Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள் 11முடிந்தால் அழித்துப் பா


ஆன்மிக கதைகள்
முடிந்தால் அழித்துப் பார் - குட்டிக்கதை


தைரியம் என்பது இருவகை. ஒன்று ஒருவர் நம்மை எதிர்க்கும் போது, அவரோடு போரிட்டு வெல்லும் குணம். இன்னொன்று ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டிய திடமான மனது. முன்னதை விட இரண்டாவதே மிக உயர்ந்தது.
வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு சக்கரவர்த்தியின் குரு, நம் நாட்டிலுள்ள முனிவர்களைப் போய் சந்திக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். அவரும் படை, பட்டாளத்துடன் இங்கு வந்து சேர்ந்தார். காட்டிற்கு வேட்டைக்கு சென்ற சக்கரவர்த்தி, அங்கிருந்த குகையில் இருந்த ஒரு முனிவரைப் பார்த்தார்.
""முனிவரே! நீர் என்னுடன் என் நாட்டுக்கு வர வேண்டும்,'' என்றார்.
""அப்பனே! எனக்கு இங்கு எந்தக் குறையுமில்லை. அங்கு வந்து என்ன செய்யப் போகிறேன்,'' என்றார் முனிவர்.
சக்கரவர்த்தி அவரிடம்,""நீர் அங்கு வாரும். உமக்கு பொன்னும், மணியும், பொருளும் வந்து பெரும் செல்வந்தன் ஆக்குகிறேன்,'' என்றார்.
""அதை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அவற்றில் எனக்கு நாட்டமில்லை,'' என்றார் முனிவர்.
சக்கரவர்த்தி அவரை வற்புறுத்த முனிவர் தன் முடிவில் திடமாக இருந்துவிட்டார். இது சக்கரவர்த்தியின் கோபத்தை கிளறிவிட்டது.
""முனிவரே! நீர் மட்டும் என்னுடன் வராவிட்டால் உம்மைக் கொன்று விடுவேன்,'' என்று எச்சரித்தார் சக்கரவர்த்தி.
முனிவர் சத்தமாகச் சிரித்தார்.
""ஏய் சக்கரவர்த்தி!
நீ முட்டாள் என்பதை நிரூபித்து விட்டாய். உன் வாள் என் உடலையே கொல்லும். ஆனால், என் ஆன்மாவை அழிக்க உன்னால் முடியுமா? நான் எங்கோ இருந்து இதே பணியைச் செய்வேன்,'' என்றார்.
சக்கரவர்த்திக்கு உண்மை உரைத்தது.
இப்போது சொல்லுங்கள், உடல் என்றாவது ஒருநாள் அழியத்தான் செய்யும். ஆன்மாவை அழிக்க யாரால் இயலும்! ஒரு ஆன்மிகவாதியால் மட்டுமே உடலைப் பற்றிய கவலையில்லாமல் திடமாக வாழ முடியும்.

No comments:

Post a Comment