Monday, October 1, 2012

பிள்ளையார் நடத்திய நாடகம்

பர்தஹாரி என்பவர் மகாப் பெரிய கவிஞர், சமிஸ்கிருத வல்லுனர். நிதி சாகரா, ஸ்ரிங்கார சாதகா, வைராக்ய சாதகா மற்றும் சுபாசிதஸ் போன்ற நூல்களை இயற்றியவர். பாடலிபுரத்தை சேர்ந்த வித்யாசாகரா என்ற அறிஞரின் மகன். வித்யாசாகரா என்ற அறிஞ்சர் பாடலிபுரத்தை ஆண்டு வந்த மன்னனின் அரச சபையில் இருந்தவர். அந்த மன்னன் மரணம் அடைந்தப் பின் வித்யாசாகரா அந்த நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்றார். வித்யாசாகராவின் மரணத்திற்குப் பிறகு அவருடைய மகனான பத்ரஹரி மன்னனாக பதவி ஏற்றார் (பத்ரஹரியை மன்னன் விக்ரமாதித்தனின் சகோதரர் என்பார்கள்) . மரணம் அடைய இருந்த தந்தைக்கு பத்ரஹரி திருமணம் ஆனாலும் தான் எந்த சந்ததியையும் உருவாக்க மாட்டேன் என ஒரு சத்தியம் செய்து கொடுத்தார். அதற்கேற்ப அவர் மூன்று மனைவிகளுடன் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் எந்த வாரிசும் அவர் மூலம் உருவாகவில்லை. அதே நேரத்தில் பத்ரஹரியும் ஆன்மீக மனம் கொண்டவர். ஆகவே அவர் சாதுக்கள் சன்யாசிகளுடன் தனது பெரும்பாலான நேரத்தை அவர்களுடன் விவாதம் செய்து செலவழித்தவர் . ஒரு முறை அவருக்கு ஒரு பெரிய மகான் மகிமை வாய்ந்த மாம்பழத்தைக் கொண்டு வந்து தந்து 'அப்பனே இந்தப் பழம் மிகவும் விசேஷமானது. இதை உண்டால் மூப்பு (வயதான தோற்றம்) வரவே வராது. என்றுமே நீ இளமையாக இருப்பாய். ஆகவே குளித்து விட்டு இன்று இதை நீ உண்ணலாம்'' என்று கூறிவிட்டுச் சென்றார். அதன் பின் அவரைக் காணவில்லை. பர்தஹரி நினைத்தார் '' இந்தப் பழத்தை உண்டு விட்டு நான் இளமையாக இருந்து என்னப் பயன்?. என் மனைவி வயதாகி இறந்து விடுவாள். அவள் இறந்தப் பின் நான் உயிருடன் இருந்து என்னப் பயன்? ஆகவே நான் இதை உன்னுவதைவிட எனக்கு துணையாக இருக்கும் அவள் இதை உண்டு விட்டு வெகுக் காலம் வாழட்டும்''. மனைவி வந்தவுடன் அந்தப் பழத்தின் மகிமையைக் குறித்து அவளிடம் கூறி விட்டு அதை அவளை உண்ணுமாறு அதை அவளுக்குக் கொடுத்தார். 'சரி குளித்தப் பின் அதை நான் சாப்பிடுகிறேன்' என பழத்தை எடுத்துச் சென்றவள் நினைத்தாள், 'அடடா...இதை என்னுடைய காதலனுக்குக் கொடுத்தால் அவன் இளமையாக இருந்து நம்மை இன்னமும் இன்பமாக அல்லவா வைத்து இருப்பான்'. அவளுக்கு அந்த அரண்மனையில் குதிரை லாயத்தில் இருந்த ஆஜானுபாகுவான வேலைக்காரனுடன் கள்ளத் தொடர்ப்பு இருந்தது. அதற்குக் காரணம் பத்ரஹரி அவர் தந்தையிடம் ஒரு வாரிசை தான் உருவாக்க மாட்டேன் என வாக்குக் கொடுத்து இருந்ததினால் இல்லற சுகங்களில் அதிகம் ஈடுபடாமல் இருந்தார். அதனால் இளமைக் காலத்தில் இருந்த ராணி தனது உடல் சுகத்திற்க்காக அரசனுக்குத் தெரியாமல் கள்ளத் தொடர்ப்பை வைத்து இருந்தாள். ஆகவே அந்தப் பழத்தை எடுத்துச் சென்றவள் கள்ளத் தொடர்ப்பை வைத்து இருந்த வேலைக்காரனை அழைத்து அந்தப் பழத்தின் மகிமையைக் கூறி அதை உண்ணுமாறுக் கூறினாள். அரண்மனையில் வேலை செய்வதினால் தன் உடல் மீது வெறி கொண்டு அலைந்த ராணி உல்லாசத்திற்கு கூப்பிடும்போது வேறு வழி இல்லாமல் அவளிடம் மறுக்க முடியாத நிலையில் அவன் இருந்தாலும் தன்னுடைய மனைவியிடம் அதிக ஆசை வைத்து இருந்தவன் 'சரி அதை நான் சாப்பிடுகிறேன்' என எடுத்துச் சென்றான். அதை கொண்டு சென்றவன் நினைத்தான் , 'அடடா...