Friday, April 1, 2011

ஜோதிடத்தில் என்ன வகையான புண்ணியங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது?

ஜோதிடத்தில் என்ன வகையான புண்ணியங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது?
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் இன்றளவிலும் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு தினசரி உணவு வழங்கி வருகிறார். அவரது சத்திரத்தில், 3 நட்சத்திர விடுதிகளில் ரூ.50க்கு விற்கப்படும் சாப்பாட்டிற்கு இணையாக முதல் தரமான உணவு வழங்கப்படுகிறது. இதைச் செய்வதற்காக அவர் யாரிடமும் நன்கொடை கேட்டுப் போனதில்லை. அன்னதானம் சாப்பிடுபவர்கள் நன்கொடை தர விரும்பினால் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டு விடுமாறு கூறிவிடுவார்.இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.
அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.
இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment