Monday, September 3, 2012

* அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்கிறார்களே. உண்மையா?

* அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்கிறார்களே. உண்மையா? . சற்று கூட உண்மை இல்லை. அமாவாசையில் பிறந்தவர்களுக்கு திருட்டு குணம் உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படவில்லை. ஆனால், இந்த பொய் எப்படியோ மக்கள் மத்தியில் பரவி விட்டது. ** ஆடம்பரபக்தி, எளியபக்தி இதில் எதைக் கடவுள் விரும்புகிறார்? விருப்பு வெறுப்பைக் கடந்தவர் கடவுள். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடும் அவருக்கு கிடையாது. பக்தி என்பது மனதைப் பொறுத்த விஷயம். ஆடம்பரமாய்ச் செய்தால் பலன் அதிகம் என்றோ, எளிமையாகச் செய்தால் குறைவு என்றோ எண்ணத் தேவையில்லை. உள்ளத் தூய்மையே பக்திக்கு தேவை. மன்னர் கட்டிய கற்கோயிலை விட, பூசலார் நாயனார் கட்டிய மனக்கோயிலில் சிவன் விரும்பி ஏற்றுக் கொண்டார் என்பதை பெரியபுராணம் காட்டுகிறது. பொருளாதாரம் இடமளித்தால் ஆடம்பரமாக வழிபடுங்கள். இல்லாவிட்டால் எளிமையைப் பின்பற்றுங்கள். எதுவானாலும் உள்ளன்போடு செய்யுங்கள். இறைவன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார். * பிரதோஷ வேளையில் கோயிலுக்குச் சென்று வழிபடமுடியவில்லை.அப்போது வீட்டில் இருந்தே வழிபாடு செய்யலாமா? கோயிலுக்குச் செல்வதே சிறந்தது. தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டிலிருந்து வழிபடுங்கள். பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்குரிய சிவாயநம, நமசிவாய ஐந்தெழுத்து மந்திரங்களை ஜெபிக்கலாம். தேவார, திருவாசகப் பாடல்களைப் பாராயணம் செய்யலாம். * அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்கிறார்களே. உண்மையா? . சற்று கூட உண்மை இல்லை. அமாவாசையில் பிறந்தவர்களுக்கு திருட்டு குணம் உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படவில்லை. ஆனால், இந்த பொய் எப்படியோ மக்கள் மத்தியில் பரவி விட்டது. * 18 சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா? சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். அடியார்களை வழிபடுவதும் ஆண்டவனை வழிபடுவதும் ஒன்றே. தாராளமாக வழிபடலாம். * சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்துவிட்டால் எடுத்துவிடலாமா அல்லது மறுமுறை பூ வைக்கும்போது தான் எடுக்க வேண்டுமா? சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் எடுத்துவிடலாம். தூய்மையும் வழிபாட்டில் ஒரு அங்கமே. நம் வசதிக்குத் தகுந்தாற்போல அடுத்தமுறை எப்போது வேண்டுமானாலும் பூ வைக்கலாம். * கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா? பிரசாதமாக வாங்கிய விபூதி, குங்குமத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வது அவசியம். கோயில் சுவரில் விபூதி, குங்குமத்தை வைப்பதால் கீழே சிந்தி கால்மிதி படும்படி ஆகி விடுகிறது. கோயில் தூண்களும் பாழாகி பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கிறோம். கோயில்களில் போதுமான அளவு விபூதி கொடுத்தால் போதும். வாங்குவோரும் வீணாக்காமல் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

No comments:

Post a Comment