Monday, September 3, 2012

விவேகானந்தர்

கைகால்கள் நன்றாக இருக்கும் ஒருவன் நம்மிடம் பிச்சை கேட்டு வந்தால், ""எல்லாம் நல்லாத்தானே இருக்கு! உழைச்சு பிழைக்க வேண்டியது தானே!'' என்று சொல்லி விரட்டுவோம் இல்லையா? இதோ போன்ற நிலைமை சுவாமி விவேகானந்தருக்கும் ஏற்பட்டது. அவர் காவி வேஷ்டியும், சட்டையுமாக ஊரெல்லாம் வலம் வருவது கண்ட ஒரு இளைஞன்,""இதெல்லாம் ஒரு பிழைப்பா! நீயெல்லாம் உழைத்து பிழைக்கக்கூடாதா? வயித்துக்காக இப்படி பிச்சை எடுக்க வருகிறாயே!'' என்று கடுமையாகத் திட்டிவிட்டான். இதுகேட்ட விவேகானந்தர் ரொம்பவே மனம் நொந்து விட்டார். அதேநேரம், அந்த நபரின் பேச்சில் இருந்த நியாயத்தையும் உணர்ந்தார். ""அவன் சொல்வதும் சரிதானே! சந்நியாசியானாலும், உழைப்பதற்கு உடல் இருக்கிறதே! அதேநேரம், உழைப்பு...அது...இது எனத்திரிந்தால், இறைவனை அடையும் மார்க்கத்தை கைவிட வேண்டியிருக்குமே! குழம்பிப்போன அவர் காட்டுக்குச் சென்று தவமிருந்து உயிரை விடுவதென தீர்மானித்தார். கண்மூடி தவத்தைத் தொடங்கினார். ஒருநாள், புலி ஒன்று, அவர் முன்னால் நின்றது. தற்செயலாகக் கண்திறந்த சுவாமி புலியை உற்றுப்பார்த்தார். புலி அவரை நோக்கி வந்தது. என்ன நினைத்ததோ தெரியவில்லை! சற்று தள்ளி படுத்துக் கொண்டது. ""பாவம் இந்தப்புலி! அதற்கு கடும் பசி போலும், நடக்கக்கூட தெம்பில்லாமல் படுத்துவிட்டது,'' என்றெண்ணிய விவேகானந்தர், புலியின் அருகில் செல்ல எழுந்தார். புலியும் எழுந்தது. "திக் திக்' என்ற நேரம்! ஆனால், புலி எங்கோ ஓடிவிட்டது. ""இறைவா! புலி கூட என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டதே! என்னை எதற்காக இந்தப் பூமியில் வாழ வைத்திருக்கிறாய்? என்னிடம் வேறு என்ன பயனை எதிர்பார்க்கிறாய்?'' என்ற விவேகானந்தர், மனதைத் தேற்றிக்கொண்டார். மரண முடிவைக் கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்

No comments:

Post a Comment