத்திலேயே அதை நாம் தேர்வு செய்யறது ந‌ல்லது. ஒரு குடும்பம் வந்திருந்தாங்க. அந்தக் குழந்தைக்கு செவ்வாய் உச்சம், குரு ஆட்சி, இந்திய அரசமைப்புச் சட்டம், ஆட்சி அதுக்கான கோள்களெல்லாம் நல்லா இருந்தது. அதை பார்த்துட்டு ஐ.ஏ.எஸ். படிக்க வையுங்க‌‌‌ள்னு சொன்னோம். அதுக்கு தகுந்தமாதிரி புத்தகங்கள் வாங்கி கொடுக்கிறது, எப்பவும் நியூஸ் பேப்பர் படிக்க வைக்கிறோம் அப்படிங்கறாங்க.
பால பருவத்‌தி‌ல் இதை‌ச் செ‌ய்யாதவ‌ர்க‌ள் குறைந்தபட்சம் 13, 14வது வயதுல, அதாவது 10வது முடிச்சு 11வது சேரும் போது மாணவ‌ர்க‌ள் ‌விரு‌ப்ப‌ப் பாட‌த்தை தே‌ர்வு செ‌ய்‌கிறா‌ர்க‌ள்‌. அந்த நேரத்தி‌ல் சரியான துறையைத் தேர்ந்தெடுக்க வே‌ண்டு‌ம். அதுதான் முக்கியம். அ‌ந்த ‌‌நிலை‌யி‌ல்தா‌ன் நிறைய பேர் நம்மை அணுகு‌கிறா‌ர்க‌ள். சில பேர் பிறக்கும் போதே ஜாதகத்தை கணிச்சு செய்‌கிறா‌ர்க‌ள்.
குழந்தை பிறக்கும் போதே எந்தத் துறையில சேர்க்கலாம்னு முடிவு செ‌ய்‌கிறா‌ர்க‌ள். அத‌ற்கே‌ற்ற பள்ளியை‌த் தேர்வு செ‌ய்து சே‌ர்‌க்‌கி‌ன்றோ‌ம் எ‌ன்று கூறு‌கிறா‌ர்க‌ள். மற்றவங்களெல்லாம், அதாவது அப்பா ஒரு துறை, அம்மா ஒரு துறைன்னு இருக்கிறவங்களெல்லாம் 10வது முடிச்சு 11வது சேரும் போது எந்தத் துறையை தேர்ந்தெடுக்கலாம் எ‌ன்று அ‌றிய வரு‌கிறா‌ர்க‌ள்.
இ‌ப்படி பா‌ர்‌க்கு‌ம் போது அ‌ந்த ஜாதகரு‌க்கு ஏழரை சனி, அஷ்டமத்து சனி நட‌ந்து கொ‌ண்டிரு‌ந்தா‌ல் அவ‌ரி‌ன் அ‌றிவு‌த்‌திற‌ன் குறையும். அதாவது ந‌ன்றாக படி‌த்‌திரு‌ப்பா‌ர். ஆனா‌ல் ச‌ரியாக எழு‌தி‌யிரு‌க்க மா‌ட்டா‌ர். ஏழரை சனி, அஷ்டமத்து சனி க‌ல்‌வி‌ப் பருவ‌த்‌தி‌‌‌‌ல் குறு‌க்‌கி‌ட்டா‌‌ல் க‌ல்‌வி‌‌யி‌ன் ‌மீதான கவன‌ம் முழுமையாக இரு‌க்காது. இதை ந‌ன்கு உண‌ர்‌ந்து நா‌ம் நட‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
. ஆக, 2, 4, 9 ஆ‌ம் இட‌த்தை‌ப் பா‌ர்‌‌ப்பது மட‌்டும‌ல்லாம‌ல், இந்தக் காலப் பருவத்‌தி‌ல், விடலைப் பருவத்‌தி‌ல் எந்த தசாபுத்தி நடக்‌கிறது எ‌ன்று பார்க்க வே‌ண்டும். கல்வியில ஈடுபாடுள்ள, ஈர்ப்பு சக்தியுள்ள, நினைவாற்றல் தூண்டக்கூடிய கிரக அமைப்புகள் தசாபுத்தியி‌‌ல் நட‌க்‌கிறது எ‌ன்றா‌ல் எவ்வளவு பெரிய சவாலான படி‌ப்பாக இரு‌ந்தாலு‌ம் நாம அவனை‌ச் சேர்க்கலாம். இ‌ல்லையெ‌ன்றா‌ல் குழந்தையினுடைய ஜாதகத்தை வச்சு எடை போடலாம். மந்த திசை நட‌ந்தா‌ல், அப்ப அத‌ற்கே‌ற்ற மாதிரி சாதாரண ப‌ள்‌ளி‌யி‌‌ல் சே‌ர்‌க்கலா‌ம்.சமூக‌த்‌தி‌ல் ந‌ம்முடைய உய‌ர் ‌நிலையை அடி‌ப்படையாக‌க் கொ‌ண்டு வாயை‌த் ‌திற‌ந்தாலே எ‌ல்லாவ‌ற்றையு‌ம் சொ‌ல்‌லி‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌தி‌ர்பா‌ர்‌ப்பை எ‌ல்லா‌ம் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். ‌கிரக‌ங்க‌ளி‌ன் பா‌தி‌‌ப்பு இரு‌க்கு‌ம்போது அவ‌ன் பாதை மா‌றி‌விடாம‌ல் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். மு‌க்‌கியமாக தா‌ழ்வு மன‌ப்பா‌ன்மை ஏ‌ற்ப‌ட்டு‌விடாம‌ல் பா‌ர்‌‌த்‌து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். இவ‌ர்க‌ள் கொடு‌த்த அழு‌த்த‌த்‌தினா‌ல், அந்தப் பையன் ஏ.பி.சி.டி. உச்சரிக்கறான். அப்பறமா நான் சொன்னது சரிதானான்னு கேட்கிறான். அப்ப அவனுக்கே அவன் மேல நம்பிக்கை இல்லாம‌ல் போ‌ய்‌வி‌ட்டது. எல்லா சப்ஜெக்ட் ஆசியர்களும் டல் ஸ்டூடண்ட் டல் ஸ்டூடண்ட்னு நோட் எழுதி அனுப்பி அ‌தி‌ல் அவ‌ன் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு மாத்திரை சாப்பிடு‌ம் ‌நிலை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. சனி திசை வந்தாலே இழுக்கு, ஏளனப்படு‌த்த‌ப்படுதல், அவமானப்படுத‌ல் ஆ‌கியவ‌ற்றை‌க் கொடுக்கும். அதே ச‌னி ‌பி‌ற்பகு‌தி‌யி‌ல் அவமான‌த்தை வெகுமானமாக மா‌‌ற்று‌ம்.

