Wednesday, September 5, 2012

உங்கள் குழந்தை கல்வியில் நம்பர்-ஒன் ஆக இருக்க

உங்கள் குழந்தை கல்வியில் நம்பர்-ஒன் ஆக இருக்க வேண்டுமானால் குறிப்பிட்ட காலங்களில் சில வகை தானங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி உங்கள் குழந்தையின் பிறந்த நாள் அன்று நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வாங்கி மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ-மாணவிகளுக்கும், ஆதரவற்ற மாணவ-மாணவிகளுக்கும் தானமாக கொடுக்க வேண்டும். கல்விக்குரிய தெய்வங்களான சரஸ்வதி தேவி, ஹக்கிரீவர், ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு ஏழைகளுக்கு எந்தவித தானமும் கொடுக்க வேண்டும். தெட்சிணாமூர்த்திக்கு அடிக்கடி பூஜை செய்து கடலை தானம் செய்யலாம். நவக்கிரகங்களில் புதன் கிரகத்துக்கு அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் செய்து கோவிலில் நடைபெறும் அன்னதானத்துக்கு உதவலாம். அல்லது நீங்களே அன்னதானம் செய்யுங்கள். ஐந்து தலை நாகத் தேவதைக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்தாலும் பலன் கிடைக்கும். சில குழந்தைகளுக்கு தேர்வு என்றாலே பயம் வந்துவிடும். இதற்கு வாராசிக்கு மாதுளம் பழத்தால் அர்ச்சனை செய்து தேன் நைவேத்தியம் செய்யலாம். பிறகு பக்தர்களுக்கு பிரசாதங்களை தானமாக கொடுக்கலாம். சில மாணவர்களுக்கு படிப்பு பற்றி உள்ளுக்குள் ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும். இந்த குறையை நிவர்த்தி செய்ய சிவாலயங்களில் நெல்லிக்காய் தானம் செய்யலாம். சில மாணவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படலாம். இந்த மாதிரி பாதிப்பை நீக்க ஏழைகளுக்கு தைலம் தானம் செய்யலாம். துலாபாரம் செய்து அதே அளவு பொருட்களையும் கூட ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

No comments:

Post a Comment