Tuesday, September 4, 2012

சொர்ண தானம் -தீபாவளி தானம்

சொர்ணம் என்பது தங்கம் ஆகும். தனூர்வ்யதி பாதம் அன்று சொர்ண தானம் மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. வெற்றிலை,பாக்கு, தேங்காய், தட்சனை, துளசி தளம் மற்றும் சிறிதளவு தங்கம் வைத்து தானமாக கொடுக்க வேண்டும். பெண்கள் கல்யாணத்திற்காக, எத்தனையோ நபர்கள் திருமாங்கல்யம் செய்ய பலரிடம் பண உதவி கேட்கிறார்கள். வசதி உள்ளவர்கள் இந்த மாதிரி நாட்களில் அவர்களுக்கு சிறிதளவு தங்கம் தானம் செய்யலாம். இப்படி பலர் கொடுப்பதைக் கொண்டு அவர்கள் திருமாங்கல்யம் செய்து கொள்வார்கள். தானம் கொடுத்த தங்கம் நல்ல விதமாகவும் உபயோகம் ஆகும். இப்படி சிறிதளவே தங்கம் தானம் கொடுத்தாலும் சொர்ணதானம் கொடுத்தோம் என்ற மனநிறைவும் இருக்கும். சிறிதளவே கொடுப்பதினால் சக்திக்கு மீறியதாகவும் ஆகாது. ஒரு சுமங்கலிக்கு புடவை வாங்கி கொடுப்பதானாலும், 500 ரூபாய்க்குக் குறையாமல் ஆகிறது. அந்த மாதிரி புடவை வாங்கிக் கொடுக்கும் பணத்திற்கு திருமாங்கல்யத்துடன் கோர்த்து கொள்ளும் குண்டு, கோதிமணி, லட்சுமி காசு இப்படி ஏதாவது வாங்கி சொர்ண தானம் கொடுக்கும் சமயத்தில் தானமாக கொடுக்கலாம். தீபாவளி தானம் தீபாவளி தினத்தன்று செய்ய வேண்டிய தானம் வருமாறு:- தீபாவளி அன்று அவசியம் வஸ்த்ர தானம் செய்ய வேண்டும். நம்மால் முடிந்தால் ஏழை எளியவர்களுக்கு துணிமணிகள் வாங்கி கொடுக்கலாம் ஒரு ஏழைக்காவது வேஷ்டி, துண்டு, ரவிக்கை வாங்கி கொடுப்பது நல்லது. நமது உறவினர்களில் சற்று கஷ்டமான நிலையில் உள்ளவர்களுக்கு நம் மால் முடிந்த வகையில் பண்டிகைக்கு அவர்களுக்கு இப்படி உதவலாம். ஆனால் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் சிரமமான நிலையில் இருப்பவர்களுக்கு துணிமணிகள் வாங்கி கொடுப்பதை விட உணவுக்கு ஆகும் மாதிரி நம்மால் முடிந்த பொருள் உதவி செய்வது மேலும் புண்ணியம் தரும்.

No comments:

Post a Comment