சனி திசை நடந்தாலே ஒரு தாழ்வு மனப்பான்மை வரும். அப்ப நா‌ம் அருகில இருந்து, உன்னைப் போல யாருமே இல்லை, யு ஆர் வெரி கிரேட் அவங்க சொ‌ல்வதை‌ப் ப‌ற்‌றியெல்லாம் கவலைப்படாதே, அம்மா நான் இருக்கேன், உன்னைப் பத்தி எனக்குதான் தெரியும் எ‌ன்று கூற வே‌ண்டு‌ம்.



சனி திசை நடக்கும் போது வெளிக்காற்றை சுவாசிக்க வே‌ண்டு‌ம் எ‌ன்று சொல்வா‌ர்க‌ள். பொதுவாகவே சனி ‌‌கிரக‌ம் கார்பன், கார்பன் டை ஆக்சைடால ஆனது. அதனால ஒரு சோம்பல் வரும். அதனால அந்தக் வெளிக்காற்று, பிராண வாயு உள்ளே போகும்போது இயல்பாவே ஒரு சுறுசுறுப்பு வரும். சனி திசை நடக்கிற பிள்ளைங்களுக்கு தெரிஞ்சதுல இருந்து தெரியாததுல வரணும்.





webdunia photo WD





அவ‌‌ர்களு‌க்கெ‌ன்று ஒரு பாட‌த்‌தி‌ட்ட‌த்தையே உருவா‌க்க வே‌ண்டு‌ம். மேஷ ராசியா அந்தப் பிள்ளைகளை இந்த ப‌ள்‌ளி‌யி‌ல் சே‌ர். ரிஷப ராசி‌ன்னா அவங்கள இந்த‌ப் ப‌ள்‌ளி‌யி‌ல் சே‌ர். இங்கு ரிஷப ராசி மாணவ மாணவிகள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படும் எ‌ன்று ஒ‌வ்வொரு ரா‌சி‌க்கார‌ர்களு‌க்கு‌ம் த‌னி‌த்த‌னி ப‌ள்‌ளிகளே‌த் துவ‌க்கலா‌ம். ஏன்னா ஒவ்வொரு ராசிக்காரங்களுடைய க‌‌ற்கு‌ம் ‌திறனு‌ம் வித்தியாசப்படும். நாம அதுல ஆசியராக இருந்தா அ‌ந்த க‌ற்கு‌ம் ‌திறனை அ‌றி‌ந்து அத‌ற்கே‌ற்ப க‌ற்‌பி‌க்கலா‌ம்.



சில ‌பி‌‌ள்ளைக‌ள் எல்லாம் 6 வயசு, 7 வயசுலேயே ஒரு மாதிரி இருப்பா‌ர்க‌ள். அப்பவே சிலருக்கு திமிரெல்லாம் இருக்கும். அதை‌த்தான் விளையும் பயி‌ர் முளையிலேயே தெரியும்னு சொல்வா‌ர்க‌ள்.



மேஷ ரா‌சி‌க்கா‌ர‌ர்க‌ள் எ‌ல்லா‌ம் வேகமாக‌ப் படி‌க்கு‌ம் ஆ‌ற்றலை‌‌ப் பெ‌ற்‌றிரு‌ப்பா‌ர்க‌ள். ரிஷப ரா‌சி‌க்கார‌ர்க‌ள் எல்லாம் சப்ஜெக்ட்ட தாண்டி யோசிப்பாங்க. தொட‌ர்புகளை பா‌ர்‌ப்பா‌ர்க‌ள். மிதுன ராசி பிள்ளைங்கள் எல்லாம் இப்போதைக்கு ஓ.கே. இது போதும்னு யோசிப்பாங்க. கடக ராசிப் பசங்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா இதை செஞ்சு பார்த்தா எப்படி இருக்கும் எ‌ன்று ப்ராக்டிக்கல்லா யோ‌சி‌ப்பா‌ங்க. ஒரு ஆசிரியருக்கு ஜோதிடம் பற்றி தெரிஞ்சதுன்னா பிர‌‌ம்மாண்டமா அந்தப் பையனை தட்டிக்கொடுத்து ஆக்கலாம். இதை பேஸ் பண்ணிதான் அவன் கேள்வியே எழுப்புவான். ஒரு கரும்பு பற்றி பாடத்தை நடத்தி‌க்‌கி‌ட்டு இருக்கும்போது எப்படியெல்லாம் கேள்விக‌ள் எழு‌கிறேதா அதை வை‌த்தே அவனை எந்த ராசின்னு கண்டுபிடிக்கலாம். எல்லாமே கற்றல்தான்.



