Wednesday, September 5, 2012

அரிய பலன் தரும் மாசிமக நீராடல்

கங்கை, காவிரி, யமுனை, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, குமரி, பயோடினி, சரயு ஆகிய ஒன்பது நதிகளும் புனிதம் வாய்ந்தவை. ஒரு முறை ஈசனை தரிசித்த நவ நதிகளும், "பரம்பொருளே, மக்கள் எங்களிடம் விட்டுப்போகும் பாவங்கள், எங்களை வருத்துகின்றன. அந்த பாவக் கறைகளை அகற்ற வழி கூறுங்கள்'' என வேண்டின. அவர்களிடம், "நதிப் பெண்களே, குரு சிம்ம ராசியில் பிரவேசிக்கும் மக நட்சத்திர வேளையில், தென் பாரதத்தின் குடந்தை நகரில் எழுந்தருள்வேன். அந்த வேளையில் நீங்களும் அங்கு வந்து, அங்குள்ள புனித தீர்த்தத்தில் மூழ்கி, பாவங்களை நீக்கிக்கொள்ளலாம்'' என்று அருளினார். ஈசன் குறிப்பிட்ட புனித நாளில் குடந்தையை அடைந்த நவநதி பெண்களும் மகாமக தீர்த்தத்தில் மூழ்கி தங்களது பாவம் களையப்பெற்றனராம். அதுமட்டுமா? ஒவ்வொரு மகாமகத்திலும் நவ நதி கன்னிகைகள் இங்கு வந்து நீராடுவதாக நம்பிக்கை. ஆக, மகாமக விழாவன்று இந்த குளத்தில் நீராடினால், புனிதம் மிகுந்த நவநதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும். மாசி மகத்தன்று, கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடி, பித்ருகளுக்கு சிராத்தம் செய்பவர்களுக்கு, கயாவில் கோடி சிராத்தம் செய்த பலன் கிடைக்கும். நமது 100 தலைமுறைகளும் பாதகங்கள் தீண்டாமல் வாழும் என்கின்றன ஞான நூல்கள்

No comments:

Post a Comment