Tuesday, September 11, 2012

ஆடு, கோழி, பலியிடலாமா?

எல்லா உயிர்களையும் படைத்து, காத்து, அருள் பாலிக்கும் அன்னை எப்போதும், எக்காலத்திலும் எந்த உயிரையுமே பலியிடக்கூறி கேட்கவும் இல்லை. கேட்பதும் இல்லை! அப்படி இருக்க ஏன் ஆடு கோழி மட்டும் பலியிடப்படுகிறது தெரியுமா? தக்கன், சூரபதுமன் என்ற இரு அரக்கர்களுடைய தீய குணங்கள் எந்த ஒரு குடும்பத்தாரையும் பற்றிக் கொள்ளாமல் இருப்பதாகவே கோயில் வளாகத்தில் பலி பீடத்தில் அரக்க குண எண்ணங்களை பலியிட்டு தூய சிந்தனையுடன், உடல் சுத்தம், உள்ளம் சுத்தமாகியே தூய மனத்தோட திருக்கோயில் உள்ளே நுழைந்து வழிபட வேண்டும் என்பதே பலியிட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை தவறாக புரிந்து கொண்டு தவறான ஆடு, கோழி என்றே பலியிட்டு படைப்பதாகவே ஆதியில் இருந்து வழக்கத்தில் இருந்துள்ளது.

No comments:

Post a Comment