ஆனா‌ல் த‌ற்போதைய பாட‌த்‌தி‌ட்ட‌த்தை மா‌ற்ற முடியாது. மேஷ ராசிக்கு ஒரு சிலபஸ் கொடுய்யான்னு அர‌சிட‌ம் கேட்க முடியாது. மாணவர்களுக்கு கற்றல் இருந்தாலும், ஆசியருக்கு கற்பித்தல் இருந்தாலும் எளிமையாகும். இப்ப ச‌னி திசை நடக்கிற ‌பி‌ள்ளைகளை‌ப் பார்த்தா‌ல், அவனெல்லாம் கடை‌சி‌யி‌ல் இரு‌ந்துதான் வருவான். அவ‌ன் ஸ்டார்ட்டிங்ல தூங்கிடுவான். கடைசியில வந்து என்ன சார் சொன்னீங்க அப்படீன்னுவான். எனவே அப்ப அவனுக்கு என்னவாகும் ம‌த்தவ‌ங்க சொல்றது நம்மளுக்கு புரிய மாட்டேங்குது அப்படீன்னு நினைப்பான். அவனையு‌ம் ப‌ங்கே‌ற்க வை‌க்க வே‌ண்டு‌ம். துவங்கும்போதே காலைல என்ன சாப்பிட்டா‌ய், இது என்ன தெரியுமா அப்படின்னு பேசவிட்டுடனும். அவனுக்கு தெரிஞ்ச சப்ஜெக்ட் சொல்ற வரைக்கும் தூங்கிடுவான். அவனுக்கு தெரியாத சப்ஜெக்ட் சொல்லும்போது மட்டும்தான் சார் என்ன சார் சொன்னீங்க அப்டீன்னுவான். அவனைப் பற்றி ஆசிரியர்கள் தெரிஞ்சு வச்சிருந்தா நல்லாயிருக்கும். அதே போல அவங்களுக்கு பிடிச்சமாதிரி உணவு வகைகளை தேர்வு செஞ்சு கொடுக்கணும். இந்தந்த திசை நடக்கும் போது இன்னன்ன சத்துக்கள் எல்லாம் உடம்‌பி‌ல் குறையும். சனி திசை நடக்கும் போது இரும்புச் சத்து குறையும். செவ்வாய் திசை நடக்கும் போது சுண்ணாம்புச் சத்து குறையும். அதை தெரிஞ்சு ச‌த்துண‌வி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் த‌ந்து, காலை‌‌யிலேயே குழ‌ந்தைகளு‌க்கு உணவு தரு‌ம் ப‌ள்‌ளிக‌ள் எ‌ல்லா‌ம் இரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் அவ‌ர்களை‌ச் சே‌ர்‌க்க வே‌ண்டு‌ம்

‌ரா‌சி‌க்கே‌ற்றவாறு நில‌ம் வா‌ங்க வே‌ண்டு‌ம்!

‌ரா‌சி‌க்கே‌ற்றவாறு நில‌ம் வா‌ங்க வே‌ண்டு‌ம்!