இதை என் மனைவிக்குக் கொடுத்தால் அவள் என்றும் இளமையாக இருந்து என்னை மகிழ்விப்பாளே '. ஆகவே குதிரை லாயத்துக்கு உணவு எடுத்து வந்த தன மனைவியிடம் அந்தப் பழத்தின் மகிமையை பற்றிக் கூறி குளித்து விட்டு அவளை உண்ணுமாறுக் கூறி அனுப்பினான் . இப்படியாக ஒருவர்மாரி இன்னொருவர் என கைமாறி வேலைக்காரியிடம் சென்ற அந்த மகிமை வாய்ந்தப் பழத்தை பத்திரமாக எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது வழியில் மாறு வேடத்தில் நகர் வலம் வந்து கொண்டு இருந்த மன்னன் பத்ரஹரி அவள் கையில் இருந்த பழத்தை அடையாளம் கண்டு கொண்டு ஒன்றும் தெரியாதவர் போல அவளிடம் சென்று அது என்ன என்றும், அவளுக்கு எப்படி அது கிடைத்தது என்பதையும் கேட்டறிந்தவுடன், கோபம் அடைந்து அரண்மனைக்குச் சென்றான். குதிரை லாயத்தில் வேலை செய்து கொண்டு இருந்த வேலைக்காரனை அழைத்து அந்தப் பழத்தை அவனுக்குத் தந்தது யார் எனக் கோபத்துடன் கேட்க அந்த வேலைக்காரனும் ராணியுடன் தனக்கு இருந்த கள்ளத் தொடர்ப்பைக் குறித்துக் கூறாமல் அதை மறைத்துவிட்டு, அந்தப் பழத்தை அவருடைய மனைவியான மகாராணியே தனக்கு தந்ததாக சத்தியம் செய்து கூறினான். ஆகவே மன்னன் தனது மனைவியையும் அழைத்து அது பற்றி பேச விரும்பினான். ஆனால் வேலைக்காரனை அழைத்து மன்னன் விசாரித்ததை ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருந்த ராணியும் எங்கே தன்னுடைய கள்ளக் காதல் தெரிந்து விடுமோ என பயந்து கொண்டு அவனுக்கு விஷம் கலந்த சப்பாத்தியை செய்து அதைக் கொண்டு போய் அவனிடம் கொடுத்து ' நாதா.....இன்று உணவு தயாரிக்க அதிக நேரம் ஆகும் என்கிறார்கள். ஆகவே இதை தற்காலிகமாக உண்டுவிட்டு படுத்துக் கொள்ளுங்கள். பட்டினியுடன் இருப்பது வயிற்றுக்கு நல்லது அல்ல' என இனிமையாகப் பேசி விட்டு அவன் மேலே எதையும் கேட்கும் முன்னரே விடுக்கென வெளியில் சென்று விட்டாள். ஆனால் பர்தஹரிக்கு அவள் மீது சந்தேகம் எழுந்தது. அவள் ஏன் வேலைக்காரனுக்கு அந்த மகிமை வாய்ந்த பழத்தைக் கொடுக்க வேண்டும்? அவனுக்கும் இவளுக்கும் என்ன தொடர்ப்பு இருக்க முடியும் , மேலும் என்றும் இல்லாமல் இன்று ஏன் அவசரம் அவசரமாக ரொட்டியை தந்து விட்டுச் சென்றாள்? யோசனை செய்தவன் கண்களை மூடியபடி பிரார்த்தனை செய்தபோது அது விஷம் கலந்த ரொட்டியே என்பது அவன் மனக் கண்ணில் தெரிந்தது. ஆகவே இனியும் தகாத மனைவியுடன் இருந்து கொண்டு உயிர் வாழ்வதை விட வாழ்கையின் நான்கு அம்சங்களில் ஒன்றான சன்யாச வாழ்கையை ஏற்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். யாருக்கும் தெரியாமல் அந்த