Monday, October 1, 2012

தேவி பாரதியின் தீர்ப்பு அனைவருக்கும் திருப்தியளித்தது.

ஆதசங்கரருக்கும் மண்டனமிஸ்ரருக்கும் இடையில், பதினாறு நாட்கள் வரை சாஸ்திரப் போட்டி நடைபெற்றது. நடுவர் அக மண்டனமிஸ்ரரின் மனைவி பாரதி இருந்தார். இதற்கிடையில் ஏதோ முக்கிய வேலையாக பாரதி எங்கோ செல்ல வேண்டியிருந்தது. பாரதி, அவர்களிருவரது கழுத்திலும் ஒவ்வொரு பூமாலையை அணிவித்துக் கூறினார். "நீங்கள் வாதத்தைத் தொடருங்கள், நான் இல்லாத போது என் பணியை இந்தப் பூமாலைகள் செய்யும்," திரும்பி வந்த பிறகு தேவி பாரதி இருவரது பூமாலைகளையும் பார்த்து விட்டு, ஆதிசங்கரரின் வெற்றியையும் தனது கணவர் மண்டனமிஸ்ராது தோல்வியையும் தீர்ப்பாக அறிவித்தார். மக்கள் வியப்பில் ஆழ்ந்து விட்டனர். அவர்களது ஆவலைத் தணிக்கும் வகையில் தேவி பாரதி கூறினார். "அறிஞர் ஒருவர் வாதத்தில் தோற்கத் தொடங்கினால் அவருக்கக் கோபம் வருகிறது. என் கணவர் சங்கரரிடம் பின்னடைவு அடைந்ததனால், தன்னைப் பலவீனமாகக் கருதத் தொடங்கினார். அதனால் அவர் கழுத்தில் உள்ள பூ மாலை சினத்தீயினால் வாடி விட்டது. ஆனால் ஆதிசங்கரர் கழுத்தில் உள்ள மாலையோ, முன் போலவே புதியதாக இருக்கிறது. அவை, சங்கரரின் வெற்றியை நிரூபிக்கின்றன." தேவி பாரதியின் தீர்ப்பு அனைவருக்கும் திருப்தியளித்தது.

No comments:

Post a Comment