Wednesday, September 5, 2012

குங்குமம்

சுமங்கலி பெண்கள், தலை உச்சி வகிட்டு நுனியில் குங்குமம் இட்டு தாங்கள் திருமணமானவர்கள் என்பதை பறைசாற்றிக் கொள்வார்கள். தலை வகிட்டு நுனி லட்சுமியின் இருப்பிடம் என்பது ஐதீகமாக உள்ளது. வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் தருவதால், கொடுப்பவர்- பெறுபவர் இருவருக்குமே மங்கலம் உண்டாகும். பொதுவாக யாராக இருந்தாலும் வலது கை மோதிர விரலால் குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வது நன்மை பயக்கும். அது மங்கலத்தையும், ஆரோக்கியத்தையும் தர வல்லது. கட்டை விரலால் குங்குமம் அணிவது துணிவை தரும். ஆள்காட்டி விரலால் குங்குமம் இடுவதால் நிர்வாகத்திறமை மிகுதியாகும். நடு விரலால் நெற்றியில் குங்குமம் அணிந்து கொள்வது ஆயுளை கூட்டும்.

No comments:

Post a Comment