Thursday, March 14, 2013

அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்னும் போது கடவுளால் நன்மை மட்டும் தானே நடக்க வேண்டும்?


**அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்னும் போது கடவுளால் நன்மை மட்டும் தானே நடக்க வேண்டும்?

நல்லவர்கள் நல்லது செய்தலும், தீயவர்கள் தீயது செய்தலும் கூட அவனருளால் தான். போன பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் பலனையே இப்பிறவியில் இன்பமும் துன்பமுமாகக் கலந்து அனுபவிக்கிறோம். நல்லவர்களுக்குத் தீமை ஏற்படுவது அவர்கள் செய்த ஊழ்வினையினாலேயே ஆகும். தீயவர்கள் தீயன செய்வதும் கூட இப்பிறவியில் அவர்கள் அதனைச் செய்து, அதற்கான பாவத்தை சம்பாதித்து மீண்டும் பிறவியெடுத்தும், துன்பப்பட்டும் பக்குவப்படவேண்டும் என்பதற்காகத்தான். எல்லா உயிரினங்களாகவும் இறைவன் இருப்பதாக ஸ்ரீருத்ரம் என்னும் வேதமந்திரம் குறிக்கிறது. "எல்லா உயிர்களும்' என்று பொதுவில் குறிப்பிடும்போது நல்லவர்களும், தீயவர்களும் அதில் அடங்குவர். இப்பிறவியில் திருடனாகப் பிறந்து திருட்டுத்தொழில் செய்து அதற்கான துன்பத்தை அடுத்த பிறவியில் பெறுபவனும், என்றாவது ஒருநாள் பக்குவம் அடைந்தே தீரவேண்டும். தங்கத்தை பலமுறை தீயில் இட்டு மாற்று அடித்தால் தானே பளபளக்கும்! இது போலத்தான், உயிர்களும் பலபிறவிகள் எடுத்து நன்மையும் தீமையும் பெற்று பக்குவமடைந்த பின் இறைவன் பேரின்பத்தை வழங்குவார். இதையே "அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்கிறோம்.

சிரார்த்தம் செய்யும் அன்று வெளியூரில் இருந்தால் என்ன செய்வது?

* சிரார்த்தம் செய்யும் அன்று வெளியூரில் இருந்தால் என்ன செய்வது?

வெளியூரில் இருப்பதானால் சிரார்த்தம் செய்வதை நிறுத்திவிடக்கூடாது. முடிந்தளவு திதியன்று வெளியூர் செல்வதைத் தவிர்ப்பது நன்று. தவிர்க்க முடியாமல் செல்ல நேர்ந்தால் அங்கு சிரார்த்தம் செய்வதற்கான வசதிகளை செய்தபிறகே செல்லவேண்டும்.

வீட்டில் தாராபாத்திரத்தின் கீழ் வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாமா?



திருத்தலங்களுக்கு செல்லும் பொழுது சுவாமி தரிசனத்திற்கு முன் தர்மம் செய்வதா அல்லது தரிசித்து வந்த பின் தர்மம் செய்வதா?
இறைவழிபாட்டிற்குப் பிறகு, தான தர்மம் செய்வது தான் சிறந்தது

 
வீட்டில் தாராபாத்திரத்தின் கீழ் வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாமா?

தாராளமாகச் செய்யலாம். வீட்டில் பெண்கள் தினமும் சிவபூஜை செய்வது மிகவும் நல்லது. தாராபாத்திரத்தை கோடை காலத்தில் வைத்தால் மட்டும் போதுமானது. அபிஷேகம் செய்து பூஜை செய்தால், சுத்தமான அன்னம் நிவேதனம் செய்ய வேண்டும்.


பூஜை செய்யும் பொழுது ஆண்கள் விளக்கேற்றலாம். குளிரவைக்கக்கூடாது என்கிறார்களே!

* பூஜை செய்யும் பொழுது ஆண்கள் விளக்கேற்றலாம். குளிரவைக்கக்கூடாது என்கிறார்களே!


 

சில விஷயங்கள் ஆண்டாண்டு காலமாக முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டு நம்முடைய பழக்க வழக்கங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வழக்கத்தில் உள்ள சில விஷயங்களுக்கு சாஸ்திரங்களில் கூட பதில் கிடைக்காது. இருந்தாலும் அதனை மாற்றி அமைக்க நமக்கு அதிகாரம் கிடையாது. ஆன்மிக விஷயங்களில் சில பிரச்னைகள் ஏற்பட்டு அவை பெரிதாக்கப்பட்டு உச்சநீதிமன்றம் வரை கூட சென்று நீதிபதிகளால் தீர்ப்பு வழங்கப்படும் பொழுது எடுத்தாளப்படும் சட்ட ரீதியான ஒரு சொல் Customs and Usage (பழக்க வழக்கம்) என்பதாகும். இதனடிப்படையிலேயே கோயில்களிலும் சரி, வீடுகளிலும் சரி.. சில விஷயங்களை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று இருந்தால் கேள்வி கேட்காமல் அதை அப்படியே செய்வது நல்லது. தீபங்களை யார் வேண்டுமானாலும் ஏற்றலாம். பெண்களின் கைகளினால் குளிரச் செய்வது குடும்பத்திற்கு நல்லது என்று இருப்பதனால் அதனையே நாமும் பின்பற்றுவோமே. கோ பூஜையை பசுமாட்டின் பின்புறம் தான் செய்ய வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்து வருகிற ஒன்று. ஏனெனில் அங்கு தான் மஹாலட்சுமி இருப்பதாக ஐதீகம். இது சம்பந்தமாக காஞ்சி மகாசுவாமிகளிடம் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு மேற்கூறிய நிலையிலேயே பதில் கூறி சில சம்பிரதாயங்களை அப்படியே செய்தால் "satisfaction''' என்றும், மாற்றிச் செய்வது Dissatisfaction என்றும் கூறி அருளியது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.