Thursday, July 28, 2011

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!

1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
24. தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
பாம்பன் சுவாமிகள் விளக்கம்
ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.

32 comments:

  1. 1.அமரேசன் 2.அன்பழகன் 3.அழகப்பன் 4.பால முருகன் 5. பாலசுப்ரமணியம் 6.சந்திரகாந்தன் 7.சந்திரமுகன் 8.தனபாலன் 9.தீனரீசன் 10.தீஷிதன் 11.கிரிராஜன் 12.கிரிசலன் 13.குக அமுதன் 14.குணாதரன் 15.குருமூர்த்தி 16.ஜெயபாலன் 17.ஜெயகுமார் 18.கந்தசாமி 19.கார்த்திக் 20. கார்த்திகேயன்.

    21.கருணாகரன் 22.கருணாலயன் 23.கிருபாகரன் 24.குலிசாயுதன் 25.குமரன் 26.குமரேசன் 27.லோகநாதன் 28.மனோதீதன் 29.மயில்பிரீதன் 30.மயில்வீரா 31.மயூரகந்தன் 32.மயூரவாஹனன் 33.முருகவேல் 34.நாதரூபன் 35.நிமலன் 36.படையப்பன் 37.பழனிவேல் 38.பூபாலன் 39.பிரபாகரன் 40.ராஜசுப்ரமணியம்

    41.ரத்னதீபன் 42.சக்திபாலன் 43.சக்திதரன் 44.சங்கர்குமார் 45.சரவணபவன் 46.சரவணன் 47.சத்குணசீலன் 48.சேனாபதி 49.செந்தில்குமார் 50.செந்தில்வேல் 51.சண்முகலிங்கம் 52.சண்முகம் 53.சிவகுமார் 54.சிஷிவாகனன் 55.செளந்தரீகன் 56.சுப்ரமண்யன் 57.சுதாகரன் 58.சுகதீபன் 59.சுகிர்தன் 60.சுப்பய்யா.

    61.சுசிகரன் 62.சுவாமிநாதன் 63.தண்டபானி 64.தணிகைவேலன் 65.தண்ணீர்மலயன் 66.தயாகரன் 67.உத்தமசீலன் 68.உதயகுமாரன் 69.வைரவேல் 70.வேல்முருகன் 71.விசாகனன்.

    72.அழகன் 73.அமுதன் 74.ஆறுமுகவேலன் 75.பவன் 76.பவன்கந்தன் 77.ஞானவேல் 78.குகன் 79.குகானந்தன் 80.குருபரன் 81.குருநாதன் 82.குருசாமி 83.இந்திரமருகன் 84.ஸ்கந்தகுரு 85.கந்தவேல் 86.கதிர்காமன் 87.கதிர்வேல் 88.குமரகுரு 89.குஞ்சரிமணாளன் 90.மாலவன்மருகன் 91.மருதமலை 92.முத்தப்பன் 93.முத்துக்குமரன் 94.முத்துவேல் 95.பழனிநாதன் 96.பழனிச்சாமி 97.பரமகுரு 98.பரமபரன் 99.பேரழகன் 100.ராஜவேல்.

    101.சைலொளிபவன் 102.செல்வவேல் 103.செங்கதிர்செல்வன் 104.செவ்வேல் 105.சிவகார்த்திக் 106.சித்தன் 107.சூரவேல் 108.தமிழ்செல்வன் 109.தமிழ்வேல் 110.தங்கவேல் 111.தேவசேனாபதி 112.திருஆறுமுகம். 113.திருமுகம். 114.திரிபுரபவன் 115.திருச்செந்தில் 116.உமைபாலன் 117.வேலய்யா 118.வெற்றிவேல்.
    சிறப்பான பெயர் வைக்க அணுகவும்
    kanakaraj கோவை 9345760996

    ReplyDelete
    Replies
    1. கு ஆரம்பமாகும் முருகன் பெயர்கள் சொல்லவும்

      Delete
    2. பரணி நட்சத்திரத்திரம் பெண் குழந்தை பெயர் முருககடவுள் பெயரில் சொல்லவும் நண்பரே

      Delete
    3. மனோதீதன் விளக்கம் Please

      Delete
    4. தீவின் பெயர் விளக்கம்

      Delete
  2. முருகன் அம்சம் பொருந்திய தமிழ் பெண் பெயர்கள் ஏதேனும் இருந்தால் தகவல் சொல்லவும் தோழரே

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு வந்த பெயர்களை எனக்கும் அனுப்பவும்

      Delete
  3. முருகன் அம்சம் பொருந்திய தமிழ் பெண் பெயர்கள் ஏதேனும் இருந்தால் தகவல் சொல்லவும் தோழரே

    ReplyDelete
  4. சிவனும் முருகனும் சேர்ந்த பெயர் சொல்லுங்கள் (ஆண் குழந்தை)

    ReplyDelete
  5. சிவனும் முருகனும் சேர்ந்த பெயர் சொல்லுங்கள் (ஆண் குழந்தை)

    ReplyDelete
  6. முருகன் அம்சம் பொருந்திய தமிழ் பெண் பெயர்கள் ஏதேனும் இருந்தால் தகவல் சொல்லவும்

    ReplyDelete
  7. முருகன் அம்சம் பொருந்திய தமிழ் பெண் பெயர்கள் ஏதேனும் இருந்தால் தகவல் சொல்லவும்

    ReplyDelete
  8. தி,தே,தோ என் தொடங்கும் முருகனின் அம்ச ஆண் பெயர்கள்
    இரட்டை சகோதரர்களுக்கு

    ReplyDelete
  9. Murugan vishnu sertha peyar irutha sollunga

    ReplyDelete
  10. Please send தீஷிதன் அர்த்தம்

    ReplyDelete
  11. Please send தீஷிதன் அர்த்தம்

    ReplyDelete
  12. Murugan and Vishu serntha payarai sallvum

    ReplyDelete
  13. சுகதீபன் அர்த்தம்

    ReplyDelete
  14. தீஷிதன் அர்த்தம்

    ReplyDelete
  15. தீஷிதன் பெயர் காரnam

    ReplyDelete
  16. முருகனின் பெயர் ச. Thu. ஸ்ரீ. GnA. வரிசையில் peyargal send pannunga

    ReplyDelete
  17. சுகிர்தன் பெயர் அர்த்தம்

    ReplyDelete
  18. தீஷிதன் பெயர் அர்த்தம் சொல்லுங்கள்

    ReplyDelete
  19. நிமலன் என்றால் முருகனைத் தான் குறிக்குமா?

    ReplyDelete
  20. தீஷிதன் பெயர் அர்த்தம் சொல்லுங்கள்

    ReplyDelete
  21. கு ஆரம்பிக்கும் பெயர்கள்

    ReplyDelete
  22. தீஷிதன் என்ற பெயரின் விளக்கம் கூறவும்

    ReplyDelete
  23. தயாகரன் என்ற பெயரின் விளக்கம் கூறவும்

    ReplyDelete
  24. கிரிசலன் பெயர் அர்த்தம் சொல்லுங்க

    ReplyDelete