Wednesday, April 13, 2011

கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம் செய்யும்

கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம் செய்யும்

விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல. அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும் இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள். எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்களுக்கு உணவிட வேண்டிய பொறுப்பிலும் இருக்கிறாள் அவள்.

தீயவற்றை அழித்தவள் நல்லவற்றை வளர்க்க வேண்டும் அல்லவா. எனவே தான் அரிசி மாவில் கோலமிடுகிறாள். இப்படி சாணம் தெளித்து கோலமிட்டால் அந்த இல்லத்தில் லட்சுமி வாசம் செய்வாள் என்கிறது சாஸ்திரம்.

எப்படி போடுவது?
கணவன் வீட்டை விட்டு போகும் முன்பு போடவேண்டும். வேலைக்காரர்களை வைத்து போடக்கூடாது. கோலத்திற்கு காவியும் தீட்டினால் ‘ அங்கு பகவானும், லட்சுமியும்’ எழுந்தருள்கிறார்கள் என்கிறது தர்ம சாஸ்திரம்.

சுபகாரியங்களுக்கு கோலமிடும் போது ஒற்றைக் கோடு ஆகாது. அசுப காரியங்களுங்கு இரட்டை கோடு கோலம் போடக்கூடாது. இதை இலைக்கோலம் போடும் போடு கவனத்தில் கொள்ள வேண்டும். அரிசி மாவினால் மட்டுமே கோலமிட வேண்டும் என்பது நியதி. ஆனால் தற்போது சுண்ணாம்பு பவுடர் முதல் பலவித வண்ணங்களிலும் கோலமிடுவது நாகரீகமாகி விட்டது.

யோகாசனம்?

குனிந்து பெருக்குதல், கோலமிடுதல் எல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியதாகும்.

எனவே தினமும் வாசல் தெளித்து கோலமிட்டு மகாலட்சுமியை வரவேற்பதோடு, ஆரோக்கிய வாழ்விற்கும் வழி வகுப்போம்.

No comments:

Post a Comment