ஒ‌வ்வொரு ரா‌சி‌க்கார‌ர்களு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் ‌வீடு அ‌ல்லது ‌நில‌ம் அமையு‌ம். அதாவது செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் செம்ம‌ண் பூமியாய் பார்த்து வாங்க வேண்டும். செம்மண் கலப்பு இருந்தால் கூட போதும்.ரிஷபம், துலாம் ரா‌சி‌க்கார‌ர்க‌ள் கொஞ்சம் மணல் கட்டு உள்ள பகுதியை வாங்கலாம். மிதுனம், கன்னி - பழுப்பு நிற, பாறைகள் கலந்த மண் பகுதியில் சிறப்படைவர். பாறை ‌நில‌ம் எ‌ன்றா‌ல் பாறைக‌ள் பழமையான உதிர்ந்த நிலையில் காண‌ப்படு‌ம் ‌நில‌ங்களை வாங்கலாம்.
தனுசு, மீனம் ரா‌சி‌யின‌ர் மணலும் மணல் சார்ந்த இடங்களையு‌ம், மகரம், கும்பம் களி மண் கலப்பு சார்ந்த இடங்களையு‌ம் வா‌ங்குவது ‌சிற‌ப்பு.
க‌ட்டிய ‌வீ‌ட்டை வா‌ங்கு‌ம்போது எ‌ப்படி ‌நில அமை‌ப்பை பா‌ர்‌க்க இயலு‌ம். மேலு‌ம், முதல் தளம், இரண்டாம் தளம் என்றெல்லாம் இருக்கும்போது வீட்டின் ‌நில அமை‌ப்பு எ‌வ்வாறு நம‌க்கு‌ப் பொரு‌ந்து‌ம்?அத‌ற்காக‌த்தா‌‌ன், ‌வீ‌ட்டி‌ன் ‌சு‌ற்று‌ப்புற‌த்தை கண‌க்‌கிடு‌‌கிறோ‌ம். அதாவது, மேஷ ராசி‌க்கா‌ர்க‌ள் வா‌ங்கு‌ம் ‌வீ‌ட்டி‌ன் அருகே ‌மி‌ன்சார‌த் துறை அலுவலக‌ம், தீயணைப்பு அலுவலகம், அரசு அலுவலகம் இரு‌ப்பது நல்லது அ‌ல்ல‌து அ‌வ்வாறு அமையு‌ம்.ரிஷப ராசி எ‌ன்றாலே அது நந்தி. எனவே ‌ரிஷப ரா‌சி‌க்கார‌ர்க‌ள் பள்ளிக்கூடம், கல்யாண மண்டபம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்க‌ள் அரு‌கி‌ல் அமைய‌ப்பெ‌று‌ம் ‌வீ‌ட்டை வாங்கினால் சிறப்பாக அமையும்.சிம்ம ராசிக்கு அரசு அலுவலகங்களுக்கு பக்கத்தில், எம்.எல்.ஏ. வீட்டு பக்கத்தில், அமைச்சர் வீட்டு பக்கத்தில், பெரிய பதவி வகிப்பவர்களின் வீட்டின் அருகில் வீடு அமையும். ஏதாவது ஒரு அரசு அலுவலகம் அருகில் இருக்கும். அதாவது ரேஷன் கடைக்கு பக்கத்திலாவது வீடு அமையலாம்.
கன்னி ராசிக்கு கல்வி நிறுவனங்களுக்கு பக்கத்தில், டீச்சர் டிரெயினிங் நிறுவனம் போன்ற பயிற்சி நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் வீடு அமையும். துலாம் ராசிக்காரர்களுக்கு ஏதாவது ஒரு கடை பக்கத்தில் வீடு அமையும். அதாவது வர்த்தக நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பர்.
விருச்சிக ராசிக்கு போலிஸ் ஸ்டேஷன், தீயணைப்பு நிலையம் போன்றவை இருக்கும் இடத்தில் வீடு அமையும். இன்னும் சொல்லப்போனால் டிடக்டிவ் ஏஜென்சிக்கு பக்கத்தில், காவல்துறை அதிகாரி வீட்டின் பக்கத்திலாவது இவர்கள் குடியிருப்பார்கள். விருச்சிக ராசி பூமிக்காரகன் வீடு என்பதால் ஜமீன்தார் வீட்டு பக்கத்து வீட்டில் இவர்கள் குடி‌யிரு‌க்கு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ண்டு.
தனுசு ராசிக்காரர்களின் வீட்டின் ஒரு பக்கத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியும், மறு பக்கத்தில் ரெளடியும் இருப்பார்கள். ஒரு பக்கம் பெரிய நல்ல தலைவரும், மறு பக்கம் கெட்டவர்களும் இருப்பர். டாஸ்மார்க் கடைக்கு பக்கத்தில் கூட தனுசு ராசிக்கு வீடு கிடைக்கும். மேலும், ராணுவத் தளபதி அல்லது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் வீட்டிற்கு அருகிலும் இவர்கள் குடியிருப்பார்கள்.
மகரத்திற்கும், கும்பத்திற்கு டாஸ்மார்க் கடைக்குப் பக்கத்தில் வீடு அமையும், அதிலும் கும்பத்திற்கு டாஸ்மார்க் கடைக்கு பக்கத்தில் ‌வீடு அமையும் வாய்ப்பு அதிகம்.
மேலும், இந்த ராசிக்காரர்கள் எந்த மதமோ அந்த மதத்திற்கு எதிரான மதத்தினர் அதிகமாக குழுமியிருக்கும் இடத்தில் தான் இவர்களுக்கு வீடு அமையும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இரும்புக் கடை பக்கத்தில், தானியங்கள் அடுக்கி வைக்கும் இடம், கிடங்கு அருகில் வீடு அமையும். எப்போதும் லாரி வந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டும் இறக்கிக் கொண்டும், எப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் இடமாக அது இருக்கும்.
கும்பத்திற்கு வாசனைகள் நிறைந்த பகுதியில் வீடு அமையும். அதாவது மீன் மார்க்கெட், பூக்கடைக்கு அருகிலும் கிடைக்கும்.
மீன ராசிக்காரர்களின் பக்கத்து வீட்டில் ஆன்மீக ஞானிகளோ அல்லது வேதர்கள், பூசாரிகளோ இருப்பார்கள். மேலும், ஏதாவது ஒரு வழிபாட்டுத்தலத்துக்கு அருகே அவர்கள் வீடு அமையும்.
ஆனால் இது அவரவர் தசாபுத்திகளின் அடிப்படையில் வித்தியாசப்படும்.
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நீச்சம் அடையும்போது, அவர்களுக்குரிய கிரகம் பலவீனமான கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் அவர்களுக்குரிய இடத்தில் வீடு அமையாமல் எதிர்மறையான சூழ்நிலையில் வீடு அமையும்.
எனவே இது பொதுவான அமைப்புதான். அவர்களின் கிரக தசாபுத்திகளுக்கு ஏற்ப மாறுபடும்.சுக்கிர தசை நடப்பவர்கள் நிழல் சாலையில் ரம்மியமான வீட்டில் வசிப்பார்கள். ராகு திசை நடப்பவர்கள் அதே நிழல் சாலையில் கரடுமுரடான இடத்தில் வசிப்பார்கள். தசாபுத்திக்கு ஏற்றவாரும் நிலை இருக்கும். கிரகங்கள் தங்களுடைய கதிர்வீச்சுகளை அவர்கள் மீது திணிக்கும். அ‌ந்த ‌கிரக‌த்‌தி‌ற்கு‌ரிய இட‌த்‌தி‌ற்கு ந‌‌ம்மை இழு‌த்து‌ச் செ‌ல்லு‌ம்.
உதாரணமாக ஒருவருக்கு சனி தசை நடந்தது. அதுவும் சுபச் சனியல்ல, சிக்கலான சனி. சனி தசை என்பது சுடுகாட்டிற்கும் உகந்தது. அவருக்கு பெரிய பங்களா இருந்தது. சனி தசை நடக்கும் போது பங்களாவில் இருக்க வேண்டாம். மரணமே ஏற்படும் நிலை உள்ளது. நாற்றம் உள்ள வீடு அல்லது பிரச்சினை உள்ள வீடுகளில் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினோம். அதை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வீட்டிலேயே இருந்தார். திடீரென அந்த வீட்டிலேயே டிரைனேஜ் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. டிரைனேஜ் பிரச்சினை என்றாலே வீட்டிற்குள் நாற்றம் அடிக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது சாவு நிகழ்ச்சிக்கு போய்விடுவார். அதுபோல் இருந்தது. தொடர்ந்து பல பிரச்சினைகளை அனுபவித்த பின்னர் என்னிடம் வந்தார்.ஏதாவது சுடுகாடு இருக்கிற மாதிரி வீட்டை‌ப் பார்த்து போய்விடுங்கள் என்று சொன்னேன். அதன்படியே செயல்பட்டார். அங்கு போனதும் நோய் விலகியது. 18 வருடமாக இருந்த வழக்கு சாதகமானது. எல்லாமே நல்லபடியாக நடந்தது.அதாவது சனி எளிமைக்குரிய கிரகம். கீழ் நிலையில் இருந்துகொண்டு ஒரு உயர்நிலையைத் தரக்கூடிய கிரகம். பிணம் எடுப்பவர்கள், அடக்கம் செய்பவர்களை யாரும் கீழ்மையாக சொல்ல மாட்டார்கள். எனவே சனி தசையில் நம்மை அப்பகுதியில் சென்று குடியேறி அவர்களைச் சென்று பார்த்து அதை உணர வைக்கவே சனி தசையில் அதுபோன்ற இடங்களில் குடிபெயர வைக்கிறது.சனி திசைதான் ஞானத்தை அளிக்கும். சனியை நீதிமான் என்றும் சொல்லலாம். ஆகாயத்தில் இருப்பவனை பூமிக்கு கொண்டு வரும். வாழ்க்கை என்பது என்ன என்பதை உணர வைக்கும். சனி தசை என்பது சனீஸ்வரன் ஆயுள் காரகன். சனியும் எமனுடைய பார்வை கொண்டவர். எனவே சனி திசை வாழ்க்கையை உணர்த்தும் காலகட்டமாகும்.

