Wednesday, September 5, 2012

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம் தொன்றுதொட்டே பாரத மக்கள் பின் பற்றி வந்த ஆசார முறை ஆகும். சூரிய நமஸ்காரம் உடல் மற்றும் உறுதியடையவும், அமைதியடையவும் உதவுகிறது. இதை விதி முறைகள் படி செய்து போது உடற்பாகங்களுக்கு சக்தியும் ஆற்றலும் வருகிறது. உலக நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசத்தி பெற்றது. சன்பாத், ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற பெயர்களில், சூரிய நமஸ்காரத்தை உட்படுத்திய உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். சூரிய நமஸ்காரம் செய்வதுதன் மூலம் நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. வைட்டமின் டியை உற்பத்தி செய்யும் திறன காலை சூரிய ஒளிக்கதிர்களுக்கு அதிகம் உண்டு மேலும் கால்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் சூரிய ஒளிக்கதிர்களுக்கு உண்டு. தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்து வந்தால், மூட்டுகள் நல்ல பலன் பெறும் மற்றும் தொப்பை வயிறு வருவதை கட்டுபடுத்தவும் உதவுகிறது வயது முதிர்ச்சியை ஏராவு தள்ளி போடவும் இது உதவுகிறது மனதும் உடலும் ஆரோக்கியமாக இருக்கவும் இந்த சூரிய நமஸ்காரம் உதவுகிறது. சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பிக்கும் போது சில விஷ்யங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். தேனீர், காபி, புகையிலை, மதுபானம் முதலியவற்றை அருத்த கூடாது. அளவான உணவை உட்கொள்ள வேண்டும் தூய்மையான விசாலமான காற்றோட்டமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மிக முக்கியமாக ஆடைகளை சற்று தளர்ச்சியாக அணிய வேண்டும். இப்படி அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்டு சூரிய நமஸ்காரம் ஆரம்பிக்க வேண்டும்

No comments:

Post a Comment