Tuesday, September 4, 2012

தானம் செய்வது பற்றி விதுரர் கூறி இருப்பதாவது:-

மகாபாரதத்தில் உள்ள விதுர நீதியில் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. விதுர நீதி திருதராஷ்டிரனுக்காக விதுரர் சொன்னது ஆகும். விதுரர் மகா ஞானி. அவர் தர்மத்தின் அம்சம் ஆவார். உபதேசங்கள் தர பலர் இருந்தாலும் உபதேசங்களை உபதேசிப்பவர்கள் முதலில் பின்பற்ற மாட்டார்கள். ஆனால் விதுரர் அப்படி இல்லை. அவர் பின்பற்றியதையே உபதேசித்துள்ளார். அந்த வகையில் தானம் செய்வது பற்றி விதுரர் கூறி இருப்பதாவது:- தானம் செய்ய நாம் நேர்மையாக சம்பாதித்த பொருளையே கொடுக்க வேண்டும். நேர்மையற்ற வழியில் வந்ததை கொடுத்தால் அது தானம் ஆகாது. அந்த காலத்தில் ராஜாக்கள் தானம் கொடுக்கும் போது தானமாக கொடுக்கப்படும் பொருள் நேர்மையாக சம்பாதித்தது என்று பிரதிக்ஞை செய்தால் தான் ஞானிகள் பெற்றுக்கொள்வார்களாம். எனவே தானம் கொடுக்கும் பொருள் நேர்மையாக சம்பாதித்ததாக இருக்க வேண்டும். அடுத்து தானம் கொடுத்தபின் அந்த பொருள் நமது இல்லை என்ற எண்ணம் வந்து விட வேண்டும். அந்த பொருள் மீது நாம் நமது பெருமைக்காக தானம் கொடுத்தால் பெருமை நிச்சயம் கிட்டும். ஆனால் தானம் செய்ததற்கான புண்ணியம் கிடைக்காது. (தான் ஒருவனுக்கு ஒரு பொருளை கொடுத்து விட்டு அதை நான் தான் கொடுத்தேன் என்று சொல்லிக் கொள்பவனுக்கு நரகம் தான் கிட்டும் என்று ஏற்கனவே விதுரர் கூறி உள்ளார். இவ்வாறு தானம் கொடுப்பது பற்றி விதுரர் தெரிவித்து உள்ளார். தானங்கள் பலவற்றிலும் பருத்தி தானமே மிகவும் சிறந்தது அந்த பருத்தி தானமே மகர்தானம் என்ற பெயரை பெற்றது. அறப்படி வாழ்ந்து அறங்களையே புகன்று, நான்கு வேதங்களையும் நன்றாக அறிந்தவர்கள் பூணுகின்ற பூனூலுக்கு பருத்தியே ஏதுவானது. சகல ஜீவன்களும் உலகில் வாழ்கின்ற காலத்தில் பருத்தியே பயனாவதால் அது மிகவும் சிறப்புடையதாகும். பருத்தி தானம் செய்தால், மாமுனிவர்களும் பிரமருத்திர இந்திராதி தேவர்களும் திருப்தியடைவார்கள். பருத்தி தானம் செய்தவன் வாழ்நாள் முடிந்த காலத்தில், சிவலோகத்தை அடைந்து, அங்கேயே வாசம் செய்து, பிறகு சகல குண சம்பன்னனாய் அழகிய மேனியை உடையவனாய், மகா பலசாலியாய், தீர்க்காயுள் உடையவனாய் மீண்டும் பூமியில் பிறந்து யாவரும் போற்றிப்புகழ நெடுஞ்காலம் வாழ்ந்து சுவர்க்கலோகத்தை அடைவான். தானங்கள் செய்வதற்கு சிறந்த காலம், ஜீவன் மரிக்கும் காலத்தில் செய்வதே ஆகும். பருத்தி தானத்தை செய்தல் எம தூதர்களிடத்தில் பயம் உண்டாகாது. தானியங்களை தானம் செய்தால் கூற்றவனும் அவனது தூதர்களும் மகிழ்ந்து, ஜீவனுக்கு வேண்டியவற்றை எல்லாம் வழங்குவார்கள். கயா சிரார்த்தம் செய்வதை விட தந்தை, தாய் இறக்கும் சமயத்தில் அவன் தன் தாய், தந்தை அருகிலேயே இருந்து கொண்டு செய்வதே உத்தமமாகும். மரிக்கும் காலத்தில் இரும்பை தானம் செய்தால் யமன் மகிழ்வான். யமதூதர்கள் அஞ்சுவார்கள், காண்டா மிருகன், ஒளதும்பரன், சம்பரன், சார்த்தூலன் முதலிய யமதூதர்கள் திருப்தி அடைவார்கள். எள் தானம் எள் தானம் மிகச் சிறந்த பயனைத் தரும். சிரார்த்தம் கொடுக்கும்போது கருப்பு எள்ளை சேர்த்துக் கொடுத்தால் பிதிர் தேவதைகள் சந்தோஷமடைவார்கள் என்பது ஐதீகம். மேலும் எள்ளானது விஷ்ணுவின் வியர்வையில் இருந்து உண்டானது. மிகத் தூய்மையான இதைக் கண்டால் அசுரரும், பூத, பிரேத, பிசாசுகளும் ஓடி விடும். எனவே எள் வீட்டில் இருப்பது அந்த விஷணுவே நம் வீட்டில் வாசம் செய்வதற்கு சமமாகும்.

No comments:

Post a Comment