எந்த நேரத்தில் திருமணம் செய்யலாம்?

எந்த நேரத்தில் திருமணம் செய்யலாம்?

பொதுவாக உதயக்காலம் (காலை 6 மணி) அல்லது 9 மணிக்குள், அதிகபட்சம் 10.30க்குள் திருமணம் செய்வது நலம்.
பொதுவாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம்
ஆனால் காலை 10.30க்கு மேல் மாலை 4 மணிக்குள் செய்யாமல் இருப்பது நல்லது. ஒருவரது ஜாதகத்தைப் பார்த்து ஊனமுற்றப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தினேன். அவரது திருமண ஸ்தானம் அவ்வாறு இருந்தது.திருமணம் எந்த நேரத்திலும் செய்யலாம் என்பதை அவர்களது ஜாதகத்தைப் பொருத்து நேரத்தைக் கணிக்கலாம். நல்ல லக்னம். நல்ல நட்சத்திரம், நல்ல ஓரை நடக்கும் நாளில் எந்த நேரத்திலும் நடத்தலாம்.

ராகு, கேது அல்லது சனி தசை நடப்பவர்கள் ஒரு பிரச்சினையை எவ்வாறு கையாள வேண்டும்?

ராகு, கேது அல்லது சனி தசை நடப்பவர்கள் ஒரு பிரச்சினையை எவ்வாறு கையாள வேண்டும்?

சனி, ராகு, கேது மூன்று கிரகங்களும் முந்தைய கர்மாக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் கிரகங்களாகும். அதாவது நாம் முந்தைய பிறவியில் செய்த பாவ, புண்ணியத்திற்கேற்ப இந்த கிரக காலங்கள் அமையும். பூர்வ புண்ணிய ஸ்தானம் சிறப்பாக அமைந்தால் இந்த காலங்களில் நாம் சிறப்பாக இருப்போம். நாம் முந்தைய காலத்தில் நல்லவற்றை நிறையச் செய்திருந்தால் இந்த காலத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்து வந்த ஆலையையே வாங்கும் நிலை கூட ஏற்படும்.
ராகு தசையில் சாதாரண அக்கவுண்ட்டன்ட்டாக சேர்ந்து, அந்த நிலையில் முதலாளி இறக்க, அவரது உயிலில் எனக்கு நம்பிக்கையானவர் இவர்தான் என்று அக்கவுண்ட்டன்ட் பெயரை எழுதி வைக்க அவர் முதலாளியானதையும் நான் பார்த்துள்ளேன்.
பூர்வ புண்ணியஸ்தானம் மோசமாக இருந்தால் நாம் அதல பாதாளத்தில் போய் விழுவோம். போன பிறவியில் நாம் யார் யாரையெல்லாம் ஏமாற்றினோமோ அவர்கள் எல்லாம் இ‌ந்த ஜெ‌ன்ம‌த்‌தி‌ல் நம்மைத் தேடி வந்து ஏமாற்றி விட்டு அல்லது நம்மை அவமானப்படுத்தி, நமக்கு எதிராக வழக்குத் தொடர்வது போன்றவற்றைச் செய்யு‌ம் கால‌ம் தா‌ன் இவைக‌ள்.
எனவே இந்த காலக்கட்டத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் தெளிவாக இருக்க வேண்டும். இந்த கிரக அமைப்பு தற்கொலையை தூண்டக் கூடியது. அதுபோன்ற காரியங்களில் நாம் ஈடுபடக் கூடாது. தொடர்ந்து அவமானங்களை தரக்கூடிய கிரகங்கள் இவை. அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியிலும் இறங்குவார்கள். அதனைத் தாங்கிக் கொண்டு அதற்கு ஏற்றவாறு நாம் செயல்பட வேண்டும்.இதற்கு பரிகாரங்களும் உண்டு. விபத்தில் சிக்கி காலை எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் சிறிய சிராய்ப்புடன் தப்பிக்கும் அளவில் நாம் பரிகாரங்கள் செய்ய இயலும். அது அவரவர் கிரக அமைப்புகளை வைத்துத்தான் பரிகாரங்களை தீர்மானிக்க முடியும்.பொதுவாக இந்த மூன்று கிரகங்களுக்கும் அத‌ர்வன வேத‌த்‌தி‌ன் அடிப்படையில்தா‌ன் பரிகாரங்கள் செய்ய வேண்டும். இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்‌றில்லாம‌ல் மிகத் தெளிவாக ஆழமாக பார்த்து பரிகாரங்கள் செய்ய வேண்டும். பாவ கிரகங்களுக்கு பரிகாரங்கள் செய்ய அதர்வன வேதத்‌‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளதை வைத்துத்தான் சொல்ல முடியும். அதர்வன வேதத்தில் முழு‌க்க முழு‌க்க பரிகாரங்கள் பற்றித்தான் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.ரத்த பலி கொடுப்பது அதில் அதிகமாகக் கூறப்பட்டிருக்கும். இப்போதெல்லாம் நாம் நெய் பயன்படுத்துகிறோம். அந்த காலத்தில் எல்லாம் குருதியைத்தான் பயன்படுத்தினார்கள். அதாவது கிரக அமைப்புகளுக்கு ஏற்ப ஒவ்வொரு குருதியைப் பயன்படுத்தினார்கள்.
கிரகங்களின் சேர்க்கை, சஞ்சாரம், நீச்சம் ஆகியவற்றை வைத்து பரிகாரம் சொல்வார்கள். இந்த கிரகம், இந்த சாயலில், இந்த பார்வையில், இந்த இடத்தில் வருகிறது என்பதை வைத்து அதற்கான பரிகாரத்தை கண்டறியவேண்டும். ராகு திசை 7வது இடத்தில் வந்தால் மரணத்தையே கொடுக்கும், அல்லது மரணத்திற்கு ஈடான ஒரு இழப்பைக் கொடுக்கும். அப்போது அதற்கு ஏற்ற வகையில் ஒரு பரிகாரத்தை அளிக்க வேண்டும்.
இந்த தசை நடக்கும் போது சனி இருக்கிறதா, ஏழரை சனி இருக்கிறதா என்பதையும் பார்த்து அதற்கேற்ப பரிகாரம் மாறுபடும்.
எல்லாவற்றையும் பார்த்துத்தான் பரிகாரத்தைக் கூற இயலும்.

