Tuesday, September 4, 2012

சங்கு தானம்

ஆஷாட மாத பவுர்ணமியில் இருந்து ஜேஷ்ட மாத பவுர்ணமி வரை இந்த தானம் செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கில் தட்சணை, துளசி தளம் வைத்து அபிஷேகம் செய்வதற்கு உபயோகிக்கும் சங்கு வைத்துக் கொடுப்பது நல்லது. மகாலட்சுமியின் ஹாந்நித்யம் நிறைந்த சங்கு தானமாக கொடுப்பதினால் நமக்கு லட்சுமி கடாட்சம் இருக்கும் மற்றும் வெற்றி முழக்கம் செய்வது ஷங்கத்தினால், அதனால் நமக்கு காரிய வெற்றி என்பது ஐதீகம். இந்த தானமும் சாதுர் மாத துவாதசிகளில் ஆரம்பித்து 24 துவாதசியும் அல்லது சாதுர்மாத துவாசிகளில் மட்டும் கொடுக்கலாம். பூஜைக்கு உபபோகப்படுத்தும் எந்தப் பொருளை தானம் கொடுத்தாலும் அதன் பலன் நமக்கு எப்பிறவிகளிலும் பூஜை செய்யும் பாக்கியமும், அதற்கு தேவையான பக்தி, பொருள் வசதி, ஆரோக்கியம் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment