Monday, September 3, 2012

செல்வம் இருக்கும் காலத்தில் கடவுளை மறந்து அதிக ஆட்டம் போடக்கூடாது.

ஒரு ராஜா...செல்வத்தில் மிதந்தவன். பணம் இருந்த காலத்தில் தெய்வத்தின் நினைவு வரவில்லை. "சிவனே ராமா' என்று ஏதாவது விளையாட்டாக கூட சொன்னதில்லை. திடீரென உள்நாட்டுப் போர். எல்லா செல்வமும் போய்விட்டது. ராணிகள், பிள்ளைகள் கொல்லப்பட்டார்கள். வீரர்கள் பயத்தில் ஓடிவிட்டார்கள். கட்டிய துணியுடன் வெளியேறி விட்டான். இரவில் கடும் பசி. தாங்க முடியவில்லை. ஒரு திருவோடை எடுத்து முகத்தை மறைத்துக்கொண்டு (மற்றவர்கள் ராஜா பிச்சையெடுக்கிறான் என கேலி செய்து விடக்கூடாதே) பிச்சை கேட்டான். இரவில் பிச்சை கேட்பதும் தவறு, கேட்டவர்க்கு போடாமல் இருப்பது தவறு என்கிறது சாஸ்திரம். எனவே சிலர் பிச்சை போட்டனர். ஆசையுடன் திருவோடை எடுத்துக்கொண்டு சாப்பிட இருளில் ஒதுங்கிய போது, தெரியாமல் ஒரு நாயை மிதித்து விட்டான். அது ஆக்ரோஷத்துடன் கடித்து விட்டது. திருவோடு கீழே விழுந்து உணவு பாழானது. காலில் பலத்த காயம். செல்வம் இருக்கும் காலத்தில் கடவுளை மறந்து அதிக ஆட்டம் போடக்கூடாது. சரிதானே!

No comments:

Post a Comment