பில்லி, சூனியம் – காத்துக்கொள்வது எப்படி?

பில்லி, சூனியம் – காத்துக்கொள்வது எப்படி?

பில்லி, சூனியம் என்பது என்ன? அதில் இருந்து கிரகங்கள் நம்மைக் காப்பாற்றுமா?
இதுபற்றி பழைய நூல்கள் கூறுகின்றன. உதாரணத்திற்கு உத்ர காலாமிர்தம் என்ற நூல் இதுபற்றி எடுத்துரைக்கிறது.கிரகங்கள் பலவீனமடையும் போது இதுபோன்ற துர் சக்திகளுக்கு ஆட்படும் நிலை உள்ளது. பில்லி, சூனியம், மந்திரம் என்பதை மறுக்க இயலாது. இதுபோன்றவற்றிற்கு ஆட்பட்டு அல்லல்படும் எத்தனையோ ஜாதகங்களை பார்த்துள்ளோம். காக்கையர் நாடி என்ற புத்தகத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. அதாவது ராகு திசையில் சனி புக்தி, சனி திசையில் ராகு புக்தி, கேது தசை, மாறகத்தைத் தரக்கூடிய மாறக ஸ்தானங்கள் என்று சொல்லப்படுவது உண்டு.மேஷ லக்னத்திற்கு “இரண்டு, ஏழாம் இடத்திற்குட்பட்டவன் பாவியாகி உயிரைக் கொல்வான்” என்ற ஒரு பாடல் இருக்கிறது. அதாவது இரண்டுக்கும் ஏழுக்கும் உரியவன் பாதியாகி அந்த தசை நடக்கும்போது உயிரை எடுப்பான்.பூர்ண ஸ்தானத்திற்கும் ஆயுள் ஸ்தானம் என்பது பொதுவாக 8. எட்டாம் இடத்தில் சனி, ராகு, கேது போன்றவை உட்கார்ந்து அந்த கிரகத்தை இன்னொரு பாவ கிரகம் பார்த்து, வேறு எந்த சுப கிரகமும் பார்க்காமல் இருந்தால் அப்போது பில்லி, சூன்யத்தால் பாதிக்கப்படுவார்கள்.
நல்ல சக்தி வாய்ந்த தசா புக்தி நடக்கும்போது ஒருவருக்கு பில்லி, சூன்யம் வைத்தால் அது வேலை செய்யாது. ஏனெனில் அவரது தசா புக்தி பலம் வாய்ந்தததாக இருக்கிறது. ஆனால் அவருக்கு பலவீனமான தசா புக்தி நடக்கும்போது அந்த பில்லி, சூன்யமும் சேர்ந்து தொல்லை கொடுக்கும். கிரகங்கள் நல்ல நிலையில் நல்ல தசை நடக்கும்போது நல்ல மனிதர்களின் தொடர்பு ஏற்படுவது போல், கெட்ட தசை நடக்கும்போது கெட்டவைகளின் தாக்கம், பாதிப்பு ஏற்படுவது நடக்கும். எல்லாமே கிரகங்களின் அடிப்படையில்தான் நடக்கிறது.அதேபோல நல்ல தசா புக்தி நடக்கும்போது பில்லி, சூன்யம் வைத்து பாதிக்கப்பட்டதாக இதுவரை கேள்விப்பட்டதே கிடையாது. ஆனால் நல்ல தசா புக்தி நடக்கும்போதும், அஷ்டமத்து சனியினால் கெட்ட சக்திகளின் பாதிப்பு வந்து போக வாய்ப்புண்டு. கிரகங்களின் துணையில்லாமல் எதுவும் நடக்காது.ஒருவருக்கு பில்லி, சூன்யம் வைக்க வேண்டும் என்றால் அவருடைய புகைப்படமோ, வியர்வை நனைந்த அல்லது ரத்தம் நனைந்த துணியோ, தலை முடி, காலடி மண்ணோ, விந்தணு பட்ட துணியோ தேவைப்படும். இது இல்லாமல் பில்லி, சூன்யம் வைக்க முடியாது.நல்ல தசாபுக்தி நடக்கும்போது இதுபோன்ற துணிகள் கிடைக்காமலேயே போய்விடும். இல்லையென்றால் பில்லி, சூன்யம் வைக்க முடியாத நிலையும் ஏற்படலாம்.ஆனால் கிரகநிலை சரியில்லாத நேரத்தில் தாமாகவே இதுபோன்ற பொருட்களை அளிக்கவோ, தானாகவே சென்று சிக்குவதோ நேரிடும்