ரொட்டியை அறையின் மேல் பகுதியில் வைத்து விட்டு அரண்மனை வேலைக்காரனைப் போல மாறு வேடம் அணிந்து கொண்டு ஒரு பிட்ஷைப் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி விட்டான். போகும் முன் இந்த ''ஓட்டப்பம் இந்த வீட்டை சுடட்டும்'' என்று சபித்து விட்டுச் சென்று விட, அவன் அரண்மனையை விட்டு வெளியேறியதுதான் தாமதம் அரண்மனை பற்றி எறிந்து விட அதில் இருந்த அவனுடைய மனைவி மற்றும் கள்ளக் காதலன் போன்ற அனைவரும் இறந்து விட்டார்கள். அரண்மனையில் இருந்து வெளியேறிய பத்ரஹரி சன்யாசக் கோலம் பூண்டு இனி பிட்ஷை எடுத்துதான் உண்ண வேண்டும் என்ற வைரகியத்துடன் தென் இந்தியப் பகுதியை நோக்கிச் சென்றார். அங்கு சென்றவர் பிள்ளையார் கோவில் வாயிலில் ( எந்த ஊர் என்பது தெரியவில்லை. ஆனால் அது பிள்ளையார் பட்டி என்கிறார்கள் ) அமர்ந்து கொண்டு பிட்ஷை எடுத்து உண்டவண்ணம் வாழ்கையைக் கழித்தார். அந்த ஆலயத்துக்கு இரண்டு நுழை வாயில்கள் உண்டு. அப்போது ஒரு நாள் ஒரு பிச்சைக்காரன் பர்தஹரி அமர்ந்து இருந்த வாயிலுக்கு அடுத்த வாயிலில் சென்று பிச்சை எடுக்கலானான். அப்போது அவன் எதிரில் வந்த ஒருவர் பர்தஹரியிடம் சென்று தானம் கேட்குமாறு கூறி அவனை அங்கு அனுப்பினார். அந்த பிச்சைக்காரனும் சன்யாசிக் கோலத்தில் இருந்த பர்தஹரியிடம் சென்று ''வயதான ஒருவர் என்று என்னிடம் வந்து உங்களிடம் தானம் கேட்குமாறு அனுப்பினார்'' என்று சொன்னதும் பர்தஹாரி ஒருகணம் யோசனை செய்தார் 'நானே பிட்ஷை எடுத்து உண்ணுகையில் இவனுக்கு என்ன தானம் செய்ய முடியும்?' அடுத்த கணம் அவர் மனதில் தோன்றியது 'ஓஹோ...அரண்மனையில் இருந்து எடுத்து வந்துள்ள இந்த பிட்ஷைப் பாத்திரத்தையும் துறக்க வேண்டிய அவசியம் உள்ளதோ' என்று எண்ணியவர் 'அப்பனே, என்னிடம் தானம் தர இது ஒன்றுதான் உள்ளது. இந்தா எதை எடுத்துக் கொள் ' எனக் கூறி விட்டு அந்த பாத்திரத்தையும் கொடுத்து விட்டார். அந்த பிச்சைக்காரன் சிரித்துக் கொண்டே அதை வாங்கிக் கொண்டு சென்றான். அவன் சென்றப் பின்தான் அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டது, அனைத்து நாடகத்தையும் அங்குள்ள பிள்ளையார் மனித உருவில் வந்து நிகழ்த்தி உள்ளார். ஒரு சன்யாசிக்கு சொந்தமாக எதுவுமே இருக்கக் கூடாது. அதாவது உலகப் பொருட்கள் அனைத்தையும் துறந்து மனதை நிர்வாணமாக வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் எனும்போது அரண்மனையில் இருந்து கொண்டு வந்திருந்த பிட்ஷை பாத்திரத்தை வைத்திருக்கலாமா? . அதனால்தான் அந்த தத்துவத்தைப் புரிய வைக்கவே பிள்ளையார் அந்த நாடகத்தை நடத்தி உள்ளார். அன்று முதல் பர்தஹாரி கையேந்தி பிட்ஷைப் பெற்றுக் கொண்டு கிடைத்ததை உண்டவண்ணம் அங்கேயே வாழ்ந்து கொண்டு இருந்தார். அங்கு இருந்தபோதுதான் அவர் மேலே குறிப்பிட்டுள்ள நூல்களை இயற்றினார் என்கிறார்கள்.

No comments:

Post a Comment