Thursday, April 21, 2011

நாக மாணிக்கம்

அது என்ன நாக மாணிக்கம்?

நாகரத்தினக்கல் என்பது நாகங்களில் எந்த ஒன்று அறுபது வருடங்களுக்கு மனிதர்,மிருகம்,கீரி என யாரையும் கடிக்காமல் இருந்தால் அதன் கடைவாயில் உள்ள விஷமே இறுகிப்போய் நாகரத்தினமாக மாறிவிடும்.இந்த நாகரத்தினத்தை வைத்து நாகப்பாம்புகளை விரட்டலாம்.

எப்படி வலம்புரிச்சங்கு அபூர்வமானதோ அதுபோலவே இதுவும் அபூர்வமானது.இம்மாதிரியான நாகங்கள் சுனைபக்கத்தில் பச்சைத்தவளைகள் நிறைய இருக்கும் இடங்களில், அடர்ந்த சீரகச்செடிகள் நிறைந்த புதர்களுக்குள் வாழும்.இவை பச்சைத்தவளைகளை மட்டுமே உண்டு வாழும்.ஒரு லட்சம் பாம்புகளில் ஒன்று மட்டுமே இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும் வலிமை கொண்டதாக இருக்கும்.
தகுதியுள்ளவனுக்கு தகுதியான நேரத்தில் தகுதியான பொருள் அல்லது பதவி வந்து சேரும்.
இந்த நாகரத்தினம் எப்போதும் தங்கம் அல்லது வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.அல்லது பாலில் முழ்கிக்கிடக்க வேண்டும்.

No comments:

Post a Comment