Tuesday, September 4, 2012

இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி

தனக்கு பிரியமான பொருளை பகவானுக்கு நிவேதனம் செய்பவனும், தானம் செய்பவனும் இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி பெறுவார்கள். திதிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வசதி செய்து கொடுப்பவன், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலனை அடைவான். பசு தானம் செய்வது மிகவும் புண்ணியமானது. பசுவையும், கன்றையும் வைத்து பராமரிப்பவருக்கு தான் தானம் செய்ய வேண்டும். அதிலும், நன்றாக கறக்கக்கூடிய பசுவை, கன்றுடன் தானம் செய்ய வேண்டும். பசுவுக்கு ஒரு கை புல் கொடுப்பதும் புண்ணியம் தான். பகவானின் சன்னதியில் அகண்ட தீபம் ஏற்றுவதும் புண்ணியம் தான். கோவிலுக்கு சென்றால் எந்தெந்த சன்னதிகளில் எத்தனை நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கூட கணக்கு உள்ளது. இப்படி புண்ணியத்துக்கு பல வழிகள் உள்ளன. அவைகளை சிரத்தையுடன் செய்வது தனக்கும், குடும்பத்துக்கும் நல்லது.

No comments:

Post a Comment