குழந்தை தத்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

குழந்தை தத்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

பழைய நூல்களில் எல்லாம் இந்தந்த கிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு தத்துப் பிள்ளை உண்டு என்று கூறப்பட்டுள்ளது. தசரத சக்ரவர்த்தி குழந்தை இல்லாமல் யாகம் செய்து, யாகத்தில் வந்த பாயசத்தை துணைவியர்கள் அருந்தி அதன் மூலம் குழந்தை பாக்கியம் கிட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.
 மேலும், இந்தந்த பாவங்கள் செய்தால் குழந்தை பாக்கியம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
“புத்திரக் காரகன் புதன் மனை சென்றிட புத்திர சூன்யம் என்று செப்பிடு” என ஒரு பாடல் சொல்கிறது.
தத்துப்பிள்ளை
குழந்தையை தத்தெடுத்த பெற்றோர்களைப் பார்த்தால், அந்த குழந்தை தத்தெடுத்தவர்களின் குணாதிசயங்களுடனேயே பிறந்து வளர்ந்திருக்கும்.
அதாவது கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர்களுடைய வீட்டில் நாம் சாப்பிட்டுவிட முடியாது. அவர்களுடன் பூர்வ ஜென்மத்திலாவது ஒரு தொடர்பு இருக்க வேண்டும். அதுபோல தத்துப் பிள்ளை என்று சொல்லும்போது வாழ்நாள் முழுவதும் ஒருவரது வீட்டில் இருந்து அவர்களோடு இருக்க வேண்டுமானால் அந்த குழந்தை முன் பிறவியில் அவர்களுடன் ஏதாவது ரத்த தொடர்புடன் இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.பெரும்பாலும் பெண் குழந்தையை தத்தெடுப்பது நல்லது. அது பயனுள்ளதாக இருக்கும். குரு புத்திரக் காரகன். குரு பலவீனமடையும்போதும், பூர்வ புண்ணியஸ்தானம் வலுவிழந்தாலோ குழந்தை பாக்கியம் இருக்காது. எனவே ஆணுக்குரிய கிரகம் வலுவிழக்கும்போது பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது நல்லது.
உறவுகளுக்குள் தத்தெடுக்கக் கூடாது. என்ன உறவு என்றே தெரியாமல் எங்கோ பிறக்கும் குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது நல்லது. உறவுக்குள் எடுத்தால் பலனளிக்காது. நட்புக்குள் எடுக்கலாம். ஆனால் இனம், மதம் மாறி எடுத்தால் நல்லது.தத்தெடுக்கும்போது குறிப்பாக ஆண் குழந்தையாக இல்லாமல் இருப்பது நல்லது. எனினும் சிலருக்கு ஆண் குழந்தை ஏற்றது.
தத்தெடுக்கும் தம்பதிக்கு எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்குரிய பாலினத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
தத்தெடுக்கும் தம்பதியருக்கு குறைந்தது 35 வயது நெருக்கத்தில் இருக்கும். அடுத்தடுத்து அவர்களுக்கு என்னென்ன தசைகள் நடக்கின்றன என்பதை வைத்து, அவர்கள் எங்கு, எந்த மாவட்டத்தில், எந்த மாநிலத்தில் குழந்தை என்று பார்த்து தத்தெடுத்துக் கொள்ளலாம்.தத்தெடுத்த குழந்தைக்கு பிறந்த தேதி தெரிவதற்கு வாய்ப்பில்லாமல் போனால், குழந்தையை தத்தெடுத்து நமது வீட்டிற்கு அழைத்து வரும் நாளை அந்த குழந்தையின் பிறந்த தேதியாகக் கொண்டு ஜாதகத்தைக் கணித்துக் கொள்ளலாம்

விதவைகள், விவாகரத்தானவர்கள் மறுமணம் செய்யும்போது

விதவைகள், விவாகரத்தானவர்கள் மறுமணம் செய்யும்போது

விதவைகள், விவாகரத்தானவர்களுக்கு மறுமணம் செய்யும்போது எல்லா விதவைகள், விவாக ரத்து பெற்றவர்கள் மறுமணம் செய்ய...
விதிகளையும் உட்படுத்தி பொருத்தம் பார்க்கத் தெவையில்லை.
சாதாரணமான விதிகள் பொருந்தினால் போதும். தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ அடிப்படையில் பொருந்தினால் போதும். இதில் கணப் பொருத்தம், தினப் பொருத்தம் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் யோனியும், ரஜ்ஜூவும் ரொம்ப முக்கியம்.யோனிப் பொருத்தம் மிக மிக முக்கியம். யோனி என்றால் விலங்குகளில் பூனை - எலி, சிங்கம் - மான் போன்று அமைந்து விடக் கூடாது. ரஜ்ஜூ பொருத்தம் என்றால் மாங்கல்ய பலம். பிறக்கும் போது லக்னத்திற்குரிய 7வது, 8வதுக்குரிய கிரகங்கள் நன்றாக இருந்தால் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாவிட்டாலும் செய்யலாம்.

பயணம் செல்லும்போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை?

 பயணம் செல்லும்போது கவ‌னி‌க்க வே‌ண்டியவை?
நாம் பயண‌‌ம் செ‌ல்வத‌ற்கு மு‌ன்பு பயண‌ம் செ‌ல்ல வே‌ண்டிய நாளன்று நடக்கும் நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டும்.ஒரு குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பயணம் மேற்கொண்டால் சென்று சேர வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாது. அது போல சில நட்சத்திரங்களில் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தால் திரும்பி வரமாட்டார்கள் என்பன போன்றவை சொல்லப்பட்டுள்ளது.
சூலம் என்றெல்லாம் காலண்டரில் பார்த்திருக்கிறோம். அன்றைய தினத்தில் பயணத்தை தவிர்க்க வேண்டும். அல்லது ஒரு சில சிறிய பரிகாரங்களை செய்துவிட்டுச் செல்ல வேண்டும்.கிராமத்தில் பார்த்தால் மக்கள் இதுபோன்ற நாட்களில் வெளியே கிளம்பும்போது வேம்பு இலைகளை தங்களது ஆடைகளில் குத்திக்கொண்டு செல்வார்கள்.ஏனெனில் பாலுள்ள மரங்களில் வேம்புவிற்கு தனி சிறப்பு உண்டு. இது ஒரு ப‌ரிகார‌ம் போ‌ன்றதுதா‌ன்.பயணத்திலும் வான் வழி, சாலை வழி, நீர் வழி என பிரிக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதத்தில் கிரக அமைப்பைப் பார்க்க வேண்டும்.சந்திராஷ்டம நாட்களில் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும், அஷ்டமத்து சனி, ஏழரை சனிக்காரர்கள் அதிகாலை மற்றும் நள்ளிரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அதிகாலை, நள்ளிரவு ஆகியவை சனியின் ஆதிக்கம் அதிகம். அது இரவுக்குரிய கிரகம். அதனால்தான் ஏழரை நடக்கும்போது இரவுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறோம்.ஆனாலும் பயணத்தை தவிர்க்க இயலாத நிலை இருந்தால் சொந்த வாகனத்தைத் தவிர்த்துவிட்டு பொது வாகனத்தில் செல்ல அறிவுறுத்துகிறோம். இதுபோன்றே சந்திராஷ்டமம் மற்றும் சில நட்சத்திரங்களில் பயணம் செ‌ய்வது ச‌ரியாக இரு‌க்காது. விபத்து‌த்த‌ா‌ன் எ‌ன்று இ‌ல்லை, பயணத்தில் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியதும் வரலாம்.பொருள் இழப்பு, பயணச் சிக்கல், பயணிகளுடன் சண்டை போன்றவையும் ஏற்படும். போன காரியம் தோல்வி அடையும். பார்க்க நினைத்தவர் அங்கில்லை எ‌ன்பது போ‌ன்ற ‌நிலை ஏற்படும்.எ‌ப்படி‌ப்ப‌ட்ட பயணமாக இருந்தாலும் சரி.. செல்லும் நாளன்று நடக்கும் கிரக அமைப்பை பார்த்துவிட்டு செல்வது நல்லது.

கடனாளியாவதில் இருந்து தப்பிக்க வழி?

கடனாளியாவதில் இருந்து தப்பிக்க வழி?

கடனாளி என்பது ஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பொறுத்தது. ஒரு சிலருக்கு கடன் வாங்குங்கள் என்று நாங்களே கூறுகிறோம். லக்னத்திற்கு 6க்குரியவனின் தசை என்று வைத்துக் கொண்டால் அவன் சத்ரு, ரோபம், விபத்து, கடன் இவற்றைக் கொடுப்பான். 6க்குரியவன்தான் இவற்றுக்குக் காரணம். எனவே முதலிலேயே நாம் கடனை வாங்கி விட்டால் மற்றவைகளில் இருந்து தப்பிக்கலாம்.கிரகங்கள் எல்லாம் ஒன்றைக் கொடுத்துவிட்டால் மற்றவற்றை கொடுக்காது. எனவே 6க்குரிய தசையா, கடன் வாங்கி விடுங்கள். அதுவும் சுபக் கடனாக வாங்கி விட்டால் மற்றவற்றில் இருந்து தப்பி விடலாம்.
வீடு, வாகனம் போன்றவை தவணை முறையில் பணம் கட்டுவது போல் கடன் வாங்கி விடுவதும் நல்லது. மாதா மாதம் பணம் கட்டும்போதெல்லாம் கஷ்டப்பட்டு கட்டுவது இந்த கிரகத்தின் அமைப்பாக இருக்கும்.அதேப்போல அஷ்டமத்து சனி, ஏழரை சனி போன்றவை நடக்கும்போது பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பார்கள். அதாவது லி·ப்ட் கேட்டு ஏறியவன், கொஞ்ச தூரம் போனதும் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை, நகைகளை கொள்ளை அடிப்பது போன்றவை நடந்துள்ளது. சில நேரங்களில் வண்டியையே தள்ளிக் கொண்டு போனதும் உண்டு.
எனவேதான் லி·ப்ட் தராதீர்கள், ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள் என்று சொல்கிறோம். குறிப்பிட்ட ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு காலக்கட்டம்தான் நெருக்கடியானது. அந்த காலத்தில்தான் இதுபோன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறோம்.
ஒருவர் இருக்கிறார். அவருக்கு நெருங்கிய நண்பர். ஒன்றாக படித்து வளர்ந்தவர்கள். ரொம்ப யோக்கியமானவர். அவரது நண்பருக்கு கேரண்டர் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்தார். இவரது போராத காலம் அவரால் கடனைக் கட்டாமல் போக இவர் கட்ட வேண்டியதாகி, அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு துணைவியார் பிரிந்து போக ஒரு குடும்பகே சின்னாபின்னமாகிவிட்டது.
எனவேதான் சில நேரங்களில் இதுபோன்ற காரண்டர் கையெழுத்துக்களை போடாதீர்கள், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று சொல்கிறோம். யாருடனும் வம்பு தும்புக்குப் போகாமல் வாயைக் கிளறினாலும் பேசாமல் இருக்க வேண்டும் என்று கூறி அனுப்புகிறோம்.
சிலருக்கு அவர்களது நேரத்தின்படி, வந்தவர்களுக்கு உதவுங்கள். நண்பர்களுக்கு எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று கூறுகிறோம். சின்ன வயதில் உங்களுக்கு உதவியவர்களுக்கு கைமாறு செய்யுங்கள் என்றும் கூறுகிறோம்.